திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

54 திருவாசக ஆராய்ச்சியுரை தலையுடைய உமையம்மையை. "மருவார் குழலி மாதோர் பாகமதாய்" (ஞான 25:1) எனத் தேவாரத்து வருதலும் காண்க. 81-2. சேவகள் ஆகி திண் சிலை ஏந்தி - பாண்டியனுக்கு வெற்றி யுண்டாகும் பொருட்டு வில்வீரனாக வடிவங்கொண்டு வலிய வில்லைக் கையில் ஏந்திக்கொண்டு, பல பல பாவகம் காட்டிய பரிசும் - பல வகை யான அம்பெய்யும் இயல்புகளைக் காட்டிய தன்மையும். முன்னொரு காலத்திலே சிவபத்தியிற் சிறந்த பாண்டியன் ஒருவன் மதுரையம்பதியிலிருந்து செங்கோல் செறுத்து நாளில், சோழமன்னன் ஒருவன் அவனைப் பொருது வெல்லுதற்கு இயலாமையால் வஞ்சனையி னால் வெல்லக் கருதித் தான் சார்ந்து நின்ற சமணசமயக் குருமார் எண்ணா யிரவரையும் தன்பாவ் அழைப்பித்து நீங்கள் மந்திரவாதஞ் செய்து பாண்டியனைக் கோறல்வேண்டும் என்று கேட்ப அவர்களும் அதற்கு இயைந்து மந்திரவாதஞ் செய்ய, ஓமகுண்டத்தினின்றும் ஒரு யானை தோன்றியது. சமணகுருமார் அதனை நோக்கிப் பாண்டியனை மதுரையம் பதியொடும் விழுங்கு என ஏவிவிட்டுத் தாங்களும் அதனொடு செல்வாரா யினர். யானை மதுரையை அடைந்தது. அதனைக் கண்ட பாண்டியன் அஞ்சித் திருக்கோயிலையடைந்து பெரும், சமணர் மந்திரித்துவிட்ட யானை யினாற் கலங்கினேன்; காத்தருள்க என்று வணங்கி நின்றான். அப்போது, கீழ்பால் மதிலின் பக்கவில் அட்டாலை கட்டின் வில்லாளாகி வந்து யானையை வெல்லல். கலங்கிடேல் என இறைவனருளால் ஓர் அசரீரி உண்டாயது. பாண்டியனும் அகமகிழ்ந்து அப்படியே அட்டாலை மண்டபம் இயற்றுவித் தான். இறைவனும் வில்வீரனாகத் தோன்றி அவ்வட்டாலைமீதேறி யானையை எய்தான். அவன் விட்ட நரசிங்க அம்பு அதன் மத்தகத்தைக் கிழிக்க யானை உரனழிந்து விழுந்து இறந்தது. பாண்டியன் மனமகிழ்ந்து இறை வனைப் பணிந்தான் என நம்பி திருவிளையாடற்புராணம் கூறும். இனி, குறிப்பதாகவுங் இப்பகுதி சுந்தரப்பேரம்பெய்த திருவிளையாடலைக் கொள்ளலாம். 83-91. கடம்பூர் தன்னில் இடம்பெற இருந்தும் - திருக்கடம்பூர் என்னும் தலத்தில் கோயில் அமைய அங்கு வீற்றிருந்தும், ஈங்கோய் மலையில் எழிலது காட்டியும் - திருவிங்கோய் மலையில் அழகிய மரகதத் திருமேனியைக் காட்டியும், ஐயாறு அதனில் சைவன் ஆகியும் - திருவை யாற்றில் ஓர் ஆதிசைவ அந்தணனாகியும், துருத்தி தன்னில் அருத்தி யோடு இருந்தும் - திருத்துருத்தி என்னும் தலத்தில் அடியவர்க்கு அருள் புரியும் ஆசையுடன் வீற்றிருந்தும், திருப்பனை ஊரில் விருப்பன் ஆகியும் திருப்பனையூர் என்னும் தலத்தில் அடியார்க்கு வேண்டுவன ஈயும் விருப்ப முடையவனாக வீற்றிருந்தும் கழுமலம் அதனில் காட்சி கொடுத்தும்- சீகாழி