திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

130 திருவாசக ஆராய்ச்சியுரை தூறி ஊழி கீமுறக் கிளைத்தும் காண்பதற் கரியரின் கழலும்" (12:14-8) எனக் கோயில் நான்மணிமாலையிலும், *புகவுகிர் வாளெயிற் றால்நிலங் கீண்டு பொறிகலங்க மிகவுகு மாற்கரும் பாதத்தனேல்' (18) எனக் கோயில் திருப்பண்ணியர் விருத்தத்திலும் வருவன காண்க. திரு வடியைக் காணாமை அவர் செருக்கு முழுவதும் நீங்காமையாலாகும். பின் னர் திருமால் திருவடியிணைகளைக் காணுமாறு தில்வைக்கண் தவங்கிடப்ப ஒரு திருவடியினைக் காட்டியருளினர். மற்றைத் திருவடியினையும் காட்டுக் என்று திருமால் தில்லை முன்றிலில் வரங்கிடந்தான் என அறிக. இதனை "புரங்கடந்தா னடிகாண்பான் புவிவிண்டு புக்கறியா திரங்கி டெந்தா யென்றிரப்பத் தன்னீரடிக் கென்னிரண்டு கரங்கி டந்தானொன்று காட்ட மற்றாங்கதுங் காட்டிடென்று வரங்கி டந்தான் தில்லையம்பல முன்றிலம் மாயவனே ''88) எனத் திருக்கோவையாரில் வருதலானுமறிக. வழுத்துதல் -பரவுதல் திருவடியிணைகள் என வந்தமையின் எளி தாய் என்னும் ஒருமைக் குறிப்புவினையெச்சத்தை எளியவாக எனத் திரிக்க. திருவடியிணைகள் எளிது என ஒருமை கூறியது 'கண்ணிரண்டுஞ் சிவந்தது' என்பதுபோலப் பால்வழுவமைதியாகக் கொண்டு எளியவாக எனப் பொருள் உரைக்கப்பட்டது. எளிதாய் (10) வந்து 75) என முடி யும். இவ்வாறு ஒருவினை இடைவீட்டுச் சென்று வினையைக் கொண்டு முடிதல் 'மாட்டு' என்னும் உறுப்பாம். என்னை? அகன்றுபொருள் கிடப்பினும் அணுகிய நிலையினும் இயன் றுபொருண் முடியத் தந்தன ருணர்த்தல் மாட்டென மொழிய பாட்டியல் வழக்கின் " என்றார் தொல்காப்பியனாராதலின், இவ்வினையெச்சத்திற்கும் .அதுகொண்டு முடியும் 'வந்து' என்னும் வினைக்கும் இடையே 'வார்கடலுலகினில்" என் பது முதலாகக் 'கனவிலும் நினைமாது' (74) என்பது ஈறாக வந்தன வெல்லாம் இடைப்பிறவரலாயின. இவ்வாறு வருதல், 422 தத்த மெச்சமொடு சிவணுங் குறிப்பீன் எச்சொல் லாயினு மிடைநிலை வரையார் தொல்.வினை 40 என்பதனாற் கொள்ளப்படும். வார்கடல் உலகினில் வழுத்துதற்கெளிதாய் என மாற்றிக் கூட்டி வந்து (75) என்னும் வினையொடு முடித்தல், அவனியில் வந்து' எனப் பின்னர்க் கூறப்படுதலாற் கூறியது கூறலாகும். ஆதலால் வார்கடல் உலகினில் யானைமுதல் எறும்பீருய எனக்கூட்டிப் பொருள்கோடலே சிறப்புடைத் தாம் என்க. போற்றித் திருவகவல் WAT T 11-2. வார் கடல் உலகினில் - நெடிய கடல் சூழ்ந்த நிலவுலகத்தில், முதலா எறும்பு ஈருய - மிகப்பெரிய யானை முதலாக மிகச்சிறிய எறும்பு இறுதியாகவுள்ள ஊனம் இல் யோனியில் உள் வினை பிழைத் தும் - கெடுதல் இல்லாத கருப்பையினுள்ளே இருக்கும்போது அதனுள் நிகழும் செயல்களுக்குத் தப்பியும், 131 