திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

70 திருவாசக ஆராய்ச்சியுரை ருக்கும் புலிக்கான் முனிவருக்கும் நினக்கும் தைபூசம் குருவாரத்தோடு பொருந்தும் தினத்திற்பொருந்திய மத்தியானத்திலே இன் பக்கூத்தைத் தரி சிக்கச் செய்வோம் என்று அருளிச்செய்தார். இறைவன் அருளியவாறு பதஞ்சலி முனிவர் தில்லையுட் சென்று புலிக்கான் முனிவரருடன் இருந்து தவமியற்றிக் குறித்த நாளில் இறைவன் இயற்றிய இன்பக்கூத்தினை நேரே கண்டுகளித்தனர் எனக் கோயிற்புராணம் கூறும். 140-6. எழில் பெறும் இமயத்து இயல்பு உடை - எழுச்சிபெறும் இமயமலையின் தன்மையினையுடைய, புலியூர் அம்பொன் பொலிதரு பொது வினில் -புலியூரின்கணுள்ள அழகிய பொன் வேய்ந்து விளங்கும் சிற்றம் பலத்திலே, நடம் பயில் - திருக்கூத்தைப் பயிலும், கனி தரு செவ்வாய் உமையொடு காளிக்கு அருளிய - கொவ்வைக்கனிபோன்ற சிவந்த வாயினை யுடைய உமையம்மைக்கும் காளிக்கும் அருள்செய்த, திருமுகத்து அழகு உறு சிறு நகை இறையவன் - அழகிய முகத்திடத்தான அழகு மிக்க சிறு சிரிப்பினையுடைய இறைவன், ஒலிதரு உயர் கயிலை கிழவோன் - மேலோர் வழுத்தும் வாழ்த்தொவியையுடைய மேலான திருக்கயிலை மலைக்கு உரிமையுடையோன், ஈண்டிய அடியாரோடும் -தம்மை நெருங்கிய அடிய வர்களுடன், பொலிதரு புவியூர் புக்கு இனிது அருளினன் - விளங்குகின்ற புலியூரின்கணுள்ள சிற்றம்பலத்தின் கண்ணே புகுந்து இனிதாக எழுந் தருனினன். LA எழில் -எழுச்சி. நெடிய பெரிய சிகரங்களையுடைய பனிவரையாத லின் 'எழில்பெறு மிமயத்து' என்றார். நெடும்பெருஞ் சிமையத்து' (முருகு 253) என வருதலும் காண்க. இமயமலையின் சிகரம் பொன்னிறமாய் விளங்குதல் போலப் புலியூரின்கணுள்ள சிற்றம்பலமும் பொன்வேய்ந்து விளங்குதலின் 'இமயத் தியல்புடை அம்பொன் பொலிதரு பொது' என் றார். இமயம் பொற்சிகரங்களையுடைத்தாதல் "பொற் கோட்டிமயமும்" ''பொன்னுடை நெடுங்கோட் டிமயம் (புற 2:24: 309:24) என வரு வனவற்றாலுமறிக. இயல்புடைப் பொது எனவும், அம்பொற் பொலிதரு பொது எனவும் இயையும். புலிக்கால் முனிவர் சிவபெருமானைத் தில் லைக்கண் வழிபாடாற்றிய காரணத்தால் தில்லை 'புலியூர்', எனப்பட்டது" புலியூர்ப்பொது - புலியூர்க்கணுள்ள பொது. கள் நவிலுதல் - பயிலுதல். "நடைநவில் பெரும்பகடு" (பெரும்பாண் 198) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க. இறைவன் தில்லைச்சிற்றம்பலத் தின்கண்ணே ஓவாது ருக்கூத்தியற்றுதலின் 'பொதுவினில் நடம் நவில்' என்றார். "நிகழ்தில்லை யம்பலத்தே திருநடஞ்செய் கூத்தர்" (தோணோ 1) என வருதலும் காண்க. நடம்நவில் (141) இறைவன் (144) என இபையும். கனிதரு செவ்வாய் - கனியை ஒத்த செவ்வாய். 'கனியை நேர்துவர் வாயார்" (சதக 27) என அடிகள் பிறிதோரிடத்து அருளியமையுங் கீர்த்தித் திருவகவல் 71 காண்க. கனி என்றது கொவ்லைக்கனியை. "கொள்ளேர் பிளவகலாத் தடங் கொங்சையர் கொள்வைச் செவ்வாய்" (நீத் 2) என வருதலுங் காண்க. கனிதரு செவ்வாய் உமை என்க. கொவ்வை வாய்க் கொடியே கிடையாளுமை தே.ஞான 200.9. 