திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை சாபவிடுதி வேண்டி நின்றனர். இறைவன் அவர்களுக்குச் சாபம் நீங்கும் ஆற்றினையும் கூறியருளினர். கூறியவாறே இறைவன் வலைஞன் வேடத் திற்றோன்றி, வலைஞர்களுக்கு அலக்கண் செய்த சுறவினைப் பிடித்து மடுத்து வலைஞர் மகளான உமாபிராட்டியை மனஞ்செய்தருளினன். அப்போது சுறவினிடத்து எடுத்த ஆகமநூலை மீட்டும் மகேந்திரமலையில் எழுந்தருளியிருந்து உலகினர்க்குதவுமாறு வெளிப்படுத்தியருளியமையைச் சொன்ன ஆகமம் தோற்றுவித் தருளியும்' என்பது குறிப்பதாகும். 36 11-12. கல்லாடத்து கலந்து இனிது அருளி-கல்லாடம் என்னும் திருப்பதியிவே அம்மை வழிபட்ட திருவுருவிற் கலந்து இனிது எழுந்தருளி, நல்லாளோடு நயப்பு உறவு எய்தியும் - அவ்வுமையம்மையாரோடு பேரின்ப நட்புக் கொண்டும். கல்லாடம் - ஒரு சிவதலம். நயப்பு - இன்பம். உறவு -நட்பு. 13-14.பஞ்சப்பள்ளியில் பஞ்சப்பள்ளியென்னும் ஊரில் பால் மொழி தன்னொடு - பால்போல் இனிய சொற்களையுடைய உமையம்மையா ரோடும் சேர்ந்து, எஞ்சாது ஈண்டும் இன் அருள் விளைத்தும் - குறையாது மிகுகின்ற இனிய அருளை விளைவித்தும் பான்மொழி - பால்போலு மினிய மொழி. இன்பான் மொழிக்கிள் ளாய்" (தசாங் 8) என அடிகள் அருளியவாறுங் காண்க. பான்மொழி என்றது ஈண்டு உவமைத் தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை யாய் உமையம்மையைக் குறித்தது. "பான் மொழியோடுங் கூர்கொள் வலனேந்திக் கொச்சை வயமமர்ந்தாரே (திருஞான 225:9) எனத் தேவாரத்து வருதலும் காண்க. எஞ்சாது - குறையாது. மன்னுயிர்க் கெஞ்சா தீத்து'' (பதிற் 15:35-6) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க. ஈண்டுதல் - மிகுதல். "ஈண்டு மீர் (கவி 143: 44 உரை) என்பதற்கு மிகுகின்ற நீர் என நச்சினார்க்கினியர் பொருளுரைத்தமையுங் காண்க. 15-16. கிராத வேடமொடு - வேடவடிவத்தோடு, கிஞ்சுக வாயவள் - முருக்கு மலர்போன்ற சிவந்த வாயினையுடைய உமையம்மையின், விராவு கொங்கை நல் தடம் படிந்தும் - ஒன்றோடொன்று கலந்த தனங்களாகிய நல்ல தடாகத்தில் முழுகியும். இறைவனது மகேசுவர வடிவம் இருபத்தைந்தனுள் கிராதமூர்த்தியும் ஒருவராதலின் அவர் உமையம்மையாருடன் எழுந்தருளியிருந்த முறைமை யினைக் கிராத வேடம்மாடு கிஞ்சுக வாயவள். விராவு கொங்கை நற்ற டம் படிந்தும்" என அடிகள் அருளிச் செய்தனர். கிராத மூர்த்தியை விதந்தெடுத்து ஓதியது அவர் மற்றைய மூர்த்திகளில் வேறுபட்டு மறைத் தற்றெழில் புரியும் இயையுபற்றியாகும். இனி, தவங்கிடந்த அருச்சுன னுக்கு