திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

66 திருவாசக ஆராய்ச்சியுரை காட்டி மானைப் பிடிப்பது போல முன் நின்று தரிசனை கொடுத்து அவர்களைப் பற்றியிருக்கின்ற ஆணவம் கன்மம் மாயை என்னும் மும்மலங்களையும் தீக்ஷாக் கிரமங்களினாலே தீர்த்து அருள்வடிவாக்கி அடிமை கொண்டருளு வார். இதனால் எப்பெருந்தன்மையும் எவ்வெவர் திறமும்,அப்பரிசதனா லாண்டு கொண்டருளி' என்றார். இறைவன் மூவகை ஆன்மாக்களுக்கு அருள் செய்யும் முறைமையினை, மெய்ஞ்ஞானஞ் தானே விளையும்விஞ் ஞானகலர்க்கு அஞ்ஞான அச்சகலர்க்கு அக்குருவாய்- மெய்ஞ்ஞானம் பின்னுணர்த்தும் அன்றிற் பிரளயா கலருக்கு முன்னுணர்த்தும் தான்குருவாய் முன்" (8ம் சூத் 2ம் அதி) என்னும் சிவஞானபோதத் திருவெண்பாவானும், " நன்னெறிவிஞ் ஞானகலர் நாடுமலம் ஒன்றினையும் அந்நிலையே உள்நின் றறுத்தருளிப் பின் அன்பு மேலா விளங்கும் பிரளயா கலருக்குத் தேவாய் மலகன்மந் தீர்த்தருளிப்-பூவலயந் தன்னின்று நீங்காச் சகலர்க் கவர்போல முன்நின்று மும்மலந்தீர்த் தாட்கொள்கை - அன்னவனுக் காதிகுண மாதலினால் (60-63) என்னும் போற்றிப் பஃறொடை வெண்பாவானும் அறிக. இதனாற் சகல வர்க்கத்துட்பட்ட தம்மைக் குருமூர்த்தியாய் எழுந்தருளி வந்து இறைவன் ஆட்கொண்டருளியமையுங் கூறியருளினார். 127-31.நாயினே னை - நாய்போலக் கீழ்ப்பட்ட அடியேனை,நலம் மலி தில்லையுள் - நன்மை மிகுந்த தில்லைப்பதியின்கணுள்ள, கோலம் ஆர் தரு பொதுவினில் வருக என - அழகுநிறைந்த அம்பலத்தின்கண்ணே வருவாயாக வென்று சொல்லி, ஏல என்னை ஈங்கு ஒழித்து அருளி - என் வினைக்குப்பொருந்த அடியேனை இந்நிலவுலகத்திலேயே விடுத்தருளி, அன்று உடன் சென்ற அருள் பெறும் அடியவர் - அந்நானில் தன்னொடு வந்த தன்னருளைப் பெறுதற்குரிய அடியார்கள், ஒன்ற ஒன்ற உடன் கலந்து அருளியும் - தன்னொடு பொருந்தப் பொருந்த அவர்களோடு இரண்டறக் கலந்த ந்தருளியும். பிரமபுரமாகிய சரீரத்திலுள்ள தகரமாகிய புண்டரிக வீட்டினுள்ளே யிருக்கும் ஆகாயம் தியானிக்கற்பாலது என சாந்தோக்கியோபநிடதத் திலே கூறப்பட்டது. இவ்வாறே இப்பிரமாண்டம் பிரமபுரம் எனவும், இப்பிரமாண்டத்தினுள்ளே இருக்கும் தில்லைவனம் புண்டரீக வீடு எனவும், தில்லைவனத்தில் நிருக்கம் செய்யும் சிவம் ஆகாயம் எனவும் கூறப்படும். இவ்வரகாயம் சடமாகாது சித்தாதலால் சிதம்பரம் எனப்படும். இச்சிதம் பரம் எந்நாளும் தனங்கமின் றி விளங்குந் தானமாதலால் 