திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

460 திருவாசக ஆராய்ச்சியுரை 148. கதியடி யேற்குன் கழன்தந் தருவவும் ஊன்கழியா விதியடி யேனை விடுதிகண் டாய்வெண் டலைமுழையிற் பதியுடை வசளரப் பார்த்திறை பைத்துச் சுருங்கவஞ்சி மதிநெடு நீரில் குளித்தொளிக் குஞ்சடை மன்னவனே. ப.ரை: வெண் தலை முறையில் பதி உடை வாள் அர - நகுசிரம் என்னும் வெண்டலையின் உட்டுளையை இருப்பிடமாகவுடைய ஒளியை யுடைய பாம்பு, பார்த்து இறை பைத்து சுருங்க மதியைப் பார்த்து சிறிது படம் விரித்துச் சுருண்டு அசைய! மதி அஞ்சி நெடு ரீரில் குளித்து ஒளிக்கும் - அதனைப் பிறைமதி கண்டு பயந்து கங்கைநீரில் மூழ்கி மறைகின்ற, சடை மன்னவனே - செவ்விய சடைமுடியினையுடைய நிலை பேறுடையவனே. அடியேற்கு உன் கழல் சுதி தந்து அருளவும் - டி யேனுக்கு உன் கழலையுடைய திருவடிகளைப் புகவிட மாகத் தந்தருளவும், ஊன் கழியா விதி அடியேனை - அதனை அடையும்படி இவ் வுடம்பினை நீக்க முடியாதமைக்கு எதிண்கிய பிராரத்தவினையையுடைய அடியேனை. விடுதி கண்டாய் - கைவிடுகிள் றனையோ? கைவிடாதொழி தல் வேண்டும். உடனே வெண்டலை முழையைப் பதியாகவுடைய பாம்பு திங்களைப் பார்த்து சிறிது படம் விரித்துச் சுருண்டு அசைய அதனைப் பிறை மதி கண்டு பயந்து கங்கை நீரில் மூழ்கி மறைகின்ற சடைமன்னவனே,அடியேற்கு உன் கழல் தந்து அருளவும், அதனை உடனே அடையும்படி இவ்வுடம் பினை நீக்கமுடியாத வினையுடைய அடியேனைக் கைவிடுகின் றனையோ? கைவிடாதொழிதல் வேண்டும் என்பதாம். கதி - புகலிடம். "கதியே போற்றி கனியே போற்றி" (போற்றி 108) உன்கழல் கதிதந்தருளவும் என மாற்றிக் கூட்டிப் பொருள் கொள்க. கழல் தந்தருளியமை, "தன்வார் கழல்களெனக் களியா நிற்கும் அம் பலத்தோன்'', "தன்றொல் கழறந்த தொல்லோன்" 203:348 எனத் திருக்கோவையாரில் வருவனவற்றாலுமறிக. சழல் தந்தருளவும் என்றது. ஆட்கொண்டருளவும். என்றபடி உம்மை உயர்வு சிறப்பு- ஊன் கழியா விதி - உடம்பினை நீக்க முடியாமைக்கு ஏதுவாகிய வினை; வினை என்றது பிராரத்தவினையை. வெண்டலை - நகுசிரம். இது தாருகாவனத்து இருடிகளால் ஏவப்பட் டது. நகுவெண்டலை "வெண்டலை மிலைச்சி சாந்தணி சச்சையனே" (நீத் 30) பின்றாம் சடைமேல் நகுவெண்டலையர்" (தே ஞாள 71:4) என வருவன கான்க, முழை என்றது வெண்டலையிலுள்ள உட்டுளையை. "பகுவாய ங்கு வெண்டலை" "விழியிலா நகுதலை '" (தே. ஞான 40:8; 272:5) என வருவன காண்க, பதி. இருப்பிடம். "அம்பலத்துப் பதியுடையான்" நீத்தல் விண்ணப்பம் 461 