இறைவன் வேடவடிவில் வந்து அருள் செய்தமைபற்றிக் கூறிய கீர்த்தித் திருவகவல் 37 தெனினுமமையும். அருச்சுனனுக்கு அருள் செய்யும் பொருட்டு இறை வன் வேடவடிவங் கொண்டமை, வேடனாகி விசையற் கருளியோ (ஞான 373:5) விசயனுக்கு வேடுவனாய் கின்றான் றன்னை (நாவு 247 : 2) வேடனாய் விசயற் கருள்புரிந்த, இந்துசேகரனே (சந் 70:5) எனத் தேவாரத்தும், " புராத னாகம வேத கீதபு ராண ரூபமொ ழித்துவெங் கிராத னாகிய வடிவு கொண்டகி ரீசனொடு எனப் பாரதத்தும் வருவனவற்றாலுமறிக. " " (அருச்சுனன் தவ 92) 4² கிராதன் - வேடன். திவாகரம்.கிஞ்சுகம் - முருக்கு. கவிரே கிஞ் சுகம் முருக்கெனக் கருதுவர் எனத் திவாகரத்தும் வருதல் காண்க. ஈண்டு அதன் மலரை உணர்த்தியது. இஞ்சுகவாய் - முருக்கு மலர் போன்ற சிவந்த வாய். கேட்குமென் மழலைச் சொல்லோர் கிஞ்சுகங் கிடந்த வாயாள்' (கம்ப. உண்டாட்டு 13) எனப் பிறரும் கூறுதல் காண்க. விராவு தல் - கலத்தல். நரைவீரா வுற்ற செம்முகச் செவிலியர்' (நெடுநல் 152-3) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க. நெருங்குதலுமாம். தடம் - பெருமை. "தடவுங் கயவு கனியும் பெருமை" என்றார் ஆசிரியர் தொல்காப்பியனாரும். ஈண்டுத் நடாகம் என்னும் பொருளில் வந்தது. *கிஞ்சுக வாயவள் விராவு கொங்கை, கற்றடம் படிந்தும்' என்பதனைக் கிராதவடிவமொடு வேட்டையாடிய இறைவன் தன் வெம்மை நீங்கும் வண்ணம் ஒரு தடாகத்திற் படிந்தனன் எனக் கவிநயந் தோன்றக் கூறிய தாகக் கொள்க. 17-20. கேவேடர் ஆடு கெளிறது படுத்தும் - வலைஞர் வடிவங்கொண்டு வலைவீசிக் கெளிற்றுமீனை அகப்படுத்தியும், மா ஏட்டு ஆகிய ஆசமம் வாங்கியும் - பெரிய ஏட்டில் கன் அமைந்த ஆகமநூலை அக்கெளிற்றினின் நும் எடுத்தும், அவை தம்மை - அங்ஙனம் வாங்கிய அவ்வாகமங்கள் இருபத்தெட்டிளையும். மகேந்திரத்து இருந்து -மகேந்திர மலையின்கண் வீற்றிருந்து, உற்ற ஐம்முகங்களால் பணித்தருளியும் - பொருந்திய தன் ஐந்து திருமுகங்களால் உபதேசித்தருளியும். கேவேடன் - வலைஞன், கேலர்த்த: என்னும் வடசொல் கேவேடர் எனத்திரிந்தது. இறைவன் கேவேடனாய்ச் சென்று படுத்தது சுறவுமீன் என்று திருவிளையாடற்புராணம் கூறுமாயினும், அடிகள் 'கெளிறது படுத் தும்' எனக் கூறுதலீன் அடிகள் கூற்றே கொள்ளப்பாலதாம் என்க. இனி மா ஏட்டு ஆகமம் - பெரிய ஏட்டின்கண் அமைந்த ஆகமம், மா வேட்டு ஆகிய ஆகமம் எனக்கொண்டு பெரிய விருப்பத்தினைத் தரு வனவாகிய ஆசுமநூல் எனப் பொருளுரைப்பாருமுளர். அவர் கூற்று இறைவன் உமையம்மைக்கு ஆகமநூற் பொருளை எடுத்து அறிவுறுப்ப
