திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை அரியொடு என்புறி ஒடு எண்ணுப்பொருட்டு அளவு - எல்லை, பேரள வெய்திய பெரும்பெயர்ப் பாண்டில் (நெடுநல் 123) என்புழி யும் இப்பொருட்டாதல் காண்க. திருமாலும் பிரமனும் அடிமுடி தேடிய ஞான்று இறைவன் எல்லையறியப்படாதவாறு நின்றானாதலின் அரியொடு பிரமற் களவறி யொண்ணான்' என்றார். "வளைக்கை யானொடு மலரவ னறியா வானவா" (செத்திலாப் 10) திருப்பெருந்துறையுறை சிவனே. எல்லைமு அலகு முருவியன் றிருவர் காணும்நாள் ஆதியி றின்மை வல்லை யாய் வளர்ந்தாய்" (வாழர்ப் 4) என அடிகள் அருளியமை காண்க. அரியும் பிரமனும் தாம் தாமே பெரியரெனத் தம்முள் தருக்குதலான் இறைவன் அளவறியொண்ணானாயினன். "இருவரால் மாநுகாணா வெம் பிரான் " (அச்சுப் 2) என அடிகள் அருளியமையுங் காண்க. 42 நரியைக் குதிரையாக்கியமை *"நரிக ளெல்லாம் பெருங்குதிரை யாக் கியவா றன்றே யுன்பேரருளே " (ஏசற 1) "நரியைக் குதிரைப் பரியாக்கி" (ஆனந்த ?) என வருவனவற்றலுமறியப்படும். இழிவுடைய நரியை உயர்வுடைய, குதிரையாக்கியமை இறைவனது ஆற்றலைக் குறிப்பது. அத ல் அது நன்மையாயிற்று. இறைவன் நரிகளைப் பரிகளாக்கிக் கொணர்ந் தது அடிகள் பொருட்டென்பது, 'ஞாலமிகப் பரிமேற் கொண்டு நமை யாண்டான்'' (பொன்னூசல்B) என அடிகள் அருளியமையானுமறியப் படும். ஆண்டுகொண்டு அழகுறு திருவடி யருள எனக் கூட்டுக. தேவர்களா லும் காண்டற்கரிய இறைவனுடைய திருவடிகளை அவன் குதிரைச் சேவக னாய்க் குதிரைமீதிவர்ந்து வந்தஞான்று பாண்டியனும் கண்டு களித்து அத்திருவடியைப் பெறுதற்கு ஏதுவானமையின் ஆண்டுகொண் டருள அழகுறு திருவடி' என்றார். பரிமா - குகிரையாகிய மா. ''அநிமாவும் பரிமாவுங் களிறுங் கராமும்" (கலி 103:18) என்புழி பரிமா என்பதற் குக் 'குதிரையாகிய மா' என நச்சினார்க்கினியர் உரைத்தமையுங் காண்க. ஈண்டு கனகம் - திரண்ட பொன். ஈண்டுதல் - திரளுதல். இப்பொருட் டாதல் "ஈண்டு பெருந் தானையொடு' (முல்லை 90) என்புழியுங் காண்க. இறைவன் பாண்டியனிடத்துக் குதிரைகொண்டு சென்றது பொன்பெறு தற்பொருட்டாகவன்றி அடிகளை ஆண்டு கொள்ளுதற் பொருட்டாக வென் பார் 'பாண்டியன் றனக்குப் பரிமா விற்று, ஈண்டு கனக மிசையப் பெறாது ஆண்டான் என்றார். திருவடியருள (37) விற்று (38) பெருஅது (38) ஆண்டான் (40) என முடிக்க. இறைவன் குதிரைகளைக் கொண்டு பாண்டியன்பாற்போந்து அவன் தம்மை வருத்திய வருத்தத்தினின்றும் நீக்கிக் காத்தருளியமை, தம்மை அருள்வழி யிருக்கச் செய்தமையின் 'எங்கோன் அருள்வழி யிருப்ப என்றும், அவ்வருள்வழியை விரும்புமாறு தூண்டுவது