திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

106 திருவாசக ஆராய்ச்சியுரை எவர்க்கும் ஆராமையின் இறைவனை 'நீற்றொடு தோற்ற வல்லோன்" என்றார். 'சுடுபொடி யணீந்த வளங்கொழி யகலத்து'' (திருவாரூர்மும் 22:15) என வருதலுங் காண்க. உலகத்திலுள்ள இயங்கியற்பொருள் நிலையியற்பொருள்களில், நிலையி யற் பொருள்களில் கற்பாறை மலை முதலிய கிடக்கும் பொருள்களும். மரம் செடி முதலிய நிற்கும் பொருள்களும் உளவாதலின் நிலையியற்பொருள் களைக் கிடப்பன நிற்பன என இருவகைப்படுத்துக் கூறினார் 'நிற்பனவு நடப்பனவு நிலனுக்கும்' நாவு 312:7. நடாஅய், கிடாஅய், நிறீஇ என் பன நடத்தி கிடத்தி நிறுத்தி எனச் செய்தேனெச்சப் பொருள் தருதற்கு அளபெடை பெற்றுவந்தன. இவ்வினை யெச்சங்கள் கடந்த (111 என்னும் பெயரெச்சத்தைக் கொண்டு முடிந்தன. பதம் - அளவு. முன்னைப் பழம் பொருட்கு முன் னைப் பழம்பொருளா கிய இறைவன் சொல்லளவையைக் கடந்தோனுாதலின் 'சொற்பதங்கடந்த தொல்லோன்' என்றார். சொற்பதங் கடந்த தொல்லோன் காண்க'' (திருவண்ட 40) சொற்பதங் கடந்த அப்பன்" (அச்சப்ே என அடி கள் பிருாண்டும் அருளியமையுங் காண்க. உள்ளத்துணர்ச்சியிற் கொள்ளவும் படாஅன் என்றது மனத்துக்கும் எட்டாதவன் என்றவாறு. 'மனவாசகங் கடந்தான்'' (உயிருண்ணி3) என வருதல் காண்க. கண்முதற் புலனாற் காட்சியுமில்லோன் என்றது காட்சி முதலிய அள வைகளுக்கு அகப்படாதவன் என்றவாறு. புலன் - பொறியுணர்ச்சி. அவை; சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்பன. வின் முதற் பூதம் வான் வளி தீ நீர் நிலம் என்பன. t 115-123. பூவில் நாற்றம் போன்று - மலரிடத்துள்ள நறுமணம் போன்று, உயர்ந்து எங்கும் ஒழிவு அற நிறைந்து - ஓங்கி எங்கும் நீக்க இல்லாமல் நிறைந்து, மேவிய பெருமை - எவற்றிற்குஞ் சார்பாகப்பொருந் திய பெருந்தன்மையினை, இன்று எனக்கு எளி வந்து அருளி - இப் பொழுது அடியேனுக்கு எளியனாய் வந்து அறிவுறுத்தியருளி, அழிதரும் ஆக்கை ஒழியச் செய்த ஒண்பொருள் - அறியுந்தன்மையையுடைய இவ் வுடம்பைத் தன்தன்மை கெடுமாறு செய்த சிறந்த பொருளாயுள்ளவன், இன்று எனக்கு எளிவந்து இருந்தனன் போற்றி- இந்நாளில் அடியே னிடத்தும் எளிதாகவந்து குருமூர்த்தியாய் எழுந்தருளியிருந்தவனுக்கு வணக் கம்; அளிதரும் ஆக்கை செய்தோன் போற்றி - அன்பினால் உருகுதலைச் செய்யும் உடம்பினை அடியேனுக்கு அருள் செய்தவனுக்கு வணக்கம்; ஊற்று இருந்து உள்ளம் களிப்போன் போற்றி - இன்பநீர் ஊற்றாக உள்ளத்தைக் களிக்கச் செய்வோனுக்கு வணக்கம். ஆற்றா இன்பம் அலர்ந்து அலை செய்ய -பொறுத்தற்கரிய இன்பவெள்ளம் அலர்ந்து பரந்து அலைவீச, போற்கு ஆக்கையை பொறுத்தல் புகலோன் - அதனைப் பேணமாட்டாத