திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

452 திருவாசக ஆராய்ச்சியுரை கண்டாய் - அங்ஙனம் கூறியருளாது என்னைக் கைவிடுகின் றனையோ? கைவிடாதொழிதல் வேண்டும். மயை திரைசேர் மடந்தை மணந்த புயங்கா. விரைசேர் முடியாய். கள் வந்து நெருங்கினாற் போல வலிய வினைகள் வந்து நெருங்குகின் றன. ஆகையால் அறியாச் சிறியேன் பிழைக்கு அஞ்சல் எனின் அதுவே அமை யும். அங்ஙனம் கூறியருளாது என்னைக் கைவிடுகின்றனையோ? விடாதொழிதல் வேண்டும் என்பதாம். கை அரசே என்பது எதுகை நோக்கி அரைசே என நின்றது. அறி யாச் சிறியேன் என்பதற்குச் செய்யவேண்டியதை அறியாச் சிறியேன் எனினுமாம். செய்வதறியாச் சிறுநாயேன் '' (சத 52) என பிறாண்டும் அடிகள் அருளியமை காண்க. பிழைக்கு என்பது பிறையை நீக்குதற்கு என்னும் பொருளில் வந்தது; அஞ்சேல் எனின் அல்லால் என்பதற்கு அஞ் சற்க என்று கூறியருளின் அதுவே அமையும். அங்ஙனம் கூறாமல் என ஆற்றலாற் சில சொற்கள் வருவித்துரைக்கப்பட்டன. கங் விரை சேர் முடி - குரவும் கொன்றையும் கூவிளமும் ஆத்தியும் முத லாகிய நறுமணம் பொருந்திய பூக்களையுடைய முடி. வெண்ணகை யினையும் கருங்கண்ணினையுமுடைய முடந்தை என்றது கங்கையை. கையைப் பெண்ணாகக் கூறல். விரிதிரையின் நாரிக் களிக்கமர். நன் மாச் சடைமுடி நம்பர்" 265 என்னும் திருக்கோவையாரினுங் காண்க. திரைசேர் மடந்தை மணந்த புயங்கா எனக் கூட்டிக் கங்கையை மணந்த இறைவனே எனவுரைக்க. படலொலி திரைகள் மோதிய கங்கைத் தலைவனார் ஞான 376:1 கன்னியார் கங்கைத் தலைவா போற்றி" நாவு 270:6 வண்டார் குழலி யுமைநங்கை பங்கா கங்கை மணவாளா " சுந் 52:7 எனத் தேவாரத்தும் வருவன காண்க. திரைசேர் மடந்தை மணந்த என்பது பாற்கடற்கண் எழு செவ்வியாகிய திருமகள் வணங்கிப் பொருந் திய என்பாரும் உளர். திருப்பாதம் பொற்பாதம் எனத் தனித்தனி இயையும். குழகனார் திருப்பாதமே". "அத்தா உன் பொற்பாதம்" (காவு 170:4; 275:1) எனத் தேவாரத்தும் வருவன காண்க. திரு - கண்டாரால் விரும்பப்படும் தன்மை நோக்கம் என்றது அழகு. புயங்கம் - பாம்பு. புயங்கா-பாம் பினை ஆபரணமாக அணிந்தவனே. வரை சேர்ந்து சுடர்ந்தென்ன என உவமை கூறியது வலிய பிராரத்தவினைகள் தம்மை வந்து நெருங்குவதா லுண்டாகும் துன்ப மிகுதியை உணர்த்துவதற் பொருட்டாகும். அடர் நீத்தல் விண்ணப்பம் அடர்ந்தாலென்ன என்பது அடர்ந்தென்ன வல்வினை சாதியொருமையாகலின் தான் என்னும் எனக் தல் - நெருங்குதல். குறைந்து நின்றது. ஒருமையசை பெற்றது. 453 இதன் கண், வல்வினைதான் வந்து அடர்வன,அறியாச் சிறியேன் பிழைக்கஞ்சலெனின் அல்லால் விடுதி கண்டாய் என்பவற்றால் பிரபஞ்ச வைராக்கிய விருப்பும் கைவிடாதொழிதல் வேண்டும் என்பதும் போத ருதல் காண்க. 37. 