திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை 58-9. சயம் பெற - தன் அடியவனாள பாண்டியன் வெற்றியடையும் பொருட்டு, தண் நீர் பந்தர் வைத்து - அவன் படைகளின் விடாய் தீர்த் தற்பொருட்டுக் குளிர்ந்த நீரினை உதவும் பந்தல் ஒன்று இட்டு, நல் நீர் சேவகள் ஆகிய நன்மையும் நல்ல நீரினை வழங்கும் வேலையாளாக உரு வம் புனைந்த நன்றியும். 46 முன்னொரு காலத்திலே சிவ்பெருமானிடத்துப் பேரன்புடைய பாண் டியனொருவன் மதுரைமாநகரிற் செங்கோலோச்சிவரு நாளில், அக்காலத்தி விருந்த சோழமன்னன் ஒருவன் தான் பயந்த கன்னிகையைக் கொடுத்துப் பாண்டியனொடு உறவுகொள்வேம் என்றெண்ணித் தக்கார் பலரை அவன் பால் விடுப்ப அவரும் அதற்கு இயைந்தான். இதனை அறிந்த அப்பாண்டி யன் தம்பி சோழன்மகளைத் தான் கொள்ளக் கருதிப் படையொடு செல்ல, அதனைக் கண்ட அச்சோழன் அவனுடன் எதிர்நிற்கமாட்டானாகி அச் சங்கூர்ந்து தன் மகனை அவனுக்குக் கொடுத்தான். அதன் பின்னர் அச் சோழன் தனக்குப் பெரும்பகைவனாகிய வடநாட்டரசன் மேல் மருமகனாகிய பாண்டியனொடு சென்று அவனைவென்று மீண்டான். வென்றியினால் இறு மாப்படைந்த சோழன் மருகன், தருமநெறிகோடாத தன் தமையனை அம் ரிடைவென்று மதுரையைக் கொள்ள எண்ணிச் சோழனெடுங் கூடிப் பெரும் படையினொடும் மதுரையை அணுகக்கண்ட பாண்டியன் யாம் எதிர்நிற்க மாட்டேம்; என் செய்கேம் என்று சொக்கநாதருக்கு விண்ணப்பஞ் செய் தான். அப்போது, 'ரீ அஞ்சாது படையொடு எதிர் சென்று போர்செய் குதி; வென்றி தருகுவம்' என்று ஓரசரிரிவாக்குத் தோன்றியது. பாண்டி யனும் மகிழ்ந்து தன் தானையொடு எதிர் சென்று சொக்களை உள்ளத்து நினைத்து அவ்விருவரொடும் போர்புரிந்தான் இருகிறத்தினரும் பொரு கின்ற கானை இறைவன் திருவருளால் வெப்பம் பொருந்திய கோடை முற்றுதலால் பகைவர்படை வாயுவர்ந்து உதகமின்றி இலத்துப் போர்க் களத்தில் வீழ்ந்தது. இறைவன் பாண்டியனுக்குச் சயமுண்டாகச் சேவக னுருப் புனைந்து அவன் படைநடுவுள் தண்ணீர்ப் பந்தர் வைத்தான். பாண்டியனும் அவன் படைஞரம் அப்பந்தரிற் சென்று குளிர்ந்த நறிய நீரைப் பருகி அயர்வு நீங்கிக் கிளர்ந்து அமர்செய்து பகைவர் படையைத் தொலைத்துச் சொக்கன் கருணையைத் தொழுது வாழ்த்திப் பகைவனாய் வந்த தம்பியையும் அவன் மாமனான சோழனையும் சிறைப் பிடித்து மீள் கையில் தண்ணீர் பரிந்தளித்த சேவகனொடு அப்பந்தரையும் காளுாராயி னர். வெற்றிபெற்ற பாண்டியன் அதிசயித்து இறைவன் திருவருளை நினைந்து துதித்தான் என்று இவ்வரலாற்றை நம்பி திருவிளையாடற் புராணம் கூறும். பந்தல் -பந்தர் என்றாயது. "கருந்துடி தூங்கும் துணைக்காற் பந்தர்" (பெரும்பாண் 124) என்புழிப்போல. நன்னீர் - பரிமளஞ்சேர்ந்த குளிர்ந்த நல்ல நீர் "பரிமளஞ்சேர், சீதள வறுதை