திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

38 திருவாசக ஆராய்ச்சியுரை அவ்வம்மையார் மனம்பொருந்தக் கேளாதொழிய அதனால் இறைவன் வலைஞனுக்கு மகளாகெனச் சபித்தனர் எனவும், முத்தபிள்ளையாரும் இறைவன் கையிலிருந்த ஆகமத்தினைப் பறித்தெடுத்துக் கடலுள் வீசினர் எனவும் கூறும் திருவிளையாடற்புராணத்துக்கு முரணாகும் என்க * ஐம்முகங்கள்: ஈசானம். தற்புருடம், அகோரம், வாமதேவம், சத் தியோசாதம் என்பன. சத்தியோசாதம் வாமம் அகோரம், தற்புருடம் ஈசானமென ஈசர்க் கைம்முகம்'' எனத் திவாகரத்தும் வருதல் காண்க. 21-22.நந்தம் பாடியில் நான்மறையோனாய் - நந்தம்பாடி என்னும் ஊரிலே நான்கு வேதங்களையும் உணர்ந்தோளுாய், அந்தம் இல் ஆரியனாய் அமர்ந்தருளியும் முடிவில்லாத ஆசிரியனாய் வீற்றிருந்து நான்கு வேதங் களையும் சொல்லிய முறைமையும். நந்தம்பாடி என்பது ஒரு சிவதலம். நான்மறையோன் - நான்கு வேதங் களையும் உணர்ந்தோன். ஆரியன் - ஆசிரியன்; மேலோன். இறைவன் நான்கு வேதங்களையும் உணர்ந்த ஆசிரியனாய் அமர்ந்திருந்து பக்குவான் மாக்களுக்கு அவற்றை உபதேசித்தருளினமையின் 'நான்மறையோனாய் ஆரியனாய் அமர்ந்தருளியும் என்றார். இனி, நம் தம் பாடி எனப்பிரித்து நம்முடைய ஊராகிய -மதுரையில் எனப் பொருளுரைத்து இறைவன் வேதத்திற்குப் பொருளுணர்த்திய திருவிளையாடலைக் குறிப்பதாகும் என வும் கொள்ளலாம். 29-28. வேறு வேறு உருவும் - வெவ்வேறு திருவுருவங்களும், வேறு வேறு இயற்கையும் - வெவ்வேறு தன்மைகளும், தூறு தூறு ஆயிரம் இயல்பினது ஆகி - நூறு இலட்சம் இயல்பினையுடையவாக, ஏறு உடை ஈசன் - எருதினை ஊர்தியாகவுடைய சிவபெருமான், இப்புவனியை உய்ய= இந்நிலவுலகிலுள்ள பக்குவான்மாக்களை உய்விக்கும் பொருட்டு, கூறு உடை மங்கையும் தானும் வந்து அருளி - தன்னுடைய திருமேனியில் ஒரு கூற்றையுடைய உமாதேவியும் தயனும் ஒருங்கு எழுந்தருளி வந்து, குதிரையை கொண்டு குட நாடு அதன் மிசை - குதிரையை நடாத்திக் கொண்டு திருப்பெருந்துறைக்கு மேற்கேயுள்ள பாண்டி நாட்டில், சதுர்பட சாத்தாய் தான் எழுந்தருளியும் - திறமை பொருந்த வணிகர் திரளொடு தான் எழுந்தருளியும். வேறு வேறுருவும் நூறுநூறாயிரம் இயல்பினதாகி எனவும், வேறு வேறு இயற்கையும் நூறு நூறாயிரம் இயல்பினதாகி எனவும் தனித்தனி கூட்டுக. இறைவன் தன்னை வழிபடும் அடியவர்களுக்கு அருள் செய்யும் வண்ணம் அவர்களின் பக்குவ வேறுபாட்டிற்கு ஏற்ப எடுக்கும் திருவுரு