திருவாசக ஆராய்ச்சியுரை சாபவிடுதி வேண்டி நின்றனர் . இறைவன் அவர்களுக்குச் சாபம் நீங்கும் ஆற்றினையும் கூறியருளினர் . கூறியவாறே இறைவன் வலைஞன் வேடத் திற்றோன்றி வலைஞர்களுக்கு அலக்கண் செய்த சுறவினைப் பிடித்து மடுத்து வலைஞர் மகளான உமாபிராட்டியை மனஞ்செய்தருளினன் . அப்போது சுறவினிடத்து எடுத்த ஆகமநூலை மீட்டும் மகேந்திரமலையில் எழுந்தருளியிருந்து உலகினர்க்குதவுமாறு வெளிப்படுத்தியருளியமையைச் சொன்ன ஆகமம் தோற்றுவித் தருளியும் ' என்பது குறிப்பதாகும் . 36 11-12 . கல்லாடத்து கலந்து இனிது அருளி - கல்லாடம் என்னும் திருப்பதியிவே அம்மை வழிபட்ட திருவுருவிற் கலந்து இனிது எழுந்தருளி நல்லாளோடு நயப்பு உறவு எய்தியும் - அவ்வுமையம்மையாரோடு பேரின்ப நட்புக் கொண்டும் . கல்லாடம் - ஒரு சிவதலம் . நயப்பு - இன்பம் . உறவு -நட்பு . 13-14.பஞ்சப்பள்ளியில் பஞ்சப்பள்ளியென்னும் ஊரில் பால் மொழி தன்னொடு - பால்போல் இனிய சொற்களையுடைய உமையம்மையா ரோடும் சேர்ந்து எஞ்சாது ஈண்டும் இன் அருள் விளைத்தும் - குறையாது மிகுகின்ற இனிய அருளை விளைவித்தும் பான்மொழி - பால்போலு மினிய மொழி . இன்பான் மொழிக்கிள் ளாய் ( தசாங் 8 ) என அடிகள் அருளியவாறுங் காண்க . பான்மொழி என்றது ஈண்டு உவமைத் தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை யாய் உமையம்மையைக் குறித்தது . பான் மொழியோடுங் கூர்கொள் வலனேந்திக் கொச்சை வயமமர்ந்தாரே ( திருஞான 225 : 9 ) எனத் தேவாரத்து வருதலும் காண்க . எஞ்சாது - குறையாது . மன்னுயிர்க் கெஞ்சா தீத்து ' ' ( பதிற் 15 : 35-6 ) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க . ஈண்டுதல் - மிகுதல் . ஈண்டு மீர் ( கவி 143 : 44 உரை ) என்பதற்கு மிகுகின்ற நீர் என நச்சினார்க்கினியர் பொருளுரைத்தமையுங் காண்க . 15-16 . கிராத வேடமொடு - வேடவடிவத்தோடு கிஞ்சுக வாயவள் - முருக்கு மலர்போன்ற சிவந்த வாயினையுடைய உமையம்மையின் விராவு கொங்கை நல் தடம் படிந்தும் - ஒன்றோடொன்று கலந்த தனங்களாகிய நல்ல தடாகத்தில் முழுகியும் . இறைவனது மகேசுவர வடிவம் இருபத்தைந்தனுள் கிராதமூர்த்தியும் ஒருவராதலின் அவர் உமையம்மையாருடன் எழுந்தருளியிருந்த முறைமை யினைக் கிராத வேடம்மாடு கிஞ்சுக வாயவள் . விராவு கொங்கை நற்ற டம் படிந்தும் என அடிகள் அருளிச் செய்தனர் . கிராத மூர்த்தியை விதந்தெடுத்து ஓதியது அவர் மற்றைய மூர்த்திகளில் வேறுபட்டு மறைத் தற்றெழில் புரியும் இயையுபற்றியாகும் . இனி தவங்கிடந்த அருச்சுன னுக்கு இறைவன் வேடவடிவில் வந்து