திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை பழிப்பினையே அறைகுவன் பழிப்பது போல் புகழமைந்த மொழி களையே கூறுவன் என்றவாறு. இங்ஙனம் கூறுவது வஞ்சப் புகழ்ச்சி என்னும் அணியாகும். 472 இதன் கண், உழை தரு நோக்கியர் கொங்கை விழைதருவேனை விடுதி கண்டாய்' என்பதனால் பிரபஞ்ச வைராக்கிய விருப்பும் கைவிடா தொழிதல் வேண்டும் என்பதும் போதருதல் காண்க. 46. 151. பழிப்பினின் பாதப் பழந்தொழும் பெய்தி விழப்பழித்து விழித்திருந் தேனை விடுதிகண் டாய்னெண் மணிப்பணிலங் கொழித்துமந் தாரமத் தாகினி நுந்தும்பந் தப்பெருமை தழிச்சிறை நீரிற் பிறைக்கலஞ் சேர்தரு தாரவனே. ப-ரை: பந்தம் பெருமை தழி - சடைமுடியாகிய அணையின் பெருமை யைச் சார்ந்து; வெண்மணி பணிலம் கொழித்து - வெண்மணியாகிய முத் துக்களையுடைய சங்குகளைக் கொழித்து, மந்தாரம் துந்தும் - மந்தார மலர் களைத் தள்ளும் மந்தாகினி சிறை நீரில் - கங்கையாகிய வரம்புக்குட்பட்ட நீர் நிலையில், பிறை கலம் சேர் தரு தாரவன் -பிறைமதியாகிய தோணி பொருந்தப் பெற்ற கொன்றை மாலையையுடையவனே, பழிப்பு இல் நின் பாத பழம் தொழுர்பு எய்தி விழ-இகழ்ச்சியில்லாத நின் திருவடிகளின் பழமையாகிய தொண்டினை நின்னருளாற் பெற்று அது என் விதியின் மையால் நழுவிப் போசு, பழித்து விழித்திருந்தேனை விடுதி கண்டாய்- நின்னைப் பழித்துக் கொண்டு செய்வதறியாது திகைத்து விழித்துக் கொண் டிருந்த என்னைக் கைவிடுகின் றனையோ? கைவிடாதொழிதல் வேண்டும். சடை முடியாகிய அணையின் பெருமையைச் சார்ந்து வெண்மணிப் பணி லம் கொழித்து மந்தாரம் நுந்தும் கங்கை நீரில் பிறைமதியாகிய தோணி பொருந்தப் பெற்ற கொன்றை மாகூயையுடையவனே, மின் திருவடி களின் பழமையாகிய தொண்டினை நின்னருளாற் பெற்று அது என் விதி யின்மையால் நழுவிப் போக நின்னைப் பழித்துக் கொண்டு விழித்திருந் தேனைக் கைவிடுகின் றனை யோ?" கைவிடாதொழிதல் வேண்டும் என்ப பழிப்பு - இகழ்ச்சி; குற்றம். இறைவனுடைய திருவடிகள் எத்தகைய குற்றமும் அற்றன. "சிந்திப் பரியன சிந்திப்பவர்க்குச் சிறந்து செந்தேன் முந்திப் பொழிவன முத்தி கொடுப்பன மொய்த்திருண்டு பந்தித்து நின்ற பழவினை தீர்ப்பள பாம்பு சுற்றி அந்திப் பிறை யணிந் தாடுமையாற னடித்தலமே " நாவு 92:1 '" எழுவா யிறுவா யிலாதன வெங்கள் பிணிதவிர்த்து வழுவா மருத்துவ மாவன மாகரகக் குழிவாய விழுவா ரவர்தம்மை வீழ்ப்பன மீட்பன மிக்கவன்போ டழுவார்க் கமுதங்கள் காண்க வையாற னடித்தலமே' நாவு 02: நீத்தல் விண்ணப்பம் "ஓதிய ஞானமு ஞானப்பொருளு மொலிசிறந்த வேதியர் வேதமும் வேள்வியுமாவன விண்ணும் மண்ணும் சோதியுஞ் செஞ்சுடர் ஞாயிறு மொப்பன தூமதியோ டாதியு மந்தமுமானவையாற னடித்தலமே" நாவு 03:17 "திருந்தலார் புரந் தீயெழச் செறுவன விறலின் கணடியாரைப் பரிந்து காப்பன பத்தியில் வருவன மத்தமாம் பிணிநோய்க்கு மருந்து மாவன மந்திரமாவன வலஞ்சுழியிடமாக இருந்த நாயக னிமையவரேத்திய இணையடித்தலந்தானே" 473 ஞான 242:9 எனப் புகழப்படுவன வல்லது இதழப்படாதன இறைவன் திருவடியாக லின் "பழிப்பினின் பாதம்" என்றார். பழந் தொழும்பு எய்தி என்றது அணுக்கன் தொண்டராக இருந்த போது தமக்குள்ள பழைய திருவடித் தொண்டினை ஆட்கொண்டபோது அடைந்து என்றவாறு. வீழ என்றது நீங்காதிருத்தற் கேதுவாகிய விதி யின் மையால் அது நீங்கிப் போக என்றவாறு. பழித்தல் - இகழ்தல். விழித்திருத்தல் - செய்வதொன் றறியாது திகைத்து விழித்துக் கொண் டிருத்தல். வெண்மணி - முத்து. பணிலம் - சங்கு.