'கொவ்வைச் செவ்வாய்க் கோமள மாதுமையாள் " தே.ஞான 358:2 ''கொவ்வையங் கனிவாய் மங்கை கொழுந்தனே'' என வருவன காண்க, உமையொடு காளிக்கு அருளியவென்றது உமையம்மைக்கும் காளிக் கும் அருள்செய்த என்றவாறு. உமைக்கு அருளியது நிருத்த சாட்சியாக அமைந்து தரிசிக்கும் பேறாகும். நம்பிதிருவிளை. ஆனைசெய் 25 "காடரங்கா வுமைகாண வண்டத் திமையோர் தொழ நாடக மாடியை ஞான 207: 7. 'காம்பாடு தோளுமையாள் காணநட்டங் கலந்தாடல் புரிந்தவன் காண்'' தாவு 200:0. "கூடிய விலயஞ் சதிபிழை யாமைக் கொடியிடை யுமையவள் காண ஆடிய அழகா " சுத்09:2. எனத் தேவாரத்து வருவன காண்க. காளிக்கு அருளியது காளியின் செருக்கினை ஊர்த்துவதாண்டவத்தால் அடக்கு நல்வழிப்படுத்தியதாகும். முன்னொரு காலத்திலே தாரகன் என்னும் அரக்கனைக் கொல்லும் பொருட்டுக் காடுகாள் என்னும் சத்தி தோற்றுவித்து அனுப்பிய காளி அவ்வரக்கனொடு பொருது அவன் உடலைப் பிழந்தவிடத்துக் கீழே சிந் திய குருதியாற் பின்னும் பல அரக்கர் உண்டாதலைக் கண்டு அவன் உட லுகு குருதியைத் தானே முற்றும் பருகி அதனால் வெறிகொண்டு உலக துள்ள உயிர்களையெல்லாம் அழிக்கப் புகுந்தனள். அதனைக்கண்ட இறைய வன் அவள்முன்னே தோன்றிக் கொடுங்கூத்து இயற்றி அவள் செருக் கினை அடக்கி நல்வழிப்படுத்தியருளினார். இதனை, "தேன்புக்க தண்பணைகுழ் தில்லைச்சிற் றம்பலவன் தான்புக்கு நட்டம் பயிலுமது என்னேடீ தான்புக்கு நட்டம் பயின் றிலனேல் தரணியெல்லாம் ஊன்புக்க வேற்காளிக் கூட்டாங்காண் சாழலோ" (சாழல் 14) எனத் திருவாசகத்தும்,
70 திருவாசக ஆராய்ச்சியுரை ருக்கும் புலிக்கான் முனிவருக்கும் நினக்கும் தைபூசம் குருவாரத்தோடு பொருந்தும் தினத்திற்பொருந்திய மத்தியானத்திலே இன் பக்கூத்தைத் தரி சிக்கச் செய்வோம் என்று அருளிச்செய்தார் . இறைவன் அருளியவாறு பதஞ்சலி முனிவர் தில்லையுட் சென்று புலிக்கான் முனிவரருடன் இருந்து தவமியற்றிக் குறித்த நாளில் இறைவன் இயற்றிய இன்பக்கூத்தினை நேரே கண்டுகளித்தனர் எனக் கோயிற்புராணம் கூறும் . 140-6 . எழில் பெறும் இமயத்து இயல்பு உடை - எழுச்சிபெறும் இமயமலையின் தன்மையினையுடைய புலியூர் அம்பொன் பொலிதரு பொது வினில் -புலியூரின்கணுள்ள அழகிய பொன் வேய்ந்து விளங்கும் சிற்றம் பலத்திலே நடம் பயில் - திருக்கூத்தைப் பயிலும் கனி தரு செவ்வாய் உமையொடு காளிக்கு அருளிய - கொவ்வைக்கனிபோன்ற சிவந்த வாயினை யுடைய உமையம்மைக்கும் காளிக்கும் அருள்செய்த திருமுகத்து அழகு உறு சிறு நகை இறையவன் - அழகிய முகத்திடத்தான அழகு மிக்க சிறு சிரிப்பினையுடைய இறைவன் ஒலிதரு உயர் கயிலை கிழவோன் - மேலோர் வழுத்தும் வாழ்த்தொவியையுடைய மேலான திருக்கயிலை மலைக்கு உரிமையுடையோன் ஈண்டிய அடியாரோடும் -தம்மை நெருங்கிய அடிய வர்களுடன் பொலிதரு புவியூர் புக்கு இனிது அருளினன் - விளங்குகின்ற புலியூரின்கணுள்ள சிற்றம்பலத்தின் கண்ணே புகுந்து இனிதாக எழுந் தருனினன் . LA எழில் -எழுச்சி . நெடிய பெரிய சிகரங்களையுடைய பனிவரையாத லின் ' எழில்பெறு மிமயத்து ' என்றார் . நெடும்பெருஞ் சிமையத்து ' ( முருகு 253 ) என வருதலும் காண்க . இமயமலையின் சிகரம் பொன்னிறமாய் விளங்குதல் போலப் புலியூரின்கணுள்ள சிற்றம்பலமும் பொன்வேய்ந்து விளங்குதலின் ' இமயத் தியல்புடை அம்பொன் பொலிதரு பொது ' என் றார் . இமயம் பொற்சிகரங்களையுடைத்தாதல் பொற் கோட்டிமயமும் ' ' பொன்னுடை நெடுங்கோட் டிமயம் ( புற 2:24 : 309 : 24 ) என வரு வனவற்றாலுமறிக . இயல்புடைப் பொது எனவும் அம்பொற் பொலிதரு பொது எனவும் இயையும் . புலிக்கால் முனிவர் சிவபெருமானைத் தில் லைக்கண் வழிபாடாற்றிய காரணத்தால் தில்லை ' புலியூர் ' எனப்பட்டது புலியூர்ப்பொது - புலியூர்க்கணுள்ள பொது . கள் நவிலுதல் - பயிலுதல் . நடைநவில் பெரும்பகடு ( பெரும்பாண் 198 ) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க . இறைவன் தில்லைச்சிற்றம்பலத் தின்கண்ணே ஓவாது ருக்கூத்தியற்றுதலின் ' பொதுவினில் நடம் நவில் ' என்றார் . நிகழ்தில்லை யம்பலத்தே திருநடஞ்செய் கூத்தர் ( தோணோ 1 ) என வருதலும் காண்க . நடம்நவில் ( 141 ) இறைவன் ( 144 ) என இபையும் . கனிதரு செவ்வாய் - கனியை ஒத்த செவ்வாய் . ' கனியை நேர்துவர் வாயார் ( சதக 27 ) என அடிகள் பிறிதோரிடத்து அருளியமையுங் கீர்த்தித் திருவகவல் 71 காண்க . கனி என்றது கொவ்லைக்கனியை . கொள்ளேர் பிளவகலாத் தடங் கொங்சையர் கொள்வைச் செவ்வாய் ( நீத் 2 ) என வருதலுங் காண்க . கனிதரு செவ்வாய் உமை என்க . கொவ்வை வாய்க் கொடியே கிடையாளுமை தே.ஞான 200.9 . ' கொவ்வைச் செவ்வாய்க் கோமள மாதுமையாள் தே.ஞான 358 : 2 ' ' கொவ்வையங் கனிவாய் மங்கை கொழுந்தனே ' ' என வருவன காண்க உமையொடு காளிக்கு அருளியவென்றது உமையம்மைக்கும் காளிக் கும் அருள்செய்த என்றவாறு . உமைக்கு அருளியது நிருத்த சாட்சியாக அமைந்து தரிசிக்கும் பேறாகும் . நம்பிதிருவிளை . ஆனைசெய் 25 காடரங்கா வுமைகாண வண்டத் திமையோர் தொழ நாடக மாடியை ஞான 207 : 7 . ' காம்பாடு தோளுமையாள் காணநட்டங் கலந்தாடல் புரிந்தவன் காண் ' ' தாவு 200 : 0 . கூடிய விலயஞ் சதிபிழை யாமைக் கொடியிடை யுமையவள் காண ஆடிய அழகா சுத் 09 : 2 . எனத் தேவாரத்து வருவன காண்க . காளிக்கு அருளியது காளியின் செருக்கினை ஊர்த்துவதாண்டவத்தால் அடக்கு நல்வழிப்படுத்தியதாகும் . முன்னொரு காலத்திலே தாரகன் என்னும் அரக்கனைக் கொல்லும் பொருட்டுக் காடுகாள் என்னும் சத்தி தோற்றுவித்து அனுப்பிய காளி அவ்வரக்கனொடு பொருது அவன் உடலைப் பிழந்தவிடத்துக் கீழே சிந் திய குருதியாற் பின்னும் பல அரக்கர் உண்டாதலைக் கண்டு அவன் உட லுகு குருதியைத் தானே முற்றும் பருகி அதனால் வெறிகொண்டு உலக துள்ள உயிர்களையெல்லாம் அழிக்கப் புகுந்தனள் . அதனைக்கண்ட இறைய வன் அவள்முன்னே தோன்றிக் கொடுங்கூத்து இயற்றி அவள் செருக் கினை அடக்கி நல்வழிப்படுத்தியருளினார் . இதனை தேன்புக்க தண்பணைகுழ் தில்லைச்சிற் றம்பலவன் தான்புக்கு நட்டம் பயிலுமது என்னேடீ தான்புக்கு நட்டம் பயின் றிலனேல் தரணியெல்லாம் ஊன்புக்க வேற்காளிக் கூட்டாங்காண் சாழலோ ( சாழல் 14 ) எனத் திருவாசகத்தும்