அவ்விறைவன் ஒளி வடிவென்பார் தூண்டு சோதி' என்றும் அருளிச் செய்தார். தூண்டு 1 கீர்த்தித் திருவகவல் தல். செலுத்துதல். எந்தை நீ யிரத மின்னே தூண்டினை மீற (நம்ப. தைல 19) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க. 42-3. அந்தணன் ஆகி ஆண்டு கொண்டு அருளி - அழகிய தண் ணளியையுடைய பார்ப்பன வடிவினனாகி எழுந்தருளி வந்து என்னை அடிமைகொண்டு அருள்செய்து, இந்திர ஞாலம் காட்டிய இயம்பும். மாயவித்தை போன்ற திருவிளையாடல்களைக் காட்டிய தன்மையும். என ஏதுப் அந்தணன் என்பது அழகிய தட்பத்தினையுடையான் பெயர் இறைவன் அந்தணனாகி ஆண்டுகொண்ட ஒளியமை, '' அருவாய் மறைபயில் அந்தணனாய் ஆண்டுகொண்ட, திருவான தேவற்கே" (கோத் தும்பி 14) என்பதனாலுமறிக. இந்திரஜாலம் என்பது இந்திரசாலம் என மருவிற்று. இந்தி சாவம் என்பது இந்திரன் தனக்குப் பகைவரான அச ரரை அழிக்கும் பொருட்டுச் செய்த தந்திரங்கள், அவை சிறந்தனவாதல் பற்றி அவை போன்ற மாய வித்தைகளும் இந்திரசாலம் எனப்பட்டன. இறைவன் குருந்தமர நீழவில் அடியார்கள் குழ மக்கள் வடிவிற்றோன்றி தம்மை ஆட்கொண்டு மறைந்தருளிய தன்மை அடிகட்குப் பெரியதொரு மாயமாய்த் தோன்றியமையின் அதனை 'இந்திசாலம்' என்றுரைத்தார். 44-7. மதுரை பெரு நல் மா நகர் இருந்து -மதுரையாகிய பெரிய சிறந்த நகரத்தில் எழுந்தருளியிருந்து, குதிரை சேவகன் ஆகிய கொள்கை யும் - குதிரை வீரனாய் வந்த கோட்பாடும், ஆங்கது தன்னில் அடியவட்கு ஆக - அம்மதுரைமா நகரத்தில் அடியவளான செம்மனச்செல்வி யென்னும் பிட்டு வாணிச்சியின் பொருட்டு, பாங்காய் மண் சுமந்து அருளிய பரிசும்= முன்னர்க் கூவிபெற்ற உரிமையோடு மண்சுமந்து அருளிய பண்பும். மதுரை மாநகர், பெருமாநகர், நவ்மாநகர் எனத் தனித்தனி இயை யும். சேவகன் - வீரன். ஆங்கது என்பது அது என்னும் பொருளில் வந்தது. இனி ஆங்கு அது எனப் பிரித்துக் குதிரைச் சேவகனாகியது போல அம்மதுரை மாநகரில் என் றுரைப்பினுமமையும். அடியவள் என்றது செம்மனச் செல்வியை. பாங்கு - உரிமை. இப்பொருட்டாதல் “பாங்கு பால் கிழமை தாய மாட்சி, ஈங்கிவை யைந்து முரிமையாகும்'" என்னுங் திவாகரத்தானுமறிக. முன்னர்ப் பிட்டினைக் கூலியாகப் பெற்றமையின் கூலியாகும் உரிமை பெற்றமையால்" பாங்காய்' என்றார். கூற்றடுங் கமல பாதர் குறுந்துணிக் கரிய சீரை யேற்றிடும் பிட்டு வாங்கி யின்புற வமுது செய்து மாற்றரும் பசியை யன்னே மாற்றினை யினிப்போய் வைகை யாற்றினின் கூற்றி லுண்டா மருங்கரை யடைப்ப னென்றான்" (மண்சுமந் 34) எனத் திருவாதவூரடிகள் புராணத்து வருதல் காண்க. "4