கட்புலனுக்குத் தோன்றுகின்ற இபங்கும் உயிர்களுள் மிகப்பெரியது யானையும், மிகச்சிறியது எறும்புமாதவின் 'யானை முதலா எறும்பு ஈருப* என்றார். எறும்பினும் சிறிய உயிர்கள் உளவாயினும் அவை கட்புலனுாகாமை யின் அவற்றைக் கூறுவாராயினர். இப்பிறவிகளெல்லாம் கேடின்றித் தொன்றுதொட்டு இடையறாது தொடர்ந்து வருதலின் 'ஊனமில் யோனி' என்றார். ஊனம் - கேடு. யோகி -கருப்பை.வடசொல். 13-25. மானுடப் பிறப்பினுள் - மக்களாய்ப் பிறக்கும் பிறப்பினுள் ளும், மாதா உதரத்து ஈனம் இல் கிருமி செருவினில் பிழைத்தும் - தாயின் கருப்பையினுள்ளே குன்றுதல் இல்லாத புழுக்கள் இடும்போரிலே சிதைவு படாமல் தப்பியும் ஒரு மதி தான் றியின் இருமையின் பிழைத்தும் . கருப்பையினுள் முதல் திங்களில் தான்றிக்காயின் வடிவுபோல் இருக்கை யில் இருவகையாக உண்டான கேட்டினின்றும் தப்பியும். இருமதி விளை வின் ஒருமையில் பிழைத்தும் - இரண்டாந் திங்களில் நாதமும் விந்துவும் ஒன்றுபட்டு விளைந்தவிடத்தும் எஞ்சிய விந்து உட்புகுதவால் உளதாகும் ஒருவகைக் கேட்டினின் னும் தப்பியும், மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத் தும் - மூன்றாம் திங்களில் கருவளர்தற்பொருட்டுக் கருப்பையிற் சுரக்கும் மதநீர் மிகுதியினின்றும் தப்பியும், ஈர் இரு திங்களில் பேர் இருள் பிழைத் தும் - நான்காம் திங்களில் கருப்பையினுள் உண்டாகும் பெரிய- இருளுக் குத் தப்பியும், அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும் - ஐந்தாம் திங்க ளில் சாவதினின் றும் தப்பியும், ஆறு திங்களில் ஊறு அலர் பிழைத்தும் - ஆறாம் திங்களில் உளதாகும் இடையூற்றிற்கு ஏதுவாகிய விரிவுகளுக்குத் தப்பியும், ஏழு திங்களில் தாள் புவி பிழைத்தும் - ஏழாங் திங்களில் உறுப்பு முழுவதும் நிறைவுற்ற கரு பூமியில் வீழ்தலினின்றும் தப்பியும், எட்டாம் திங்களில் கட்டமும் பிழைத்தும் - எட்டாம் திங்களில் உளதா கும் துன்பத்தினின்றும் பிழைத்தும், ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத் தும் - எட்டாங் தங்களில் உண்டாகிய துன்பம் ஒன்பதாம் திங்களில் மிகுத லால் அதனின்று தப்பியும், தக்க தசமதி தாயொடு தான்படும் துக்க சாகர துயர் இடை பிழைத்தும் - கருவுயீர்த்தற்குத் தகுந்த காலமாகிய பத் தாங் திங்களில் தன்னைப் பெறுகின்ற தாய் அடையும் கடல்போன்ற பெருந்துன்பத்திலும் தான் அடையும் துன்பத்திலும் தப்பியும். தாயும் தந்தையும் ஒருங்கு புணர்ந்தவழி தந்தையின் உடம்பினின் றும் வெளிப்பட்ட வெண்பாலிலுள்ள புழுக்கள் தாயின் கருப்பையிற் சென்ற அளவில் அங்குள்ள செய்பாலிலுள்ள தாய்க்கருவினொடு ஒன்று சேர்தற்குச் செய்யும் போரில் அப்புழுக்களில் ஏனையவற்றைப் புறத்தே
