திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

476 திருவாசக ஆராய்ச்சியுரை ரும் மின்னைப் பழிக்கும்படி செய்வேன் எனக் கூறுகின்றனர். இதுவும் இறைவனுக்கு நகைச்சுவையை உண்டாக்கித் தரம் விரும்பிய பேற்றைப் பெறும் வேணவாவாகும். இதன் கண், என்னை விடுதி கண்டாய் விடின் சிரிப்பிப்பன் என்ப தனால் பிரபஞ்ச வைராக்கிய விருப்பும் கைவிடாதொழிதல் வேண்டும் என்பதும் புலப்படுதல் காண்க. 48. 153. சிரிப்பிப்பன் சீறும் பிழைப்பைத் தொழும்பையு மீசற்சென்று விரிப்பிப்ப னென்னை எடுதிகண் டாய்விடின் வெங்கரியின் உரிப்பிச்சன் றோலுடைப் பிச்ானஞ் சூண்பிச்ச லூர்ச் சுடுகாட் டெரிப்பிச்ச னென்னையு மாளுடைப் பிச்சனென் றேசுவனே. வெம் மு-ரை: சீறும் பிழைப்பை சிரிப்பிப்பன் - நீ வெகுண்டு ஒறுக்கத்தக்க எனது குற்றத்தினை நீ சிரித்துப் பொதுத்துக்கொள்ளுமாறு செய்வேன், தொழும்பையும் ஈசற்கு என்று விரிப்பிப்பன் - எனது தொண்டினையும் இறைவனாகிய நினக்கே உரியது என்று கூறி அதனை எங்கும் பரவும்படி கைவிடுகின் றனையோ? செய்வேன், என்னை விடுதி கண்டாய் என்னைக் கைவிடாதொழிதல் வேண்டும். வீடின் - என்னைக் கைவிட்டால், தோலை என்னும் யானையின் கரியின் உரிபிச்சன் - கொடிய கயாசுரன் மேற் போர்த்த பித்தன். தோல் உடை பிச்சன் - புலித் தோலை உடை யாகக் கொண்ட பித்தன், நஞ்சு ஊண் பீச்சன் - ஆலகாலம் என்னும் பிச்சன் - ஊர்க்குப் நஞ்சை உண்ட பித்தன், ஊர் சுடு காட்டு எரி பொதுவாகிய சுடுகாட்டுத் தீயில் திருக்கரத்தில் எரி தசங்கி ஆடும் பித்தன். என்னையும் ஆளுடைய பிச்சன் - ஒன்றும் போதா நாயேனையும் ஆட் கொண்டருளிய பித்தன்; என்று ஏசுவன் - என்று இப்படியெல்லாம் கூறி இகழ்ந்துரைப்பேன். நீ வெகுண்டு ஒறுக்கத்தக்க எனது பிழைப்பை நீ சிரித்துப் பொறுக்கு மாறு செய்வேன்; எனது தொழும்பையும் இறைவனாகிய கினக்கே உரியது என்று கூறி அதனை எங்கும் பரவும்படி செய்வேன். என்னைக் கைவிடு என்னைக் கைவிடில் கின்றனையோ? கைவிடாதொழிதல் வேண்டும்; வெங்கரியின் உரிப்பிச்சன்; புலித்தோலை உடையாகவுடைய பிச்சன்; எரிப் பிரிச்சன் என்னையும் நஞ்சு உண் பீச்சன்; ஊர்ச் சுடுகாட்டு ஆளுடைப் பிச்சன் என்று கூறி இகழ்ந்துரைப்பேன் என்பதாம். சீறும் பிழைப்பு - வெகுண்டு தண்டித்தற்குரிய பெருங் குற்றம். செய்த பெருங் குற்றம் இறைவன் தம்மைக் கைவிட்டமைக்கு தான் என்றார். உளதாதல் வேண்டுமெனக் கற்பித்துச் "சீறும் பிழைப்பை யன்றித் தொண் தொழும்பையும் என்பதில் அடிமைத் தன்மையையே டினையும் என உம்மை இறந்தது