திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

26 திருவாசக ஆராய்ச்சியுரை வீடு பேறடைவராதலின் 'மாற்றமாம் வையகத்தின் வந்தறிவாந் தேற் றனே' என்றார். யாதொரு தெய்வங் கொண்டீர் அத்தெய்வ மாகி யாங்கே மாதொரு பாக னார்தாம் வருவர்மற் றத்தெய் வங்கள் வேதனைப் படுமி றக்கும் பிறக்கும்மேல் வீனையுஞ் செய்யும் ஆதலான் இவையி லாதான் அறிந்தருள் செய்வன் அன்றே (சூத்2. செய் 25) " என்னும் சிவஞானசித்தியார் திருவிருத்தம் இங்கே சிந்திக்கத்தக்கது. தேற்றத்தெளிவு - தெளிந்தார்க்கும் உயிர்க்குயிராய் நின்று நுகரப் படும் தெளிவு. ஊற்றான அமுது - என் மனத்தினுள் ஊற்றாகச் சுரக் கின்ற அமுது. ''ஊற்றிருந் துள்ளங் கழிப்போன் (அண்ட 121) என அடிகள் அருளியமையுங்காண்க. ஆர் அமுது -அரிய அமுது, " நின்னாளா னார்க் குண்ணார்ந்த ஆரமுதே" (ஏசறவு 2) என வருதல் காண்க. உை யானே - என்னை ஆளாக உடையானே எனினுமாம். 84-88. வேற்று விகார விடக்கு உடம்பின் உள் கிடப்ப ஆற்றேன்- வெவ்வேறு மாறுபாடுகளையுடைய ஊன் உடம்பினுள்ளே கிடக்க அதனா லாகிய துன்பத்தினைப்பொறேன்; எம் ஐயா - எமது தலைவனே, அரனேயோ என்று என்று - பாசங்களை நீக்குவோனேயோ என்று பலகால் ஓலமிட்டு அழைத்து, போற்றி புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார் - வணங் கிப் புகழ்ந்து பாடிக் கொண்டிருந்து பொய்யாகிய நினைவு சொற் செயல்க ளெல்லாம் கெட்டு மெய்யாகிய நினைவு சொற் செயல்களை உடையராயி னார், மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே - திரும்பவும் இந்நில வுலகத்தில் வந்து இருவினைக்கீடானதும் இருவினைக்கு விளைவானதுமாகிய பிறப்பினை அடையாமே, கள்ளம் புலம் குரம்பை கட்டு அழிக்க வல்லானே- வஞ்சகத்தையுடைய புலன்களின் வழிச்செல்லும் ஐம்பொறிகளின் குடிசை யாகிய எடுத்த உடம்பின் பந்தத்தினை அழிக்க வல்லவனே. வேறு விகாரம் - வேறாகிய விகாரம். இருபெயரொட்டுப் பண்புத் தொகை. வேறுாகிய விகாரங்கள்: பாலியம் யவ்வனம் கௌமாரம் வயோதி கம் நரை திரை நோய் மூப்பு சாக்காடு என்பன. விடக்கு - ஊன். "பு தனங்கிடு விடக்கை நின்றதொரு பூனைதின்னுமது போல்' என்புழியும் இப்பொருட்டாதல் காண்க. (பாரதம்) இறைவன் திருவடியைத் தக்ைகூடும் விலையை எய்தினார்க்கு இவ்வூ னுடம்பு ஒரு பொறையாயும் சிறையாயுமிருத்தலின் 'ஊனுடம்பி னுட் கிடப்ப ஆற்றேன்' என்றார். "ஆக்கையைப் பொறுத்தல் புகலேன்'' (அண்ட 129) "தினைத் துணையேனும் பொறேன் துயராக்கையின் திண் வலையே" (ரீத் 39) என அடிகள் அருளியமையுங் காண்க. சிவபுராணம் 27 அரன் - வடமொழி. உயிர்களின் மாசுகளை