வங்களுக்கும், அத்திருவுருவங்களுக்குரிய இயல்புகளுக்கும் ஓரளவில்லை என்பார். வேறுவே நுருவும் வேறுவே றியற்கையும், நூற்நூ றாயிர மியல்பின தாகி' என்று அருளிச் செய்தார். இறைவன் வேறுவேறுரு வும் வேறுவேறியற்கையும் உடையனாவது அன்பர் பொருட்டென்பது, கீர்த்தித் திருவகவல் "உருமேனி தரித்துக் கொண்ட தென்றலு முருவி றந்த அருமேனி யதுவுங் கண்டோம் அருவுரு வான போது திருமேனி யுபயம் பெற்றேம் செப்பிய மூன்று நந்தங் கருமேனி கழிக்க வந்த கருணையின் வடிவு காணே'' (குத் 1. செய் 55) எனச் சிவஞானபித்தியாரில் வருதலானும் உணரப்படும். 31 நூறுநூறாயிரம் - நூறு இலட்சம் எனப் பொருள்படுமாயினும் அது ஈண்டு அளவின்மைப் பொருளில் வந்தது. நூற்றொரு கோடியின் மேற் பட விரிந்தன (திருவண்ட ) என வருதலுங் காண்க இயல்பினது என்ற ஒருமை பன்மைப் பொருளின் வந்த வழுவமைதி, இயல்பினதாகி என்பதை இயல்பினதாக எனத் திரிக்க புவனியென்பது இடவாகுபெயராய் இவ்வுலகிலுள்ள பக்குவான் மாக் களை உணர்த்திற்று. உய்விக்க என்னும் பிறவினைச் செயவெனெச்சம் விவ்விகுதி தொக்கு 'உய்ய' என நின்றது. குடிபொன்றிக் குற்றமு மாங்கே தரும் '" (குறள் 171) என்புழிப்போல. கூறுடை i 39 மங்கை - தன்திருமேனியில் ஒரு கூற்றையுடைய உமை யம்மை. "குரவுவார் குழன்மடவாள் கூறுடையா ளொருபாகம் எனத் திருச்சதசுத்து (I7) வருதலுங் காண்க. மங்கையும் தானும் எனத் திரு வருட்சத்தியும் தானும் ஒருங்கு வருதலைக் கூறியது, திருவருட்சத்தி பதிந்த சத்திநிபாதர்களுக்கு இறைவன் வெளிப்பட்டருளும் முறைமைபற்றியாகும். "" கருவா யுலகினுக் கப்புறமா யிப்புறத்தே மருவார் மலர்க்குழன் மாதினொடும் வந்தருளி அருவாய் மறைப்யி லந்தணனா யாண்டுகொண்ட திருவான தேவர்க்கே சென்றூதாய் கோத்தும்பீ '" (கோத் 14) என அடிகள் அருளியவாறுங் காண்க. Hi குடநாடு என்று மதுரையைக் கூறியது இறைவன் திருப்பெருந் துறைக்கு நேர் மேற்கேயுள்ள மதுரையை நோக்கிக் குதிரை கொண்டு போங் தமையற்றியாகும். இறைவன் திருப்பெருந்துறையிலிருந்து குதிரைகொண்டு எழுந்தருளியமை, "பெற்றி பிறர்க்கரிய பெம்மான் பெருந்துறையான் கொற்றக் குதிரையின்மேல் வந்தருளி '' அம்மானை 20 பரிமிசை வந்த வள்ளல், பெருந்துறைமேய தென்னவன்"குயிற்? "அடியோங்க ளுய்ய, ஆடல் அமர்ந்த பரிமாவேறி' திருவார்த் 4 "பதியின்மேல் வந்த-வள்ளல், மருவும் பெருந்துறையை'" பண்டாய 2 நாட்டில் பரிபாகள் நம்வினையை - வீட்டி அருளும் பெருந்துறையான்" பண்டாய 3
