திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

96 வன் அருளினால் பொலிவு பெற்று விளங்குதளின் வாளொளி மிளிர" என்றார். திருவாசக ஆராய்ச்சியுரை 44 நீடெழில் தோன்றி நாம் முன் எடுத்த அளவில்லாத பிறவிகள் போலக் கார்காலத்தே இந்திரகோபம் என்னும் தம்பவப்பூச்சிகள் நிலத்தின்கண் மிக்குத்தோன்று தலின் 'எந்தம் பிறவியின் கோபம் மிகுத்து" என்றார். கார் காலத்து இந்திரகோபம் மிக்குத் தோன்றல் " எள்ளிட விடனு மின்றி யெழுந்தன விலங்கு கோபம் வெள்ளடைத் தம்பற் குப்பை சிதர்ந்தென வீரிந்த மாதோ" (கம்ப. கார்கால பிபி. என்பதனாலுமறிக எந்தம் பிறவியின் கோபம் மிகுத்து என்பதற்கு எமது பிறவிபோன் றனவாகிய இந்திரகோபங் களை மிகுவித்து எனத் தொனிப்பொருள் கூறினும் 'எமது பிறவியினிடத் துச் சினம் மிகுந்து' என்பதே பொருளாகக் கொள்க. கார்காலத்து முகில், முரசினை அடித்தாற்போல முழங்குதலின் முர செறிந்து முழங்கி' என்றார். "கடிப்பிகு முரசின் முழங்கி யீடித்திடித் துப் பெயலா னதே வானம்' (குறுந் 22) எனப் பிறருங் கூதுதல் காண்க எறிதல் - அடித்தல். இறைவன் மிகப்பெரிய கருணையுடையனாத லின் மாப்பெருங்கருணையின் என்றார். "மாதிற் கூறுடை மாப்பெருங் கருணை யன்" (கீர்த்தி 107) "மாறிலாத மாக் கருணை வெள்ளமே" (சத 91) பெருந்துறையில் மேய பெருங்கருணையாளன்'"(வெண்பா 4) என அடி கள் பிறாண்டும் அருளியமை காண்க. கருணையின் என்புழி இன் தவிர் வழி வந்தது முழக்கம் - நாதப்பறையை ஒலிப்பித்தலாகிய முழக்கம். "நாதப்பெரும்பறை நவின்று கறங்கவும்" (சீர்த் 108, என அடிகள் அருளி யமையுங் காண்க. 41 இறைவன் திருப்பெருந்துறையில் குருவடிவிற் றோன்றியகாலை அடி யார்கள் தமது பூப்போன்ற கைகளைக் கூப்பித் தொழுது நிற்றலின் * பூப் புரை யஞ்சலி' என்றார். அஞ்சலி - கூப்புங்கை. இரண்டு கையும் பதாகை யாய் அகமொன்றுவது என்பர் அடியார்க்குநல்லார். (சிலப் 3 : 12 25 உரை) அடியார்களின் கூப்பிறகரங்கள் காந்தண் மலர்போன் றமை யாலும் காந்தள் கார்காலத்துப் பூத்தலினாலும் 'அஞ்சலி காந்தள் காட்ட என்றார். - எஞ்சா இன்னருள் - குறையாத இனிய அருள். எஞ்சாமை - குறை யாமை. "எஞ்சாமை நிறையக் கற்று'' (பதிற் 90:4) என்புழியும் இப் பொருட்டாதல் காண்க. இறைவள் திருப்பெருந்துறையில் இன்னருள் புரிந்தமை தாயிலாகிய இன்னருள் புரிந்த தலைவனை நனிகாணேன்' (ச.