130 திருவாசக ஆராய்ச்சியுரை தூறி ஊழி கீமுறக் கிளைத்தும் காண்பதற் கரியரின் கழலும் ( 12 : 14-8 ) எனக் கோயில் நான்மணிமாலையிலும் * புகவுகிர் வாளெயிற் றால்நிலங் கீண்டு பொறிகலங்க மிகவுகு மாற்கரும் பாதத்தனேல் ' ( 18 ) எனக் கோயில் திருப்பண்ணியர் விருத்தத்திலும் வருவன காண்க . திரு வடியைக் காணாமை அவர் செருக்கு முழுவதும் நீங்காமையாலாகும் . பின் னர் திருமால் திருவடியிணைகளைக் காணுமாறு தில்வைக்கண் தவங்கிடப்ப ஒரு திருவடியினைக் காட்டியருளினர் . மற்றைத் திருவடியினையும் காட்டுக் என்று திருமால் தில்லை முன்றிலில் வரங்கிடந்தான் என அறிக . இதனை புரங்கடந்தா னடிகாண்பான் புவிவிண்டு புக்கறியா திரங்கி டெந்தா யென்றிரப்பத் தன்னீரடிக் கென்னிரண்டு கரங்கி டந்தானொன்று காட்ட மற்றாங்கதுங் காட்டிடென்று வரங்கி டந்தான் தில்லையம்பல முன்றிலம் மாயவனே ' '88 ) எனத் திருக்கோவையாரில் வருதலானுமறிக . வழுத்துதல் -பரவுதல் திருவடியிணைகள் என வந்தமையின் எளி தாய் என்னும் ஒருமைக் குறிப்புவினையெச்சத்தை எளியவாக எனத் திரிக்க . திருவடியிணைகள் எளிது என ஒருமை கூறியது ' கண்ணிரண்டுஞ் சிவந்தது ' என்பதுபோலப் பால்வழுவமைதியாகக் கொண்டு எளியவாக எனப் பொருள் உரைக்கப்பட்டது . எளிதாய் ( 10 ) வந்து 75 ) என முடி யும் . இவ்வாறு ஒருவினை இடைவீட்டுச் சென்று வினையைக் கொண்டு முடிதல் ' மாட்டு ' என்னும் உறுப்பாம் . என்னை ? அகன்றுபொருள் கிடப்பினும் அணுகிய நிலையினும் இயன் றுபொருண் முடியத் தந்தன ருணர்த்தல் மாட்டென மொழிய பாட்டியல் வழக்கின் என்றார் தொல்காப்பியனாராதலின் இவ்வினையெச்சத்திற்கும் .அதுகொண்டு முடியும் ' வந்து ' என்னும் வினைக்கும் இடையே ' வார்கடலுலகினில் என் பது முதலாகக் ' கனவிலும் நினைமாது ' ( 74 ) என்பது ஈறாக வந்தன வெல்லாம் இடைப்பிறவரலாயின . இவ்வாறு வருதல் 422 தத்த மெச்சமொடு சிவணுங் குறிப்பீன் எச்சொல் லாயினு மிடைநிலை வரையார் தொல்.வினை 40 என்பதனாற் கொள்ளப்படும் . வார்கடல் உலகினில் வழுத்துதற்கெளிதாய் என மாற்றிக் கூட்டி வந்து ( 75 ) என்னும் வினையொடு முடித்தல் அவனியில் வந்து ' எனப் பின்னர்க் கூறப்படுதலாற் கூறியது கூறலாகும் . ஆதலால் வார்கடல் உலகினில் யானைமுதல் எறும்பீருய எனக்கூட்டிப் பொருள்கோடலே சிறப்புடைத் தாம் என்க . போற்றித் திருவகவல் WAT T 11-2 . வார் கடல் உலகினில் - நெடிய கடல் சூழ்ந்த நிலவுலகத்தில் முதலா எறும்பு ஈருய - மிகப்பெரிய யானை முதலாக மிகச்சிறிய எறும்பு இறுதியாகவுள்ள ஊனம் இல் யோனியில் உள் வினை பிழைத் தும் - கெடுதல் இல்லாத கருப்பையினுள்ளே இருக்கும்போது அதனுள் நிகழும் செயல்களுக்குத் தப்பியும் 131 