நல்கத் தெளிந்தது குடித்த சேண் (நம்பி திருவிளை. தண்ணீர்ப் 16) என வருதலுங் காண்க. நன்மை கீர்த்தித் திருவகவல் 47 யும் என்றார் தருமநேர் விளங்க வைத்தமையின் 'பொருவருஞ் சயமுண் டாகத் திருவுருக் கரந்து மற்றோர் சேவக னுருப்புனைந்து, தருமநேர் விளங்க வைத்தான் றண்ணீர்ப்பந்தர்" (நம்பி திருவிளை. தண்ணீர்ப் 15) என வருதலுங் காண்க. 60-1. வெண்காடு அதனில் விருந்தினன் ஆகி - திருவெண்காட்டிலே புதிது வந்தோனாகி, குருந்தின் கீழ் அன்று இருந்த கொள்கையும் குருந்த மர நீழலின்கண் அந்நாளில் வீற்றிருந்த கோட்பாடும். விருந்தினனாகி என்றதனால் பழையோனாகிய இறைவன் புதியோனாக கத் திருவுருக்கொண்டு போந்தமையும். வெண்காடதனில் குருந்தின் கீழன்றிருந்த கொள்கையும்' என்றதனால், திருவெண் காட்டிலே குருந்தமர நீழற்கண் அங்காளில் அங்ஙனம் புதியோனாக வீற்றிருந்து அன்பர்களுக்கு குப் போதித்தருளி மறைந்தமையும் பெறப்படும். 62-3. பட்ட மங்கையில் பாங்காய் இருந்து -பட்ட மங்கை என்னும் திருப்பதியிலே உரிமையுடன் வீற்றிருந்து, அங்கு அட்ட மாசித்தி அருளிய அதுவும் - அவ்விடத்தில் எட்டுப் பெரிய சித்திகளின் இயல்பினை அறிவுறுத்தி யருளிய அத்தன்மையும். முன்னொரு காலத்திலே இறைவன் திருக்கையிலிருந்து, சிவகணங்கள் துதிசெய்து விதியிற் கேட்பச் சிவதருமங்களை உபதேசித்தருள்வாராயினர். அப்பொழுது அறுமுகக்கடவுளுக்கு அன்பொடு பால் நல்கிய இயக்கமாதர் அறுவரும் இறைவனைத் தொழுதபோற்றி அடியோங்களுக்கு அட்டமா சித்திகளை உரைத்தல் வேண்டுமென இறைவனும் அணிமாமுதலிய எட்டுச் சித்திகளையும் பொருளொடு செப்புங்காலை, அம்மாதரார் இடையே பரா முகஞ் செய்தனராக அப்பொழுது இறைவன் வெகுண்டு நீவிர் தென்னவன் நாட்டிலே பட்டமங்கலம் என்னும் பதியிலே ஆலமர கீழவிற் கய்லுருவ மாகிக் கிடக்கக் கடவீர் எனச் சபித்தனர். அதுகேட்டு அம்மாதரார் வணங்கி, மங்கை பங்கனே சிறியோங்கள் பிழைபொறுத்தருளிச் சாபமும் ஒழித்தி என்று குறையீரப்ப, இறைவனும் உவகை கூர்ந்து தீவிர் யாம் புகன்ற காட்டைச் சேருமின்; அவ்விடத்து யாம் வெளிப்பட்டு உங்கள் சாபமும் நீக்கி நுமக்கு அவ்வட்டமாசித்தியு நிகழ்த்துவேம் என்று அருள் புரிய, இயக்கிமார் அறுவரும் பட்டமங்கையிற்போந்து ஆலின்கீழ் நெடுங் காலம் கல்லாய் நின்றனர். இறைவனும் குருவடிவாகி அக்கற்களையணுக அம்மங்கையர் சிலைவடிவொழிந்து முன்னைவடிவொடும் வந்து வணங்கி அச் சித்திகளை விளம்பென்று ஏத்தினர். இறைவனும் அப்படிச் செய்குவம் என்று எட்டுச்சித்திகளையும் பொருளொடும் விரித்துரைத்தனன் என்று நம்பி திருவிளையாடற்புராணம் கூறும். பட்டமங்கை. பட்ட மங்கலம் எனவும் வழங்கும். சிவகங்கையைச் * சார்ந்தது. பாங்கு உரிமை. இயக்கமாதர்க்கு இறைவன் மொழிந்தபடி