என்னும் தலத்தில் தனது திருவுருவினைக் காட்டியும் கழுக் குன்று அதனில் வழுக்காது இருந்தும் - திருக்கழுக்குன்றத்திலே ஞான 55 கீர்த்தித் திருவகவல் வடிவத்தொடு நிலையாக எழுந்தருளியும். புறப்பயம் அதனில் அறம் பல அருளியும் - திருப்புறம்பயம் என்னும் திருப்பதியில் அறநூற்பொருள் கள் பலவற்றை அருளிச்செய்தும், குற்றாலத்து குறியாய் இருந்தும். திருக்குற்றாலம் என்னும் தலத்தில் திருமாலின் திருவுருவம் அகத்திய முனிவராற் சிவலிங்கத்திருவுருவமாக அதில் எழுந்தருளியிருந்தும். இடம் - வீடு. ஈண்டுத் திருக்கோயிலை உணர்த்தியது திருக்கடப்பூரில் கோயில் அமைய இறைவன் அங்கு எழுந்தருளியிருந்தமையின் கடம்பூர் தன்னில் இடம்பெற இருந்தும்' என்றார். "வளருங் கோல வளர்சடை யாற் கிடம்... கடம்பூர் கரக்கோயிலே'' என அப்பரடிகள் (தே.நாவு 133:1) அருளியமையுங் காண்க. ஈங்கோய்மலை - திருவீங்கோய்மலை. "எழிலார் சுனையும் பொழிறும் புடைகுழ் ஈங்கோய் மலை" எனத் தேவாரத்து (ஞான 70: 11) வாதலும் காண்க. எழில் - அழகு. அது ஈண்டு மரகதத் திருமேனியைக் குறித்தது. ஐயாறதனிற் சைவனாகியும் என்றது திருவையாற்றிலே இறைவனு க் குப் பூசனைபுரியும் ஆதி.சைவப் பார்ப்பனர் இருபத்து நால்வருள் ஒருவர், தன் மனைவியையும் மைந்தனையும் விடுத்துக் காசிக்குப் போய் நெடுநாளாக மீண்டு வாராமையால் அவரது மனைவி மக்கட்குரிய பொருளை எனையோர் கவர்ந்து கொள்ளக் கருதியபோது அதனைத் தடுத்தற்பொருட்டுக் காசிக் குப் போன சைவமறையோனின் வடிவத்தோடு இறைவன் தோன்றி அருள் செய்தமை பற்றியாகும். ஐயாறு சோழ நாட்டிற் காவிரியின் வடபாலுள்ள தலம். கரைசெய் காவிரியின் வடபாலது.. ஐபாறுடை யப்பனே : (தே. ஞான 142:9) என வருதலுங் காண்க. துருத்தி : காவிரியின் தென்கரையிலுள்ள தலம். துருத்தி என்பதற்கு ஆற்றிடைக்குறை என்பது பொருள். 'விரிதிரைக் காவிரி வியன்பெருந்து ருத்தி" (சிலப் 11:32) என்புறியும் இப்பொருட்டாதல் காண்க. இது காவிரியின் நடுவுன் இருந்தமையின் இப்பெயர் பெற்றது. பொன்னி யின் நடுவு தன்னுட் பூர்புனல் பொலிந்து தோன்றும், துன்னிய துருத்தி யானை' எனத் தேவாரத்து காவு 42: 3) என வருதலும் காண்க அருத்தி. ஆசை. காவிரி புடைசூழ் சோணாட் பாவிரி புலவர் பயிலுந் திருப் பனையூர் சோழநாட்டிலுள்ள தலம். டவர்தாம் பரவிய கருணையங் கடவுப் பனையூர்' (தே . சுந் 87 : 6) என வருதலும் காண்க. கழுமலம் - சீகாழிப்பதி. "ஊருறு பதிக ளுலகுடன் பொங்கி யொலி புனல் கொள வுடன் மிதந்த, காருறு செம்மை நன்மையான் மிக்க கழுமல் கர் ஒருவரிவ் அலகில் வாழ்கிலா வண்ண மொலிபுனல் வெள்ளமுன் பரப்பக் கருவரை சூழ்ந்த கடலிடை மிதக்குங் கழுமலங என 1
