திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

சிவமயம் திருவம்பலம் உடையார் துணை காஞ்சிபுரம் தொண்டை மண்டலாதீனம் ஸ்ரீ ஞானப்பிரகாச தேசிக சுவாமிகள் மடாலய குருமஹா சந்நிதானம் சீலஸ்ரீ ஞானப்பிரகாச தேசிக பரமாசாரிய சுவாமிகள் அவர்கள் அருள் உரை அருள் சிவானந்தநாதன் சைவத்திருவாளர் அவர்கள் தம் தந்தையார் சங்கநூற் செல்வர் பண்டிதமணி சு. அருளம்பலவனார் எழுதிய ஆராய்ச்சியுரையின் முதற் பகுதியை நம் நோக்கிற்கு உய்த் தார்கள். அவ்வுரை திருவாசகத்தைப் பலயாண்டாகப் பெரிது முயன்று கற்றதன் பயனாகும். முற்றும் எழுதியும் அவ்வுரை அச் சிடப்பெற்று முழுவடிவிற் கண்டுவக்கும் பேறின்றிக் கடிதின் படி வாழ்வை நொடிவாழ்வென வெறுத்து நீத்துச் சிவனடிநீழலடைந் தார் அப்புலவர். அவர் ஈராண்டின் முன்னர் இம்மடாலயத்தில் வந்து பன்னாள் தங்கிப் பாடல் பெற்ற சிவதலங்களை வழிபட்டனர். திருவாசகவுரையெழுதும் முயற்சியும் மாணிக்கவாசகப் பெருமகனார் மலரடிக்கன்புடைமையும், வழிவழியாக வளர்ந்துவரப்பெறும் சிவ பத்தியும் செலுத்தியதால் புயற்காற்றுப் பெருக்காலுற்ற நெருக்கடி மிக்க காலத்திலும் திருப்பெருந்துறையிற் சென்று வழிபட்டு மீண் டும் இவணுற்று எங்கள்பால் அவர்கள் சொல்லிய அத்தலக்காட்சிப் பேறு குறித்த ஆராத அன்புரை இன்னமும் இன்புறுத்துகின்றன. அவர்கள் திருவம்பலமுடையார் திருவருளால் மீண்டு சென்று யாழ்ப்பாணம் அடைந்து சேர்ந்த நலத்தையும் தெரிவித்தார்கள்.. அப்பெரும்புலவர் மறைவும் அது பின்னர்ச் சிறிது காலத்தில், குறித்து அன்பர் பலர் எழுதிய பிரிவாற்றாமையுரைகளும் தமிழகத்திற் பரவித் தமிழ்ச் சான்றோர் பலரைத் துயர்க்கடலுள் ஆழ்த்தின. இப்பொழுது இவ்வெளியீடு எய்திற்று. இதுவும் முழுதும் வந்தி லது. 'நீத்தல் விண்ணப்பம்’ வரையில் வந்துள்ளது. அவரை நீத்த தமிழர்க்குக் கிடைத்த, அவருரைப் பகுதியும் நீத்தலோடு அச்சிட்டு முடிந்தது. மற்றைய உரைப் பகுதியும் நீத்தலின்றி அச்சிடச் செய்து பெறுவது தமிழர்க்குக் தலையாய கடனாகும். உலகர் கடன்மையைத் தம் முதற்கடன்மையாகக் கொண்டு இத்திருவாசகப் பேராராய்ச்சி யுரையை வெளியிடத் தொடங்கி முற்பகுதியாக இதனை அச்சிடுவித்து வழங்கும் நிறைநாட் செல்வர் அருள் சிவானந்தநாதனார் திருவரு ளால் எல்லா நலங்களும் செல்வங்களும் எய்தி நீடூழி இனிது வாழ்க 'வாழ்க, வாழ்க. இவ்வுரை ஒவ்வொரு திருவாசகத்தின் பொருளையும் செவ்விதின் விளக்கியும், சொற்பொருட் காரணமும் உயரிய பலமேற் கோள்களுங் காட்டியும் இத்திருமுறையுள் முன்பின் உள்ள ஒற்றுமைகளைப் பல் வேறு திறத்தில் உணர்த்தியும் முன்னர் வந்த உரைகளைக் காட்டி லும் நல்லவாறமைந்தும் விளங்குகின்றது. 'பதிற்றுப் பத்து'ரைச் சிறப்பினும் இவ்வுரை சாலச் சிறப்புற்றுள்ளது. ஆசிரியரது தமிழ்ப் புலமைக்கு அச்சங்க நூலுரையும் சைவஞானத்துக்கு இத்தங்க நூலுரையும் துங்கச் சான்றாகும். மாணிக்கவாசகர் நமச்சிவாய வாழ்க என்னாது வருஞ்சீர் முத லிசை நேராதலை நோக்கி அளபெடையாக்கி நமச்சிவாஅழ்க நாதன் னாள் வாழ்க என்ற உண்மையை உணர்வோர் யாப்பறிபுலவராயிருப் பின் 18ஆவது திருவடியின் ஈற்றிலும் 5.9ஆவது திருவடியின் முடிவி லும் முறையே இறையே வணங்கிச் என்றொற்றளபெடையும் 'காஅட்டி' என்றுயிரளபெடையும் அமைத்துக் கொள்ளல் வேண்டும். 