திருவாசக ஆராய்ச்சியுரை 58-9 . சயம் பெற - தன் அடியவனாள பாண்டியன் வெற்றியடையும் பொருட்டு தண் நீர் பந்தர் வைத்து - அவன் படைகளின் விடாய் தீர்த் தற்பொருட்டுக் குளிர்ந்த நீரினை உதவும் பந்தல் ஒன்று இட்டு நல் நீர் சேவகள் ஆகிய நன்மையும் நல்ல நீரினை வழங்கும் வேலையாளாக உரு வம் புனைந்த நன்றியும் . 46 முன்னொரு காலத்திலே சிவ்பெருமானிடத்துப் பேரன்புடைய பாண் டியனொருவன் மதுரைமாநகரிற் செங்கோலோச்சிவரு நாளில் அக்காலத்தி விருந்த சோழமன்னன் ஒருவன் தான் பயந்த கன்னிகையைக் கொடுத்துப் பாண்டியனொடு உறவுகொள்வேம் என்றெண்ணித் தக்கார் பலரை அவன் பால் விடுப்ப அவரும் அதற்கு இயைந்தான் . இதனை அறிந்த அப்பாண்டி யன் தம்பி சோழன்மகளைத் தான் கொள்ளக் கருதிப் படையொடு செல்ல அதனைக் கண்ட அச்சோழன் அவனுடன் எதிர்நிற்கமாட்டானாகி அச் சங்கூர்ந்து தன் மகனை அவனுக்குக் கொடுத்தான் . அதன் பின்னர் அச் சோழன் தனக்குப் பெரும்பகைவனாகிய வடநாட்டரசன் மேல் மருமகனாகிய பாண்டியனொடு சென்று அவனைவென்று மீண்டான் . வென்றியினால் இறு மாப்படைந்த சோழன் மருகன் தருமநெறிகோடாத தன் தமையனை அம் ரிடைவென்று மதுரையைக் கொள்ள எண்ணிச் சோழனெடுங் கூடிப் பெரும் படையினொடும் மதுரையை அணுகக்கண்ட பாண்டியன் யாம் எதிர்நிற்க மாட்டேம் ; என் செய்கேம் என்று சொக்கநாதருக்கு விண்ணப்பஞ் செய் தான் . அப்போது ' ரீ அஞ்சாது படையொடு எதிர் சென்று போர்செய் குதி ; வென்றி தருகுவம் ' என்று ஓரசரிரிவாக்குத் தோன்றியது . பாண்டி யனும் மகிழ்ந்து தன் தானையொடு எதிர் சென்று சொக்களை உள்ளத்து நினைத்து அவ்விருவரொடும் போர்புரிந்தான் இருகிறத்தினரும் பொரு கின்ற கானை இறைவன் திருவருளால் வெப்பம் பொருந்திய கோடை முற்றுதலால் பகைவர்படை வாயுவர்ந்து உதகமின்றி இலத்துப் போர்க் களத்தில் வீழ்ந்தது . இறைவன் பாண்டியனுக்குச் சயமுண்டாகச் சேவக னுருப் புனைந்து அவன் படைநடுவுள் தண்ணீர்ப் பந்தர் வைத்தான் . பாண்டியனும் அவன் படைஞரம் அப்பந்தரிற் சென்று குளிர்ந்த நறிய நீரைப் பருகி அயர்வு நீங்கிக் கிளர்ந்து அமர்செய்து பகைவர் படையைத் தொலைத்துச் சொக்கன் கருணையைத் தொழுது வாழ்த்திப் பகைவனாய் வந்த தம்பியையும் அவன் மாமனான சோழனையும் சிறைப் பிடித்து மீள் கையில் தண்ணீர் பரிந்தளித்த சேவகனொடு அப்பந்தரையும் காளுாராயி னர் . வெற்றிபெற்ற பாண்டியன் அதிசயித்து இறைவன் திருவருளை நினைந்து துதித்தான் என்று இவ்வரலாற்றை நம்பி திருவிளையாடற் புராணம் கூறும் . பந்தல் -பந்தர் என்றாயது . கருந்துடி தூங்கும் துணைக்காற் பந்தர் ( பெரும்பாண் 124 ) என்புழிப்போல . நன்னீர் - பரிமளஞ்சேர்ந்த குளிர்ந்த நல்ல நீர் பரிமளஞ்சேர் சீதள வறுதை நல்கத் தெளிந்தது குடித்த சேண் ( நம்பி திருவிளை . தண்ணீர்ப் 16 ) என வருதலுங் காண்க . நன்மை கீர்த்தித் திருவகவல் 47 யும் என்றார் தருமநேர் விளங்க வைத்தமையின் ' பொருவருஞ் சயமுண் டாகத் திருவுருக் கரந்து மற்றோர் சேவக னுருப்புனைந்து தருமநேர் விளங்க வைத்தான் றண்ணீர்ப்பந்தர் ( நம்பி திருவிளை . தண்ணீர்ப் 15 ) என வருதலுங் காண்க . 