திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

144 திருவாசக ஆராய்ச்சியுரை குலமாய் மெய் விதிர்த்து' என்றார். விதிர்த்தல் -நடுங்குதல்."அகிர்வுர் வும் விதிர்ப்பும் நடுக்கஞ் செய்யும்'' என்பது தொல்காப்பியம். சகம் - உலகம். ஈண்டு உலகினரை உணர்த்தி நிற்றலின் ஆகுபெயர். பேய் என்றது பேய்க்கோட்பட்டாரை, பேய்க்கோட்பட்டவர் தம்வயமின்றி அப்பேயின் வயத்தராய் நிற்றல்போலத் தெவ்வங் கொள்கையில் நிலையே றுடையவர் அதனின்றும் பிறழாது நிற்றலின் அவரைக் காணுநர் இகழ்ந்து பரிகசித்தலின் 'சகம்பே யென்று தம்மைச் சிரிப்ப' என்றார். பேயர் என்பது பேய் என ஈறுகெட்டு நின்றது. இனி அறியாமையுடை யாரைப் பேயர் என வழங்கும் உலக வழக்குப் பற்றி வந்ததெனினுமமையும். "பேயனேன். என் சொல்லிப் பேசுகேனே சத 23. 'உன்னடி பணியாப் பேயனாகிலும்' செத்7. "பேயேன துள்ளப் பிழைபொறுக்கும் பெருமையனை ' கேரத் தும்பி 12 என அடிகள் பிறாண்டும் கூறுதல் காண்க. நாணது ஒழிந்து என்றது சகம் பேய் என்று தம்மைச் சிரித்தவினால் நாணமடையாது என்றவாறு. நாடவர் பழித்துரை (69) கோணுதல் இன்றிப் பூணதுவாக (70) என மாற்றிக் கூட்டி நாட்டவர்களாற் பழித் துக் கூறப்படும் சொற்கள், தாம் வெறுப்பின்றி ஏற்றுக் கொள்ளப்படுத் லால் அணிகலம் போல அமைய என்றவாறு. பழித்துரையை ஏற்றுக் கொள்பவரின் தன்மை அப்பழித்துரையின் மேலேற்றிக் கோணுதலின்றிப் பூணதுவாக' என்றார். சதுர் இழத்தல் -யாம் எவற்றையும் அறிய வல்லும் என்னும் தன் முனைப்பினை இழத்தல். சதுர் இழந்தன்றி உண்மையை அறியும் ஆசை நிகழாமையின் 'சதுரிழந்து அறிமால் கொண்டு' என்றார். அறிவு என் றது ஈறுகெட்டு நின்றது. அறிவு என்றது ஈண்டு தத்துவ ஞானத்தினை. மால் - ஆசை ; வேட்கை. "மாறீர்க்கு மவள்மார்பென் றெழுந்த சொன் னோவோமோ" (கலி 6 8 : 13) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க. 'மாயோன் மேக மயக்கம் வேட்கை, மாலென் றுரைப்பர்" எனப் பிங் கலத்தையில் (10:931) வருதலுங் காண்க. சாருங்கதி என்றது தத்துவ ஞானத்தினால் (மெய்யறிவினால்) அடைதற்குரிய விடுபேற்றினை. முன்னொரு போதுங் கண்டிராமையின் 'பரமாதிசயமாக' என்றார். 73-87.கற்றா மனம் என கதறியும் பதறியும் - கன்றை ஈன்று அண்ணிய பசுவின் மனம்போலக் கதறுதலைச் செய்தும் பதறுதலைச் செய் தும், மற்று ஓர் தெய்வம் கனவிலும் நிலையாது - வேறு ஒரு தெய்வத்தைக் கனவினிடத்தும் நினையாமல், அரு பரத்து ஒருவன்-அதற்கரிய மேன் மையையுடைய முதல்வனாகிய நீ. குருபரன் ஆகி அவனியில் வந்து அரு ளிய பெருமை - ஆசாரியமுதல்வனாய் இந்நிலவுவகத்தில் வலியவந்து எழுந் போற்றித் திருவகவல் 145 தருளியிருந்து அருளால் உபதேசஞ் செய்த பெருந்தன்மையை, சிறுமை என்று இகழாது- எளிதிற் கிடைத்தமை பற்றி அதனைப் புல்லிதாக நினைத்து இகழ்ந்து விடாமே திரு அடி இணையை - அவ்வாசாரிய முதல்வனது திரு வடிகள் இரண்டினையும், பிறி வினை அறியா நிறலது போல முன்பின் ஆகி - உருவினை விட்டு நீங்கும் செயலினை அறியாத நிழலைப்போலப் பிரி யாது முன்னாகவோ பின்னாகவோ தொடர்ந்து, முனியாது அத்திசை இடையூறுகளாற் பிரிய