அருள் செய்தமைபற்றிக் கூறிய கீர்த்தித் திருவகவல் 37 தெனினுமமையும் . அருச்சுனனுக்கு அருள் செய்யும் பொருட்டு இறை வன் வேடவடிவங் கொண்டமை வேடனாகி விசையற் கருளியோ ( ஞான 373 : 5 ) விசயனுக்கு வேடுவனாய் கின்றான் றன்னை ( நாவு 247 : 2 ) வேடனாய் விசயற் கருள்புரிந்த இந்துசேகரனே ( சந் 70 : 5 ) எனத் தேவாரத்தும் புராத னாகம வேத கீதபு ராண ரூபமொ ழித்துவெங் கிராத னாகிய வடிவு கொண்டகி ரீசனொடு எனப் பாரதத்தும் வருவனவற்றாலுமறிக . ( அருச்சுனன் தவ 92 ) கிராதன் - வேடன் . திவாகரம்.கிஞ்சுகம் - முருக்கு . கவிரே கிஞ் சுகம் முருக்கெனக் கருதுவர் எனத் திவாகரத்தும் வருதல் காண்க . ஈண்டு அதன் மலரை உணர்த்தியது . இஞ்சுகவாய் - முருக்கு மலர் போன்ற சிவந்த வாய் . கேட்குமென் மழலைச் சொல்லோர் கிஞ்சுகங் கிடந்த வாயாள் ' ( கம்ப . உண்டாட்டு 13 ) எனப் பிறரும் கூறுதல் காண்க . விராவு தல் - கலத்தல் . நரைவீரா வுற்ற செம்முகச் செவிலியர் ' ( நெடுநல் 152-3 ) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க . நெருங்குதலுமாம் . தடம் - பெருமை . தடவுங் கயவு கனியும் பெருமை என்றார் ஆசிரியர் தொல்காப்பியனாரும் . ஈண்டுத் நடாகம் என்னும் பொருளில் வந்தது . * கிஞ்சுக வாயவள் விராவு கொங்கை கற்றடம் படிந்தும் ' என்பதனைக் கிராதவடிவமொடு வேட்டையாடிய இறைவன் தன் வெம்மை நீங்கும் வண்ணம் ஒரு தடாகத்திற் படிந்தனன் எனக் கவிநயந் தோன்றக் கூறிய தாகக் கொள்க . 17-20 . கேவேடர் ஆடு கெளிறது படுத்தும் - வலைஞர் வடிவங்கொண்டு வலைவீசிக் கெளிற்றுமீனை அகப்படுத்தியும் மா ஏட்டு ஆகிய ஆசமம் வாங்கியும் - பெரிய ஏட்டில் கன் அமைந்த ஆகமநூலை அக்கெளிற்றினின் நும் எடுத்தும் அவை தம்மை - அங்ஙனம் வாங்கிய அவ்வாகமங்கள் இருபத்தெட்டிளையும் . மகேந்திரத்து இருந்து -மகேந்திர மலையின்கண் வீற்றிருந்து உற்ற ஐம்முகங்களால் பணித்தருளியும் - பொருந்திய தன் ஐந்து திருமுகங்களால் உபதேசித்தருளியும் . கேவேடன் - வலைஞன் கேலர்த்த : என்னும் வடசொல் கேவேடர் எனத்திரிந்தது . இறைவன் கேவேடனாய்ச் சென்று படுத்தது சுறவுமீன் என்று திருவிளையாடற்புராணம் கூறுமாயினும் அடிகள் ' கெளிறது படுத் தும் ' எனக் கூறுதலீன் அடிகள் கூற்றே கொள்ளப்பாலதாம் என்க . இனி மா ஏட்டு ஆகமம் - பெரிய ஏட்டின்கண் அமைந்த ஆகமம் மா வேட்டு ஆகிய ஆகமம் எனக்கொண்டு பெரிய விருப்பத்தினைத் தரு வனவாகிய ஆசுமநூல் எனப் பொருளுரைப்பாருமுளர் . அவர் கூற்று இறைவன் உமையம்மைக்கு ஆகமநூற் பொருளை எடுத்து அறிவுறுப்ப