திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

64 திருவாசக ஆராய்ச்சியுரை யன. இவ்கயர் நிலைகளில் அடியாரைச் சேர்த்தலாற் பரம்பரத் துய்ப்பவன் என்றார். உத்தரகோசம் - வீட்டுநூல். என்றது சர்வஞானோந்தரம் முதலிய ஆகமங்களை. இறைவன் அங்கு எழுந்தருளியிருந்து உமையம்மை முதலாயி னோர்க்கு இவற்றை உபதேசித்தமையின் அத்தலம் உத்தரகோசமங்கை யெனவும், அஃது அவ்விறைவர்க்குச் சிவபுரம்போல் ஊராகவும் கூறப் பட்டது. அடிகள், "தாதாடும் பூஞ்சோலைத் தத்தாய் நமையாளும் மாதாடும் பாகத்தன் வாழ்பதியென்-கோதாட்டிப் பத்தரெல்லாம் பார்மேற் சிவபுரம்போற் கொண்டாடும் உத்தர கோசமங்கை யூர்" 84. எனத் திருத்தசாங்கத்தில் அருளியமையுங் காண்க. 121-2. ஆதி மூர்த்திகட்கு அருள் புரிந்தருளிய - முதலிற் றோன்றிய காரணேசுரா முதலானவர்களுக்குத் திருவருள் செய்தருளிய தேவதேவன் திருப்பெயராகவும் - மகாதேவன் என்பது தனக்குரிய அழகிய பெயராகக் கொண்டருளியும். ஆதிமூர்த்திகளாவார்: பிரம விஷ்ணு உருத்திரன் மகேசுவரன் சதா சிவன் என்போர். இவர்களுள் பிரமம் ஆன்ம தத்துவத்திலும், விஷ்ணு வித்தியாதத்துவத்திலும், உருத்திரன் சுத்த வித்தையிலும், மகேசுவரன் ஈசுவரத்திலும், சதாசிவன் சாதாக்கியத்திலும் பண்டுதொட்டே கடவுட் டன்மை பெற்றவராய் அமர்ந்திருந்து அவ்வத் தத்துவ புவனங்களில் இறைவனருளால் அதிகாரம் செலுத்துதலின் 'ஆதிமூர்த்திகள்' எனப் பட்டனர். தேவதேவன் - தேவர்களுக்குத் தேவன்; என்றது மகாதேவன் என்ற படி. இறைவன் ஆகிமூர்த்திகட்கும் முதல்வனாதல் பற்றித் 'தேவதேவன்' எனப்பட்டான். "தேவர்தேவுக்கே " (கோத்தும்பி 5) எனவும் "தேவ தேவன் மெய்ச் சேவகன்" (சென்னி 1) எனவும் அடிகள் அருளியமை யும் காண்க. 123-4 இருள் கடிந்து அருளிய - உயிர்களின் அறியாமை இருளைப் போக்கியருளிய, இன்ப ஊர்தி - பேரின்ப வடிவாகிய இடபத்தினை வாகன மாகவுடைய இறைவன், அருளிய பெருமை அருள் மலையாகவும் - எல்லா வுயிர்க்கும் அருள்செய்த பேரருளே தான் அமர்ந்திருக்கும் மலையாகவும் கொண்டருளி. இருள் - அறியாமை. கடிதல் - போக்குதல், கொடிது கடிந்து கோறிருத்தி" (புற 17 : 5) என்புழியும் இப்பொருட்டாதல் நாண்க. மெய்ஞ்ஞானமாகி மிளிர்கின்ற மெய்ச்சுடராகிய இறைவன், உயிர்களின் அறியாமையாகிய இருளைப் போக்குதலின் 'இருன்கடிங் தருளிய' என்றார், கீர்த்தித் திருவகவல் இருள்கெட அருளும் இறைவா போற்றி' போற்றி 