54 திருவாசக ஆராய்ச்சியுரை தலையுடைய உமையம்மையை . மருவார் குழலி மாதோர் பாகமதாய் ( ஞான 25 : 1 ) எனத் தேவாரத்து வருதலும் காண்க . 81-2 . சேவகள் ஆகி திண் சிலை ஏந்தி - பாண்டியனுக்கு வெற்றி யுண்டாகும் பொருட்டு வில்வீரனாக வடிவங்கொண்டு வலிய வில்லைக் கையில் ஏந்திக்கொண்டு பல பல பாவகம் காட்டிய பரிசும் - பல வகை யான அம்பெய்யும் இயல்புகளைக் காட்டிய தன்மையும் . முன்னொரு காலத்திலே சிவபத்தியிற் சிறந்த பாண்டியன் ஒருவன் மதுரையம்பதியிலிருந்து செங்கோல் செறுத்து நாளில் சோழமன்னன் ஒருவன் அவனைப் பொருது வெல்லுதற்கு இயலாமையால் வஞ்சனையி னால் வெல்லக் கருதித் தான் சார்ந்து நின்ற சமணசமயக் குருமார் எண்ணா யிரவரையும் தன்பாவ் அழைப்பித்து நீங்கள் மந்திரவாதஞ் செய்து பாண்டியனைக் கோறல்வேண்டும் என்று கேட்ப அவர்களும் அதற்கு இயைந்து மந்திரவாதஞ் செய்ய ஓமகுண்டத்தினின்றும் ஒரு யானை தோன்றியது . சமணகுருமார் அதனை நோக்கிப் பாண்டியனை மதுரையம் பதியொடும் விழுங்கு என ஏவிவிட்டுத் தாங்களும் அதனொடு செல்வாரா யினர் . யானை மதுரையை அடைந்தது . அதனைக் கண்ட பாண்டியன் அஞ்சித் திருக்கோயிலையடைந்து பெரும் சமணர் மந்திரித்துவிட்ட யானை யினாற் கலங்கினேன் ; காத்தருள்க என்று வணங்கி நின்றான் . அப்போது கீழ்பால் மதிலின் பக்கவில் அட்டாலை கட்டின் வில்லாளாகி வந்து யானையை வெல்லல் . கலங்கிடேல் என இறைவனருளால் ஓர் அசரீரி உண்டாயது . பாண்டியனும் அகமகிழ்ந்து அப்படியே அட்டாலை மண்டபம் இயற்றுவித் தான் . இறைவனும் வில்வீரனாகத் தோன்றி அவ்வட்டாலைமீதேறி யானையை எய்தான் . அவன் விட்ட நரசிங்க அம்பு அதன் மத்தகத்தைக் கிழிக்க யானை உரனழிந்து விழுந்து இறந்தது . பாண்டியன் மனமகிழ்ந்து இறை வனைப் பணிந்தான் என நம்பி திருவிளையாடற்புராணம் கூறும் . இனி குறிப்பதாகவுங் இப்பகுதி சுந்தரப்பேரம்பெய்த திருவிளையாடலைக் கொள்ளலாம் . 83-91 . கடம்பூர் தன்னில் இடம்பெற இருந்தும் - திருக்கடம்பூர் என்னும் தலத்தில் கோயில் அமைய அங்கு வீற்றிருந்தும் ஈங்கோய் மலையில் எழிலது காட்டியும் - திருவிங்கோய் மலையில் அழகிய மரகதத் திருமேனியைக் காட்டியும் ஐயாறு அதனில் சைவன் ஆகியும் - திருவை யாற்றில் ஓர் ஆதிசைவ அந்தணனாகியும் துருத்தி தன்னில் அருத்தி யோடு இருந்தும் - திருத்துருத்தி என்னும் தலத்தில் அடியவர்க்கு அருள் புரியும் ஆசையுடன் வீற்றிருந்தும் திருப்பனை ஊரில் விருப்பன் ஆகியும் திருப்பனையூர் என்னும் தலத்தில் அடியார்க்கு வேண்டுவன ஈயும் விருப்ப முடையவனாக வீற்றிருந்தும் கழுமலம் அதனில் காட்சி கொடுத்தும் சீகாழி என்னும் தலத்தில் தனது