60-1 . வெண்காடு அதனில் விருந்தினன் ஆகி - திருவெண்காட்டிலே புதிது வந்தோனாகி குருந்தின் கீழ் அன்று இருந்த கொள்கையும் குருந்த மர நீழலின்கண் அந்நாளில் வீற்றிருந்த கோட்பாடும் . விருந்தினனாகி என்றதனால் பழையோனாகிய இறைவன் புதியோனாக கத் திருவுருக்கொண்டு போந்தமையும் . வெண்காடதனில் குருந்தின் கீழன்றிருந்த கொள்கையும் ' என்றதனால் திருவெண் காட்டிலே குருந்தமர நீழற்கண் அங்காளில் அங்ஙனம் புதியோனாக வீற்றிருந்து அன்பர்களுக்கு குப் போதித்தருளி மறைந்தமையும் பெறப்படும் . 62-3 . பட்ட மங்கையில் பாங்காய் இருந்து -பட்ட மங்கை என்னும் திருப்பதியிலே உரிமையுடன் வீற்றிருந்து அங்கு அட்ட மாசித்தி அருளிய அதுவும் - அவ்விடத்தில் எட்டுப் பெரிய சித்திகளின் இயல்பினை அறிவுறுத்தி யருளிய அத்தன்மையும் . முன்னொரு காலத்திலே இறைவன் திருக்கையிலிருந்து சிவகணங்கள் துதிசெய்து விதியிற் கேட்பச் சிவதருமங்களை உபதேசித்தருள்வாராயினர் . அப்பொழுது அறுமுகக்கடவுளுக்கு அன்பொடு பால் நல்கிய இயக்கமாதர் அறுவரும் இறைவனைத் தொழுதபோற்றி அடியோங்களுக்கு அட்டமா சித்திகளை உரைத்தல் வேண்டுமென இறைவனும் அணிமாமுதலிய எட்டுச் சித்திகளையும் பொருளொடு செப்புங்காலை அம்மாதரார் இடையே பரா முகஞ் செய்தனராக அப்பொழுது இறைவன் வெகுண்டு நீவிர் தென்னவன் நாட்டிலே பட்டமங்கலம் என்னும் பதியிலே ஆலமர கீழவிற் கய்லுருவ மாகிக் கிடக்கக் கடவீர் எனச் சபித்தனர் . அதுகேட்டு அம்மாதரார் வணங்கி மங்கை பங்கனே சிறியோங்கள் பிழைபொறுத்தருளிச் சாபமும் ஒழித்தி என்று குறையீரப்ப இறைவனும் உவகை கூர்ந்து தீவிர் யாம் புகன்ற காட்டைச் சேருமின் ; அவ்விடத்து யாம் வெளிப்பட்டு உங்கள் சாபமும் நீக்கி நுமக்கு அவ்வட்டமாசித்தியு நிகழ்த்துவேம் என்று அருள் புரிய இயக்கிமார் அறுவரும் பட்டமங்கையிற்போந்து ஆலின்கீழ் நெடுங் காலம் கல்லாய் நின்றனர் . இறைவனும் குருவடிவாகி அக்கற்களையணுக அம்மங்கையர் சிலைவடிவொழிந்து முன்னைவடிவொடும் வந்து வணங்கி அச் சித்திகளை விளம்பென்று ஏத்தினர் . இறைவனும் அப்படிச் செய்குவம் என்று எட்டுச்சித்திகளையும் பொருளொடும் விரித்துரைத்தனன் என்று நம்பி திருவிளையாடற்புராணம் கூறும் . பட்டமங்கை . பட்ட மங்கலம் எனவும் வழங்கும் . சிவகங்கையைச் * சார்ந்தது . பாங்கு உரிமை . இயக்கமாதர்க்கு இறைவன் மொழிந்தபடி