திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

90 திருவாசக ஆராய்ச்சியுரை யாவரும் பெற உறும் ஈசன் காண்க - உயர்ந்தோர் இழிந்தோர் எவராயி னும் அன்பராயின் அவரெல்லாம் தனது அருளைப்பெறுமாறு அவர்பாற் சென்று பொருந்தும் ததுவன் காண்க; நூலுணர்வுணரா நுண்ணியோன் என்றது கல்வி கேள்வி அறிவால் மட்டும் அறியப்படாத நுட்பமுடையோன் என்றவாறு. மேலொடு கீழாய் விரிந்தோன் என்றது மேலேயுள்ள பொருள்களுக்கெல்லாம் மேலாயும் கீழேயுள்ள பொருள்களுக்கெல்லாம் கீழாயும் நிற்கும் அவன்தன் விரி வினை உணர்த்தியது. பாதாள மேழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர், போதார் புனைமுடியும் எல்லாப் பொருண்முடிபே" (திருவெம் 10) என்பதும் காண்க. இனி. மேலேயுள்ள சுத்தமாயாவுலகம் முதற் கீழே யுள்ள அசுத்தமாயாவுலகம் ஈருன மாயையின் பரப்பு முழுவதும் விரிந்து நிற்போன் எனினுமாம். மேலொடு கீழாய் என்றதனால் இடைப்பட்ட பொருளுமாய் விரிந்து நின் றான் என்பதும் உபலக்கணத்தாற் கொள்ளப். படும். விரிந்தனை குவிந்தனை '' (ஞான 166:3) எனத்தேவாரத்து வருத இங் காண்க, + மாயையின் பரப்பு முழுவதும் விரிந்து நிற்பினும் அம்மாயையிற்காணப் படும் முடிவும் தோற்றமும் இல்லாதவனாதலின் அந்தமும் ஆதியும் அகன்றோன் என்றார். "முததும் இறுதியு மில்லார் போலும் (தே 234:6) என அப்பரடிகள் அருவியமையுங் காண்க. அந்தமும் ஆதியும் அகன்ற இறைவனை, "அந்தழ மாதியு மாயினார்க்கு" (பொற்சுண் 20) என அடிகள் பிறிதோர்டத்துக் கூறுமாறு என்னையெனின், இறைவன் உலகிற்கு முடிவும் முதலுமானமைபற்றியென்க. பந்தம் - பிறவிப் பந்தம்; வீடு - அதன் மீக்கம். இறைவன் பந்தமும் வீடும் படைத்தலை, "அண்டம் எண்டிசைக்கும் பந்தமும் வீடும் பரப்பு கின்றீர்" (தே.நாவு 05.2) என்பதனாலுமறிக. இறைவன் பந்தத்தைப் படைத்தவ் ஆன்மாவைப் பற்றி நிற்கும் அநாதிபந்தமாகிய ஆணவ வலி யைக் கெடுத்தற் பொருட்டென்க. பந்தமும் வீடும் படைத்தல் பற்றிப் ‘பந்தமோட்சப்ரணீத என இறைவன் திருகாமம் வருதல் காண்க. 1 நிற்பதும் செல்வதும் ஆனோன் என்றது நிலையியற் பொருள்களும் இயங்கி யற்பொருள்களும் இறைவனது வியாபகத்துள் அடங்குதல் பற்றியென்க. கற்பம்-பிரமன் முதலிய தேவத்தலைவர்களுக்குரிய வாழ்நாள். நான் முகன் வாழ்நாள் கற்பமாகும்'' எனத் திவாகரத்து (தெய்வப்) வருத லும் காண்க, கண்டோன் - செய்தோள். யாவரும் என்றது உயர்ந்தோர் தாழ்ந்தோர் யாவரையும் குறித்தது. அவ்ரெல்லாம் இறைவன் அருளைப் பெற விரும்பின் அன்பராதல் வேண்டும் என்பது வருவிக்கப்பட்டது. யாவராயினு மன்பரன்றி யறியொணா மலர்ச் சோதியான்'" (சென்னிப் 4) உறும் - பொருந்தும். நீயூறு மணி செய்மாடம் (இரகுவும்.