திருக்கோவையாரினும் (202) என்னும் இப்பொருட்ட தல் காண்க. வாள் - ஒளி. அரா-அர எனக் குறுகி நின்றது. பாம்பு வெண்டலை முழையை இருப்பிடமாகக் கொண்டமை. "வழைக் கொள் அரவோடு" (சுந் 9:2 என்பதனாலுமறிகஅஞ்சி மதிநெழி நீரில் ஒளிக்கும்" என்றத னால் அர பார்த்தது அம்மதியையாகும். இறை- சிறிது. "எழில்வா யிளவஞ்சியும் விரும்பும் மற்றிறை குறையுண்டு ' திருக்கோவை (94) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க. பைத்துச் சுருங்கள் - படத்தை விரித்துச் சுருண்டு அசைதல், 'உத்தமன் நீள்முடிமேல் வெள்ள வளாகத்து வெண்ணுரை குடி வியன் பிறையைக் கொள்ள அளாய்கின்ற பாம்பொன் முளது குறிக்கொண்மினே "" (பொன்வண்ணத் 78 நெடுநீர் என்றது. கங்கையை. "பிறையு நெடுநீரும் பிரியா முடியினார் ஞான 87:8 எனத் தேவாரத்தும் வருதல் காண்க. சடைமுடியில் அணிந்த வெண்டவையின் உட்டுளையில் தங்கும் பாம்பு முடியில் அணியப்பட்டுள்ள மதியைக் கண்டு சிறிது படம் விரித்து அதனை உண்ணுமாறு சுருண்டு அசைதலும், அதனை மதி கண்டு அஞ்சி சடையிற் நரித்த கங்கைப் பெருவெள்ளத்தில் முழுகி ஒளிக்கும் சடையென இறைவனது பெருமை கூறியவாறு. மன்னவனே என்பதற்கு ஒன்றற் கொன்று முரணானவற்றையும் தீங்கு பயக்குமாறு எழுந்தவற்றையும் சடையின் கண்ணே வைத்து முறைசெய்து ஆளும் பேரரசனே எனினுமமையும். சடையின் இதன் கண், ''கழல் தந்தருளவும் ஊன் கழியாவிதியடியேனை விடுதி கண்டாய்" என்பதனால் பிரபஞ்ச வைராக்கிய விருப்பும் கைவிடாதொழி தல் என்பதும் போதருதல் காண்க. 147. மன்னவ னேயொன்று மாறறி யாச்சிறி யேன்மகிழ்ச்சி மின்னவ னேவீட் டிடுதிகண் டாய்மிக்க வேதமெய்ந்நூல் சொன்னவ னேசொற் கழிந்தவ னேசுழி யாந்தொழும்பர் முன்னவ ளேபின்னு மானவ ளேயிம் முழுதையுமே. 42. ப-ரை: மிக்க வேதம் மெய் நூல் சொன்னவனே - உயர்ளினை யுடைய அறிவு நூலாகிய வேதத்தையும் தத்துவ நூலாகிய ஆகமத்தை யும் சொல்லியநனியவனே. சொல்கழிந்தவனே - சொற்களால் இப்படிப் பட்டவன் என்று சொல்லமுடியாமல் அப்பாற்பட்டவனே. கழியா தொழும்பர் முன்னவனே - எக்காலத்தும் நீங்குதலில்லாத அணுக்கள் தொண்டர்க்கு முன்னின் அருள் செய்பவவே, பின்னும் இம்முழுதை ஆனவளே -அன்றி இவ்வுலகங்கள் முழுதையும் தோ ற்றுவித்து கலந்ள்ளவனே, முழுதிலும் மன்னவனே-நிலைபேறுடைய வனே. ஒன்றும் ஆறு அறியா சிறியேன் - நின்னொடு கலக்கும் நெறியை அறியாத சிறுமையுடையேனது. மகிழ்ச்சி மின்னவனே - இன்பத்தில் மின் போன் றவனே. விட்டிடுதி கண்டாய் -என்னைக் கைவிடுகிள் றனையோ? கைவிடாதொழிதல் வேண்டும். யும் அவை னல்