169. "பொய்யிருள் கடிந்தமெய்ச் சுடரே கோயிற் 3, இன்பம் பெருக்கி யிருளகற்றி'' திருவெண்பா 11. என அடிகள் பிறாண்டு அருளியமையுங் காண்க. 11 65 இறைவனது பேரின்பமே இடபமாக அமைந்திருத்தலின் அதனை ஊர்தியாகவுடைய இறைவனை 'இன்பவூர்தி என்றார். ஊர்தி-ஊர்தியை யுடையவன்; பெயர். "மால்விடையூர்தி' (சத 65) என்புழிப்போல. அருளிய அருள் என இயையும். "அருளிய அருளும் பொய்யோ" (எண்ணப்பதி 2) என வருதலுங் காண்க. இறைவன் எவ்வுயிர்க்கும் போருளே செய்தலின் *அருளிய பெருமை யருள்' என்றார். பெருமை அருள் - பேரருள் எனத் திரிபடையாமல் இயல்பாய் நின்றது. இறைவன் உயிர்கட்குச் செய்யும் பேரருள் மிகப்பெரிதாயிருந்தவின் அதுவே அவற்கு இருக்கையாகிய மலையாகும் "அருண் மலையாகவும் என்றார். 'மன்னிய திருவருண் மலையே போற்றி" (போற்றி 128) என்பதும் ஈண் டறியற்பாலது. என்பார் 125-0.எ எவர் எப்பெருந் தன்மையும் திறமும் - எவ்வெவ்வுயிர்களது எவ்வளவு பெருந்தன்மையினையும் கூறுபாட்டினையும், அப்பரிசு அதனால் ஆண்டுகொண்டு அருளி - அவ்வவ்வுயிர்க்கேற்ற தன்மைகளால் அடிமை கொண்டருளி எவ்வெவர் என்றது ஆணவமாகிய ஒரு மலமுடைய விஞ்ஞானகவ கும். அதனோடு கன்மமலமுடைய பிரளயாகலரும், அவற்றோடு மாயாமல் முடைய சகலருமாகிய முத்திறத்துயிர்களையும். இம்முத்திறத் துயிர்களுள் விஞ்ஞான கலரும் பிரளயாகவரும் ஏனைச் சகலரினும் பேரறிவும் பேராற் றலு முடையராகலின் "எப்பெருந்தன்மையும்' என்றும், சகலரிற் பல கூறுபாடுகளுண்மையால் 'சிறமும்' என்றும் அருளிச்செய்தார். திறம். கூறுபாடு. "அலகைத் தவிர்த்த எண்ணருந் திறத்த" (மலையடு 347) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க. இம்முத்திறத்தாருள்.விஞ்ஞானகலருக்கு அவர்களைப் பற்றியிருக்கின்ற ஆணவமலம் ஒன்றினையும் அவர்கள் அறிவுக்குட் பேரறிவாய்ப் பிரகா சித்துத் தோன்றி நீக்கி அருள்வடிவாக்கி ஞேயத்தில் அழுந்தும்படி திரு வருள் செய்வார்; பீரளயாகளருக்குத் திருவுருக் காணும்படிக்கு மானும் மமுவும் சதுர்ப்புயமும் காளகண்டமும் முக்கண்ணுமுடைய திருமேனி கொண்டிருந்து அவர்களைப் பற்றியிருக்கின்ற ஆணவமலம் கன்மமலம் இரண்டையும் நீக்கி அருள்வடிவாக்கி ஞேயத்திலழுந்தும்படி திருவருள் செய்வார்; அசுத்தமாயையிற் நேன்றிப் பூலோகத்தை விட்டு நீங்காம லிருக்கின்ற சகலருக்கு அவர்களைப் போல மானுடச்சட்டை சாத்தி மானைக் 4 ஞேயம் - ஞானத்தால் உணரப்படும் பொருள்; இறைவன். 9
