திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

92 திருவாசக ஆராய்ச்சியுரை தன்னை ஆட்கொள்ளுதற் பொருட்டுக் குருமூர்த்தமாய் எழுந்தருளிய காலத்து அடிகள் நேரே இறைவனைக் கண்டமையின் 'கண்ணாலியானுங் கண்டேன்' என்றார். 'கண்ணார் நுதலோய் கழலினைகள் கண்டேன் கண்கள் களிகூர " (குழைத்த 9) என அடிகள் பிறிதோரிடத்து அரு வங் காண்க. 1 'அருணணி சுரக்கும் அமுது' என்பதில் சுரக்கும் என்னும் விளையா லும் *அமுது என்னும் நீரின் பெயராலும் இறைவனை சீரூற்றாக உருவ கஞ் செய்து அவன் அருளை நீராகவுருவகஞ் செய்யாமையின் இஃது ஏக தேசவுருவகம். இறைவன் அருள்நனி சுரத்தல், சத 3.9 "தாயி லாகிய இன்னருள் புரிந்த கலைலனை'' ''அருள்நிதி தரவரு மானந்த மலையே" பள்ளி 2 "என்பர மல்லா வின்னருள் தந்தாய்" கோயிற் 2 "என்பே யுருகநின் னருள் அளித்து" எண்ணப் 3 என அடிகள் அருளியவாற்றானுமறிக. தன்னை ஆட்கொள்ளவேண்டி இறைவன் இந்நிலவுலகத்திலே தனது செவ்விய பாதங்களைத் தீண்ட வைத்தமையால் அவனது கருணையின் பெருமையைக் கண்டனராதலின் 'கருணையின் பெருமை கண்டேன் என் றார். "மாறிலாதமாக் கருணை வெள்ளமே" (சத 91) 'கருணைமா கடலே'' (பிடித் 2) 'கருணைக் கடல்" (பிரார்க் 2) "கருணைக் கடலினர்" (அன் னைப் 2) கருணை வெள்ளப் பிரான் !" (கேத் 10) கருணைத் தடங் கடல்'' (ஏசறவு 9) என்பனவும் இறைவனது கருணையின் பெருமையைப் புலப்படுத்துவனவாகும். புவனியிற் சேவடி தீண்டிளன் - இந்நிலவுலகில் தனது திருவடியைத் தீண்டச் செய்தளன். புவனியிற் சேவடி தீண்டும்படி இறைவன் எழுந் தருளியமை. "அருபரத் தொருவன் அவனியில் வந்து குருபர னாகி யருளிய பெருமை" போற் 75-8. "பொங்குமலர்ப் பாதம் பூதலத்தே போந்தருளி எங்கள் பிறப்பறுத்திட் டெந்தரமும் ஆட்கொண்டு அம் 1. "சிவனவனி வந்தருளி, எந்தரமு மாட்கொண்டு அம் 3, அரையாடு நாகமசைத்த பிரான் அவனியின்மேல் வரையாடு மங்கைதன் பங்கொடும்வந் தாண்டதிதம் " தென் 8. அவனி வந்த எங்கள் பிரான் ' வார்த் 10 என அடிகள் பிராண்டும் அருளியவாற்றனுமறியப்படும். *நாரமு மமுதமு நீரென லாகும்'' பிங் 1:57. திருவண்டப் பகுதி தன் கருணையின் பெருமையினாற் புவனியிற் சேவடி தீண்டவந்து தன்னைவந்து ஆட்கொண்டருளினமையால் தன்னை ஆண்டவன் இவபெரு மானே எனத் தான் தெளிந்தமையைச்"சிவனென யானுந் தேறினன் என அடிகள் அருளிச் செய்தார். "சிவனெனவே தேறினன்யான் என்றமையால் இன்றும் சிவனவனி வந்தபடி செப்பில்- அவனிதனில் உப்பெனவே கூர்மை யுருச்செய்யக் கண்டமையால் அப்படியே கண்டாய் அவன் " (91) எனத் ஒருக்களிற்றுப்படியாரில் வருதலுங் காண்க. சிவனென யானுந் தேறினன் காண்க, அவனெனை யாட்கொண் டருளினன் காண்க' எனச் சிவனெனத் தேறினமை முன்னர்க் கூறப்படினும் அடிகள் தம்மை ஆட் கொண்டருளிய பின்னரே சிவனெனத் தெளிந்தனர் எனக் கொள்க. குவளைக் கண்ணி என்றது குவனைமலர்போலும் கண்களையுடைய உமை யம்மையாரை. குவளைம்மலர் நயனத்தவளோடும் நெய்யாடியபெருமான் (திருஞான 15:1) எனத் தேவரரத்து வருகலுங் காண்க. கூறன் - கூற்றி லுடையவன். 