இவ்வுடம்பைத் தாங்குதலை விரும்பேன். திருவண்டப் பகுதி 107 பூவினிடத்து மணம்போல இறைவனும் நீக்கமின்றி எங்கும் நிறைந் திருத்தலின் பூவின் நாற்றம் போன்றுயர்ந்தெங்கும் ஒழிவற நிறைந்து என் றார், "பூவண்ணம் பூவின் மணம்போல மெய்ப்போத வின்ப மாவண்ண மெய் கொண்டவன்'" எனப் பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற் புரா ணத்து (கடவுள் வாழ்த்து 5) வருதலும் காண்க. இறைவன் ஒழிவற நிறைந்திருத்தல், ஒழிவற நிறைங்க வொருவ போற்றி '" (போற்றி 215) 'ஒழிவற நிறைந்த யோகமே'' (பிடித் 1 ) என அடிகளும்,"ஒழிவற நின்றெங்கு மூலப்பிலான் காண்' (தே,209:6) என அப்பரடிகளும் அருளியவாற்றனுமறியப்படும். இன்றெனக் கெளிவந்தருளி என்றது தன்பெருந்தன்மையால் இப் பொழுது எனக்கு எளிதாக வந்து அருளுபதேசஞ் செய்து என்றவாறு. "ஈறிலாதநீ எவிடையாகிவந் தொளிசெய் மானுடமாக நோக்கியும்" (சத 91) "என்பெலா முருக்கி யெளியையா யாண்ட ஈசனே' (பிடித் 10) என அடிகள் பிறாண்டு அருளியமையுங் காண்க. இன்று என்றது ஆட் கொண்ட நாளை. P ஆக்கை - யாக்கை என்பதன் மரூஉ யாக்கை - எழுவகைப் பொரு ளால் கட்டப்பட்டது. ஆக்கை ஒழியச் செய்தல். அதன் தன்மை கெடச் செய்தலன் றி நீங்குமாறு செய்தலாகாது. என்னை? அளிதரும் ஆக்கை செய்தோன் (அண்ட 120) எனப் பின்னர் வருதலின். '' அன் பினா வடியேன் ஆவியோ டாக்கை ஆனந்தமாய்க் கசிந்துருக'' (கோயிற் 2) அடிகள் அருளியமையுங் காண்க. அளிதல் - உருகுதல். "அளிபவர் உள்ளத் தமுதே போற்றி' (போற் 142) என்புழியும் இப்பொருட்டா தல் காண்க. ஒண் பொருள் - ஒன்னிய பொருள். ஓகியென்னுளங் கொண்ட வன் ஒண்பொருள் (தே. 143:3) என அப்பரடிகள் அருளியமையுங் அளிதரும் ஆக்கை - அன்பினால் உருகுதச்ை செய்யும் ஆக்கை. என காண்க. ** ஊற்றிருந்து - இன்ப நீருற்குக இருந்து. ஊற்றான உண்ணா ரமுதே யுடையானே '' (சிவபுராண 83) என அடிகள் பிறிதோரிடத்துக் கூறுத லுங் காண்க. களிப்போன் எனத் தன்வினைபாற் கூறினும் அது களிப் எனப் பிறவினைப் பொருளில் வந்தது. குடிபொன்றிக் குற்றமு மாங்கே மிகும் ' (குறன்) என்புழிப்போல. . பிப்போன் ஆற்ற இன்பம் பொறுத்தற்கரிய இன்ப வெள்ளம், அலைசெய்ய என்ற தனால் இன்பம் என்றது இன்பவெள்ளத்தை உணர்த்தியது. அலர்தல் - பரத்தல். ''அலர்ந்த விரிக் குடுக்கை யுலகம் " (கலி 114-18.19) என் புழியும் இப்பொருட்டாதல் காண்க தம் யாக்கையை அளிதரும் யாக்கை யாகச் செய்துகொடுத்தும் அந்த யாக்கை பெ றுத்தற்கரிய இன்பவெள்ளம் அவர்ந்து அலைவீச அதனைப் பேணமாட்டாமையால் அதனை விரும்பாமை யின் 'போற்று ஆக்கையைப் பொறுத்தல் புகவேன்' என்றார். போற்று தல் - பேணுணுதல், 'பார்ப்பானைத். தோழிநீ போற்றுதி யென்றி " (கலி