38 திருவாசக ஆராய்ச்சியுரை அவ்வம்மையார் மனம்பொருந்தக் கேளாதொழிய அதனால் இறைவன் வலைஞனுக்கு மகளாகெனச் சபித்தனர் எனவும் முத்தபிள்ளையாரும் இறைவன் கையிலிருந்த ஆகமத்தினைப் பறித்தெடுத்துக் கடலுள் வீசினர் எனவும் கூறும் திருவிளையாடற்புராணத்துக்கு முரணாகும் என்க * ஐம்முகங்கள் : ஈசானம் . தற்புருடம் அகோரம் வாமதேவம் சத் தியோசாதம் என்பன . சத்தியோசாதம் வாமம் அகோரம் தற்புருடம் ஈசானமென ஈசர்க் கைம்முகம் ' ' எனத் திவாகரத்தும் வருதல் காண்க . 21-22.நந்தம் பாடியில் நான்மறையோனாய் - நந்தம்பாடி என்னும் ஊரிலே நான்கு வேதங்களையும் உணர்ந்தோளுாய் அந்தம் இல் ஆரியனாய் அமர்ந்தருளியும் முடிவில்லாத ஆசிரியனாய் வீற்றிருந்து நான்கு வேதங் களையும் சொல்லிய முறைமையும் . நந்தம்பாடி என்பது ஒரு சிவதலம் . நான்மறையோன் - நான்கு வேதங் களையும் உணர்ந்தோன் . ஆரியன் - ஆசிரியன் ; மேலோன் . இறைவன் நான்கு வேதங்களையும் உணர்ந்த ஆசிரியனாய் அமர்ந்திருந்து பக்குவான் மாக்களுக்கு அவற்றை உபதேசித்தருளினமையின் ' நான்மறையோனாய் ஆரியனாய் அமர்ந்தருளியும் என்றார் . இனி நம் தம் பாடி எனப்பிரித்து நம்முடைய ஊராகிய -மதுரையில் எனப் பொருளுரைத்து இறைவன் வேதத்திற்குப் பொருளுணர்த்திய திருவிளையாடலைக் குறிப்பதாகும் என வும் கொள்ளலாம் . 29-28 . வேறு வேறு உருவும் - வெவ்வேறு திருவுருவங்களும் வேறு வேறு இயற்கையும் - வெவ்வேறு தன்மைகளும் தூறு தூறு ஆயிரம் இயல்பினது ஆகி - நூறு இலட்சம் இயல்பினையுடையவாக ஏறு உடை ஈசன் - எருதினை ஊர்தியாகவுடைய சிவபெருமான் இப்புவனியை உய்ய = இந்நிலவுலகிலுள்ள பக்குவான்மாக்களை உய்விக்கும் பொருட்டு கூறு உடை மங்கையும் தானும் வந்து அருளி - தன்னுடைய திருமேனியில் ஒரு கூற்றையுடைய உமாதேவியும் தயனும் ஒருங்கு எழுந்தருளி வந்து குதிரையை கொண்டு குட நாடு அதன் மிசை - குதிரையை நடாத்திக் கொண்டு திருப்பெருந்துறைக்கு மேற்கேயுள்ள பாண்டி நாட்டில் சதுர்பட சாத்தாய் தான் எழுந்தருளியும் - திறமை பொருந்த வணிகர் திரளொடு தான் எழுந்தருளியும் . வேறு வேறுருவும் நூறுநூறாயிரம் இயல்பினதாகி எனவும் வேறு வேறு இயற்கையும் நூறு நூறாயிரம் இயல்பினதாகி எனவும் தனித்தனி கூட்டுக . இறைவன் தன்னை வழிபடும் அடியவர்களுக்கு அருள் செய்யும் வண்ணம் அவர்களின் பக்குவ வேறுபாட்டிற்கு ஏற்ப எடுக்கும் திருவுரு வங்களுக்கும் அத்திருவுருவங்களுக்குரிய