அழிப்பவன் என்பது இதன் பொருள். புகழ்ந்திருத்தல் - புகழ்ந்து பாடிக்கொண்டிருத்தல். பொய் என் றது உயிரியல்பான நினைவு சொற்செயல்களை - அவை உள்ளீடின்மையின் பொய்யெனப்பட்டன. மெய் - இறையருள் வழி நிற்றலினால் உளவாகும் நினைவு சொற்செயல்கள். அவை உயிரின் ஈடேற்றமாகிய உள்ளீடுடை மையின் மெய்யெனப்பட்டன. இங்கு என்னும் சுட்டு நிலவுவகைக் குறித் வினைப்பிறவி - வினைப்பயனால் உண்டாகும் பிறவி எனவும், வினையைத் தேடுதற்குரிய பிறவி எனவும் கொள்ளப்படும். வினையின் வந்தது வினைக்கு விளைவாயது" (மணிமேகலை) எனப் பிறரும் கூறுதல் காண்க. பிறவி துன்பத்திற்கேதுவாதவின் 'பிறவிசாரமே என்றார். வினைப்பிறவி யென்கின்ற வேதனையி லகப்பட்டுத் தனைச்சிறிதும் நினையாதே தளர்வெய்திக் கிடப்பேனை கண்ட 2. என அடிகள் அருளியமையுங் காண்க. சாராமே, மே ஈற்று வினையெச் ''வாராமே'' (திருப்படையெழுச்சி 2) என்பது போல சம். கள்ளம் . வஞ்சகம். ''உள்ளுவன் மன்யா னுரைப் பதவர்திறமாற்' கள்ளம் பிறவோ பசப்பு" (குறள் 1184) என் புழிப்போல. புலம் என்றது ஈண்டு ஐம்புல் அவாக்களுக்கிடமான பொறிகளை. அவைகளுக்கு இருப்பிடமாகளின் புலக் குரம்பை' என்றார். சிறுமனைபோறலின் உடம்பு குரம்பை எனப்பட்டது. எடுத்த உடம்பின் தொடர்பு உளதாங்காறும்,நீக்கப்பட்ட புலன் களின் அவா பண்டைப் பயிற்சி வயத்தால் ஒரோவழி உளவாகவின் இவ் வுடம்பின் தொடர்பு நீக்கப்படவேண்டியதென்பதும் அதனைச் செய்ய வல்லான் முழுமுதலிறைவன் ஒருவனே என்பதும் உணர்த்துவார் னப் புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே என்றார். * கள் 89-95. நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே - செறிந்த இருளிலே திருக்கூத்தினைப் பலகாலும் ஆடுகின்ற தலைவனே, தில்லையுன் கூத்தனே. தில்லைத் திருச்சிற்றம்பலத்தின் கண்ணே கூத்து இயற்றுவோனே, தென் பாண்டி நாட்டானே- தெற்கேயுள்ள பாண்டி நாட்டையுடையவனே, அல்லல் பிறவி அறுப்பானேயோ என்று - துன்பத்திற்கிடமான பிறப் பினை நீக்குவோனேயோ என்று அழைத்து முறையிட்டு, சொல்லற்கு அரியானை சொல்வி - சொல்லிப் பாராட்டுதற்கு முடியாத அருமைப்பாடு டையவனை இயன்றமட்டும் பாராட்டி, திருஅடிகீழ் சொல்லிய -அவன் திருவடியாகிய திருவருளின் கீழ்பட்டு நின்று பாடிய, பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் - பாடல்களின் பொருள்களை அறிந்து ஓதவல்ல வர்கள், சிவபுராணத்தின் உள்ளார் பல்லோரும் பணிந்து ஏத்த - சிவபுரத்தி லுள்ள சிவகணத்தவர் பலரும் வணங்கித் துதிக்க, சிவன் அடி கீழ் செல் வர்-சிவன் திருவடிக்கீழ்ச் சென்று இன்புற்றிருப்பர்.