திருவுருவினைக் காட்டியும் கழுக் குன்று அதனில் வழுக்காது இருந்தும் - திருக்கழுக்குன்றத்திலே ஞான 55 கீர்த்தித் திருவகவல் வடிவத்தொடு நிலையாக எழுந்தருளியும் . புறப்பயம் அதனில் அறம் பல அருளியும் - திருப்புறம்பயம் என்னும் திருப்பதியில் அறநூற்பொருள் கள் பலவற்றை அருளிச்செய்தும் குற்றாலத்து குறியாய் இருந்தும் . திருக்குற்றாலம் என்னும் தலத்தில் திருமாலின் திருவுருவம் அகத்திய முனிவராற் சிவலிங்கத்திருவுருவமாக அதில் எழுந்தருளியிருந்தும் . இடம் - வீடு . ஈண்டுத் திருக்கோயிலை உணர்த்தியது திருக்கடப்பூரில் கோயில் அமைய இறைவன் அங்கு எழுந்தருளியிருந்தமையின் கடம்பூர் தன்னில் இடம்பெற இருந்தும் ' என்றார் . வளருங் கோல வளர்சடை யாற் கிடம் ... கடம்பூர் கரக்கோயிலே ' ' என அப்பரடிகள் ( தே.நாவு 133 : 1 ) அருளியமையுங் காண்க . ஈங்கோய்மலை - திருவீங்கோய்மலை . எழிலார் சுனையும் பொழிறும் புடைகுழ் ஈங்கோய் மலை எனத் தேவாரத்து ( ஞான 70 : 11 ) வாதலும் காண்க . எழில் - அழகு . அது ஈண்டு மரகதத் திருமேனியைக் குறித்தது . ஐயாறதனிற் சைவனாகியும் என்றது திருவையாற்றிலே இறைவனு க் குப் பூசனைபுரியும் ஆதி.சைவப் பார்ப்பனர் இருபத்து நால்வருள் ஒருவர் தன் மனைவியையும் மைந்தனையும் விடுத்துக் காசிக்குப் போய் நெடுநாளாக மீண்டு வாராமையால் அவரது மனைவி மக்கட்குரிய பொருளை எனையோர் கவர்ந்து கொள்ளக் கருதியபோது அதனைத் தடுத்தற்பொருட்டுக் காசிக் குப் போன சைவமறையோனின் வடிவத்தோடு இறைவன் தோன்றி அருள் செய்தமை பற்றியாகும் . ஐயாறு சோழ நாட்டிற் காவிரியின் வடபாலுள்ள தலம் . கரைசெய் காவிரியின் வடபாலது .. ஐபாறுடை யப்பனே : ( தே . ஞான 142 : 9 ) என வருதலுங் காண்க . துருத்தி : காவிரியின் தென்கரையிலுள்ள தலம் . துருத்தி என்பதற்கு ஆற்றிடைக்குறை என்பது பொருள் . ' விரிதிரைக் காவிரி வியன்பெருந்து ருத்தி ( சிலப் 11:32 ) என்புறியும் இப்பொருட்டாதல் காண்க . இது காவிரியின் நடுவுன் இருந்தமையின் இப்பெயர் பெற்றது . பொன்னி யின் நடுவு தன்னுட் பூர்புனல் பொலிந்து தோன்றும் துன்னிய துருத்தி யானை ' எனத் தேவாரத்து காவு 42 : 3 ) என வருதலும் காண்க அருத்தி . ஆசை . காவிரி புடைசூழ் சோணாட் பாவிரி புலவர் பயிலுந் திருப் பனையூர் சோழநாட்டிலுள்ள தலம் . டவர்தாம் பரவிய கருணையங் கடவுப் பனையூர் ' ( தே . சுந் 87 : 6 ) என வருதலும் காண்க . கழுமலம் - சீகாழிப்பதி . ஊருறு பதிக ளுலகுடன் பொங்கி யொலி புனல் கொள வுடன் மிதந்த காருறு செம்மை நன்மையான் மிக்க கழுமல் கர் ஒருவரிவ் அலகில் வாழ்கிலா வண்ண மொலிபுனல் வெள்ளமுன் பரப்பக் கருவரை சூழ்ந்த கடலிடை மிதக்குங் கழுமலங என 1