இயல்புகளுக்கும் ஓரளவில்லை என்பார் . வேறுவே நுருவும் வேறுவே றியற்கையும் நூற்நூ றாயிர மியல்பின தாகி ' என்று அருளிச் செய்தார் . இறைவன் வேறுவேறுரு வும் வேறுவேறியற்கையும் உடையனாவது அன்பர் பொருட்டென்பது கீர்த்தித் திருவகவல் உருமேனி தரித்துக் கொண்ட தென்றலு முருவி றந்த அருமேனி யதுவுங் கண்டோம் அருவுரு வான போது திருமேனி யுபயம் பெற்றேம் செப்பிய மூன்று நந்தங் கருமேனி கழிக்க வந்த கருணையின் வடிவு காணே ' ' ( குத் 1. செய் 55 ) எனச் சிவஞானபித்தியாரில் வருதலானும் உணரப்படும் . 31 நூறுநூறாயிரம் - நூறு இலட்சம் எனப் பொருள்படுமாயினும் அது ஈண்டு அளவின்மைப் பொருளில் வந்தது . நூற்றொரு கோடியின் மேற் பட விரிந்தன ( திருவண்ட ) என வருதலுங் காண்க இயல்பினது என்ற ஒருமை பன்மைப் பொருளின் வந்த வழுவமைதி இயல்பினதாகி என்பதை இயல்பினதாக எனத் திரிக்க புவனியென்பது இடவாகுபெயராய் இவ்வுலகிலுள்ள பக்குவான் மாக் களை உணர்த்திற்று . உய்விக்க என்னும் பிறவினைச் செயவெனெச்சம் விவ்விகுதி தொக்கு ' உய்ய ' என நின்றது . குடிபொன்றிக் குற்றமு மாங்கே தரும் ' ( குறள் 171 ) என்புழிப்போல . கூறுடை i 39 மங்கை - தன்திருமேனியில் ஒரு கூற்றையுடைய உமை யம்மை . குரவுவார் குழன்மடவாள் கூறுடையா ளொருபாகம் எனத் திருச்சதசுத்து ( I7 ) வருதலுங் காண்க . மங்கையும் தானும் எனத் திரு வருட்சத்தியும் தானும் ஒருங்கு வருதலைக் கூறியது திருவருட்சத்தி பதிந்த சத்திநிபாதர்களுக்கு இறைவன் வெளிப்பட்டருளும் முறைமைபற்றியாகும் . கருவா யுலகினுக் கப்புறமா யிப்புறத்தே மருவார் மலர்க்குழன் மாதினொடும் வந்தருளி அருவாய் மறைப்யி லந்தணனா யாண்டுகொண்ட திருவான தேவர்க்கே சென்றூதாய் கோத்தும்பீ ' ( கோத் 14 ) என அடிகள் அருளியவாறுங் காண்க . Hi குடநாடு என்று மதுரையைக் கூறியது இறைவன் திருப்பெருந் துறைக்கு நேர் மேற்கேயுள்ள மதுரையை நோக்கிக் குதிரை கொண்டு போங் தமையற்றியாகும் . இறைவன் திருப்பெருந்துறையிலிருந்து குதிரைகொண்டு எழுந்தருளியமை பெற்றி பிறர்க்கரிய பெம்மான் பெருந்துறையான் கொற்றக் குதிரையின்மேல் வந்தருளி ' ' அம்மானை 20 பரிமிசை வந்த வள்ளல் பெருந்துறைமேய தென்னவன் குயிற் ? அடியோங்க ளுய்ய ஆடல் அமர்ந்த பரிமாவேறி ' திருவார்த் 4 பதியின்மேல் வந்த - வள்ளல் மருவும் பெருந்துறையை ' பண்டாய 2 நாட்டில் பரிபாகள் நம்வினையை - வீட்டி அருளும் பெருந்துறையான் பண்டாய 3