106 திருவாசக ஆராய்ச்சியுரை எவர்க்கும் ஆராமையின் இறைவனை ' நீற்றொடு தோற்ற வல்லோன் என்றார் . ' சுடுபொடி யணீந்த வளங்கொழி யகலத்து ' ' ( திருவாரூர்மும் 22:15 ) என வருதலுங் காண்க . உலகத்திலுள்ள இயங்கியற்பொருள் நிலையியற்பொருள்களில் நிலையி யற் பொருள்களில் கற்பாறை மலை முதலிய கிடக்கும் பொருள்களும் . மரம் செடி முதலிய நிற்கும் பொருள்களும் உளவாதலின் நிலையியற்பொருள் களைக் கிடப்பன நிற்பன என இருவகைப்படுத்துக் கூறினார் ' நிற்பனவு நடப்பனவு நிலனுக்கும் ' நாவு 312 : 7 . நடாஅய் கிடாஅய் நிறீஇ என் பன நடத்தி கிடத்தி நிறுத்தி எனச் செய்தேனெச்சப் பொருள் தருதற்கு அளபெடை பெற்றுவந்தன . இவ்வினை யெச்சங்கள் கடந்த ( 111 என்னும் பெயரெச்சத்தைக் கொண்டு முடிந்தன . பதம் - அளவு . முன்னைப் பழம் பொருட்கு முன் னைப் பழம்பொருளா கிய இறைவன் சொல்லளவையைக் கடந்தோனுாதலின் ' சொற்பதங்கடந்த தொல்லோன் ' என்றார் . சொற்பதங் கடந்த தொல்லோன் காண்க ' ' ( திருவண்ட 40 ) சொற்பதங் கடந்த அப்பன் ( அச்சப்ே என அடி கள் பிருாண்டும் அருளியமையுங் காண்க . உள்ளத்துணர்ச்சியிற் கொள்ளவும் படாஅன் என்றது மனத்துக்கும் எட்டாதவன் என்றவாறு . ' மனவாசகங் கடந்தான் ' ' ( உயிருண்ணி 3 ) என வருதல் காண்க . கண்முதற் புலனாற் காட்சியுமில்லோன் என்றது காட்சி முதலிய அள வைகளுக்கு அகப்படாதவன் என்றவாறு . புலன் - பொறியுணர்ச்சி . அவை ; சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்பன . வின் முதற் பூதம் வான் வளி தீ நீர் நிலம் என்பன . t 115-123 . பூவில் நாற்றம் போன்று - மலரிடத்துள்ள நறுமணம் போன்று உயர்ந்து எங்கும் ஒழிவு அற நிறைந்து - ஓங்கி எங்கும் நீக்க இல்லாமல் நிறைந்து மேவிய பெருமை - எவற்றிற்குஞ் சார்பாகப்பொருந் திய பெருந்தன்மையினை இன்று எனக்கு எளி வந்து அருளி - இப் பொழுது அடியேனுக்கு எளியனாய் வந்து அறிவுறுத்தியருளி அழிதரும் ஆக்கை ஒழியச் செய்த ஒண்பொருள் - அறியுந்தன்மையையுடைய இவ் வுடம்பைத் தன்தன்மை கெடுமாறு செய்த சிறந்த பொருளாயுள்ளவன் இன்று எனக்கு எளிவந்து இருந்தனன் போற்றி- இந்நாளில் அடியே னிடத்தும் எளிதாகவந்து குருமூர்த்தியாய் எழுந்தருளியிருந்தவனுக்கு வணக் கம் ; அளிதரும் ஆக்கை செய்தோன் போற்றி - அன்பினால் உருகுதலைச் செய்யும் உடம்பினை அடியேனுக்கு அருள் செய்தவனுக்கு வணக்கம் ; ஊற்று இருந்து உள்ளம் களிப்போன் போற்றி - இன்பநீர் ஊற்றாக உள்ளத்தைக் களிக்கச் செய்வோனுக்கு வணக்கம் . ஆற்றா இன்பம் அலர்ந்து அலை செய்ய -பொறுத்தற்கரிய இன்பவெள்ளம் அலர்ந்து பரந்து அலைவீச போற்கு ஆக்கையை பொறுத்தல் புகலோன் - அதனைப் பேணமாட்டாத இவ்வுடம்பைத் தாங்குதலை விரும்பேன் . திருவண்டப் பகுதி 