நந்து,சுத்தி.நாகு பணிலம்... சங்கே (பிங் 8:324) என வருதலுங் காண்க. சங்கு முத்துடைத்தாதல் ''வளைஞரல் இலங்கு நீர் முத்த மொடு வார்துகி ரெடுக்கும் " (பதிற் 30 : 6-7) என்பதனாலுமறிக. மந்தாரம் ஆகுபெயராய் திருமுடிக்கண் தரித்த மந்தார மலர்மாலையை உணர்த்தியது. இறைவன் மந்தார மலர்மாலை தரித்தமை "மந்தாரத்திற் றாரம் பயின் றுமந் தம் முரல் வண் டதும்புங் கொழுந்தே னவிர் சடை (நீத் 30), தென்னன் பெருந்துறையான் மந்தார மாலையே பாடுதுங் காண் (அம்மாளை 15) என அடிகள் அருளியமையா னுங் காண்க. மந்தாகினி- கங்கை. வெண்மணிப் பணிலம் கங்கைக்கு இயற்கையடை யெனவும் மந்தாரம் அடியார்களால் இறைவன் திருமுடிக்கட் சூட்டப் பட்டனவாகலின் செயற்கை அடையெனவும் கொள்க. நுந்துதல் - தள்ளு தல்; அவைத்தய், மந்தாகினி நீரில் என இயையும். பந்தம்-அணை. ஈண்டு இறைவனது சடை முடியாகிய அணையை உணர்த்தியது. கழீஇ என்பது எதுகை நோக்கித் தழி என நின்றது. தழீஇ - தழுவி; சேர்ந்து. சிறை - வரம்பு. கலம் என்றது ஈண்டுத் தோணியை. பிறையைக் கலம் என்றது ஒரு கலைத் திங்கள் தோணி போன்ற தோற்ற முடைமையின் "வியன் கங்கை பொங்கி வருநீர் மடுவுள் மலைச்சிறு தோணி வடிவின் வெள்ளைக் குருநீர் மதிபொதியுஞ் சடை " (நீத் 26) என வந்தமை காண்க, 60 #
திருவாசக ஆராய்ச்சியுரை பழிப்பினையே அறைகுவன் பழிப்பது போல் புகழமைந்த மொழி களையே கூறுவன் என்றவாறு . இங்ஙனம் கூறுவது வஞ்சப் புகழ்ச்சி என்னும் அணியாகும் . 472 இதன் கண் உழை தரு நோக்கியர் கொங்கை விழைதருவேனை விடுதி கண்டாய் ' என்பதனால் பிரபஞ்ச வைராக்கிய விருப்பும் கைவிடா தொழிதல் வேண்டும் என்பதும் போதருதல் காண்க . 46 . 151. பழிப்பினின் பாதப் பழந்தொழும் பெய்தி விழப்பழித்து விழித்திருந் தேனை விடுதிகண் டாய்னெண் மணிப்பணிலங் கொழித்துமந் தாரமத் தாகினி நுந்தும்பந் தப்பெருமை தழிச்சிறை நீரிற் பிறைக்கலஞ் சேர்தரு தாரவனே . - ரை : பந்தம் பெருமை தழி - சடைமுடியாகிய அணையின் பெருமை யைச் சார்ந்து ; வெண்மணி பணிலம் கொழித்து - வெண்மணியாகிய முத் துக்களையுடைய சங்குகளைக் கொழித்து மந்தாரம் துந்தும் - மந்தார மலர் களைத் தள்ளும் மந்தாகினி சிறை நீரில் - கங்கையாகிய வரம்புக்குட்பட்ட நீர் நிலையில் பிறை கலம் சேர் தரு தாரவன் -பிறைமதியாகிய தோணி பொருந்தப் பெற்ற கொன்றை மாலையையுடையவனே பழிப்பு இல் நின் பாத பழம் தொழுர்பு எய்தி விழ - இகழ்ச்சியில்லாத நின் திருவடிகளின் பழமையாகிய தொண்டினை நின்னருளாற் பெற்று அது என் விதியின் மையால் நழுவிப் போசு பழித்து விழித்திருந்தேனை விடுதி கண்டாய் நின்னைப் பழித்துக் கொண்டு செய்வதறியாது திகைத்து விழித்துக் கொண் டிருந்த என்னைக் கைவிடுகின் றனையோ ? கைவிடாதொழிதல் வேண்டும் . சடை முடியாகிய அணையின் பெருமையைச் சார்ந்து வெண்மணிப் பணி லம் கொழித்து மந்தாரம் நுந்தும் கங்கை நீரில் பிறைமதியாகிய