திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

140 திருவாசக சக ஆராய்ச்சியுரை இவற்றின் ஆற்றலால் விரியும் வினைகள் எல்லையில்லாதனவாகப் பெருகி நிகழ்தலின் அவற்றை 'ஆறுகோடி மாயாசத்திகள்' என்றார். நோடி என்பது ஈண்டு மிகப்பல என்னும் பொருளில் வந்தது. உட்பகை ஆறும் ஆணவத்தின் ஆற்றலால் அதன்வழி நிற்கும் உயிரின் உள்ளத்தின்கட் டோன் நுவனவாயினும் அவை தோன்றுதற்குக் கருவியாய் அவ்வுயிரோடு உடன் நின்று உதவுவது மாயையேயாகலின் அவற்றை மாயையின் மேலேற்றி மாயாசத்திகள் ' என்றார். சத்தி, சக்தி என்னும் வட சொற்றிரிபு. மாயை - வஞ்சனை. கூடம் புள்ளுவங் குத்திரங் கஞ்ச,மாயை தொடுப் பட்டிமை வஞ்சனையாகும்'' என்பது பிங்கலந்தை (7:185). ஆத்தம் என்பது ஆப்தம் என்னும் வட சொற்றிரிபு. ஆப்தமாவது உண்மை உரைத்தல், தாங்கண்ட உண்மையை மறையாது உரைப்பார் அன்பு மிக்க நண்பரேயாகலின் அவரை 'ஆப்தமானார் என்றார். வர் என்றது தம்பாற் பகையும் நட்புமில்லாத நொதுமலரை. ஆப்தமா னாரும் அயலவரும் என உம்மை விரிக்க. இவ்விரு திறத்தினரும் திகராதலின் 'நாத்திகம் பேசி' என்றார். நாத்திகம் என்பது அயல் நாத் நாஸ்திக் யம்' என்னும் வடசொற்றிரிபு. நாத்திகம் என்பதற்குக் கடவுள் உண் மையை மறுப்பது என்பது பொருள். நாத்தழும் பேறினர் என்றது மிக அழுத்திப் பல கால் உரைத்தலால் நாவில் தழும்பேறப் பெற்றனர் என்றவாறு. "ஏத்தேன் நாத்தழும்பேற'' சத 13. கூத்தனை நாத்தழும் பேறவாழ்த்தி' பொற்சுண் 15. "முல்லை,நாத்தழும்பேறப் பாடாதாயினும்'' என வருவன காண்க. 4,0 200:9-10. பசு- சுற்றம் - சுற்றத்தார். "பொலிந்த சுற்றமொடு, வளமனை மகளிர் குளநீரயர (மதுரைக் 602-8) என்புறியும் இப்பொருட்டாதல் காண்க. சுற்றத்தார் தாய் தந்தை முதலிய உறவு முறையிலுள்ளவர்கள். பந்திக்கப்படுவது. பசுக்கள் கயிற்றால் கட்டப்படுவது போல உயிர்கள் ஆணவத்தினால் கட்டப்பட்டிருத்தலின் அவையும் பசு எனப்படும். றத்தவர்களாகிய உயர்திணைப் பொருள்களைப் பசுக்குழாங்கள் என சுற் அஃ றிணையால் இழித்துக் கூறியது. தெய்வமென்பதோர் சித்தமுண்டாகி அத னைப் பற்றி ஆராயச் செல்வாரை அங்ஙனம் செல்லவொட்டாது தடுத் துத் தம்வழிப்படுத்தலாலுண்டாகிய வெகுளியினாலென்க. உயிர்கள் அநா தியே ஆணவத்தாற் பந்திக்கப்பட்டிருத்தலின் 'தொல்பசு' என்றார். அன்றியும் மக்கட் பிறப்பு உண்டாய காலந்தொடங்கிச் சுற்றத் தொடர் பும் தொடர்ந்து உளதாகலின் 'தொல்பசு' என்றார் எனிமரம். கடவுள் நினைவுடையாரான இவர் அந்நினைவிலேயே அழுந்தி நம்மைப் பாதுகாத்தலை விட்டுப் பிரிவரே என்னும் வருத்தம் பெரி துடையராய்ச் சுற்றத்தார் மிகப் பதைத்து அவரைத் தம்மாட்டு ஈர்த்தவின் 'சுற்றமென் 0045 போற்றித் திருவகவல் 141 