திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை முன்பணைத்து - முற்பக்கம் பருத்து, பணைத்தல் - பருத்தல். பணைத் தேந்திளமுலை'' (மதுரைக் 601) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க. 136 இடை பாரந்தாங்காது இளைத்து வருந்துமாறு கொங்கைகள் முன் வளர்ந்து பக்கங்களிற் பரந்தமையீன் 'எய்த்திடை வருந்த எழுந்து புடை பரந்து' என்றார். அம்மாமுலை சுமந்து தேயும் மருங்குல்" என்றார் திருக்கோவையாரினும். எய்த்து - இளைத்து, 'எய்த்த மெய்யே னெய்யே னாகி " (பொருந 68) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க. எழுதல்- வளர்தல். "கடுகலித் தெழுந்த கண்ணகள் சிலம்பில்'' (மலைபடு 14) என் புழியும் இப்பொருட்டாதல் காண்க. புடை - பக்கம் ஈர்க்கிடை போகா இளமுலை என்றது முன்பணைத்து எழுந்து அடி புடைபரந்து ஒன்றோடொன்று நெருங்கியமையால் ஈர்க்கும் இடையே நுழையமுடியாத இளமுலை என்றவாறு. போகா இளமுலை யாளை" தே.ஞான 54: 2. "ஈர்க்கிடை போகர வேரிள வனமுலை" பொருக 30. "ஈர்க்கிடை புநாம லடிபரந் தோங்கும் எரிள வனமுலை" நைட சுயம்?? என வருவன காண்க. "இடைவளி போகாது நெருங்குமுலைக் கொடிச் சியர்" எனக் கல்லாடத்து வருதலும் ஈண்டைக்கேற்ப அறியற்பாலது. காதலைச் செய்யும் மகளிரது கண்ணின் கொள்ளைக்குத் தப்புதலைக் கூற வந்தவர். அம்மாதர் காதலைச் செய்தற்குக் கருவியாயமைந்த கருங் குழலையும் செவ்வாயையும் வெண்ணகையையும் சாயலையும் இளமுலையை யும் விதந்தெடுத்துக் கூறுவாராயினர். குழல், வாய், நகை,சாயல் முலை என்னும் இரண்டாம் வேற்றுமை உருபும் பொருளும் உம்மையும் உடன் தொக்க தொகைநிலைச் சொற்கள் மாதர் என்பதனோடு தனித்தனி முடிந் தன. காதலைச் செய்யும் மகளிரது கூறிய பார்வையால் மக்கள் கவரப்படு தலின் 'கூர்த்த நயனக் கொள்ளையிற் பிழைத்தும்' என்றார். கொள்ளை பெருங் களவு. பற்ற வேண்டியதைப் பற்றமாட்டாத பித்தர்போல, உலக வாழ்க்கை யைப் பெரிதென விரும்பும் மனிதர்கள் தம் ழ்க்கைக்கு வேண்டிய பலதிறப்பட்ட எண்ணங்களையுமுடையராவர். அவ்வெண்ணங்களுள் அவா மதங்கொண்ட களிறுபோலக் கட்டுக்கடங்காது செல்லும் தீமையுடைத் தாகளின் 'பித்தவுலகர் பெருந்துறைப் பரப்பினுள், மத்தக் களிறெனு மவாவிடைப் பிழைத்தும்' என அதனை விதந்து கூறினார். மெய்ப்பொருளல் லாதவற்றை மெய்ப்பொருள் என்று உணரும் மயக்க உணர்வுடையாரைப் பித்தவுலகர்' என்றார். எண்ணங்கள் பெருந்துறைபோலப் பரந்து கிடத்த லின் 'பெருந்துறைப் பரப்பினுள்' என்றார். மத்தக்களிறு - மதச் செருக்குற்ற யானை. அது மதச் செருக்காற் பாகர்க்கடங்காது வேண்டியவாறு சென்று கெடுதி செய்வது போல, அவாவும் பிறர்க்குவரும் இடையூறெண்ணாது கெடுதி செய்தலின் 'மத்தக்களிறெனு மவா' என்றார். போற்றித் திருவகவல் 137 கல்வி பலகலைப் பிரிவுகளையுடைத்தாய் அவை ஒவ்வொன்றும் கடல் போற் பெரும்பரப்பினவாதலால் அவற்றையெல்லாம் கற்கப்புகுந்து முடிவு பெறுமையின் இடருண்டாகுமாதலாற் 'கல்வியென்னும் பல்கடற் பிழைத் தும்' என்றார். ''கல்வி கரையில் கற்பவர் நாள்சில மெல்ல நினைக்கிற் பிணிபல - தென்னிதி னாராய்ந் தமைவுடைய கற்பவே நீரொழியப் பாலுண் குருகிற் றெரிந்து" என்னும் நாலடியார் ஈண்டு சிந்திக்கத்தக்கது. செவ்வமானது ஈட்டல் காத்தல் முதலிய துன்பங்களை