த39) 'எகனையு மாண்டுகொண் டின்னருள் புரியும் எம்பெருமான்" (பள்ளி ?) என அடிகள் அருளியமையானுமறியப்படும். இறைவன் இன் னருளே திருவார் பெருந்துறை வரையிலேறிய கருமாமுகிலிற்றோன்றிய மழையாகச் சொல்லப்பட்டது. நுண்துளி கொள்ள என்றது நுண்ணிய துணிகளாகப் பெய்ய என்றவாறு. மிகப்பெய்தமை 'வெள்ளத் திசை திசை தெவிட்ட என்பதனாற் பெறப்படும். திருவண்டப் பகுதி 'மழைபெய்தலாற் சிவந்த ஒளியையுடைய வெள்ளம் திக்குகள்தோறும் சென்று தெவிட்டுதல் போல அருண்மழையால் திக்குகள்தோறும் உள்ள அடியார்களின் உள்ளத்து அருளாகிய வெள்ளம் நிறைவதாயிற்று,திசை திசை என்னும் அடுக்கு தொறுப்பொருளது. தெவிட்டல் - நிறைதல். கேதக் குட்டம் கையற வோங்கி என்பது மழை வெள்ளம் மிகுதலால் ஆங்காங்குள்ள நீர்நிலைகள் அவ்வெள்ளத்துள் அமிழ்ந்திச் செயற்றுப் போவதுபோல இறைவனது அருள்வெள்ளம் மிகுதலால் உயிர்களினது துன்பமாகிய நீர்நிலைகள் அவ்வருள் வெள்ளத்துள் மூழ்கிச் செயலற்றுப் போதலை உணர்த்தியவாறு. கேதம் - துன்பம். 'கேதங்கள் கெடுத் தாண்ட கிளரொளியை* (கண்டபத்து 10) என்புழியும் இப்பொருட்டா தல் காண்க. "இடர் கோட்டாலை ஏதங் கேதம், அலக்கண் பீடையோ டல்ல கண்டமும், துன்பப் பொருளைச் சொல்லுங் கிளவி'' எனத் திவா சுரத்து வருதல் காண்க. குட்டம் - நீர்நிலை. இப்பொருட்டாதலை 'குட் டம் தாங்கல் கோட்டக மேலி .. நீர்நிலைப் பெயரே " என்னும் பிங்கலந்தை யால் (4:157) அறிக. வாவி என்று திவாகரம் கூறும். கையறுதல் செயலறுதல். கையறவோங்கி (78) வரையுற (77) என மாறிக் கூட்டுக. வரை - எல்லை. 97 இருச் சமயத் தொருபேய்த் தேசினை, நீர்நசை தரவரு நெடுங்கன் மான்கணக், தவப்பெரு வாயிடைப் பருகித் தளர்வொடும், அவப்பெருந் தாபம் நீங்கா தசைந்தன' என்பது வேனிலால் வெதும்பி மிக்கநீர் வேட்கை யால் நீரைத் தேடிவரும் மான்கூட்டங்கள் நண்பகற் கடுமையாற் றோன் றும் கானல் நீரினை நீரெனக் கருதி அதனைப் பருகுதற்கு விரைந்தோடி நீரி னைப் பெருாமற் பெருந்தாபத்தினால் வருந்தினாற்போல, தமது உய்வினை நாடிய மக்கள் அறுவகைச் சமயத்தின் உண்மையல்லாத பெறுபேற்றினை உண்மையான பெறுபேறு எனக் கருதி அதனைப் பெறமுயன் றும் பெருாமல் வருந்திய தன்மையைக் கூறியதாகும். இருமுச் சமயம் என்றது அறுவகைச் சமயத்தினை. அடிகள் "அறு வகைச் சமயத் தறுவகை யோர்க்கும், வீடுபேறாய் நின்ற விண்ணோர் பகுதி, கீடம் புரையும் கிழவோள் " (அண்ட 17-9) என இறைவனை நோக்க அறுவகைச் சமயக் கடவுளரும் புழுவினை நிகர்ப்பர் எனவும், இங்கே 'இருமுச் சமயத்தொரு பேய்த்தேர்' என அறுவகைச் சமயப் பேறு கானல் நீருக்குச் சமானம் எனவும் அருளிச் செய்துள்ளார். அடி கள் அறுவகைச் சமயம் இவை எனக் கூறாதொழியினும். வீரத மேபர மாகவே தியருஞ் சரத மாகவே சாத்திரங் காட்டினர் ' போற் 50-1 என்பதனால் மீமாஞ்சகமதத்தினையும், "மிண்டிய மாயா வாதம்" போற் 54. என்பதனால் மாயாவாத மதத்தினையும், 13