64 திருவாசக ஆராய்ச்சியுரை யன . இவ்கயர் நிலைகளில் அடியாரைச் சேர்த்தலாற் பரம்பரத் துய்ப்பவன் என்றார் . உத்தரகோசம் - வீட்டுநூல் . என்றது சர்வஞானோந்தரம் முதலிய ஆகமங்களை . இறைவன் அங்கு எழுந்தருளியிருந்து உமையம்மை முதலாயி னோர்க்கு இவற்றை உபதேசித்தமையின் அத்தலம் உத்தரகோசமங்கை யெனவும் அஃது அவ்விறைவர்க்குச் சிவபுரம்போல் ஊராகவும் கூறப் பட்டது . அடிகள் தாதாடும் பூஞ்சோலைத் தத்தாய் நமையாளும் மாதாடும் பாகத்தன் வாழ்பதியென் - கோதாட்டிப் பத்தரெல்லாம் பார்மேற் சிவபுரம்போற் கொண்டாடும் உத்தர கோசமங்கை யூர் 84 . எனத் திருத்தசாங்கத்தில் அருளியமையுங் காண்க . 121-2 . ஆதி மூர்த்திகட்கு அருள் புரிந்தருளிய - முதலிற் றோன்றிய காரணேசுரா முதலானவர்களுக்குத் திருவருள் செய்தருளிய தேவதேவன் திருப்பெயராகவும் - மகாதேவன் என்பது தனக்குரிய அழகிய பெயராகக் கொண்டருளியும் . ஆதிமூர்த்திகளாவார் : பிரம விஷ்ணு உருத்திரன் மகேசுவரன் சதா சிவன் என்போர் . இவர்களுள் பிரமம் ஆன்ம தத்துவத்திலும் விஷ்ணு வித்தியாதத்துவத்திலும் உருத்திரன் சுத்த வித்தையிலும் மகேசுவரன் ஈசுவரத்திலும் சதாசிவன் சாதாக்கியத்திலும் பண்டுதொட்டே கடவுட் டன்மை பெற்றவராய் அமர்ந்திருந்து அவ்வத் தத்துவ புவனங்களில் இறைவனருளால் அதிகாரம் செலுத்துதலின் ' ஆதிமூர்த்திகள் ' எனப் பட்டனர் . தேவதேவன் - தேவர்களுக்குத் தேவன் ; என்றது மகாதேவன் என்ற படி . இறைவன் ஆகிமூர்த்திகட்கும் முதல்வனாதல் பற்றித் ' தேவதேவன் ' எனப்பட்டான் . தேவர்தேவுக்கே ( கோத்தும்பி 5 ) எனவும் தேவ தேவன் மெய்ச் சேவகன் ( சென்னி 1 ) எனவும் அடிகள் அருளியமை யும் காண்க . 123-4 இருள் கடிந்து அருளிய - உயிர்களின் அறியாமை இருளைப் போக்கியருளிய இன்ப ஊர்தி - பேரின்ப வடிவாகிய இடபத்தினை வாகன மாகவுடைய இறைவன் அருளிய பெருமை அருள் மலையாகவும் - எல்லா வுயிர்க்கும் அருள்செய்த பேரருளே தான் அமர்ந்திருக்கும் மலையாகவும் கொண்டருளி . இருள் - அறியாமை . கடிதல் - போக்குதல் கொடிது கடிந்து கோறிருத்தி ( புற 17 : 5 ) என்புழியும் இப்பொருட்டாதல் நாண்க . மெய்ஞ்ஞானமாகி மிளிர்கின்ற மெய்ச்சுடராகிய இறைவன் உயிர்களின் அறியாமையாகிய இருளைப் போக்குதலின் ' இருன்கடிங் தருளிய ' என்றார் கீர்த்தித் திருவகவல் இருள்கெட அருளும் இறைவா போற்றி ' போற்றி 169 . பொய்யிருள் கடிந்தமெய்ச் சுடரே கோயிற் 3 இன்பம் பெருக்கி யிருளகற்றி ' ' திருவெண்பா 11 . என அடிகள் பிறாண்டு அருளியமையுங் காண்க . 