நதர்ப் 42) என்புழியும் இப்பொருட்டாதம் காண்க. என வருதல் காண்க. திருவண்டப் பகுதி 91 56-65. தேவரும் அறியா சிவனே காண்க - தேவராயினும் அன்ப ரல்லாதார் அறியமுடியாத செம்பொருளாயுள்ளவனே காண்க; பெண் ஆண் அலி எனும் பெற்றியன் காண்க - பெண் ஆண் அலி என்னும் தன்மைகளையுடையவன் காண்க: கண்ணால் யானும் கண்டேன் காண்க ஒன்றுக்கும் பற்றாத யானும் எனது ஊனக்கண்ணால் அவனது திருவுரு வைக் கண்டேன் காண்க; அருள் நனி சுரக்கும் அமுதே காண்க - அருளா கிய இனிய நீரை மிகவும் பெருகச் செய்கின்ற அமுதக்குற்றென அறிக; கருணையின் பெருமை கண்டேன் காண்க - இறைவனது அருளின் பெருமை யினைக் கண்டேன் காண்க; புவனியில் சேவடி தீண்டினன் காண்க - இந் நிலவுலகத்தில் என்னை ஆட்கொள்ளவேண்டித் தனது செவ்விய திருவடியைப் பொருந்தச் செய்தனன் காண்க; சிவன் என யானும் தேறினன் காண்க. ஆட்கொள்ள வந்தவன் சிவபெருமாள் என்று யானும் தெளிந்தேன் காண்க: அவன் எனை ஆட்கொண்டு அருளினன் காண்க - அச்சிவன் என்னை அடிமைகொண்டு அருள் செய்தனன் காண்க; குவளை கண்ணி கூறன் காண்க - கருங்குவளை மலர்போலுங் கண்களையுடைய உமையம்மையாரை ஒரு கூற்றிறுடையவன் என்றறிக: அவளும் தானும் உடனே காண்க- அம்மையாகிய அவளும் அப்பனாகிய தானும் ஒன்றாயிருந்து அத்துவிதமா யுள்ளனர் என்றறிக. தேவரும் என்புழி உம்மை உயர்வு சிறப்பு. சிவன் - செம்பொருள் எவ்வுயிர்க்கும் எப்பொழுதும் நன்மையைச் செய்தலாற் சிவன் என்றார் எனினுமாம். தேவரும் சிவனை அறியாமை, கனவிலுந் தேவர்க்கரியாய் போற்றி' (போற் 143) "தேவர் கனாவினும் கண்டறியாச் செம்மலர்ப் பாதங்கள்" (பொற்சுண்ணம் 16) தேவா தேவர்க் கரியானே" (ஆசைப் 3) "கனவேயுந் தேவர்கள் காண்பரிய கனைகழலோன் '' (தெள் 10) - தேவருங் காணாச் சிவபெருமான்' (வெண்பா) என வருவனவற்றாலுமறிக. உலகம் பெண் ஆண் அவி என்னும் முக்கூறுடைமையானும் அவை உலாத்தை ஆக்கும் இறைவனிடத்தும் அமைந்திருந்தாலன்றி உளவாகாமை யானும் 'பெண் ஆண் அலியெனும் பெற்றியன் என்றார். இனி, பெண் ஆண் அலியெனும் பெற்றியன் என இறைவற்கு மூன்று இயல்பு கூறி யது இறைவன் இயல்பு இத்தன்மைத்தென அறுதியிட்டுக் கூறவியலாமை பற்றி யெனினுமாம். 'பெண்ணாகி யாணாய் அலியாய்... நின்றான் (திருவெம் 18) என இத் திருவாசகத்தும், பெற்றி பெண்ணானை ஆணானைப் பேடியானை " (நாவு 235:2) எனத் தேவாரத்தும் வருவன காண்க. பெற்றி -தன்மை. யார்ப் பேணிக் கொௗல்" (குறள் 443) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க.