விளைத்தலிற் செல்வமென்னு மல்லலிற் பிழைத்தும்' என்றார். செல்வம் அல்லறுக்கு ஏதுவாதல். " இன்னல் தரும்பொருளை யீட்டலுந் துன்பமே பின்னதனைப் பேணுதலுந் துன்பமே - அன்ன தழித்தலுந் துன்பமே யந்தோ பிறர்பா லிழத்தலுந் துன்பமே யாம் என நீதிவெண்பாவிலும், ஈட்டலுந் துன்பமற் றீட்டிய வொண்பொருளைக் காத்தலு மாங்கே கடுந்துன்பங் காத்தல் குறைபடிற் றுன்பங் கெடிற்றுன்பங் துன்பக் குறைபதி மற்றைப் பொருள் AN என நாலடியாரிலும் வருவனவற்றாலுமறிக. அல்லல் - துன்பம். அல்ல லுக்குக் காரணமானதை அல்லல் எனக் காரியமாகக் கூறியது உபசார் வழக்கு. 19 ப நல்குரவு - வறுமை. நுகரப்படுவன யாதுமில்லாமை' என்பர் பரி மேலழகர். (குறள் அதி 105 அவதாரிகை) நல்குரவை விடம் என்றது வருத்துதல் பற்றி "நல்குரவென்னு மிடும்பை " "கொன்றதுபோதும் நிரப்பு" (குறள் 1045, 1048) எனத் திருவள்ளுவ நாயனார் கூறியமை யுங் காண்க. தொல்விடம் - தொன்றுதொட்டுப் பலகாலமாக வருத்தி வரும் நஞ்சு. தொன்றுதொட்ட பசியைத் 'தொல்பசி' (பதிற் 12:15) எனப் பிறரும் கூறுதல் காண்க. ஏனைய நஞ்சு பருகினாரை உடன் கொன்றுவிட, நல்குரவென்னும் நஞ்சு தொன்றுதொட்டுப் பல நாளாக வருத்திக்கொண்டிருப்பதனால் இதன் வேறுபாடு தோன்றத் தொல்விடம்' என்றார். விடம் - விஷயம் என்னும் வடசொற்றிரிபு. புல்லைக் கீழ் எல்லையாகக் கொண்ட பல பிறவித்துறைகளையெல்லாம் பிழைத்து வந்தமைப் 'புல்வரம்பாய பலதுறை பிழைத்தும்' என்றார். புல்லைக் கீழ் எல்லையாகக்கோடல் "புல்லாகிப் பூடாகிப் புழுவாய் மரமாகி" (சிவபுராணம்) என அடிகள் பிறிதோரிடத்து அருளியவாற்றனுமறியப் 18
திருவாசக ஆராய்ச்சியுரை முன்பணைத்து - முற்பக்கம் பருத்து பணைத்தல் - பருத்தல் . பணைத் தேந்திளமுலை ' ' ( மதுரைக் 601 ) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க . 136 இடை பாரந்தாங்காது இளைத்து வருந்துமாறு கொங்கைகள் முன் வளர்ந்து பக்கங்களிற் பரந்தமையீன் ' எய்த்திடை வருந்த எழுந்து புடை பரந்து ' என்றார் . அம்மாமுலை சுமந்து தேயும் மருங்குல் என்றார் திருக்கோவையாரினும் . எய்த்து - இளைத்து ' எய்த்த மெய்யே னெய்யே னாகி ( பொருந 68 ) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க . எழுதல் வளர்தல் . கடுகலித் தெழுந்த கண்ணகள் சிலம்பில் ' ' ( மலைபடு 14 ) என் புழியும் இப்பொருட்டாதல் காண்க . புடை - பக்கம் ஈர்க்கிடை போகா இளமுலை என்றது முன்பணைத்து எழுந்து அடி புடைபரந்து ஒன்றோடொன்று நெருங்கியமையால் ஈர்க்கும் இடையே நுழையமுடியாத இளமுலை என்றவாறு . போகா இளமுலை யாளை தே.ஞான 54 : 2 . ஈர்க்கிடை போகர வேரிள வனமுலை பொருக 30 . ஈர்க்கிடை புநாம லடிபரந் தோங்கும் எரிள வனமுலை நைட சுயம் ?? என வருவன காண்க . இடைவளி போகாது நெருங்குமுலைக் கொடிச் சியர் எனக் கல்லாடத்து வருதலும் ஈண்டைக்கேற்ப அறியற்பாலது . காதலைச் செய்யும் மகளிரது கண்ணின் கொள்ளைக்குத் தப்புதலைக் கூற வந்தவர் . அம்மாதர் காதலைச் செய்தற்குக் கருவியாயமைந்த கருங் குழலையும் செவ்வாயையும் வெண்ணகையையும் சாயலையும் இளமுலையை யும் விதந்தெடுத்துக் கூறுவாராயினர் . குழல் வாய் நகை சாயல் முலை என்னும் இரண்டாம் வேற்றுமை உருபும் பொருளும் உம்மையும் உடன் தொக்க தொகைநிலைச் சொற்கள் மாதர் என்பதனோடு