26 திருவாசக ஆராய்ச்சியுரை வீடு பேறடைவராதலின் ' மாற்றமாம் வையகத்தின் வந்தறிவாந் தேற் றனே ' என்றார் . யாதொரு தெய்வங் கொண்டீர் அத்தெய்வ மாகி யாங்கே மாதொரு பாக னார்தாம் வருவர்மற் றத்தெய் வங்கள் வேதனைப் படுமி றக்கும் பிறக்கும்மேல் வீனையுஞ் செய்யும் ஆதலான் இவையி லாதான் அறிந்தருள் செய்வன் அன்றே ( சூத் 2 . செய் 25 ) என்னும் சிவஞானசித்தியார் திருவிருத்தம் இங்கே சிந்திக்கத்தக்கது . தேற்றத்தெளிவு - தெளிந்தார்க்கும் உயிர்க்குயிராய் நின்று நுகரப் படும் தெளிவு . ஊற்றான அமுது - என் மனத்தினுள் ஊற்றாகச் சுரக் கின்ற அமுது . ' ' ஊற்றிருந் துள்ளங் கழிப்போன் ( அண்ட 121 ) என அடிகள் அருளியமையுங்காண்க . ஆர் அமுது -அரிய அமுது நின்னாளா னார்க் குண்ணார்ந்த ஆரமுதே ( ஏசறவு 2 ) என வருதல் காண்க . உை யானே - என்னை ஆளாக உடையானே எனினுமாம் . 84-88 . வேற்று விகார விடக்கு உடம்பின் உள் கிடப்ப ஆற்றேன் வெவ்வேறு மாறுபாடுகளையுடைய ஊன் உடம்பினுள்ளே கிடக்க அதனா லாகிய துன்பத்தினைப்பொறேன் ; எம் ஐயா - எமது தலைவனே அரனேயோ என்று என்று - பாசங்களை நீக்குவோனேயோ என்று பலகால் ஓலமிட்டு அழைத்து போற்றி புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார் - வணங் கிப் புகழ்ந்து பாடிக் கொண்டிருந்து பொய்யாகிய நினைவு சொற் செயல்க ளெல்லாம் கெட்டு மெய்யாகிய நினைவு சொற் செயல்களை உடையராயி னார் மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே - திரும்பவும் இந்நில வுலகத்தில் வந்து இருவினைக்கீடானதும் இருவினைக்கு விளைவானதுமாகிய பிறப்பினை அடையாமே கள்ளம் புலம் குரம்பை கட்டு அழிக்க வல்லானே வஞ்சகத்தையுடைய புலன்களின் வழிச்செல்லும் ஐம்பொறிகளின் குடிசை யாகிய எடுத்த உடம்பின் பந்தத்தினை அழிக்க வல்லவனே . வேறு விகாரம் - வேறாகிய விகாரம் . இருபெயரொட்டுப் பண்புத் தொகை . வேறுாகிய விகாரங்கள் : பாலியம் யவ்வனம் கௌமாரம் வயோதி கம் நரை திரை நோய் மூப்பு சாக்காடு என்பன . விடக்கு - ஊன் . பு தனங்கிடு விடக்கை நின்றதொரு பூனைதின்னுமது போல் ' என்புழியும் இப்பொருட்டாதல் காண்க . ( பாரதம் ) இறைவன் திருவடியைத் தக்ைகூடும் விலையை எய்தினார்க்கு இவ்வூ னுடம்பு ஒரு பொறையாயும் சிறையாயுமிருத்தலின் ' ஊனுடம்பி னுட் கிடப்ப ஆற்றேன் ' என்றார் . ஆக்கையைப் பொறுத்தல் புகலேன் ' ' ( அண்ட 129 ) தினைத் துணையேனும் பொறேன் துயராக்கையின் திண் வலையே ( ரீத் 39 ) என அடிகள் அருளியமையுங் காண்க . சிவபுராணம் 27 அரன் - வடமொழி . உயிர்களின் மாசுகளை அழிப்பவன் என்பது