னும் தொல்பசுக் குழாங்கள் பற்றி யழைத்துப் பதறினர் பெருகவும் என்றார். பெருகவும் பதறினர் என மாற்றிக் கூட்டிப்பொருள் கொள்க. வேகியர் என்றது ஆரிய வேதங்களை ஓதியுணர்ந்த மீமாஞ்சகரை. அவர்கள் வேள்வி முதலிய வீரதங்களை அனுட்டித்தலே வீடு பேற்றினைத் தரும் என்றும், அதனின்றும் வேருகக் கடவுள் என்பதொரு பொருள் வேண்டா எனவும், வேதம் நித்தியம் என்றும், அதில் வீதித்தன செய் தலும் விலக்கியன ஒழிதலும் உறுதி பயக்கும் என்றும் கூறித் தம் கூற் றுக்கு அவ்வேதங்களையே சான்றாகக் காட்டுதலின் 'விரதமே பரமாக வேதியருஞ், சரதமாகவே சாத்திரம் காட்டினர்" என் றருளிச் செய்தார். தெய் வம் உண்டென்பதோர் சித்தம் உண்டாகியமைக்கு இவர் கூற்று முரண் பாடாதல் காண்க. "சரத விரதம் - நோன்பு. பரம் என்பது கடவுளை உணர்த்தும் வடசொல். சரதம் - உண்மை. "இதுவே வேத முடிவிது சரத மென்றான்" (கம்ப. இரணியன்வதை 122) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க. முடையர் மணிவாய் திறக்கிற் சலக்கென்பவே'" (57) என்னும் திருக் கோவையார் உரையில் சரதம் என்பதற்கு மெய் எனப் பேராசிரியர் உரைத்தமையுங் காண்க. சாத்திரம் - சாஸ்திரம் என்னும் வட சொற்றிரிபு நூல்கள் என்பது பொருள். சமயவாதிகள் - சைவமல்லாத ஏனைச் சமயத்தவர்கள். அவர்கள் சம யங்கள் உலோகாயதம் பௌத்தம் சாங்கியம் நையாயிகம் வைசேடிகம் மீமாஞ்சகம் என்பன. புறச்சமயத்தவர்களும் அகச்சமயத்தவர்களுமாகிய சமயக்கணக்கர்கள் தங்கள் தங்கள் சமயங்களிலே உறுதியாகிய பயனைத் தரும் நெறி அமைந்திருப்பதாக வாய்விட்டுக் கதறித் தம்முண் மாறுபட் டுக் கூறுதலின் 'சமயவாதிகள் தத்தம் மதங்களில் அமைவதாக அரற்றி மலைந்தனர் என்றருளிச் செய்தார். புறச்சமயங்கள் உலோகாயதம் புத்தம் சமணம் மீமாஞ்சகம் பஞ்ச ராத்திரம் பாட்டாசாரியம் என்பன. அகச்சமயங்கள் வைரவம் வரமம் காளாமுகம் மாவிரதம் சாத்தம் பாசுபதம் என்பன. இச்சமயங்களுள், "விரதமே பரமாக வேதியரும், சரதமாகவே சாத்திரம் காட்டினா' என் பது மீமாஞ்சகமதத்தையும், பின்னர்க் கூறப்படும் மாயாவாதம் என்பது சங்கராசாரியர் மதத்தையும், உலோகாயதன் என்பது புறச்சமயங்களுள் ஒன்றாகிய உலோகயதமதத்தையும் விதந்தெடுத்துக் கூறியனவாகும். தன் கொள்கையைத் திறம்பட எடுத்துரைக்கும் திட்பமுடைமையால் மீண்டிய மாயாவாதம்' என்றார். மாயாவாதத்தின் கொள்கை கடவுள் என்னும் பொருள் ஒன்றன்றிப் பிறிதொரு பொருளும் இல்லை என்பது. நியாயநூல் அளவைகளினால் அத்தன்மையாகத் தங்கொள்கையை எடுத்து இடித்துரைத்து ஆரவாரஞ் செய்யுந் தன்மையற்றி மாயாவாதமென்னுஞ் சண்ட மாருதஞ் சுழித்தடித் தார்த்து என்றார். ஆர்த்து என்னும் செய் தெனெச்சத்தை ஆரவாரிக்கப்பட்டு எனச் செயபாட்டெச்சமாக்குக.