107 பூவினிடத்து மணம்போல இறைவனும் நீக்கமின்றி எங்கும் நிறைந் திருத்தலின் பூவின் நாற்றம் போன்றுயர்ந்தெங்கும் ஒழிவற நிறைந்து என் றார் பூவண்ணம் பூவின் மணம்போல மெய்ப்போத வின்ப மாவண்ண மெய் கொண்டவன் ' எனப் பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற் புரா ணத்து ( கடவுள் வாழ்த்து 5 ) வருதலும் காண்க . இறைவன் ஒழிவற நிறைந்திருத்தல் ஒழிவற நிறைங்க வொருவ போற்றி ' ( போற்றி 215 ) ' ஒழிவற நிறைந்த யோகமே ' ' ( பிடித் 1 ) என அடிகளும் ஒழிவற நின்றெங்கு மூலப்பிலான் காண் ' ( தே 209 : 6 ) என அப்பரடிகளும் அருளியவாற்றனுமறியப்படும் . இன்றெனக் கெளிவந்தருளி என்றது தன்பெருந்தன்மையால் இப் பொழுது எனக்கு எளிதாக வந்து அருளுபதேசஞ் செய்து என்றவாறு . ஈறிலாதநீ எவிடையாகிவந் தொளிசெய் மானுடமாக நோக்கியும் ( சத 91 ) என்பெலா முருக்கி யெளியையா யாண்ட ஈசனே ' ( பிடித் 10 ) என அடிகள் பிறாண்டு அருளியமையுங் காண்க . இன்று என்றது ஆட் கொண்ட நாளை . P ஆக்கை - யாக்கை என்பதன் மரூஉ யாக்கை - எழுவகைப் பொரு ளால் கட்டப்பட்டது . ஆக்கை ஒழியச் செய்தல் . அதன் தன்மை கெடச் செய்தலன் றி நீங்குமாறு செய்தலாகாது . என்னை ? அளிதரும் ஆக்கை செய்தோன் ( அண்ட 120 ) எனப் பின்னர் வருதலின் . ' ' அன் பினா வடியேன் ஆவியோ டாக்கை ஆனந்தமாய்க் கசிந்துருக ' ' ( கோயிற் 2 ) அடிகள் அருளியமையுங் காண்க . அளிதல் - உருகுதல் . அளிபவர் உள்ளத் தமுதே போற்றி ' ( போற் 142 ) என்புழியும் இப்பொருட்டா தல் காண்க . ஒண் பொருள் - ஒன்னிய பொருள் . ஓகியென்னுளங் கொண்ட வன் ஒண்பொருள் ( தே . 143 : 3 ) என அப்பரடிகள் அருளியமையுங் அளிதரும் ஆக்கை - அன்பினால் உருகுதச்ை செய்யும் ஆக்கை . என காண்க . ** ஊற்றிருந்து - இன்ப நீருற்குக இருந்து . ஊற்றான உண்ணா ரமுதே யுடையானே ' ' ( சிவபுராண 83 ) என அடிகள் பிறிதோரிடத்துக் கூறுத லுங் காண்க . களிப்போன் எனத் தன்வினைபாற் கூறினும் அது களிப் எனப் பிறவினைப் பொருளில் வந்தது . குடிபொன்றிக் குற்றமு மாங்கே மிகும் ' ( குறன் ) என்புழிப்போல . . பிப்போன் ஆற்ற இன்பம் பொறுத்தற்கரிய இன்ப வெள்ளம் அலைசெய்ய என்ற தனால் இன்பம் என்றது இன்பவெள்ளத்தை உணர்த்தியது . அலர்தல் - பரத்தல் . ' ' அலர்ந்த விரிக் குடுக்கை யுலகம் ( கலி 114-18.19 ) என் புழியும் இப்பொருட்டாதல் காண்க தம் யாக்கையை அளிதரும் யாக்கை யாகச் செய்துகொடுத்தும் அந்த யாக்கை பெ றுத்தற்கரிய இன்பவெள்ளம் அவர்ந்து அலைவீச அதனைப் பேணமாட்டாமையால் அதனை விரும்பாமை யின் ' போற்று ஆக்கையைப் பொறுத்தல் புகவேன் ' என்றார் . போற்று தல் - பேணுணுதல் ' பார்ப்பானைத் . தோழிநீ போற்றுதி யென்றி ( கலி