இதன் பொருள் . புகழ்ந்திருத்தல் - புகழ்ந்து பாடிக்கொண்டிருத்தல் . பொய் என் றது உயிரியல்பான நினைவு சொற்செயல்களை - அவை உள்ளீடின்மையின் பொய்யெனப்பட்டன . மெய் - இறையருள் வழி நிற்றலினால் உளவாகும் நினைவு சொற்செயல்கள் . அவை உயிரின் ஈடேற்றமாகிய உள்ளீடுடை மையின் மெய்யெனப்பட்டன . இங்கு என்னும் சுட்டு நிலவுவகைக் குறித் வினைப்பிறவி - வினைப்பயனால் உண்டாகும் பிறவி எனவும் வினையைத் தேடுதற்குரிய பிறவி எனவும் கொள்ளப்படும் . வினையின் வந்தது வினைக்கு விளைவாயது ( மணிமேகலை ) எனப் பிறரும் கூறுதல் காண்க . பிறவி துன்பத்திற்கேதுவாதவின் ' பிறவிசாரமே என்றார் . வினைப்பிறவி யென்கின்ற வேதனையி லகப்பட்டுத் தனைச்சிறிதும் நினையாதே தளர்வெய்திக் கிடப்பேனை கண்ட 2 . என அடிகள் அருளியமையுங் காண்க . சாராமே மே ஈற்று வினையெச் ' ' வாராமே ' ' ( திருப்படையெழுச்சி 2 ) என்பது போல சம் . கள்ளம் . வஞ்சகம் . ' ' உள்ளுவன் மன்யா னுரைப் பதவர்திறமாற் ' கள்ளம் பிறவோ பசப்பு ( குறள் 1184 ) என் புழிப்போல . புலம் என்றது ஈண்டு ஐம்புல் அவாக்களுக்கிடமான பொறிகளை . அவைகளுக்கு இருப்பிடமாகளின் புலக் குரம்பை ' என்றார் . சிறுமனைபோறலின் உடம்பு குரம்பை எனப்பட்டது . எடுத்த உடம்பின் தொடர்பு உளதாங்காறும் நீக்கப்பட்ட புலன் களின் அவா பண்டைப் பயிற்சி வயத்தால் ஒரோவழி உளவாகவின் இவ் வுடம்பின் தொடர்பு நீக்கப்படவேண்டியதென்பதும் அதனைச் செய்ய வல்லான் முழுமுதலிறைவன் ஒருவனே என்பதும் உணர்த்துவார் னப் புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே என்றார் . * கள் 89-95 . நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே - செறிந்த இருளிலே திருக்கூத்தினைப் பலகாலும் ஆடுகின்ற தலைவனே தில்லையுன் கூத்தனே . தில்லைத் திருச்சிற்றம்பலத்தின் கண்ணே கூத்து இயற்றுவோனே தென் பாண்டி நாட்டானே- தெற்கேயுள்ள பாண்டி நாட்டையுடையவனே அல்லல் பிறவி அறுப்பானேயோ என்று - துன்பத்திற்கிடமான பிறப் பினை நீக்குவோனேயோ என்று அழைத்து முறையிட்டு சொல்லற்கு அரியானை சொல்வி - சொல்லிப் பாராட்டுதற்கு முடியாத அருமைப்பாடு டையவனை இயன்றமட்டும் பாராட்டி திருஅடிகீழ் சொல்லிய -அவன் திருவடியாகிய திருவருளின் கீழ்பட்டு நின்று பாடிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் - பாடல்களின் பொருள்களை அறிந்து ஓதவல்ல வர்கள் சிவபுராணத்தின் உள்ளார் பல்லோரும் பணிந்து ஏத்த - சிவபுரத்தி லுள்ள சிவகணத்தவர் பலரும் வணங்கித் துதிக்க சிவன் அடி கீழ் செல் வர் - சிவன் திருவடிக்கீழ்ச் சென்று இன்புற்றிருப்பர் .