88வது திருவடியில் "குரம்பைக் கட்டு' என்று ஒரு சொன்னீர்மைத் தாயிருத்தல் வேண்டும். இன்னோரன்ன பற்பல பிழைகள் பலர் பதிப்பிலுமுள்ளன. போற்றித்திருவகலில் 99ஆவது திருவடியில் 'ஆ ஆ என்று எனக்கு அருளாய் போற்றி' என்னும் பொருட்டாய். ஆவாவென்றெனக்கருளாய் போற்றி' என்றிருத்தற்குரியது. 'ஆவா வென்னப்பட்டு அன்பாய் ஆட்பட்டீர்" (யாத்திரைபத்து 1) வென்றருளாயே ' (எண்ணப் பதிகம் 5) 'ஆவா என்னாவிடில் என்னை அஞ்சேல் என்பார் ஆரோதான் ' (ஆனந்தமாலை 6) ஆவாவென்றரு ளிச் செடிசேருடலைச் சிதையாத தெத்துக்கு' (குழைத்தபத்து 3 ) என்னை ஆட்கொண்டு ஆவா வென்ற நீர்மையெல்லாம் புகழப் பெறுவ தென்று கொல்லோ' (புணர்ச்சிப்பத்து) 'ஆவாவரியயன்' (திருத் தெள்ளேணம் 7) ‘ஆவவெந்தாய் ' (திருச்தீதகம் 4) என்னுமிடங்களில் * இரக்கக்குறிப்பாக வந்தமை நோக்கி ஈங்கும் பொருள் கோடல் வேண்டும். 'கோகழி'யைக் குறித்துப் பலர் 'சித்தாந்தம்" (1930 மலர் மூன்று) என்னும் சைவத்பத்திரிகையில் எழுதியவற்றை நோக்கி, இவ்வுரையி லும் (பக்கம் 415) ஆசிரியர் அருளம்பலவனார் எழுதியிருக்கும் படியை நோக்குதல் நன்றாகும். இங்கும் புலவர் பலவரும் சிறி தூன்றி நின்றுணர்வாராக. மாணிக்கவாசகப்பிரானார் முதன்முதற் பாடி யருளியது சிவபுராணம் என்பர். அதில் முதல் வாழ்த்து அவர்க்குப
சிவமயம் திருவம்பலம் உடையார் துணை காஞ்சிபுரம் தொண்டை மண்டலாதீனம் ஸ்ரீ ஞானப்பிரகாச தேசிக சுவாமிகள் மடாலய குருமஹா சந்நிதானம் சீலஸ்ரீ ஞானப்பிரகாச தேசிக பரமாசாரிய சுவாமிகள் அவர்கள் அருள் உரை அருள் சிவானந்தநாதன் சைவத்திருவாளர் அவர்கள் தம் தந்தையார் சங்கநூற் செல்வர் பண்டிதமணி சு . அருளம்பலவனார் எழுதிய ஆராய்ச்சியுரையின் முதற் பகுதியை நம் நோக்கிற்கு உய்த் தார்கள் . அவ்வுரை திருவாசகத்தைப் பலயாண்டாகப் பெரிது முயன்று கற்றதன் பயனாகும் . முற்றும் எழுதியும் அவ்வுரை அச் சிடப்பெற்று முழுவடிவிற் கண்டுவக்கும் பேறின்றிக் கடிதின் படி வாழ்வை நொடிவாழ்வென வெறுத்து நீத்துச் சிவனடிநீழலடைந் தார் அப்புலவர் . அவர் ஈராண்டின் முன்னர் இம்மடாலயத்தில் வந்து பன்னாள் தங்கிப் பாடல் பெற்ற சிவதலங்களை வழிபட்டனர் . திருவாசகவுரையெழுதும் முயற்சியும் மாணிக்கவாசகப் பெருமகனார் மலரடிக்கன்புடைமையும் வழிவழியாக வளர்ந்துவரப்பெறும் சிவ பத்தியும் செலுத்தியதால் புயற்காற்றுப் பெருக்காலுற்ற நெருக்கடி மிக்க காலத்திலும் திருப்பெருந்துறையிற் சென்று வழிபட்டு மீண் டும் இவணுற்று எங்கள்பால் அவர்கள் சொல்லிய அத்தலக்காட்சிப் பேறு குறித்த ஆராத அன்புரை இன்னமும் இன்புறுத்துகின்றன . அவர்கள் திருவம்பலமுடையார் திருவருளால் மீண்டு சென்று யாழ்ப்பாணம் அடைந்து சேர்ந்த நலத்தையும் தெரிவித்தார்கள் .. அப்பெரும்புலவர் மறைவும் அது பின்னர்ச் சிறிது காலத்தில் குறித்து அன்பர் பலர் எழுதிய