'நலமலி தில்லை எனப்பட்டது, கீர்த்தித் திருவகவல் திருப்பெருந்துறையிலே குருந்தமர நிழலில் இறைவன் பரமாசாரிய னாய் வீற்றிருந்து அடிகளை ஆட்கொண்டருளியபின் தன்னோடு உடன் வந்த மற்றைய அடியார்களோடு மறைந்தபோது நீ தில்லைப்பொதுவின் கண்ணே வருக எனக் கட்டளையிட்டமையால் 'நாயினே னை நலமலி தில்லை யுட், கோலமார்தரு பொதுவினில் வருகென' என்றார். கோலம் - அழகு. 'கோலமால் வரை (தே.சுந்55:5) என்புழி யும் இப்பொருட்டாதல் காண்க. பொது - மன்று; அம்பலம். ஏல- பொருந்த. ஆட்கொண்டருளிய பொழுதே யான் தன்னொடு கலத்தற்குத் தகுதியில்லாமையைக் கண்டு என் நிலைமைக்குப் பொருந்துமாறு விடுத்துச் சென்றமையின் 'ஏல' என்றார். இனி ஏல என்பதற்கு அடியார்களோடு மறைதற்கு முன்னமே எனினுமமையும். 67 அன்று என்றது இறைவன் அடிகளை ஆட்கொள்ள வந்த நாளைக் குறித்தது. அன்று உடன் வந்த அடியவர்கள் இறைவனொடு உடன் கலத் தற்குரிய தகுதிப்பாடுடையவர்களாய் இறைவனொடு பொருந்துதலின் 'அன்றுடன் சென்று அருள் பெறும் அடியவர் ஒன்றவொன்ற என்றார். செழுங்கமலத் திரளனநின் சேவடிசேர்ந் தமைந்த பழுத்தமனத் தடியருடன் போயினர்" (அடைக்கலப் 1) என அடிகள் பிறிதோரிடத்து அருளியவாறும் காண்க. ** i ஆண்டுகொண்டருளி (128) ஒழித்தருளி (129) உடன்கலந்தருளியும் (131) என முடிக்க. 132-9. எய்த வந்திலாதார் எரியில் பாயவும் - அங்ஙனம் அவனது அருளை அடைய வாராதவர் ஞானத்தீயிற் பாய்ந்து தன்னொடு கலக்கவும், மாலது ஆகி மயக்கம் எய்தியும்- தம்மீது வேட்கையுடையவராய் அவ் விருப்பம் கைகூடாமையின் மயக்கம் அடைந்து உடல்மீத்துத் தன்னை அடையவும், பூதலம் அதனில் வீழ்ந்து புரண்டு அலறியும் - பூமியில் வீழ்ந்து புரண்டு அலறி உடல்கீத்துத் தன்னை அடையவும், கடல் புக கால் விசைத்து ஓடி. மண்டி - இறைவனது பரமானந்தக் கடலிற் புகுதற் குக் காலாவ் விரைந்து ஓடி மிக்குச்சென்று, நாத நாத என்று அழுது அரற்றி - தலைவனே தலைவனே என்று அழுது வாய்விட்டுப் புலம்பி, பாதம் எய்தினர் பாதம் எய்தவும் - உடல் நீத்துத் திருவடியை அடைந்தவர் அத் திருவடியோடு இரண்டறக் கலக்கவும், பதஞ்சலிக்கு அருளிய பரமநரடக என்று - பதஞ்சலி முனிவருக்கு அருள்புரிந்த மேலான கூத்தனே என்று புகழ்ந்து, இதம் சலிப்பு எய்த நின்று ஏங்கினர் ஏங்கவும் - அவ்வளவில் இறையருள் கைகூடாமையால் உள்ளம் அமர்வு அடையகின்று ஏங்கினவர் அவ்வேகத்தினால் உடல் நீத்துத் தன்னை அடையவும்.