'குவளைக்கண்ணிக் கூறன் காண்க; அவளும் தானும் உடனே காண்க' என்பவற்றால் முழுமுதற்பொருள் அம்மையும் அப்பனுமாய் நின்ற முறைமையை உணர்த்தினார். 4 MON 60-95 பரம ஆனந்த பழங்கடல் அதுவே - அவனும் அவளும் ஒருரு வாயமைந்த மேலான இன்பத்தைத்தரும் பழங்கடலாகிய அம்முழுமுதற் பொருளே. கருமா முகிலின் தோன்றி - கரிய பெரிய மழைமேகம் போலத் தோன்றி, திரு ஆர் பெருந்துறை வரையில் ஏறி - அழகு நிறைந்த திருப் பெருந்துறையாகிய மலையில் ஏறி, திரு தரும் ஒளி மின் திசை திசை விரிய - அழகு பொருந்திய அருள் ஒளியாகிய மின்னல் திக்குகள் தோறும் பரவ, ஐம்புல பந்தனை வாள் அரவு இரிய - அதனால் ஜம்புவ அவாவின் கட்டாகிய கொல்லுதலையுடைய பாம்புகள்கெட வெம் துயர் கோடை மா தலை கரப்ப - பிறவியின் கொடுந்துன்பமாகிய கோடைக்காலம் தனது பெரிய தலையை மறைத்துக்கொள்ள, நீடு எழில் தோன்றி வாள் ஒளி மிளிர - மிகுந்த எழுச்சியையுடைய பக்குவான்மாக்களாகிய தோன்றிப் பூக்கள் மிக்க செவ்வொளியோடு விளங்க,எம்தம் பிறவியின் கோபம் மிகுத்து - எம்முடைய பிறவிபோன்றனவாகிய இந்திரகோபங்களை மிகு வித்து. முரசு எறிந்து மா பெரு கருணையின் முழங்கி - முரசினை அடித் தாற்போல மிகப்பெரிய கருணையினால் நாதப்பறையை ஒலிப்பித்தலாகிய முழக்கத்தினைச் செய்து, பூ புரை அஞ்சலி காந்தள் காட்டஅடியார். களின் பூப்போன்ற குவிந்த கைகள் காந்தட்பூக்களைக் காட்ட எஞ்சா இன் அருள் நுண் துளி கொள்ள - குறையாத இனிய அருளாகிய நுண் ணிய துலிகள் வீழாநிற்ப, செம்சுடர் வெள்ளம் திசை திசை தெவிட்ட- அதனால் சிவந்த ஒளியினையுடைய அருளாகிய வெள்ளம் திக்குகள்தோறும்
92 திருவாசக ஆராய்ச்சியுரை தன்னை ஆட்கொள்ளுதற் பொருட்டுக் குருமூர்த்தமாய் எழுந்தருளிய காலத்து அடிகள் நேரே இறைவனைக் கண்டமையின் ' கண்ணாலியானுங் கண்டேன் ' என்றார் . ' கண்ணார் நுதலோய் கழலினைகள் கண்டேன் கண்கள் களிகூர ( குழைத்த 9 ) என அடிகள் பிறிதோரிடத்து அரு வங் காண்க . 1 ' அருணணி சுரக்கும் அமுது ' என்பதில் சுரக்கும் என்னும் விளையா லும் * அமுது என்னும் நீரின் பெயராலும் இறைவனை சீரூற்றாக உருவ கஞ் செய்து அவன் அருளை நீராகவுருவகஞ் செய்யாமையின் இஃது ஏக தேசவுருவகம் . இறைவன் அருள்நனி சுரத்தல் சத 3.9 தாயி லாகிய இன்னருள் புரிந்த கலைலனை ' ' ' ' அருள்நிதி தரவரு மானந்த மலையே பள்ளி 2 என்பர மல்லா வின்னருள் தந்தாய் கோயிற் 2 என்பே யுருகநின் னருள் அளித்து எண்ணப் 3 என அடிகள் அருளியவாற்றானுமறிக . தன்னை ஆட்கொள்ளவேண்டி இறைவன் இந்நிலவுலகத்திலே தனது செவ்விய பாதங்களைத் தீண்ட வைத்தமையால் அவனது கருணையின் பெருமையைக் கண்டனராதலின் ' கருணையின் பெருமை கண்டேன் என் றார் . மாறிலாதமாக் கருணை வெள்ளமே ( சத 91 ) ' கருணைமா கடலே ' ' ( பிடித் 2 ) ' கருணைக் கடல் ( பிரார்க் 2 ) கருணைக் கடலினர் ( அன் னைப் 2 ) கருணை வெள்ளப் பிரான் ! ( கேத் 10 ) கருணைத் தடங் கடல் ' ' ( ஏசறவு 9 ) என்பனவும் இறைவனது கருணையின் பெருமையைப் புலப்படுத்துவனவாகும் . புவனியிற் சேவடி தீண்டிளன் - இந்நிலவுலகில் தனது திருவடியைத் தீண்டச் செய்தளன் . புவனியிற் சேவடி தீண்டும்படி இறைவன் எழுந் தருளியமை . அருபரத் தொருவன் அவனியில் வந்து குருபர னாகி யருளிய பெருமை போற் 75-8 . பொங்குமலர்ப் பாதம் பூதலத்தே போந்தருளி எங்கள் பிறப்பறுத்திட் டெந்தரமும் ஆட்கொண்டு அம் 1 . சிவனவனி வந்தருளி எந்தரமு மாட்கொண்டு அம் 3 அரையாடு நாகமசைத்த பிரான் அவனியின்மேல் வரையாடு மங்கைதன் பங்கொடும்வந் தாண்டதிதம் தென் 8 . அவனி வந்த எங்கள் பிரான் ' வார்த் 10 என அடிகள் பிராண்டும் அருளியவாற்றனுமறியப்படும் . * நாரமு மமுதமு நீரென லாகும் ' ' பிங் 1:57 . திருவண்டப் பகுதி தன் கருணையின் பெருமையினாற் புவனியிற் சேவடி தீண்டவந்து தன்னைவந்து ஆட்கொண்டருளினமையால் தன்னை ஆண்டவன் இவபெரு மானே எனத் தான் தெளிந்தமையைச் சிவனென யானுந் தேறினன் என அடிகள் அருளிச் செய்தார் . சிவனெனவே தேறினன்யான் என்றமையால் இன்றும் சிவனவனி வந்தபடி செப்பில்- அவனிதனில் உப்பெனவே கூர்மை யுருச்செய்யக் கண்டமையால் அப்படியே கண்டாய் அவன் ( 91 ) எனத் ஒருக்களிற்றுப்படியாரில் வருதலுங் காண்க . சிவனென யானுந் தேறினன் காண்க அவனெனை யாட்கொண் டருளினன் காண்க ' எனச் சிவனெனத் தேறினமை முன்னர்க் கூறப்படினும் அடிகள் தம்மை ஆட் கொண்டருளிய பின்னரே சிவனெனத் தெளிந்தனர் எனக் கொள்க . குவளைக் கண்ணி என்றது குவனைமலர்போலும் கண்களையுடைய உமை யம்மையாரை . குவளைம்மலர் நயனத்தவளோடும் நெய்யாடியபெருமான் ( திருஞான 15 : 1 ) எனத் தேவரரத்து வருகலுங் காண்க . கூறன் - கூற்றி லுடையவன் . ' குவளைக்கண்ணிக் கூறன் காண்க ; அவளும் தானும் உடனே காண்க ' என்பவற்றால் முழுமுதற்பொருள் அம்மையும் அப்பனுமாய் நின்ற முறைமையை உணர்த்தினார் . 4 MON 60-95 பரம ஆனந்த பழங்கடல் அதுவே - அவனும் அவளும் ஒருரு வாயமைந்த மேலான இன்பத்தைத்தரும் பழங்கடலாகிய அம்முழுமுதற் பொருளே . கருமா முகிலின் தோன்றி - கரிய பெரிய மழைமேகம் போலத் தோன்றி திரு ஆர் பெருந்துறை வரையில் ஏறி - அழகு நிறைந்த திருப் பெருந்துறையாகிய மலையில் ஏறி திரு தரும் ஒளி மின் திசை திசை விரிய - அழகு பொருந்திய அருள் ஒளியாகிய மின்னல் திக்குகள் தோறும் பரவ ஐம்புல பந்தனை வாள் அரவு இரிய - அதனால் ஜம்புவ அவாவின் கட்டாகிய கொல்லுதலையுடைய பாம்புகள்கெட வெம் துயர் கோடை மா தலை கரப்ப - பிறவியின் கொடுந்துன்பமாகிய கோடைக்காலம் தனது பெரிய தலையை மறைத்துக்கொள்ள நீடு எழில் தோன்றி வாள் ஒளி மிளிர - மிகுந்த எழுச்சியையுடைய பக்குவான்மாக்களாகிய தோன்றிப் பூக்கள் மிக்க செவ்வொளியோடு விளங்க எம்தம் பிறவியின் கோபம் மிகுத்து - எம்முடைய பிறவிபோன்றனவாகிய இந்திரகோபங்களை மிகு வித்து . முரசு எறிந்து மா பெரு கருணையின் முழங்கி - முரசினை அடித் தாற்போல மிகப்பெரிய கருணையினால் நாதப்பறையை ஒலிப்பித்தலாகிய முழக்கத்தினைச் செய்து பூ புரை அஞ்சலி காந்தள் காட்டஅடியார் . களின் பூப்போன்ற குவிந்த கைகள் காந்தட்பூக்களைக் காட்ட எஞ்சா இன் அருள் நுண் துளி கொள்ள - குறையாத இனிய அருளாகிய நுண் ணிய துலிகள் வீழாநிற்ப செம்சுடர் வெள்ளம் திசை திசை தெவிட்ட அதனால் சிவந்த ஒளியினையுடைய அருளாகிய வெள்ளம் திக்குகள்தோறும்