140 திருவாசக சக ஆராய்ச்சியுரை இவற்றின் ஆற்றலால் விரியும் வினைகள் எல்லையில்லாதனவாகப் பெருகி நிகழ்தலின் அவற்றை ' ஆறுகோடி மாயாசத்திகள் ' என்றார் . நோடி என்பது ஈண்டு மிகப்பல என்னும் பொருளில் வந்தது . உட்பகை ஆறும் ஆணவத்தின் ஆற்றலால் அதன்வழி நிற்கும் உயிரின் உள்ளத்தின்கட் டோன் நுவனவாயினும் அவை தோன்றுதற்குக் கருவியாய் அவ்வுயிரோடு உடன் நின்று உதவுவது மாயையேயாகலின் அவற்றை மாயையின் மேலேற்றி மாயாசத்திகள் ' என்றார் . சத்தி சக்தி என்னும் வட சொற்றிரிபு . மாயை - வஞ்சனை . கூடம் புள்ளுவங் குத்திரங் கஞ்ச மாயை தொடுப் பட்டிமை வஞ்சனையாகும் ' ' என்பது பிங்கலந்தை ( 7 : 185 ) . ஆத்தம் என்பது ஆப்தம் என்னும் வட சொற்றிரிபு . ஆப்தமாவது உண்மை உரைத்தல் தாங்கண்ட உண்மையை மறையாது உரைப்பார் அன்பு மிக்க நண்பரேயாகலின் அவரை ' ஆப்தமானார் என்றார் . வர் என்றது தம்பாற் பகையும் நட்புமில்லாத நொதுமலரை . ஆப்தமா னாரும் அயலவரும் என உம்மை விரிக்க . இவ்விரு திறத்தினரும் திகராதலின் ' நாத்திகம் பேசி ' என்றார் . நாத்திகம் என்பது அயல் நாத் நாஸ்திக் யம் ' என்னும் வடசொற்றிரிபு . நாத்திகம் என்பதற்குக் கடவுள் உண் மையை மறுப்பது என்பது பொருள் . நாத்தழும் பேறினர் என்றது மிக அழுத்திப் பல கால் உரைத்தலால் நாவில் தழும்பேறப் பெற்றனர் என்றவாறு . ஏத்தேன் நாத்தழும்பேற ' ' சத 13 . கூத்தனை நாத்தழும் பேறவாழ்த்தி ' பொற்சுண் 15 . முல்லை நாத்தழும்பேறப் பாடாதாயினும் ' ' என வருவன காண்க . 4 200 : 9-10 . பசு சுற்றம் - சுற்றத்தார் . பொலிந்த சுற்றமொடு வளமனை மகளிர் குளநீரயர ( மதுரைக் 602-8 ) என்புறியும் இப்பொருட்டாதல் காண்க . சுற்றத்தார் தாய் தந்தை முதலிய உறவு முறையிலுள்ளவர்கள் . பந்திக்கப்படுவது . பசுக்கள் கயிற்றால் கட்டப்படுவது போல உயிர்கள் ஆணவத்தினால் கட்டப்பட்டிருத்தலின் அவையும் பசு எனப்படும் . றத்தவர்களாகிய உயர்திணைப் பொருள்களைப் பசுக்குழாங்கள் என சுற் அஃ றிணையால் இழித்துக் கூறியது . தெய்வமென்பதோர் சித்தமுண்டாகி அத னைப் பற்றி ஆராயச் செல்வாரை அங்ஙனம் செல்லவொட்டாது தடுத் துத் தம்வழிப்படுத்தலாலுண்டாகிய வெகுளியினாலென்க . உயிர்கள் அநா தியே ஆணவத்தாற் பந்திக்கப்பட்டிருத்தலின் ' தொல்பசு ' என்றார் . அன்றியும் மக்கட் பிறப்பு உண்டாய காலந்தொடங்கிச் சுற்றத் தொடர் பும் தொடர்ந்து உளதாகலின் ' தொல்பசு ' என்றார் எனிமரம் . கடவுள் நினைவுடையாரான இவர் அந்நினைவிலேயே அழுந்தி நம்மைப் பாதுகாத்தலை விட்டுப் பிரிவரே என்னும் வருத்தம் பெரி துடையராய்ச் சுற்றத்தார் மிகப் பதைத்து அவரைத் தம்மாட்டு ஈர்த்தவின் ' சுற்றமென் 0045 போற்றித் திருவகவல் 141 