66 திருவாசக ஆராய்ச்சியுரை காட்டி மானைப் பிடிப்பது போல முன் நின்று தரிசனை கொடுத்து அவர்களைப் பற்றியிருக்கின்ற ஆணவம் கன்மம் மாயை என்னும் மும்மலங்களையும் தீக்ஷாக் கிரமங்களினாலே தீர்த்து அருள்வடிவாக்கி அடிமை கொண்டருளு வார் . இதனால் எப்பெருந்தன்மையும் எவ்வெவர் திறமும் அப்பரிசதனா லாண்டு கொண்டருளி ' என்றார் . இறைவன் மூவகை ஆன்மாக்களுக்கு அருள் செய்யும் முறைமையினை மெய்ஞ்ஞானஞ் தானே விளையும்விஞ் ஞானகலர்க்கு அஞ்ஞான அச்சகலர்க்கு அக்குருவாய்- மெய்ஞ்ஞானம் பின்னுணர்த்தும் அன்றிற் பிரளயா கலருக்கு முன்னுணர்த்தும் தான்குருவாய் முன் ( 8 ம் சூத் 2 ம் அதி ) என்னும் சிவஞானபோதத் திருவெண்பாவானும் நன்னெறிவிஞ் ஞானகலர் நாடுமலம் ஒன்றினையும் அந்நிலையே உள்நின் றறுத்தருளிப் பின் அன்பு மேலா விளங்கும் பிரளயா கலருக்குத் தேவாய் மலகன்மந் தீர்த்தருளிப் - பூவலயந் தன்னின்று நீங்காச் சகலர்க் கவர்போல முன்நின்று மும்மலந்தீர்த் தாட்கொள்கை - அன்னவனுக் காதிகுண மாதலினால் ( 60-63 ) என்னும் போற்றிப் பஃறொடை வெண்பாவானும் அறிக . இதனாற் சகல வர்க்கத்துட்பட்ட தம்மைக் குருமூர்த்தியாய் எழுந்தருளி வந்து இறைவன் ஆட்கொண்டருளியமையுங் கூறியருளினார் . 127-31.நாயினே னை - நாய்போலக் கீழ்ப்பட்ட அடியேனை நலம் மலி தில்லையுள் - நன்மை மிகுந்த தில்லைப்பதியின்கணுள்ள கோலம் ஆர் தரு பொதுவினில் வருக என - அழகுநிறைந்த அம்பலத்தின்கண்ணே வருவாயாக வென்று சொல்லி ஏல என்னை ஈங்கு ஒழித்து அருளி - என் வினைக்குப்பொருந்த அடியேனை இந்நிலவுலகத்திலேயே விடுத்தருளி அன்று உடன் சென்ற அருள் பெறும் அடியவர் - அந்நானில் தன்னொடு வந்த தன்னருளைப் பெறுதற்குரிய அடியார்கள் ஒன்ற ஒன்ற உடன் கலந்து அருளியும் - தன்னொடு பொருந்தப் பொருந்த அவர்களோடு இரண்டறக் கலந்த ந்தருளியும் . பிரமபுரமாகிய சரீரத்திலுள்ள தகரமாகிய புண்டரிக வீட்டினுள்ளே யிருக்கும் ஆகாயம் தியானிக்கற்பாலது என சாந்தோக்கியோபநிடதத் திலே கூறப்பட்டது . இவ்வாறே இப்பிரமாண்டம் பிரமபுரம் எனவும் இப்பிரமாண்டத்தினுள்ளே இருக்கும் தில்லைவனம் புண்டரீக வீடு எனவும் தில்லைவனத்தில் நிருக்கம் செய்யும் சிவம் ஆகாயம் எனவும் கூறப்படும் . இவ்வரகாயம் சடமாகாது சித்தாதலால் சிதம்பரம் எனப்படும் . இச்சிதம் பரம் எந்நாளும் தனங்கமின் றி விளங்குந் தானமாதலால் ' நலமலி தில்லை எனப்பட்டது