11 65 இறைவனது பேரின்பமே இடபமாக அமைந்திருத்தலின் அதனை ஊர்தியாகவுடைய இறைவனை ' இன்பவூர்தி என்றார் . ஊர்தி - ஊர்தியை யுடையவன் ; பெயர் . மால்விடையூர்தி ' ( சத 65 ) என்புழிப்போல . அருளிய அருள் என இயையும் . அருளிய அருளும் பொய்யோ ( எண்ணப்பதி 2 ) என வருதலுங் காண்க . இறைவன் எவ்வுயிர்க்கும் போருளே செய்தலின் * அருளிய பெருமை யருள் ' என்றார் . பெருமை அருள் - பேரருள் எனத் திரிபடையாமல் இயல்பாய் நின்றது . இறைவன் உயிர்கட்குச் செய்யும் பேரருள் மிகப்பெரிதாயிருந்தவின் அதுவே அவற்கு இருக்கையாகிய மலையாகும் அருண் மலையாகவும் என்றார் . ' மன்னிய திருவருண் மலையே போற்றி ( போற்றி 128 ) என்பதும் ஈண் டறியற்பாலது . என்பார் 125-0.எ எவர் எப்பெருந் தன்மையும் திறமும் - எவ்வெவ்வுயிர்களது எவ்வளவு பெருந்தன்மையினையும் கூறுபாட்டினையும் அப்பரிசு அதனால் ஆண்டுகொண்டு அருளி - அவ்வவ்வுயிர்க்கேற்ற தன்மைகளால் அடிமை கொண்டருளி எவ்வெவர் என்றது ஆணவமாகிய ஒரு மலமுடைய விஞ்ஞானகவ கும் . அதனோடு கன்மமலமுடைய பிரளயாகலரும் அவற்றோடு மாயாமல் முடைய சகலருமாகிய முத்திறத்துயிர்களையும் . இம்முத்திறத் துயிர்களுள் விஞ்ஞான கலரும் பிரளயாகவரும் ஏனைச் சகலரினும் பேரறிவும் பேராற் றலு முடையராகலின் எப்பெருந்தன்மையும் ' என்றும் சகலரிற் பல கூறுபாடுகளுண்மையால் ' சிறமும் ' என்றும் அருளிச்செய்தார் . திறம் . கூறுபாடு . அலகைத் தவிர்த்த எண்ணருந் திறத்த ( மலையடு 347 ) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க . இம்முத்திறத்தாருள்.விஞ்ஞானகலருக்கு அவர்களைப் பற்றியிருக்கின்ற ஆணவமலம் ஒன்றினையும் அவர்கள் அறிவுக்குட் பேரறிவாய்ப் பிரகா சித்துத் தோன்றி நீக்கி அருள்வடிவாக்கி ஞேயத்தில் அழுந்தும்படி திரு வருள் செய்வார் ; பீரளயாகளருக்குத் திருவுருக் காணும்படிக்கு மானும் மமுவும் சதுர்ப்புயமும் காளகண்டமும் முக்கண்ணுமுடைய திருமேனி கொண்டிருந்து அவர்களைப் பற்றியிருக்கின்ற ஆணவமலம் கன்மமலம் இரண்டையும் நீக்கி அருள்வடிவாக்கி ஞேயத்திலழுந்தும்படி திருவருள் செய்வார் ; அசுத்தமாயையிற் நேன்றிப் பூலோகத்தை விட்டு நீங்காம லிருக்கின்ற சகலருக்கு அவர்களைப் போல மானுடச்சட்டை சாத்தி மானைக் 4 ஞேயம் - ஞானத்தால் உணரப்படும் பொருள் ; இறைவன் . 9