னும் தொல்பசுக் குழாங்கள் பற்றி யழைத்துப் பதறினர் பெருகவும் என்றார் . பெருகவும் பதறினர் என மாற்றிக் கூட்டிப்பொருள் கொள்க . வேகியர் என்றது ஆரிய வேதங்களை ஓதியுணர்ந்த மீமாஞ்சகரை . அவர்கள் வேள்வி முதலிய வீரதங்களை அனுட்டித்தலே வீடு பேற்றினைத் தரும் என்றும் அதனின்றும் வேருகக் கடவுள் என்பதொரு பொருள் வேண்டா எனவும் வேதம் நித்தியம் என்றும் அதில் வீதித்தன செய் தலும் விலக்கியன ஒழிதலும் உறுதி பயக்கும் என்றும் கூறித் தம் கூற் றுக்கு அவ்வேதங்களையே சான்றாகக் காட்டுதலின் ' விரதமே பரமாக வேதியருஞ் சரதமாகவே சாத்திரம் காட்டினர் என் றருளிச் செய்தார் . தெய் வம் உண்டென்பதோர் சித்தம் உண்டாகியமைக்கு இவர் கூற்று முரண் பாடாதல் காண்க . சரத விரதம் - நோன்பு . பரம் என்பது கடவுளை உணர்த்தும் வடசொல் . சரதம் - உண்மை . இதுவே வேத முடிவிது சரத மென்றான் ( கம்ப . இரணியன்வதை 122 ) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க . முடையர் மணிவாய் திறக்கிற் சலக்கென்பவே ' ( 57 ) என்னும் திருக் கோவையார் உரையில் சரதம் என்பதற்கு மெய் எனப் பேராசிரியர் உரைத்தமையுங் காண்க . சாத்திரம் - சாஸ்திரம் என்னும் வட சொற்றிரிபு நூல்கள் என்பது பொருள் . சமயவாதிகள் - சைவமல்லாத ஏனைச் சமயத்தவர்கள் . அவர்கள் சம யங்கள் உலோகாயதம் பௌத்தம் சாங்கியம் நையாயிகம் வைசேடிகம் மீமாஞ்சகம் என்பன . புறச்சமயத்தவர்களும் அகச்சமயத்தவர்களுமாகிய சமயக்கணக்கர்கள் தங்கள் தங்கள் சமயங்களிலே உறுதியாகிய பயனைத் தரும் நெறி அமைந்திருப்பதாக வாய்விட்டுக் கதறித் தம்முண் மாறுபட் டுக் கூறுதலின் ' சமயவாதிகள் தத்தம் மதங்களில் அமைவதாக அரற்றி மலைந்தனர் என்றருளிச் செய்தார் . புறச்சமயங்கள் உலோகாயதம் புத்தம் சமணம் மீமாஞ்சகம் பஞ்ச ராத்திரம் பாட்டாசாரியம் என்பன . அகச்சமயங்கள் வைரவம் வரமம் காளாமுகம் மாவிரதம் சாத்தம் பாசுபதம் என்பன . இச்சமயங்களுள் விரதமே பரமாக வேதியரும் சரதமாகவே சாத்திரம் காட்டினா ' என் பது மீமாஞ்சகமதத்தையும் பின்னர்க் கூறப்படும் மாயாவாதம் என்பது சங்கராசாரியர் மதத்தையும் உலோகாயதன் என்பது புறச்சமயங்களுள் ஒன்றாகிய உலோகயதமதத்தையும் விதந்தெடுத்துக் கூறியனவாகும் . தன் கொள்கையைத் திறம்பட எடுத்துரைக்கும் திட்பமுடைமையால் மீண்டிய மாயாவாதம் ' என்றார் . மாயாவாதத்தின் கொள்கை கடவுள் என்னும் பொருள் ஒன்றன்றிப் பிறிதொரு பொருளும் இல்லை என்பது . நியாயநூல் அளவைகளினால் அத்தன்மையாகத் தங்கொள்கையை எடுத்து இடித்துரைத்து ஆரவாரஞ் செய்யுந் தன்மையற்றி மாயாவாதமென்னுஞ் சண்ட மாருதஞ் சுழித்தடித் தார்த்து என்றார் . ஆர்த்து என்னும் செய் தெனெச்சத்தை ஆரவாரிக்கப்பட்டு எனச் செயபாட்டெச்சமாக்குக .