பிரிவாற்றாமையுரைகளும் தமிழகத்திற் பரவித் தமிழ்ச் சான்றோர் பலரைத் துயர்க்கடலுள் ஆழ்த்தின . இப்பொழுது இவ்வெளியீடு எய்திற்று . இதுவும் முழுதும் வந்தி லது . ' நீத்தல் விண்ணப்பம் வரையில் வந்துள்ளது . அவரை நீத்த தமிழர்க்குக் கிடைத்த அவருரைப் பகுதியும் நீத்தலோடு அச்சிட்டு முடிந்தது . மற்றைய உரைப் பகுதியும் நீத்தலின்றி அச்சிடச் செய்து பெறுவது தமிழர்க்குக் தலையாய கடனாகும் . உலகர் கடன்மையைத் தம் முதற்கடன்மையாகக் கொண்டு இத்திருவாசகப் பேராராய்ச்சி யுரையை வெளியிடத் தொடங்கி முற்பகுதியாக இதனை அச்சிடுவித்து வழங்கும் நிறைநாட் செல்வர் அருள் சிவானந்தநாதனார் திருவரு ளால் எல்லா நலங்களும் செல்வங்களும் எய்தி நீடூழி இனிது வாழ்க ' வாழ்க வாழ்க . இவ்வுரை ஒவ்வொரு திருவாசகத்தின் பொருளையும் செவ்விதின் விளக்கியும் சொற்பொருட் காரணமும் உயரிய பலமேற் கோள்களுங் காட்டியும் இத்திருமுறையுள் முன்பின் உள்ள ஒற்றுமைகளைப் பல் வேறு திறத்தில் உணர்த்தியும் முன்னர் வந்த உரைகளைக் காட்டி லும் நல்லவாறமைந்தும் விளங்குகின்றது . ' பதிற்றுப் பத்து'ரைச் சிறப்பினும் இவ்வுரை சாலச் சிறப்புற்றுள்ளது . ஆசிரியரது தமிழ்ப் புலமைக்கு அச்சங்க நூலுரையும் சைவஞானத்துக்கு இத்தங்க நூலுரையும் துங்கச் சான்றாகும் . மாணிக்கவாசகர் நமச்சிவாய வாழ்க என்னாது வருஞ்சீர் முத லிசை நேராதலை நோக்கி அளபெடையாக்கி நமச்சிவாஅழ்க நாதன் னாள் வாழ்க என்ற உண்மையை உணர்வோர் யாப்பறிபுலவராயிருப் பின் 18 ஆவது திருவடியின் ஈற்றிலும் 5.9 ஆவது திருவடியின் முடிவி லும் முறையே இறையே வணங்கிச் என்றொற்றளபெடையும் ' காஅட்டி ' என்றுயிரளபெடையும் அமைத்துக் கொள்ளல் வேண்டும் . 88 வது திருவடியில் குரம்பைக் கட்டு ' என்று ஒரு சொன்னீர்மைத் தாயிருத்தல் வேண்டும் . இன்னோரன்ன பற்பல பிழைகள் பலர் பதிப்பிலுமுள்ளன . போற்றித்திருவகலில் 99 ஆவது திருவடியில் ' என்று எனக்கு அருளாய் போற்றி ' என்னும் பொருட்டாய் . ஆவாவென்றெனக்கருளாய் போற்றி ' என்றிருத்தற்குரியது . ' ஆவா வென்னப்பட்டு அன்பாய் ஆட்பட்டீர் ( யாத்திரைபத்து 1 ) வென்றருளாயே ' ( எண்ணப் பதிகம் 5 ) ' ஆவா என்னாவிடில் என்னை அஞ்சேல் என்பார் ஆரோதான் ' ( ஆனந்தமாலை 6 ) ஆவாவென்றரு ளிச் செடிசேருடலைச் சிதையாத தெத்துக்கு ' ( குழைத்தபத்து 3 ) என்னை ஆட்கொண்டு ஆவா வென்ற நீர்மையெல்லாம் புகழப் பெறுவ தென்று கொல்லோ ' ( புணர்ச்சிப்பத்து ) ' ஆவாவரியயன் ' ( திருத் தெள்ளேணம் 7 ) ஆவவெந்தாய் ' ( திருச்தீதகம் 4 ) என்னுமிடங்களில் * இரக்கக்குறிப்பாக வந்தமை நோக்கி ஈங்கும் பொருள் கோடல் வேண்டும் . ' கோகழி'யைக் குறித்துப் பலர் ' சித்தாந்தம் ( 1930 மலர் மூன்று ) என்னும் சைவத்பத்திரிகையில் எழுதியவற்றை நோக்கி இவ்வுரையி லும் ( பக்கம் 415 ) ஆசிரியர் அருளம்பலவனார் எழுதியிருக்கும் படியை நோக்குதல் நன்றாகும் . இங்கும் புலவர் பலவரும் சிறி தூன்றி நின்றுணர்வாராக . மாணிக்கவாசகப்பிரானார் முதன்முதற் பாடி யருளியது சிவபுராணம் என்பர் . அதில் முதல் வாழ்த்து அவர்க்குப