90 திருவாசக ஆராய்ச்சியுரை யாவரும் பெற உறும் ஈசன் காண்க - உயர்ந்தோர் இழிந்தோர் எவராயி னும் அன்பராயின் அவரெல்லாம் தனது அருளைப்பெறுமாறு அவர்பாற் சென்று பொருந்தும் ததுவன் காண்க ; நூலுணர்வுணரா நுண்ணியோன் என்றது கல்வி கேள்வி அறிவால் மட்டும் அறியப்படாத நுட்பமுடையோன் என்றவாறு . மேலொடு கீழாய் விரிந்தோன் என்றது மேலேயுள்ள பொருள்களுக்கெல்லாம் மேலாயும் கீழேயுள்ள பொருள்களுக்கெல்லாம் கீழாயும் நிற்கும் அவன்தன் விரி வினை உணர்த்தியது . பாதாள மேழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர் போதார் புனைமுடியும் எல்லாப் பொருண்முடிபே ( திருவெம் 10 ) என்பதும் காண்க . இனி . மேலேயுள்ள சுத்தமாயாவுலகம் முதற் கீழே யுள்ள அசுத்தமாயாவுலகம் ஈருன மாயையின் பரப்பு முழுவதும் விரிந்து நிற்போன் எனினுமாம் . மேலொடு கீழாய் என்றதனால் இடைப்பட்ட பொருளுமாய் விரிந்து நின் றான் என்பதும் உபலக்கணத்தாற் கொள்ளப் . படும் . விரிந்தனை குவிந்தனை ' ' ( ஞான 166 : 3 ) எனத்தேவாரத்து வருத இங் காண்க + மாயையின் பரப்பு முழுவதும் விரிந்து நிற்பினும் அம்மாயையிற்காணப் படும் முடிவும் தோற்றமும் இல்லாதவனாதலின் அந்தமும் ஆதியும் அகன்றோன் என்றார் . முததும் இறுதியு மில்லார் போலும் ( தே 234 : 6 ) என அப்பரடிகள் அருவியமையுங் காண்க . அந்தமும் ஆதியும் அகன்ற இறைவனை அந்தழ மாதியு மாயினார்க்கு ( பொற்சுண் 20 ) என அடிகள் பிறிதோர்டத்துக் கூறுமாறு என்னையெனின் இறைவன் உலகிற்கு முடிவும் முதலுமானமைபற்றியென்க . பந்தம் - பிறவிப் பந்தம் ; வீடு - அதன் மீக்கம் . இறைவன் பந்தமும் வீடும் படைத்தலை அண்டம் எண்டிசைக்கும் பந்தமும் வீடும் பரப்பு கின்றீர் ( தே.நாவு 05.2 ) என்பதனாலுமறிக . இறைவன் பந்தத்தைப் படைத்தவ் ஆன்மாவைப் பற்றி நிற்கும் அநாதிபந்தமாகிய ஆணவ வலி யைக் கெடுத்தற் பொருட்டென்க . பந்தமும் வீடும் படைத்தல் பற்றிப் பந்தமோட்சப்ரணீத என இறைவன் திருகாமம் வருதல் காண்க . 1 நிற்பதும் செல்வதும் ஆனோன் என்றது நிலையியற் பொருள்களும் இயங்கி யற்பொருள்களும் இறைவனது வியாபகத்துள் அடங்குதல் பற்றியென்க . கற்பம் - பிரமன் முதலிய தேவத்தலைவர்களுக்குரிய வாழ்நாள் . நான் முகன் வாழ்நாள் கற்பமாகும் ' ' எனத் திவாகரத்து ( தெய்வப் ) வருத லும் காண்க கண்டோன் - செய்தோள் . யாவரும் என்றது உயர்ந்தோர் தாழ்ந்தோர் யாவரையும் குறித்தது . அவ்ரெல்லாம் இறைவன் அருளைப் பெற விரும்பின் அன்பராதல் வேண்டும் என்பது வருவிக்கப்பட்டது . யாவராயினு மன்பரன்றி யறியொணா மலர்ச் சோதியான் ' ( சென்னிப் 4 ) உறும் - பொருந்தும் . நீயூறு மணி செய்மாடம் ( இரகுவும்.