கீர்த்தித் திருவகவல் திருப்பெருந்துறையிலே குருந்தமர நிழலில் இறைவன் பரமாசாரிய னாய் வீற்றிருந்து அடிகளை ஆட்கொண்டருளியபின் தன்னோடு உடன் வந்த மற்றைய அடியார்களோடு மறைந்தபோது நீ தில்லைப்பொதுவின் கண்ணே வருக எனக் கட்டளையிட்டமையால் ' நாயினே னை நலமலி தில்லை யுட் கோலமார்தரு பொதுவினில் வருகென ' என்றார் . கோலம் - அழகு . ' கோலமால் வரை ( தே.சுந் 55 : 5 ) என்புழி யும் இப்பொருட்டாதல் காண்க . பொது - மன்று ; அம்பலம் . ஏல பொருந்த . ஆட்கொண்டருளிய பொழுதே யான் தன்னொடு கலத்தற்குத் தகுதியில்லாமையைக் கண்டு என் நிலைமைக்குப் பொருந்துமாறு விடுத்துச் சென்றமையின் ' ஏல ' என்றார் . இனி ஏல என்பதற்கு அடியார்களோடு மறைதற்கு முன்னமே எனினுமமையும் . 67 அன்று என்றது இறைவன் அடிகளை ஆட்கொள்ள வந்த நாளைக் குறித்தது . அன்று உடன் வந்த அடியவர்கள் இறைவனொடு உடன் கலத் தற்குரிய தகுதிப்பாடுடையவர்களாய் இறைவனொடு பொருந்துதலின் ' அன்றுடன் சென்று அருள் பெறும் அடியவர் ஒன்றவொன்ற என்றார் . செழுங்கமலத் திரளனநின் சேவடிசேர்ந் தமைந்த பழுத்தமனத் தடியருடன் போயினர் ( அடைக்கலப் 1 ) என அடிகள் பிறிதோரிடத்து அருளியவாறும் காண்க . ** i ஆண்டுகொண்டருளி ( 128 ) ஒழித்தருளி ( 129 ) உடன்கலந்தருளியும் ( 131 ) என முடிக்க . 132-9 . எய்த வந்திலாதார் எரியில் பாயவும் - அங்ஙனம் அவனது அருளை அடைய வாராதவர் ஞானத்தீயிற் பாய்ந்து தன்னொடு கலக்கவும் மாலது ஆகி மயக்கம் எய்தியும்- தம்மீது வேட்கையுடையவராய் அவ் விருப்பம் கைகூடாமையின் மயக்கம் அடைந்து உடல்மீத்துத் தன்னை அடையவும் பூதலம் அதனில் வீழ்ந்து புரண்டு அலறியும் - பூமியில் வீழ்ந்து புரண்டு அலறி உடல்கீத்துத் தன்னை அடையவும் கடல் புக கால் விசைத்து ஓடி . மண்டி - இறைவனது பரமானந்தக் கடலிற் புகுதற் குக் காலாவ் விரைந்து ஓடி மிக்குச்சென்று நாத நாத என்று அழுது அரற்றி - தலைவனே தலைவனே என்று அழுது வாய்விட்டுப் புலம்பி பாதம் எய்தினர் பாதம் எய்தவும் - உடல் நீத்துத் திருவடியை அடைந்தவர் அத் திருவடியோடு இரண்டறக் கலக்கவும் பதஞ்சலிக்கு அருளிய பரமநரடக என்று - பதஞ்சலி முனிவருக்கு அருள்புரிந்த மேலான கூத்தனே என்று புகழ்ந்து இதம் சலிப்பு எய்த நின்று ஏங்கினர் ஏங்கவும் - அவ்வளவில் இறையருள் கைகூடாமையால் உள்ளம் அமர்வு அடையகின்று ஏங்கினவர் அவ்வேகத்தினால் உடல் நீத்துத் தன்னை அடையவும் .