கட்புலனுக்குத் தோன்றுகின்ற இபங்கும் உயிர்களுள் மிகப்பெரியது யானையும் மிகச்சிறியது எறும்புமாதவின் ' யானை முதலா எறும்பு ஈருப * என்றார் . எறும்பினும் சிறிய உயிர்கள் உளவாயினும் அவை கட்புலனுாகாமை யின் அவற்றைக் கூறுவாராயினர் . இப்பிறவிகளெல்லாம் கேடின்றித் தொன்றுதொட்டு இடையறாது தொடர்ந்து வருதலின் ' ஊனமில் யோனி ' என்றார் . ஊனம் - கேடு . யோகி -கருப்பை.வடசொல் . 13-25 . மானுடப் பிறப்பினுள் - மக்களாய்ப் பிறக்கும் பிறப்பினுள் ளும் மாதா உதரத்து ஈனம் இல் கிருமி செருவினில் பிழைத்தும் - தாயின் கருப்பையினுள்ளே குன்றுதல் இல்லாத புழுக்கள் இடும்போரிலே சிதைவு படாமல் தப்பியும் ஒரு மதி தான் றியின் இருமையின் பிழைத்தும் . கருப்பையினுள் முதல் திங்களில் தான்றிக்காயின் வடிவுபோல் இருக்கை யில் இருவகையாக உண்டான கேட்டினின்றும் தப்பியும் . இருமதி விளை வின் ஒருமையில் பிழைத்தும் - இரண்டாந் திங்களில் நாதமும் விந்துவும் ஒன்றுபட்டு விளைந்தவிடத்தும் எஞ்சிய விந்து உட்புகுதவால் உளதாகும் ஒருவகைக் கேட்டினின் னும் தப்பியும் மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத் தும் - மூன்றாம் திங்களில் கருவளர்தற்பொருட்டுக் கருப்பையிற் சுரக்கும் மதநீர் மிகுதியினின்றும் தப்பியும் ஈர் இரு திங்களில் பேர் இருள் பிழைத் தும் - நான்காம் திங்களில் கருப்பையினுள் உண்டாகும் பெரிய- இருளுக் குத் தப்பியும் அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும் - ஐந்தாம் திங்க ளில் சாவதினின் றும் தப்பியும் ஆறு திங்களில் ஊறு அலர் பிழைத்தும் - ஆறாம் திங்களில் உளதாகும் இடையூற்றிற்கு ஏதுவாகிய விரிவுகளுக்குத் தப்பியும் ஏழு திங்களில் தாள் புவி பிழைத்தும் - ஏழாங் திங்களில் உறுப்பு முழுவதும் நிறைவுற்ற கரு பூமியில் வீழ்தலினின்றும் தப்பியும் எட்டாம் திங்களில் கட்டமும் பிழைத்தும் - எட்டாம் திங்களில் உளதா கும் துன்பத்தினின்றும் பிழைத்தும் ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத் தும் - எட்டாங் தங்களில் உண்டாகிய துன்பம் ஒன்பதாம் திங்களில் மிகுத லால் அதனின்று தப்பியும் தக்க தசமதி தாயொடு தான்படும் துக்க சாகர துயர் இடை பிழைத்தும் - கருவுயீர்த்தற்குத் தகுந்த காலமாகிய பத் தாங் திங்களில் தன்னைப் பெறுகின்ற தாய் அடையும் கடல்போன்ற பெருந்துன்பத்திலும் தான் அடையும் துன்பத்திலும் தப்பியும் . தாயும் தந்தையும் ஒருங்கு புணர்ந்தவழி தந்தையின் உடம்பினின் றும் வெளிப்பட்ட வெண்பாலிலுள்ள புழுக்கள் தாயின் கருப்பையிற் சென்ற அளவில் அங்குள்ள செய்பாலிலுள்ள தாய்க்கருவினொடு ஒன்று சேர்தற்குச் செய்யும் போரில் அப்புழுக்களில் ஏனையவற்றைப் புறத்தே