தனித்தனி முடிந் தன . காதலைச் செய்யும் மகளிரது கூறிய பார்வையால் மக்கள் கவரப்படு தலின் ' கூர்த்த நயனக் கொள்ளையிற் பிழைத்தும் ' என்றார் . கொள்ளை பெருங் களவு . பற்ற வேண்டியதைப் பற்றமாட்டாத பித்தர்போல உலக வாழ்க்கை யைப் பெரிதென விரும்பும் மனிதர்கள் தம் ழ்க்கைக்கு வேண்டிய பலதிறப்பட்ட எண்ணங்களையுமுடையராவர் . அவ்வெண்ணங்களுள் அவா மதங்கொண்ட களிறுபோலக் கட்டுக்கடங்காது செல்லும் தீமையுடைத் தாகளின் ' பித்தவுலகர் பெருந்துறைப் பரப்பினுள் மத்தக் களிறெனு மவாவிடைப் பிழைத்தும் ' என அதனை விதந்து கூறினார் . மெய்ப்பொருளல் லாதவற்றை மெய்ப்பொருள் என்று உணரும் மயக்க உணர்வுடையாரைப் பித்தவுலகர் ' என்றார் . எண்ணங்கள் பெருந்துறைபோலப் பரந்து கிடத்த லின் ' பெருந்துறைப் பரப்பினுள் ' என்றார் . மத்தக்களிறு - மதச் செருக்குற்ற யானை . அது மதச் செருக்காற் பாகர்க்கடங்காது வேண்டியவாறு சென்று கெடுதி செய்வது போல அவாவும் பிறர்க்குவரும் இடையூறெண்ணாது கெடுதி செய்தலின் ' மத்தக்களிறெனு மவா ' என்றார் . போற்றித் திருவகவல் 137 கல்வி பலகலைப் பிரிவுகளையுடைத்தாய் அவை ஒவ்வொன்றும் கடல் போற் பெரும்பரப்பினவாதலால் அவற்றையெல்லாம் கற்கப்புகுந்து முடிவு பெறுமையின் இடருண்டாகுமாதலாற் ' கல்வியென்னும் பல்கடற் பிழைத் தும் ' என்றார் . ' ' கல்வி கரையில் கற்பவர் நாள்சில மெல்ல நினைக்கிற் பிணிபல - தென்னிதி னாராய்ந் தமைவுடைய கற்பவே நீரொழியப் பாலுண் குருகிற் றெரிந்து என்னும் நாலடியார் ஈண்டு சிந்திக்கத்தக்கது . செவ்வமானது ஈட்டல் காத்தல் முதலிய துன்பங்களை விளைத்தலிற் செல்வமென்னு மல்லலிற் பிழைத்தும் ' என்றார் . செல்வம் அல்லறுக்கு ஏதுவாதல் . இன்னல் தரும்பொருளை யீட்டலுந் துன்பமே பின்னதனைப் பேணுதலுந் துன்பமே - அன்ன தழித்தலுந் துன்பமே யந்தோ பிறர்பா லிழத்தலுந் துன்பமே யாம் என நீதிவெண்பாவிலும் ஈட்டலுந் துன்பமற் றீட்டிய வொண்பொருளைக் காத்தலு மாங்கே கடுந்துன்பங் காத்தல் குறைபடிற் றுன்பங் கெடிற்றுன்பங் துன்பக் குறைபதி மற்றைப் பொருள் AN என நாலடியாரிலும் வருவனவற்றாலுமறிக . அல்லல் - துன்பம் . அல்ல லுக்குக் காரணமானதை அல்லல் எனக் காரியமாகக் கூறியது உபசார் வழக்கு . 19 நல்குரவு - வறுமை . நுகரப்படுவன யாதுமில்லாமை ' என்பர் பரி மேலழகர் . ( குறள் அதி 105 அவதாரிகை ) நல்குரவை விடம் என்றது வருத்துதல் பற்றி நல்குரவென்னு மிடும்பை கொன்றதுபோதும் நிரப்பு ( குறள் 1045 1048 ) எனத் திருவள்ளுவ நாயனார் கூறியமை யுங் காண்க . தொல்விடம் - தொன்றுதொட்டுப் பலகாலமாக வருத்தி வரும் நஞ்சு . தொன்றுதொட்ட பசியைத் ' தொல்பசி ' ( பதிற் 12:15 ) எனப் பிறரும் கூறுதல் காண்க . ஏனைய நஞ்சு பருகினாரை உடன் கொன்றுவிட நல்குரவென்னும் நஞ்சு தொன்றுதொட்டுப் பல நாளாக வருத்திக்கொண்டிருப்பதனால் இதன் வேறுபாடு தோன்றத் தொல்விடம் ' என்றார் . விடம் - விஷயம் என்னும் வடசொற்றிரிபு . புல்லைக் கீழ் எல்லையாகக் கொண்ட பல பிறவித்துறைகளையெல்லாம் பிழைத்து வந்தமைப் ' புல்வரம்பாய பலதுறை பிழைத்தும் ' என்றார் . புல்லைக் கீழ் எல்லையாகக்கோடல் புல்லாகிப் பூடாகிப் புழுவாய் மரமாகி ( சிவபுராணம் ) என அடிகள் பிறிதோரிடத்து அருளியவாற்றனுமறியப் 18