தழீஇய எச்சவும்மை. ஈசற்கு எனப் 477 நீத்தல் விண்ணப்பம் படர்க்கையிற் கூறினும் ஈசனாகிய நினக்கு என முன்னிலைப் பொருளில் வந்தது. விரிப்பித்தல் - சிலருக்குக் கூறி அவர் வாயிலாகப் பிறர் அறியும் படி செய்தல் என்றது எங்கும் பரவச் செய்தல் என்றவாறு. இதன் பயன் நின் அடியவனாகிய யான் சிறுமையடைதல் வின் புகழுக்கு ஏற்ற மாமோ? ஆகாது. ஆதலில் அருள் செய்ய வேண்டுமென்பது குறிப்பாகும். பித்தர் உடையும் ஊணும் உறைவீடமும் செயலும் மற்றைய மக்க ளினும் வேறுபட்டிருப்பாராதலின் அம்முறையில் யானைத் தோற் போர்வை யும். புலித்தோல் உடையும். நஞ்சு உணவும், சுடுகாட்டிடமும், எரி ஏந்தியாகும் செயலும் ஒன்றும் போதா நாயேனை ஆட்கொள்ளும் செய லும் பித்தர் இயல்பென வைத்து ஏசுவேன் என்றனர். இங்ஙனம் ஏசினும் கரியின் உரிபோர்த்தலும், புலித்தோல் உடுத்தலும், நஞ்சுண்டலும், ஊர்ச் சுடுகாட்டு எரியாடுதலும், என்னையும் ஆட்கொள்ளுதலும் ஆகிய இவை யாவும் இறைவனது வரம்பிலாற்றலையும் என்றுமுள்ள தன்மையையும் பேரருளுடைமையையும் விளக்குவனவாதலால் இது பழிப்பது போலப் புகழ்தலாகும். இறைவனது வீடு பேற்றினை விரும்பிய அடிகள் இறை வனைப் பலவகையிற் புகழ்ந்தும், பழிப்பது போலப் புகழ்ந்தும் வேண்டுவ ராயினர். இதன் கண், சிரிப்பிப்பன் சிறும் பிழைப்பை எனவும் தொழும்பை யும் ஈசற்கென்று விரிப்பிப்பன் விடுதி கண்டாய் எனவும் வருவனவற்றால் பிரபஞ்ச வைராக்கிய விருப்பும் கைவிடாதொழிதல் வேண்டும் என்பதும் போதருதல் காண்க. 40. 154. ஏசினும் யானுன்னை யேத்தினும் என்பிழைக் கேகுழைந்து வேசறு வேனை விடுதிகண் டாய்செம் பவள வெற்பிற் றேசுடை யாயென்னை யாளுடை யாய்சிற் றுயிர்க்கிரங்கிக் காய்சின வாலமுண் டாயமு துண்ணக் கடையவனே. ப.ரை! செம்பவள வெற்பின் தேச உடையாய் - செந்நிற முடைய பவளமலை போன்ற ஒளி பொருந்திய திருமேனியை யுடையவனே, என்னை ஆளுடையாய்-என்னை ஆளாகவுடையவனே, சிறஉயிர்க்கு இரங்கி சகலவர்க் கத்துட்பட்ட சிறுமையுடைய திருமால் பிரமன் இந்திரன் முதலிய எல்லா உயிர்களுக்கும் இரங்கியருளி காய் சின ஆலம் உண்டாய் - சுடும் வெம்மை யையுடைய ஆலகால விடத்தை உண்டு அவ்வுயிர்களைப் பாதுகாத்தவனே. கடையவன் அமுது உண்ண கீழ்மையுடையவனாகிய யான் நின் திருவருள் அமுதத்தினை உண்ணும் வண்ணம், யான் உன்னை ஏசினும் ஏத்தினும் யான் உன்னை பழித்தாலும் புகழ்ந்தாலும், என் பிறைக்கே குழைந்து வேசறு வேனை - என்னுடைய குற்றத்தின் பொருட்டு உருகி வருந்துவேளை, விடுதி கண்டாய்- கைவிடுகின் றனையோ? கைவிடா தொழி தல் வேண்டும். மனம்
