திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

- பண்டிதர் சு. அருளம்பலவனார் அவர்கள் திருவாசகத்துக்கும் ஒரு ஆராய்ச்சி யுரை செய்ய வேண்டுமெனப் பெருவிருப்புடையராய் முயன்று வந்தனர். முன்னைய பெரியார்களநேகர் செய்த உரைகளையெல்லாம் நன்கு ஆராய்ந்து அவற்றுள் ஒப்பவைகளைக்கொண்டும் சில இடங்களில் தக்க ஆதாரங் காட்டிப் புத்துரை கண்டும் ஆராய்ச்சியுரையொன்றினை எழுதி முடித்தனர். அவர்கள் தாமெழுதும் ஆராய்ச்சியுரைகளையெல்லாம் என்னுடன் அளவளாவி ஒருமுறைக்கிருமுறை பரிசோதித்தே அவைகளை அச்சிடத் தொடங்குவார். என்னைப்பேணுபவராகவும் அன்பும் அருமையுமுடைய மாணவராகவும் இருந்த அருளம்பலவனார் தாமெழுதிய திருவாசக ஆராய்ச்சி யினை அச்சிடத்தொடங்கி நடத்திவரும்போது உடல்வலிமை குறையப் பெற்றமையால் அரசினர் வைத்தியசாலையில் சென்று தங்கியிருந்து வைத்தி யம் செய்வித்தனர். அப்போதும் அச்சுவேலையைவிடாது மேற்கொண்டே வந்தனர். திருச்சதகம் அரைவாசிவரை அச்சுவேலை நடக்கையில் ஒரு நாள் அச்சுப்பிரதியை மூலப்பிரதியோடு ஒப்பிட்டுப் பார்த்துத் திருத்தி அச்சுக்கு அனுப்பிவிட்டு ஓய்வுற்றுக் களைப்படைந்திருக்கையில் உயிர் நீக்கப்பெற்றார். திருவாசகமும் அதன் ஆராய்ச்சியுரையுமே அவர் சிந்தை யில் நிறைந்திருந்தமையால் அவர் மேலாகிய சிவகதியடைவாரென்பது துணிபாகும். அன்னவரெழுதிய ஆராய்ச்சியுரையில் நீத்தல் விண்ணப்பம்வரை அச் சிட்டு முடித்து முதற்பாகமாக வெளியிட வேண்டுமென அவர் மக்களா கிய மகேசுவரநாதனும் சிவானந்தநாதனும் விருப்பித் தொடங்கியுள்ளார் கள். அவர்கள் வெளியிடும் முதற்பாகத்தைச் சைவநன்மக்கள் வாங்கிப் படித்தும், பல்கலைக் கழகத்தினர் பாடநூலாக அமைத்தும் ஊக்கமளிப் பார்களாயின் அருளம்பலவனாரின் ஆராய்ச்சியுரை இரண்டாம் பாகமும் வெளிவருவதற்குப் பெரிதும் உதவியாக இருக்கும். எல்லாம் வல்ல முழுமுதலிறைவன் திருவருள் துணைபுரிவதாக. ஒரு குறிப்பு : அச்சிட்ட பகுதியில் சிவபுராணத்தும் போற்றித்திரு வகவலினும் கோகழி என்னும் தலம் ஒவ்வோரிடத்தும் வந்துள்ளது. கோகழித்தலத்தைப் பற்றிய ஆராய்ச்சி நன்கு கிடைக்கப்பெறாமையால் மற்றையுரையாசிரியர்கள் சிலர் போலக் கோகழி திருவாவடுதுறையென்றே எழுதியுள்ளார். கோகழியென்பது கன்னட காட்டில் பெல்லாரி மாவட் டத்தில் ஹடகன்னி உட்பிரிவில் உள்ள ஒரு சிவத்தலமென்றும் அத்தவ முள்ள இடம் கோகழிநாடென இப்போதும் வழங்கப்படுகின் றதென்றும் ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். இதனைக்கொண்டு கோகழியாது என்பத