96 வன் அருளினால் பொலிவு பெற்று விளங்குதளின் வாளொளி மிளிர என்றார் . திருவாசக ஆராய்ச்சியுரை 44 நீடெழில் தோன்றி நாம் முன் எடுத்த அளவில்லாத பிறவிகள் போலக் கார்காலத்தே இந்திரகோபம் என்னும் தம்பவப்பூச்சிகள் நிலத்தின்கண் மிக்குத்தோன்று தலின் ' எந்தம் பிறவியின் கோபம் மிகுத்து என்றார் . கார் காலத்து இந்திரகோபம் மிக்குத் தோன்றல் எள்ளிட விடனு மின்றி யெழுந்தன விலங்கு கோபம் வெள்ளடைத் தம்பற் குப்பை சிதர்ந்தென வீரிந்த மாதோ ( கம்ப . கார்கால பிபி . என்பதனாலுமறிக எந்தம் பிறவியின் கோபம் மிகுத்து என்பதற்கு எமது பிறவிபோன் றனவாகிய இந்திரகோபங் களை மிகுவித்து எனத் தொனிப்பொருள் கூறினும் ' எமது பிறவியினிடத் துச் சினம் மிகுந்து ' என்பதே பொருளாகக் கொள்க . கார்காலத்து முகில் முரசினை அடித்தாற்போல முழங்குதலின் முர செறிந்து முழங்கி ' என்றார் . கடிப்பிகு முரசின் முழங்கி யீடித்திடித் துப் பெயலா னதே வானம் ' ( குறுந் 22 ) எனப் பிறருங் கூதுதல் காண்க எறிதல் - அடித்தல் . இறைவன் மிகப்பெரிய கருணையுடையனாத லின் மாப்பெருங்கருணையின் என்றார் . மாதிற் கூறுடை மாப்பெருங் கருணை யன் ( கீர்த்தி 107 ) மாறிலாத மாக் கருணை வெள்ளமே ( சத 91 ) பெருந்துறையில் மேய பெருங்கருணையாளன் ' ( வெண்பா 4 ) என அடி கள் பிறாண்டும் அருளியமை காண்க . கருணையின் என்புழி இன் தவிர் வழி வந்தது முழக்கம் - நாதப்பறையை ஒலிப்பித்தலாகிய முழக்கம் . நாதப்பெரும்பறை நவின்று கறங்கவும் ( சீர்த் 108 என அடிகள் அருளி யமையுங் காண்க . 41 இறைவன் திருப்பெருந்துறையில் குருவடிவிற் றோன்றியகாலை அடி யார்கள் தமது பூப்போன்ற கைகளைக் கூப்பித் தொழுது நிற்றலின் * பூப் புரை யஞ்சலி ' என்றார் . அஞ்சலி - கூப்புங்கை . இரண்டு கையும் பதாகை யாய் அகமொன்றுவது என்பர் அடியார்க்குநல்லார் . ( சிலப் 3 : 12 25 உரை ) அடியார்களின் கூப்பிறகரங்கள் காந்தண் மலர்போன் றமை யாலும் காந்தள் கார்காலத்துப் பூத்தலினாலும் ' அஞ்சலி காந்தள் காட்ட என்றார் . - எஞ்சா இன்னருள் - குறையாத இனிய அருள் . எஞ்சாமை - குறை யாமை . எஞ்சாமை நிறையக் கற்று ' ' ( பதிற் 90 : 4 ) என்புழியும் இப் பொருட்டாதல் காண்க . இறைவள் திருப்பெருந்துறையில் இன்னருள் புரிந்தமை தாயிலாகிய இன்னருள் புரிந்த தலைவனை நனிகாணேன் ' ( ச.