திருவாசக ஆராய்ச்சியுரை அரியொடு என்புறி ஒடு எண்ணுப்பொருட்டு அளவு - எல்லை பேரள வெய்திய பெரும்பெயர்ப் பாண்டில் ( நெடுநல் 123 ) என்புழி யும் இப்பொருட்டாதல் காண்க . திருமாலும் பிரமனும் அடிமுடி தேடிய ஞான்று இறைவன் எல்லையறியப்படாதவாறு நின்றானாதலின் அரியொடு பிரமற் களவறி யொண்ணான் ' என்றார் . வளைக்கை யானொடு மலரவ னறியா வானவா ( செத்திலாப் 10 ) திருப்பெருந்துறையுறை சிவனே . எல்லைமு அலகு முருவியன் றிருவர் காணும்நாள் ஆதியி றின்மை வல்லை யாய் வளர்ந்தாய் ( வாழர்ப் 4 ) என அடிகள் அருளியமை காண்க . அரியும் பிரமனும் தாம் தாமே பெரியரெனத் தம்முள் தருக்குதலான் இறைவன் அளவறியொண்ணானாயினன் . இருவரால் மாநுகாணா வெம் பிரான் ( அச்சுப் 2 ) என அடிகள் அருளியமையுங் காண்க . 42 நரியைக் குதிரையாக்கியமை * நரிக ளெல்லாம் பெருங்குதிரை யாக் கியவா றன்றே யுன்பேரருளே ( ஏசற 1 ) நரியைக் குதிரைப் பரியாக்கி ( ஆனந்த ? ) என வருவனவற்றலுமறியப்படும் . இழிவுடைய நரியை உயர்வுடைய குதிரையாக்கியமை இறைவனது ஆற்றலைக் குறிப்பது . அத ல் அது நன்மையாயிற்று . இறைவன் நரிகளைப் பரிகளாக்கிக் கொணர்ந் தது அடிகள் பொருட்டென்பது ' ஞாலமிகப் பரிமேற் கொண்டு நமை யாண்டான் ' ' ( பொன்னூசல்B ) என அடிகள் அருளியமையானுமறியப் படும் . ஆண்டுகொண்டு அழகுறு திருவடி யருள எனக் கூட்டுக . தேவர்களா லும் காண்டற்கரிய இறைவனுடைய திருவடிகளை அவன் குதிரைச் சேவக னாய்க் குதிரைமீதிவர்ந்து வந்தஞான்று பாண்டியனும் கண்டு களித்து அத்திருவடியைப் பெறுதற்கு ஏதுவானமையின் ஆண்டுகொண் டருள அழகுறு திருவடி ' என்றார் . பரிமா - குகிரையாகிய மா . ' ' அநிமாவும் பரிமாவுங் களிறுங் கராமும் ( கலி 103 : 18 ) என்புழி பரிமா என்பதற் குக் ' குதிரையாகிய மா ' என நச்சினார்க்கினியர் உரைத்தமையுங் காண்க . ஈண்டு கனகம் - திரண்ட பொன் . ஈண்டுதல் - திரளுதல் . இப்பொருட் டாதல் ஈண்டு பெருந் தானையொடு ' ( முல்லை 90 ) என்புழியுங் காண்க . இறைவன் பாண்டியனிடத்துக் குதிரைகொண்டு சென்றது பொன்பெறு தற்பொருட்டாகவன்றி அடிகளை ஆண்டு கொள்ளுதற் பொருட்டாக வென் பார் ' பாண்டியன் றனக்குப் பரிமா விற்று ஈண்டு கனக மிசையப் பெறாது ஆண்டான் என்றார் . திருவடியருள ( 37 ) விற்று ( 38 ) பெருஅது ( 38 ) ஆண்டான் ( 40 ) என முடிக்க . இறைவன் குதிரைகளைக் கொண்டு பாண்டியன்பாற்போந்து அவன் தம்மை வருத்திய வருத்தத்தினின்றும் நீக்கிக் காத்தருளியமை தம்மை அருள்வழி யிருக்கச் செய்தமையின் ' எங்கோன் அருள்வழி யிருப்ப என்றும் அவ்வருள்வழியை விரும்புமாறு தூண்டுவது அவ்விறைவன் ஒளி வடிவென்பார் தூண்டு சோதி ' என்றும் அருளிச் செய்தார் . தூண்டு 1 கீர்த்தித் திருவகவல் தல் . செலுத்துதல் . எந்தை நீ யிரத மின்னே தூண்டினை மீற ( நம்ப . தைல 19 ) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க . 