476 திருவாசக ஆராய்ச்சியுரை ரும் மின்னைப் பழிக்கும்படி செய்வேன் எனக் கூறுகின்றனர் . இதுவும் இறைவனுக்கு நகைச்சுவையை உண்டாக்கித் தரம் விரும்பிய பேற்றைப் பெறும் வேணவாவாகும் . இதன் கண் என்னை விடுதி கண்டாய் விடின் சிரிப்பிப்பன் என்ப தனால் பிரபஞ்ச வைராக்கிய விருப்பும் கைவிடாதொழிதல் வேண்டும் என்பதும் புலப்படுதல் காண்க . 48 . 153. சிரிப்பிப்பன் சீறும் பிழைப்பைத் தொழும்பையு மீசற்சென்று விரிப்பிப்ப னென்னை எடுதிகண் டாய்விடின் வெங்கரியின் உரிப்பிச்சன் றோலுடைப் பிச்ானஞ் சூண்பிச்ச லூர்ச் சுடுகாட் டெரிப்பிச்ச னென்னையு மாளுடைப் பிச்சனென் றேசுவனே . வெம் மு - ரை : சீறும் பிழைப்பை சிரிப்பிப்பன் - நீ வெகுண்டு ஒறுக்கத்தக்க எனது குற்றத்தினை நீ சிரித்துப் பொதுத்துக்கொள்ளுமாறு செய்வேன் தொழும்பையும் ஈசற்கு என்று விரிப்பிப்பன் - எனது தொண்டினையும் இறைவனாகிய நினக்கே உரியது என்று கூறி அதனை எங்கும் பரவும்படி கைவிடுகின் றனையோ ? செய்வேன் என்னை விடுதி கண்டாய் என்னைக் கைவிடாதொழிதல் வேண்டும் . வீடின் - என்னைக் கைவிட்டால் தோலை என்னும் யானையின் கரியின் உரிபிச்சன் - கொடிய கயாசுரன் மேற் போர்த்த பித்தன் . தோல் உடை பிச்சன் - புலித் தோலை உடை யாகக் கொண்ட பித்தன் நஞ்சு ஊண் பீச்சன் - ஆலகாலம் என்னும் பிச்சன் - ஊர்க்குப் நஞ்சை உண்ட பித்தன் ஊர் சுடு காட்டு எரி பொதுவாகிய சுடுகாட்டுத் தீயில் திருக்கரத்தில் எரி தசங்கி ஆடும் பித்தன் . என்னையும் ஆளுடைய பிச்சன் - ஒன்றும் போதா நாயேனையும் ஆட் கொண்டருளிய பித்தன் ; என்று ஏசுவன் - என்று இப்படியெல்லாம் கூறி இகழ்ந்துரைப்பேன் . நீ வெகுண்டு ஒறுக்கத்தக்க எனது பிழைப்பை நீ சிரித்துப் பொறுக்கு மாறு செய்வேன் ; எனது தொழும்பையும் இறைவனாகிய கினக்கே உரியது என்று கூறி அதனை எங்கும் பரவும்படி செய்வேன் . என்னைக் கைவிடு என்னைக் கைவிடில் கின்றனையோ ? கைவிடாதொழிதல் வேண்டும் ; வெங்கரியின் உரிப்பிச்சன் ; புலித்தோலை உடையாகவுடைய பிச்சன் ; எரிப் பிரிச்சன் என்னையும் நஞ்சு உண் பீச்சன் ; ஊர்ச் சுடுகாட்டு ஆளுடைப் பிச்சன் என்று கூறி இகழ்ந்துரைப்பேன் என்பதாம் . சீறும் பிழைப்பு - வெகுண்டு தண்டித்தற்குரிய பெருங் குற்றம் . செய்த பெருங் குற்றம் இறைவன் தம்மைக் கைவிட்டமைக்கு தான் என்றார் . உளதாதல் வேண்டுமெனக் கற்பித்துச் சீறும் பிழைப்பை யன்றித் தொண் தொழும்பையும் என்பதில் அடிமைத் தன்மையையே டினையும் என உம்மை இறந்தது தழீஇய எச்சவும்மை . ஈசற்கு எனப் 477 நீத்தல் விண்ணப்பம் படர்க்கையிற் கூறினும் ஈசனாகிய நினக்கு என முன்னிலைப் பொருளில் வந்தது . விரிப்பித்தல் - சிலருக்குக் கூறி அவர் வாயிலாகப் பிறர் அறியும் படி செய்தல் என்றது எங்கும் பரவச் செய்தல் என்றவாறு . இதன் பயன் நின் அடியவனாகிய யான் சிறுமையடைதல் வின் புகழுக்கு ஏற்ற மாமோ ? ஆகாது . ஆதலில் அருள் செய்ய வேண்டுமென்பது குறிப்பாகும் . பித்தர் உடையும் ஊணும் உறைவீடமும் செயலும் மற்றைய மக்க ளினும் வேறுபட்டிருப்பாராதலின் அம்முறையில் யானைத் தோற் போர்வை யும் . புலித்தோல் உடையும் . நஞ்சு உணவும் சுடுகாட்டிடமும் எரி ஏந்தியாகும் செயலும் ஒன்றும் போதா நாயேனை ஆட்கொள்ளும் செய லும் பித்தர் இயல்பென வைத்து ஏசுவேன் என்றனர் . இங்ஙனம் ஏசினும் கரியின் உரிபோர்த்தலும் புலித்தோல் உடுத்தலும் நஞ்சுண்டலும் ஊர்ச் சுடுகாட்டு எரியாடுதலும் என்னையும் ஆட்கொள்ளுதலும் ஆகிய இவை யாவும் இறைவனது வரம்பிலாற்றலையும் என்றுமுள்ள தன்மையையும் பேரருளுடைமையையும் விளக்குவனவாதலால் இது பழிப்பது போலப் புகழ்தலாகும் . இறைவனது வீடு பேற்றினை விரும்பிய அடிகள் இறை வனைப் பலவகையிற் புகழ்ந்தும் பழிப்பது போலப் புகழ்ந்தும் வேண்டுவ ராயினர் . இதன் கண் சிரிப்பிப்பன் சிறும் பிழைப்பை எனவும் தொழும்பை யும் ஈசற்கென்று விரிப்பிப்பன் விடுதி கண்டாய் எனவும் வருவனவற்றால் பிரபஞ்ச வைராக்கிய விருப்பும் கைவிடாதொழிதல் வேண்டும் என்பதும் போதருதல் காண்க . 40 . 154. ஏசினும் யானுன்னை யேத்தினும் என்பிழைக் கேகுழைந்து வேசறு வேனை விடுதிகண் டாய்செம் பவள வெற்பிற் றேசுடை யாயென்னை யாளுடை யாய்சிற் றுயிர்க்கிரங்கிக் காய்சின வாலமுண் டாயமு துண்ணக் கடையவனே . ப.ரை ! செம்பவள வெற்பின் தேச உடையாய் - செந்நிற முடைய பவளமலை போன்ற ஒளி பொருந்திய திருமேனியை யுடையவனே என்னை ஆளுடையாய் - என்னை ஆளாகவுடையவனே சிறஉயிர்க்கு இரங்கி சகலவர்க் கத்துட்பட்ட சிறுமையுடைய திருமால் பிரமன் இந்திரன் முதலிய எல்லா உயிர்களுக்கும் இரங்கியருளி காய் சின ஆலம் உண்டாய் - சுடும் வெம்மை யையுடைய ஆலகால விடத்தை உண்டு அவ்வுயிர்களைப் பாதுகாத்தவனே . கடையவன் அமுது உண்ண கீழ்மையுடையவனாகிய யான் நின் திருவருள் அமுதத்தினை உண்ணும் வண்ணம் யான் உன்னை ஏசினும் ஏத்தினும் யான் உன்னை பழித்தாலும் புகழ்ந்தாலும் என் பிறைக்கே குழைந்து வேசறு வேனை - என்னுடைய குற்றத்தின் பொருட்டு உருகி வருந்துவேளை விடுதி கண்டாய்- கைவிடுகின் றனையோ ? கைவிடா தொழி தல் வேண்டும் . மனம்