னைத் தீர்மானித்துக் கொள்க. ஆராய்ச்சியாளரின் கூற்றினையறிந்தோ 3- இருதல் அறியாமலோ கோகழியென்பது திருவாவடுதுறையென்றும், சீர்காழியென் றும், திருப்பெருந்துறையென்றும். திருப்பெருந்துறைக்கோயிலென்றும் 'உரைகாரரும் ஆராய்ச்சியாளரும் கூறுகின்றனர். திருவாசகத்தைக்கொண்டு ஆராயின் அடிகளின் கருத்து கோகழி இவைகளின் வேறான மென்பதே தெளிவாகும். சிவபுராணத்துக் கோகழியாண்ட குருமணிதன் தாள் வாழ்க என்றவர் அதேபாட்டில் சீரார் பெருந்துறை நந்தேவனடி போற்றி என்கின்றார். போற்றித் திருவகவலில் அருபரத்தொருவன் அவனி யில் (திருப்பெருந்துறையில்) வந்து குருபரனாகியருளினன் என்றவர் அதே பாட்டில் கோகழிமேவிய கோவே போற்றி என்கின்றார். பண்டாய நான் மறையில், நண்ணிப்பெருந்துறையை நம்மிடர்கள் போயகல, எண்ணியெழு கோகழிக்கரசை - பண்ணின் - மொழியாளோத்தர கோசமங்கை மன்னிக்- கழியா திருந்தானைக் காண். என உத்தரகோசமங்கையைச் சேர்த்து மூன்று தலங்களைப் பாடுகின்றார். திருப்பள்ளி எழுச்சியில், திருப்பெருந் துறையுறை கோயிலுங் காட்டி என்றவர் திருப்பெருந்துறையுறை கோகழி காட்டியும் எனப்பாடிற்றிலர். திருவாவடுதுறையையும் சீர்காழியையும் அவற்றுக்கு வழங்கும் பெயர்களை வீட்டுக் கோசுழியெனப் புதியதொரு பெயரிட்டுப் பாடவேண்டிய ஏது யாதுமில்லை. 67 சி.கூ.தேசிகர்.
- பண்டிதர் சு . அருளம்பலவனார் அவர்கள் திருவாசகத்துக்கும் ஒரு ஆராய்ச்சி யுரை செய்ய வேண்டுமெனப் பெருவிருப்புடையராய் முயன்று வந்தனர் . முன்னைய பெரியார்களநேகர் செய்த உரைகளையெல்லாம் நன்கு ஆராய்ந்து அவற்றுள் ஒப்பவைகளைக்கொண்டும் சில இடங்களில் தக்க ஆதாரங் காட்டிப் புத்துரை கண்டும் ஆராய்ச்சியுரையொன்றினை எழுதி முடித்தனர் . அவர்கள் தாமெழுதும் ஆராய்ச்சியுரைகளையெல்லாம் என்னுடன் அளவளாவி ஒருமுறைக்கிருமுறை பரிசோதித்தே அவைகளை அச்சிடத் தொடங்குவார் . என்னைப்பேணுபவராகவும் அன்பும் அருமையுமுடைய மாணவராகவும் இருந்த அருளம்பலவனார் தாமெழுதிய திருவாசக ஆராய்ச்சி யினை அச்சிடத்தொடங்கி நடத்திவரும்போது உடல்வலிமை குறையப் பெற்றமையால் அரசினர் வைத்தியசாலையில் சென்று தங்கியிருந்து வைத்தி யம் செய்வித்தனர் . அப்போதும் அச்சுவேலையைவிடாது மேற்கொண்டே வந்தனர் . திருச்சதகம் அரைவாசிவரை அச்சுவேலை நடக்கையில் ஒரு நாள் அச்சுப்பிரதியை மூலப்பிரதியோடு ஒப்பிட்டுப் பார்த்துத் திருத்தி அச்சுக்கு அனுப்பிவிட்டு ஓய்வுற்றுக் களைப்படைந்திருக்கையில் உயிர் நீக்கப்பெற்றார் . திருவாசகமும் அதன் ஆராய்ச்சியுரையுமே அவர் சிந்தை யில் நிறைந்திருந்தமையால் அவர் மேலாகிய