460 திருவாசக ஆராய்ச்சியுரை 148. கதியடி யேற்குன் கழன்தந் தருவவும் ஊன்கழியா விதியடி யேனை விடுதிகண் டாய்வெண் டலைமுழையிற் பதியுடை வசளரப் பார்த்திறை பைத்துச் சுருங்கவஞ்சி மதிநெடு நீரில் குளித்தொளிக் குஞ்சடை மன்னவனே . ப.ரை : வெண் தலை முறையில் பதி உடை வாள் அர - நகுசிரம் என்னும் வெண்டலையின் உட்டுளையை இருப்பிடமாகவுடைய ஒளியை யுடைய பாம்பு பார்த்து இறை பைத்து சுருங்க மதியைப் பார்த்து சிறிது படம் விரித்துச் சுருண்டு அசைய ! மதி அஞ்சி நெடு ரீரில் குளித்து ஒளிக்கும் - அதனைப் பிறைமதி கண்டு பயந்து கங்கைநீரில் மூழ்கி மறைகின்ற சடை மன்னவனே - செவ்விய சடைமுடியினையுடைய நிலை பேறுடையவனே . அடியேற்கு உன் கழல் சுதி தந்து அருளவும் - டி யேனுக்கு உன் கழலையுடைய திருவடிகளைப் புகவிட மாகத் தந்தருளவும் ஊன் கழியா விதி அடியேனை - அதனை அடையும்படி இவ் வுடம்பினை நீக்க முடியாதமைக்கு எதிண்கிய பிராரத்தவினையையுடைய அடியேனை . விடுதி கண்டாய் - கைவிடுகிள் றனையோ ? கைவிடாதொழி தல் வேண்டும் . உடனே வெண்டலை முழையைப் பதியாகவுடைய பாம்பு திங்களைப் பார்த்து சிறிது படம் விரித்துச் சுருண்டு அசைய அதனைப் பிறை மதி கண்டு பயந்து கங்கை நீரில் மூழ்கி மறைகின்ற சடைமன்னவனே அடியேற்கு உன் கழல் தந்து அருளவும் அதனை உடனே அடையும்படி இவ்வுடம் பினை நீக்கமுடியாத வினையுடைய அடியேனைக் கைவிடுகின் றனையோ ? கைவிடாதொழிதல் வேண்டும் என்பதாம் . கதி - புகலிடம் . கதியே போற்றி கனியே போற்றி ( போற்றி 108 ) உன்கழல் கதிதந்தருளவும் என மாற்றிக் கூட்டிப் பொருள் கொள்க . கழல் தந்தருளியமை தன்வார் கழல்களெனக் களியா நிற்கும் அம் பலத்தோன் ' ' தன்றொல் கழறந்த தொல்லோன் 203 : 348 எனத் திருக்கோவையாரில் வருவனவற்றாலுமறிக . சழல் தந்தருளவும் என்றது . ஆட்கொண்டருளவும் . என்றபடி உம்மை உயர்வு சிறப்பு- ஊன் கழியா விதி - உடம்பினை நீக்க முடியாமைக்கு ஏதுவாகிய வினை ; வினை என்றது பிராரத்தவினையை . வெண்டலை - நகுசிரம் . இது தாருகாவனத்து இருடிகளால் ஏவப்பட் டது . நகுவெண்டலை வெண்டலை மிலைச்சி சாந்தணி சச்சையனே ( நீத் 30 ) பின்றாம் சடைமேல் நகுவெண்டலையர் ( தே ஞாள 71 : 4 ) என வருவன கான்க முழை என்றது வெண்டலையிலுள்ள உட்டுளையை . பகுவாய ங்கு வெண்டலை விழியிலா நகுதலை ' ( தே . ஞான 40 : 8 ; 272 : 5 ) என வருவன காண்க பதி . இருப்பிடம் . அம்பலத்துப் பதியுடையான் நீத்தல் விண்ணப்பம் 461 திருக்கோவையாரினும் ( 202 ) என்னும் இப்பொருட்ட தல் காண்க . வாள் - ஒளி . அரா - அர எனக் குறுகி நின்றது . பாம்பு வெண்டலை முழையை இருப்பிடமாகக் கொண்டமை . வழைக் கொள் அரவோடு ( சுந் 9 : 2 என்பதனாலுமறிகஅஞ்சி மதிநெழி நீரில் ஒளிக்கும் என்றத னால் அர பார்த்தது அம்மதியையாகும் . இறை- சிறிது . எழில்வா யிளவஞ்சியும் விரும்பும் மற்றிறை குறையுண்டு ' திருக்கோவை ( 94 ) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க . பைத்துச் சுருங்கள் - படத்தை விரித்துச் சுருண்டு அசைதல் ' உத்தமன் நீள்முடிமேல் வெள்ள வளாகத்து வெண்ணுரை குடி வியன் பிறையைக் கொள்ள அளாய்கின்ற பாம்பொன் முளது குறிக்கொண்மினே ( பொன்வண்ணத் 78 நெடுநீர் என்றது . கங்கையை . பிறையு நெடுநீரும் பிரியா முடியினார் ஞான 87 : 8 எனத் தேவாரத்தும் வருதல் காண்க . சடைமுடியில் அணிந்த வெண்டவையின் உட்டுளையில் தங்கும் பாம்பு முடியில் அணியப்பட்டுள்ள மதியைக் கண்டு சிறிது படம் விரித்து அதனை உண்ணுமாறு சுருண்டு அசைதலும் அதனை மதி கண்டு அஞ்சி சடையிற் நரித்த கங்கைப் பெருவெள்ளத்தில் முழுகி ஒளிக்கும் சடையென இறைவனது பெருமை கூறியவாறு . மன்னவனே என்பதற்கு ஒன்றற் கொன்று முரணானவற்றையும் தீங்கு பயக்குமாறு எழுந்தவற்றையும் சடையின் கண்ணே வைத்து முறைசெய்து ஆளும் பேரரசனே எனினுமமையும் . சடையின் இதன் கண் ' ' கழல் தந்தருளவும் ஊன் கழியாவிதியடியேனை விடுதி கண்டாய் என்பதனால் பிரபஞ்ச வைராக்கிய விருப்பும் கைவிடாதொழி தல் என்பதும் போதருதல் காண்க . 147. மன்னவ னேயொன்று மாறறி யாச்சிறி யேன்மகிழ்ச்சி மின்னவ னேவீட் டிடுதிகண் டாய்மிக்க வேதமெய்ந்நூல் சொன்னவ னேசொற் கழிந்தவ னேசுழி யாந்தொழும்பர் முன்னவ ளேபின்னு மானவ ளேயிம் முழுதையுமே . 42 . - ரை : மிக்க வேதம் மெய் நூல் சொன்னவனே - உயர்ளினை யுடைய அறிவு நூலாகிய வேதத்தையும் தத்துவ நூலாகிய ஆகமத்தை யும் சொல்லியநனியவனே . சொல்கழிந்தவனே - சொற்களால் இப்படிப் பட்டவன் என்று சொல்லமுடியாமல் அப்பாற்பட்டவனே . கழியா தொழும்பர் முன்னவனே - எக்காலத்தும் நீங்குதலில்லாத அணுக்கள் தொண்டர்க்கு முன்னின் அருள் செய்பவவே பின்னும் இம்முழுதை ஆனவளே -அன்றி இவ்வுலகங்கள் முழுதையும் தோ ற்றுவித்து கலந்ள்ளவனே முழுதிலும் மன்னவனே - நிலைபேறுடைய வனே . ஒன்றும் ஆறு அறியா சிறியேன் - நின்னொடு கலக்கும் நெறியை அறியாத சிறுமையுடையேனது . மகிழ்ச்சி மின்னவனே - இன்பத்தில் மின் போன் றவனே . விட்டிடுதி கண்டாய் -என்னைக் கைவிடுகிள் றனையோ ? கைவிடாதொழிதல் வேண்டும் . யும் அவை னல்