142. அடர்புல ணாஸ்நிற் பிரிந்தஞ்சி அஞ்சொல் நல் வாரவர்தம் விடர்விட லேனை விடுதிகண் டாய்விரிந் தேயெரியுஞ் சுடரனை யாய்சுடு காட்டா சேதொழும் பர்க்கமுதே தொடர்வரி யாய்தமி யேன்தனி நீக்குந் தனித்துணையே ப-ரை: விரிந்து எரியும் சுடர் அனையாய் - எங்கும் பரந்து சுவாலித் தெரிகின்ற தீப்பிழம்பு போன் றவனே. சுடு காட்டு அரசே - எல்லாம் ஒடுங்கும் இடமாகிய சுடுகாட்டுக்கு அரசனே, தொழும்பர்க்கு அமுதே- மெய்த்தொண்டர்களுக்கு அமுதம் போன்றவனே. தொடர்வு அறியாய்- பசுஞான பாசஞானங்களால் எவரும் தொடர்ந்து அறிதற்கு அரியவனே, தமியேன் தனி நீக்கும் தனி துணையே - துணையிலாதேனது தனிமையை நீக்கியருளும் ஒப்பற்ற துணையாகவுள்ளவனே. நின் பிரிந்து - நின்னைப் பிரிந்து, அடர் புலனால் அஞ்சி-என்னை வருத்துகின்ற ஐம்புலன்களுக்கு அஞ்சி அம் சொல் நல்லார் அவர்தம் விடர் விடலேனை - அழகிய சொற் களையுடைய மகளிராகிய அவர்களுடைய முழைஞ்சு போன்ற புழையினை விட்டு நீங்கும் ஆற்றவில்லாத என்னை விடுதி கண்டாய் - கைவிடுகின் றனையோ? கைவிடாதொழிதல் வேண்டும். விரிந்தே யெரியுஞ் சுடரனையாய். சுடுகாட்டாசே, தொழும்பரிக் கமுதே. தொடர்வரியாய் தமியேனது தனிமையை நீக்கும் தனித் துணையா யுள்ளவனே.வின்னைப் பிரிந்து ஐம்புலன்களுக்கு அஞ்சி அஞ்சொல் நல் லாராகிய அவர்களுடைய விடர்விடலேனைக் கைவிடுகின்றனையோ? விடாதொழிதல் வேண்டும் என்பதாம். அடர்புலன் - வருத்துகின்ற ஐம்புலன். "அடர்புவன் போக்கற்றோர்க் கும் (கோயிற் புரா. பாயீரம் 18) புவனால் - புலனுக்கு. புலனுக்கு அஞ்சி என இயையும், "அடற்கரி போல் ஐம்புலனுக்கஞ்சி" (நீத் 32) எனப் போந்தவாறுங் காண்க. அஞ்சொல் நல்லார் - இனிமை பயக்கும் சொல்லையுடைய மகனிர். அஞ்சொல் என்குராயினும் கயற்கண், பணைத்த நுண்ணிடை பஞ்சின் மெல்லடி முதலாயினவுங் கொள்க. **கயலார் தடங்கண் அஞ் சொனல்லார்", பஞ்சியாரு மெல்லடிப் பனைத்த கொங்கை நுண்ணிடை அஞ்சொலாம்." (ஞான 63:2; 207:4) எனத் கொங்கை.
452 திருவாசக ஆராய்ச்சியுரை கண்டாய் - அங்ஙனம் கூறியருளாது என்னைக் கைவிடுகின் றனையோ ? கைவிடாதொழிதல் வேண்டும் . மயை திரைசேர் மடந்தை மணந்த புயங்கா . விரைசேர் முடியாய் . கள் வந்து நெருங்கினாற் போல வலிய வினைகள் வந்து நெருங்குகின் றன . ஆகையால் அறியாச் சிறியேன் பிழைக்கு அஞ்சல் எனின் அதுவே அமை யும் . அங்ஙனம் கூறியருளாது என்னைக் கைவிடுகின்றனையோ ? விடாதொழிதல் வேண்டும் என்பதாம் . கை அரசே என்பது எதுகை நோக்கி அரைசே என நின்றது . அறி யாச் சிறியேன் என்பதற்குச் செய்யவேண்டியதை அறியாச் சிறியேன் எனினுமாம் . செய்வதறியாச் சிறுநாயேன் ' ' ( சத 52 ) என பிறாண்டும் அடிகள் அருளியமை காண்க . பிழைக்கு என்பது பிறையை நீக்குதற்கு என்னும் பொருளில் வந்தது ; அஞ்சேல் எனின் அல்லால் என்பதற்கு அஞ் சற்க என்று கூறியருளின் அதுவே அமையும் . அங்ஙனம் கூறாமல் என ஆற்றலாற் சில சொற்கள் வருவித்துரைக்கப்பட்டன . கங் விரை சேர் முடி - குரவும் கொன்றையும் கூவிளமும் ஆத்தியும் முத லாகிய நறுமணம் பொருந்திய பூக்களையுடைய முடி . வெண்ணகை யினையும் கருங்கண்ணினையுமுடைய முடந்தை என்றது கங்கையை . கையைப் பெண்ணாகக் கூறல் . விரிதிரையின் நாரிக் களிக்கமர் . நன் மாச் சடைமுடி நம்பர் 265 என்னும் திருக்கோவையாரினுங் காண்க . திரைசேர் மடந்தை மணந்த புயங்கா எனக் கூட்டிக் கங்கையை மணந்த இறைவனே எனவுரைக்க . படலொலி திரைகள் மோதிய கங்கைத் தலைவனார் ஞான 376 : 1 கன்னியார் கங்கைத் தலைவா போற்றி நாவு 270 : 6 வண்டார் குழலி யுமைநங்கை பங்கா கங்கை