சிவகதியடைவாரென்பது துணிபாகும் . அன்னவரெழுதிய ஆராய்ச்சியுரையில் நீத்தல் விண்ணப்பம்வரை அச் சிட்டு முடித்து முதற்பாகமாக வெளியிட வேண்டுமென அவர் மக்களா கிய மகேசுவரநாதனும் சிவானந்தநாதனும் விருப்பித் தொடங்கியுள்ளார் கள் . அவர்கள் வெளியிடும் முதற்பாகத்தைச் சைவநன்மக்கள் வாங்கிப் படித்தும் பல்கலைக் கழகத்தினர் பாடநூலாக அமைத்தும் ஊக்கமளிப் பார்களாயின் அருளம்பலவனாரின் ஆராய்ச்சியுரை இரண்டாம் பாகமும் வெளிவருவதற்குப் பெரிதும் உதவியாக இருக்கும் . எல்லாம் வல்ல முழுமுதலிறைவன் திருவருள் துணைபுரிவதாக . ஒரு குறிப்பு : அச்சிட்ட பகுதியில் சிவபுராணத்தும் போற்றித்திரு வகவலினும் கோகழி என்னும் தலம் ஒவ்வோரிடத்தும் வந்துள்ளது . கோகழித்தலத்தைப் பற்றிய ஆராய்ச்சி நன்கு கிடைக்கப்பெறாமையால் மற்றையுரையாசிரியர்கள் சிலர் போலக் கோகழி திருவாவடுதுறையென்றே எழுதியுள்ளார் . கோகழியென்பது கன்னட காட்டில் பெல்லாரி மாவட் டத்தில் ஹடகன்னி உட்பிரிவில் உள்ள ஒரு சிவத்தலமென்றும் அத்தவ முள்ள இடம் கோகழிநாடென இப்போதும் வழங்கப்படுகின் றதென்றும் ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர் . இதனைக்கொண்டு கோகழியாது என்பத னைத் தீர்மானித்துக் கொள்க . ஆராய்ச்சியாளரின் கூற்றினையறிந்தோ 3 இருதல் அறியாமலோ கோகழியென்பது திருவாவடுதுறையென்றும் சீர்காழியென் றும் திருப்பெருந்துறையென்றும் . திருப்பெருந்துறைக்கோயிலென்றும் ' உரைகாரரும் ஆராய்ச்சியாளரும் கூறுகின்றனர் . திருவாசகத்தைக்கொண்டு ஆராயின் அடிகளின் கருத்து கோகழி இவைகளின் வேறான மென்பதே தெளிவாகும் . சிவபுராணத்துக் கோகழியாண்ட குருமணிதன் தாள் வாழ்க என்றவர் அதேபாட்டில் சீரார் பெருந்துறை நந்தேவனடி போற்றி என்கின்றார் . போற்றித் திருவகவலில் அருபரத்தொருவன் அவனி யில் ( திருப்பெருந்துறையில் ) வந்து குருபரனாகியருளினன் என்றவர் அதே பாட்டில் கோகழிமேவிய கோவே போற்றி என்கின்றார் . பண்டாய நான் மறையில் நண்ணிப்பெருந்துறையை நம்மிடர்கள் போயகல எண்ணியெழு கோகழிக்கரசை - பண்ணின் - மொழியாளோத்தர கோசமங்கை மன்னிக் கழியா திருந்தானைக் காண் . என உத்தரகோசமங்கையைச் சேர்த்து மூன்று தலங்களைப் பாடுகின்றார் . திருப்பள்ளி எழுச்சியில் திருப்பெருந் துறையுறை கோயிலுங் காட்டி என்றவர் திருப்பெருந்துறையுறை கோகழி காட்டியும் எனப்பாடிற்றிலர் . திருவாவடுதுறையையும் சீர்காழியையும் அவற்றுக்கு வழங்கும் பெயர்களை வீட்டுக் கோசுழியெனப் புதியதொரு பெயரிட்டுப் பாடவேண்டிய ஏது யாதுமில்லை . 67 சி.கூ.தேசிகர் .