தோணி பொருந்தப் பெற்ற கொன்றை மாகூயையுடையவனே மின் திருவடி களின் பழமையாகிய தொண்டினை நின்னருளாற் பெற்று அது என் விதி யின்மையால் நழுவிப் போக நின்னைப் பழித்துக் கொண்டு விழித்திருந் தேனைக் கைவிடுகின் றனை யோ ? கைவிடாதொழிதல் வேண்டும் என்ப பழிப்பு - இகழ்ச்சி ; குற்றம் . இறைவனுடைய திருவடிகள் எத்தகைய குற்றமும் அற்றன . சிந்திப் பரியன சிந்திப்பவர்க்குச் சிறந்து செந்தேன் முந்திப் பொழிவன முத்தி கொடுப்பன மொய்த்திருண்டு பந்தித்து நின்ற பழவினை தீர்ப்பள பாம்பு சுற்றி அந்திப் பிறை யணிந் தாடுமையாற னடித்தலமே நாவு 92 : 1 ' எழுவா யிறுவா யிலாதன வெங்கள் பிணிதவிர்த்து வழுவா மருத்துவ மாவன மாகரகக் குழிவாய விழுவா ரவர்தம்மை வீழ்ப்பன மீட்பன மிக்கவன்போ டழுவார்க் கமுதங்கள் காண்க வையாற னடித்தலமே ' நாவு 02 : நீத்தல் விண்ணப்பம் ஓதிய ஞானமு ஞானப்பொருளு மொலிசிறந்த வேதியர் வேதமும் வேள்வியுமாவன விண்ணும் மண்ணும் சோதியுஞ் செஞ்சுடர் ஞாயிறு மொப்பன தூமதியோ டாதியு மந்தமுமானவையாற னடித்தலமே நாவு 03:17 திருந்தலார் புரந் தீயெழச் செறுவன விறலின் கணடியாரைப் பரிந்து காப்பன பத்தியில் வருவன மத்தமாம் பிணிநோய்க்கு மருந்து மாவன மந்திரமாவன வலஞ்சுழியிடமாக இருந்த நாயக னிமையவரேத்திய இணையடித்தலந்தானே 473 ஞான 242 : 9 எனப் புகழப்படுவன வல்லது இதழப்படாதன இறைவன் திருவடியாக லின் பழிப்பினின் பாதம் என்றார் . பழந் தொழும்பு எய்தி என்றது அணுக்கன் தொண்டராக இருந்த போது தமக்குள்ள பழைய திருவடித் தொண்டினை ஆட்கொண்டபோது அடைந்து என்றவாறு . வீழ என்றது நீங்காதிருத்தற் கேதுவாகிய விதி யின் மையால் அது நீங்கிப் போக என்றவாறு . பழித்தல் - இகழ்தல் . விழித்திருத்தல் - செய்வதொன் றறியாது திகைத்து விழித்துக் கொண் டிருத்தல் . வெண்மணி - முத்து . பணிலம் - சங்கு.நந்து சுத்தி.நாகு பணிலம் ... சங்கே ( பிங் 8 : 324 ) என வருதலுங் காண்க . சங்கு முத்துடைத்தாதல் ' ' வளைஞரல் இலங்கு நீர் முத்த மொடு வார்துகி ரெடுக்கும் ( பதிற் 30 : 6-7 ) என்பதனாலுமறிக . மந்தாரம் ஆகுபெயராய் திருமுடிக்கண் தரித்த மந்தார மலர்மாலையை உணர்த்தியது . இறைவன் மந்தார மலர்மாலை தரித்தமை மந்தாரத்திற் றாரம் பயின் றுமந் தம் முரல் வண் டதும்புங் கொழுந்தே னவிர் சடை ( நீத் 30 ) தென்னன் பெருந்துறையான் மந்தார மாலையே பாடுதுங் காண் ( அம்மாளை 15 ) என அடிகள் அருளியமையா னுங் காண்க . மந்தாகினி- கங்கை . வெண்மணிப் பணிலம் கங்கைக்கு இயற்கையடை யெனவும் மந்தாரம் அடியார்களால் இறைவன் திருமுடிக்கட் சூட்டப் பட்டனவாகலின் செயற்கை அடையெனவும் கொள்க . நுந்துதல் - தள்ளு தல் ; அவைத்தய் மந்தாகினி நீரில் என இயையும் . பந்தம் - அணை . ஈண்டு இறைவனது சடை முடியாகிய அணையை உணர்த்தியது . கழீஇ என்பது எதுகை நோக்கித் தழி என நின்றது . தழீஇ - தழுவி ; சேர்ந்து . சிறை - வரம்பு . கலம் என்றது ஈண்டுத் தோணியை . பிறையைக் கலம் என்றது ஒரு கலைத் திங்கள் தோணி போன்ற தோற்ற முடைமையின் வியன் கங்கை பொங்கி வருநீர் மடுவுள் மலைச்சிறு தோணி வடிவின் வெள்ளைக் குருநீர் மதிபொதியுஞ் சடை ( நீத் 26 ) என வந்தமை காண்க 60 #