த 39 ) ' எகனையு மாண்டுகொண் டின்னருள் புரியும் எம்பெருமான் ( பள்ளி ? ) என அடிகள் அருளியமையானுமறியப்படும் . இறைவன் இன் னருளே திருவார் பெருந்துறை வரையிலேறிய கருமாமுகிலிற்றோன்றிய மழையாகச் சொல்லப்பட்டது . நுண்துளி கொள்ள என்றது நுண்ணிய துணிகளாகப் பெய்ய என்றவாறு . மிகப்பெய்தமை ' வெள்ளத் திசை திசை தெவிட்ட என்பதனாற் பெறப்படும் . திருவண்டப் பகுதி ' மழைபெய்தலாற் சிவந்த ஒளியையுடைய வெள்ளம் திக்குகள்தோறும் சென்று தெவிட்டுதல் போல அருண்மழையால் திக்குகள்தோறும் உள்ள அடியார்களின் உள்ளத்து அருளாகிய வெள்ளம் நிறைவதாயிற்று திசை திசை என்னும் அடுக்கு தொறுப்பொருளது . தெவிட்டல் - நிறைதல் . கேதக் குட்டம் கையற வோங்கி என்பது மழை வெள்ளம் மிகுதலால் ஆங்காங்குள்ள நீர்நிலைகள் அவ்வெள்ளத்துள் அமிழ்ந்திச் செயற்றுப் போவதுபோல இறைவனது அருள்வெள்ளம் மிகுதலால் உயிர்களினது துன்பமாகிய நீர்நிலைகள் அவ்வருள் வெள்ளத்துள் மூழ்கிச் செயலற்றுப் போதலை உணர்த்தியவாறு . கேதம் - துன்பம் . ' கேதங்கள் கெடுத் தாண்ட கிளரொளியை * ( கண்டபத்து 10 ) என்புழியும் இப்பொருட்டா தல் காண்க . இடர் கோட்டாலை ஏதங் கேதம் அலக்கண் பீடையோ டல்ல கண்டமும் துன்பப் பொருளைச் சொல்லுங் கிளவி ' ' எனத் திவா சுரத்து வருதல் காண்க . குட்டம் - நீர்நிலை . இப்பொருட்டாதலை ' குட் டம் தாங்கல் கோட்டக மேலி .. நீர்நிலைப் பெயரே என்னும் பிங்கலந்தை யால் ( 4 : 157 ) அறிக . வாவி என்று திவாகரம் கூறும் . கையறுதல் செயலறுதல் . கையறவோங்கி ( 78 ) வரையுற ( 77 ) என மாறிக் கூட்டுக . வரை - எல்லை . 97 இருச் சமயத் தொருபேய்த் தேசினை நீர்நசை தரவரு நெடுங்கன் மான்கணக் தவப்பெரு வாயிடைப் பருகித் தளர்வொடும் அவப்பெருந் தாபம் நீங்கா தசைந்தன ' என்பது வேனிலால் வெதும்பி மிக்கநீர் வேட்கை யால் நீரைத் தேடிவரும் மான்கூட்டங்கள் நண்பகற் கடுமையாற் றோன் றும் கானல் நீரினை நீரெனக் கருதி அதனைப் பருகுதற்கு விரைந்தோடி நீரி னைப் பெருாமற் பெருந்தாபத்தினால் வருந்தினாற்போல தமது உய்வினை நாடிய மக்கள் அறுவகைச் சமயத்தின் உண்மையல்லாத பெறுபேற்றினை உண்மையான பெறுபேறு எனக் கருதி அதனைப் பெறமுயன் றும் பெருாமல் வருந்திய தன்மையைக் கூறியதாகும் . இருமுச் சமயம் என்றது அறுவகைச் சமயத்தினை . அடிகள் அறு வகைச் சமயத் தறுவகை யோர்க்கும் வீடுபேறாய் நின்ற விண்ணோர் பகுதி கீடம் புரையும் கிழவோள் ( அண்ட 17-9 ) என இறைவனை நோக்க அறுவகைச் சமயக் கடவுளரும் புழுவினை நிகர்ப்பர் எனவும் இங்கே ' இருமுச் சமயத்தொரு பேய்த்தேர் ' என அறுவகைச் சமயப் பேறு கானல் நீருக்குச் சமானம் எனவும் அருளிச் செய்துள்ளார் . அடி கள் அறுவகைச் சமயம் இவை எனக் கூறாதொழியினும் . வீரத மேபர மாகவே தியருஞ் சரத மாகவே சாத்திரங் காட்டினர் ' போற் 50-1 என்பதனால் மீமாஞ்சகமதத்தினையும் மிண்டிய மாயா வாதம் போற் 54 . என்பதனால் மாயாவாத மதத்தினையும் 13