நதர்ப் 42 ) என்புழியும் இப்பொருட்டாதம் காண்க . என வருதல் காண்க . திருவண்டப் பகுதி 91 56-65 . தேவரும் அறியா சிவனே காண்க - தேவராயினும் அன்ப ரல்லாதார் அறியமுடியாத செம்பொருளாயுள்ளவனே காண்க ; பெண் ஆண் அலி எனும் பெற்றியன் காண்க - பெண் ஆண் அலி என்னும் தன்மைகளையுடையவன் காண்க : கண்ணால் யானும் கண்டேன் காண்க ஒன்றுக்கும் பற்றாத யானும் எனது ஊனக்கண்ணால் அவனது திருவுரு வைக் கண்டேன் காண்க ; அருள் நனி சுரக்கும் அமுதே காண்க - அருளா கிய இனிய நீரை மிகவும் பெருகச் செய்கின்ற அமுதக்குற்றென அறிக ; கருணையின் பெருமை கண்டேன் காண்க - இறைவனது அருளின் பெருமை யினைக் கண்டேன் காண்க ; புவனியில் சேவடி தீண்டினன் காண்க - இந் நிலவுலகத்தில் என்னை ஆட்கொள்ளவேண்டித் தனது செவ்விய திருவடியைப் பொருந்தச் செய்தனன் காண்க ; சிவன் என யானும் தேறினன் காண்க . ஆட்கொள்ள வந்தவன் சிவபெருமாள் என்று யானும் தெளிந்தேன் காண்க : அவன் எனை ஆட்கொண்டு அருளினன் காண்க - அச்சிவன் என்னை அடிமைகொண்டு அருள் செய்தனன் காண்க ; குவளை கண்ணி கூறன் காண்க - கருங்குவளை மலர்போலுங் கண்களையுடைய உமையம்மையாரை ஒரு கூற்றிறுடையவன் என்றறிக : அவளும் தானும் உடனே காண்க அம்மையாகிய அவளும் அப்பனாகிய தானும் ஒன்றாயிருந்து அத்துவிதமா யுள்ளனர் என்றறிக . தேவரும் என்புழி உம்மை உயர்வு சிறப்பு . சிவன் - செம்பொருள் எவ்வுயிர்க்கும் எப்பொழுதும் நன்மையைச் செய்தலாற் சிவன் என்றார் எனினுமாம் . தேவரும் சிவனை அறியாமை கனவிலுந் தேவர்க்கரியாய் போற்றி ' ( போற் 143 ) தேவர் கனாவினும் கண்டறியாச் செம்மலர்ப் பாதங்கள் ( பொற்சுண்ணம் 16 ) தேவா தேவர்க் கரியானே ( ஆசைப் 3 ) கனவேயுந் தேவர்கள் காண்பரிய கனைகழலோன் ' ' ( தெள் 10 ) - தேவருங் காணாச் சிவபெருமான் ' ( வெண்பா ) என வருவனவற்றாலுமறிக . உலகம் பெண் ஆண் அவி என்னும் முக்கூறுடைமையானும் அவை உலாத்தை ஆக்கும் இறைவனிடத்தும் அமைந்திருந்தாலன்றி உளவாகாமை யானும் ' பெண் ஆண் அலியெனும் பெற்றியன் என்றார் . இனி பெண் ஆண் அலியெனும் பெற்றியன் என இறைவற்கு மூன்று இயல்பு கூறி யது இறைவன் இயல்பு இத்தன்மைத்தென அறுதியிட்டுக் கூறவியலாமை பற்றி யெனினுமாம் . ' பெண்ணாகி யாணாய் அலியாய் ... நின்றான் ( திருவெம் 18 ) என இத் திருவாசகத்தும் பெற்றி பெண்ணானை ஆணானைப் பேடியானை ( நாவு 235 : 2 ) எனத் தேவாரத்தும் வருவன காண்க . பெற்றி -தன்மை . யார்ப் பேணிக் கொௗல் ( குறள் 443 ) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க .