மணவாளா சுந் 52 : 7 எனத் தேவாரத்தும் வருவன காண்க . திரைசேர் மடந்தை மணந்த என்பது பாற்கடற்கண் எழு செவ்வியாகிய திருமகள் வணங்கிப் பொருந் திய என்பாரும் உளர் . திருப்பாதம் பொற்பாதம் எனத் தனித்தனி இயையும் . குழகனார் திருப்பாதமே . அத்தா உன் பொற்பாதம் ( காவு 170 : 4 ; 275 : 1 ) எனத் தேவாரத்தும் வருவன காண்க . திரு - கண்டாரால் விரும்பப்படும் தன்மை நோக்கம் என்றது அழகு . புயங்கம் - பாம்பு . புயங்கா - பாம் பினை ஆபரணமாக அணிந்தவனே . வரை சேர்ந்து சுடர்ந்தென்ன என உவமை கூறியது வலிய பிராரத்தவினைகள் தம்மை வந்து நெருங்குவதா லுண்டாகும் துன்ப மிகுதியை உணர்த்துவதற் பொருட்டாகும் . அடர் நீத்தல் விண்ணப்பம் அடர்ந்தாலென்ன என்பது அடர்ந்தென்ன வல்வினை சாதியொருமையாகலின் தான் என்னும் எனக் தல் - நெருங்குதல் . குறைந்து நின்றது . ஒருமையசை பெற்றது . 453 இதன் கண் வல்வினைதான் வந்து அடர்வன அறியாச் சிறியேன் பிழைக்கஞ்சலெனின் அல்லால் விடுதி கண்டாய் என்பவற்றால் பிரபஞ்ச வைராக்கிய விருப்பும் கைவிடாதொழிதல் வேண்டும் என்பதும் போத ருதல் காண்க . 37 . 142. அடர்புல ணாஸ்நிற் பிரிந்தஞ்சி அஞ்சொல் நல் வாரவர்தம் விடர்விட லேனை விடுதிகண் டாய்விரிந் தேயெரியுஞ் சுடரனை யாய்சுடு காட்டா சேதொழும் பர்க்கமுதே தொடர்வரி யாய்தமி யேன்தனி நீக்குந் தனித்துணையே - ரை : விரிந்து எரியும் சுடர் அனையாய் - எங்கும் பரந்து சுவாலித் தெரிகின்ற தீப்பிழம்பு போன் றவனே . சுடு காட்டு அரசே - எல்லாம் ஒடுங்கும் இடமாகிய சுடுகாட்டுக்கு அரசனே தொழும்பர்க்கு அமுதே மெய்த்தொண்டர்களுக்கு அமுதம் போன்றவனே . தொடர்வு அறியாய் பசுஞான பாசஞானங்களால் எவரும் தொடர்ந்து அறிதற்கு அரியவனே தமியேன் தனி நீக்கும் தனி துணையே - துணையிலாதேனது தனிமையை நீக்கியருளும் ஒப்பற்ற துணையாகவுள்ளவனே . நின் பிரிந்து - நின்னைப் பிரிந்து அடர் புலனால் அஞ்சி - என்னை வருத்துகின்ற ஐம்புலன்களுக்கு அஞ்சி அம் சொல் நல்லார் அவர்தம் விடர் விடலேனை - அழகிய சொற் களையுடைய மகளிராகிய அவர்களுடைய முழைஞ்சு போன்ற புழையினை விட்டு நீங்கும் ஆற்றவில்லாத என்னை விடுதி கண்டாய் - கைவிடுகின் றனையோ ? கைவிடாதொழிதல் வேண்டும் . விரிந்தே யெரியுஞ் சுடரனையாய் . சுடுகாட்டாசே தொழும்பரிக் கமுதே . தொடர்வரியாய் தமியேனது தனிமையை நீக்கும் தனித் துணையா யுள்ளவனே.வின்னைப் பிரிந்து ஐம்புலன்களுக்கு அஞ்சி அஞ்சொல் நல் லாராகிய அவர்களுடைய விடர்விடலேனைக் கைவிடுகின்றனையோ ? விடாதொழிதல் வேண்டும் என்பதாம் . அடர்புலன் - வருத்துகின்ற ஐம்புலன் . அடர்புவன் போக்கற்றோர்க் கும் ( கோயிற் புரா . பாயீரம் 18 ) புவனால் - புலனுக்கு . புலனுக்கு அஞ்சி என இயையும் அடற்கரி போல் ஐம்புலனுக்கஞ்சி ( நீத் 32 ) எனப் போந்தவாறுங் காண்க . அஞ்சொல் நல்லார் - இனிமை பயக்கும் சொல்லையுடைய மகனிர் . அஞ்சொல் என்குராயினும் கயற்கண் பணைத்த நுண்ணிடை பஞ்சின் மெல்லடி முதலாயினவுங் கொள்க . ** கயலார் தடங்கண் அஞ் சொனல்லார் பஞ்சியாரு மெல்லடிப் பனைத்த கொங்கை நுண்ணிடை அஞ்சொலாம் . ( ஞான 63 : 2 ; 207 : 4 ) எனத் கொங்கை .