42-3 . அந்தணன் ஆகி ஆண்டு கொண்டு அருளி - அழகிய தண் ணளியையுடைய பார்ப்பன வடிவினனாகி எழுந்தருளி வந்து என்னை அடிமைகொண்டு அருள்செய்து இந்திர ஞாலம் காட்டிய இயம்பும் . மாயவித்தை போன்ற திருவிளையாடல்களைக் காட்டிய தன்மையும் . என ஏதுப் அந்தணன் என்பது அழகிய தட்பத்தினையுடையான் பெயர் இறைவன் அந்தணனாகி ஆண்டுகொண்ட ஒளியமை ' ' அருவாய் மறைபயில் அந்தணனாய் ஆண்டுகொண்ட திருவான தேவற்கே ( கோத் தும்பி 14 ) என்பதனாலுமறிக . இந்திரஜாலம் என்பது இந்திரசாலம் என மருவிற்று . இந்தி சாவம் என்பது இந்திரன் தனக்குப் பகைவரான அச ரரை அழிக்கும் பொருட்டுச் செய்த தந்திரங்கள் அவை சிறந்தனவாதல் பற்றி அவை போன்ற மாய வித்தைகளும் இந்திரசாலம் எனப்பட்டன . இறைவன் குருந்தமர நீழவில் அடியார்கள் குழ மக்கள் வடிவிற்றோன்றி தம்மை ஆட்கொண்டு மறைந்தருளிய தன்மை அடிகட்குப் பெரியதொரு மாயமாய்த் தோன்றியமையின் அதனை ' இந்திசாலம் ' என்றுரைத்தார் . 44-7 . மதுரை பெரு நல் மா நகர் இருந்து -மதுரையாகிய பெரிய சிறந்த நகரத்தில் எழுந்தருளியிருந்து குதிரை சேவகன் ஆகிய கொள்கை யும் - குதிரை வீரனாய் வந்த கோட்பாடும் ஆங்கது தன்னில் அடியவட்கு ஆக - அம்மதுரைமா நகரத்தில் அடியவளான செம்மனச்செல்வி யென்னும் பிட்டு வாணிச்சியின் பொருட்டு பாங்காய் மண் சுமந்து அருளிய பரிசும் = முன்னர்க் கூவிபெற்ற உரிமையோடு மண்சுமந்து அருளிய பண்பும் . மதுரை மாநகர் பெருமாநகர் நவ்மாநகர் எனத் தனித்தனி இயை யும் . சேவகன் - வீரன் . ஆங்கது என்பது அது என்னும் பொருளில் வந்தது . இனி ஆங்கு அது எனப் பிரித்துக் குதிரைச் சேவகனாகியது போல அம்மதுரை மாநகரில் என் றுரைப்பினுமமையும் . அடியவள் என்றது செம்மனச் செல்வியை . பாங்கு - உரிமை . இப்பொருட்டாதல் பாங்கு பால் கிழமை தாய மாட்சி ஈங்கிவை யைந்து முரிமையாகும் ' என்னுங் திவாகரத்தானுமறிக . முன்னர்ப் பிட்டினைக் கூலியாகப் பெற்றமையின் கூலியாகும் உரிமை பெற்றமையால் பாங்காய் ' என்றார் . கூற்றடுங் கமல பாதர் குறுந்துணிக் கரிய சீரை யேற்றிடும் பிட்டு வாங்கி யின்புற வமுது செய்து மாற்றரும் பசியை யன்னே மாற்றினை யினிப்போய் வைகை யாற்றினின் கூற்றி லுண்டா மருங்கரை யடைப்ப னென்றான் ( மண்சுமந் 34 ) எனத் திருவாதவூரடிகள் புராணத்து வருதல் காண்க . 4