நேரினும் அதனால் வெறுப்புற்று மனத்தளர்ச்சி அடையாமல் குருபரன் எழுந்தருளிய திசையை நோக்கி வணங்கி, என்பு நைந்து உருகி நெக்கு நெக்கு ஏங்கி - வன்பொருளாகிய எலும்பும் தன் வன்மை கெட்டு உருகி மனம் நெகிழ்ந்து நெகிழ்ந்து இரங்கி, அன்பு எனும் ஆறு கரையது புரள - அன்பு என்று சிறப்பித்துச் சொல்லப்படும் ஆறு பெருகி இருகரையும் புரண்டு ஓட, நல் புலன் ஒன்றி - நல்ல புலன்கள் ஐந்தும் ஒன்றுபட்டு, நாத என்று அரற்றி - தலைவனே என்று வாய்விட்டுப் புலம்பி, உரை தடுமாறி - சொற்கள் குளறி, உரோமம் சிலிர்ப்ப - மயீர்சிலிர்ப்ப. கர மலர் மொட்டித்து - மலர்போன்ற கரங்களைக் குவித்து, இருதயம் மலர - அகத்தாமரையாகிய நெஞ்சம் விரிய,கண் களி கூர-கண்கள் களிப்பு மிக, நுண் துளி அரும்ப - அதனால் கண்களில் நுண்ணிய ஆனந்த நீர்த்துளிகள் தோன்ற, சாயா அன்பினை நாடொறும் தழைப்பவர் - கெடாத அன்பினை நாடோனும் தழைப்பிப்பவர்களை, தாயே ஆகி வளர்த்தனை போற்றி -தாயைப் போல நின்று வளர்த்தோயோ நினக்கு வணக்கம். கன்று + ஆ = கற்று. ''மெல்லொற்றுத் தொடர்மொழி மெல்லொற் றெல்லாம், வல்லொற் றிறுதி கிளையொற் ருகும் " (தொல். எழுத்து 414) என்பது விதி. கற்ற மனமெனக் கதறியும் பதறியும் என்றது ஈன்றண் ணிய பசு தன் கன்றைப் பிரிந்தவிடத்துக் கதறியழைத்தலும், அதற்கு ஏதும் இடையூறு எய்தியதோவென மனம் பதறுதலும் போல மெய்யன் பர்களும் இறைவன் காட்சி நீங்கியபோது கதறியழைத்தலும் அக்காட்சி எய்துமோவென மனம் பதறுதலும் உடையராவர் என்பதாம். 'கற்று வின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே' (புலம்பல் 3) என அடி கள் மற்றோரிடத்துக் கூறுதலும் காண்க. மெய்யன்பர்களின் மனம் முழுமுதற் கடவுளையன்றிப் பிறிதொரு தெய்வத்தையும் நினையாமையின் 'மற்றோர் தெய்வங் கனவிலும் நினையாது' என்றார். "உள்ளேன் பிறதெய்வம் உன்னை யல்லா தெங்கள் உத்தமனே " "மற்றறியேன் பிறதெய்வம் ," ஏசறவுச் S 19 சத2 என அடிகள் பிறாண்டு கூறுதலும் காண்க. நினையாது (74) அல்பினைத் தழைப்பவர் (86) என முடிக்க. இனி,நினையாது (74) அருளிய பெருமை (76) எனக் கூட்டிப் பிறதெய்வங்களை நினையாதபடி அருள்செய்த பெருமை எனவும் உரைக்கலாம். "யான் பிற வேத்தாவகை யிரங்கித், தன் கடைக்
144 திருவாசக ஆராய்ச்சியுரை குலமாய் மெய் விதிர்த்து ' என்றார் . விதிர்த்தல் -நடுங்குதல் . அகிர்வுர் வும் விதிர்ப்பும் நடுக்கஞ் செய்யும் ' ' என்பது தொல்காப்பியம் . சகம் - உலகம் . ஈண்டு உலகினரை உணர்த்தி நிற்றலின் ஆகுபெயர் . பேய் என்றது பேய்க்கோட்பட்டாரை பேய்க்கோட்பட்டவர் தம்வயமின்றி அப்பேயின் வயத்தராய் நிற்றல்போலத் தெவ்வங் கொள்கையில் நிலையே றுடையவர் அதனின்றும் பிறழாது நிற்றலின் அவரைக் காணுநர் இகழ்ந்து பரிகசித்தலின் ' சகம்பே யென்று தம்மைச் சிரிப்ப ' என்றார் . பேயர் என்பது பேய் என ஈறுகெட்டு நின்றது . இனி அறியாமையுடை யாரைப் பேயர் என வழங்கும் உலக வழக்குப் பற்றி வந்ததெனினுமமையும் . பேயனேன் . என் சொல்லிப் பேசுகேனே சத 23 . ' உன்னடி பணியாப் பேயனாகிலும் ' செத் 7 . பேயேன துள்ளப் பிழைபொறுக்கும் பெருமையனை ' கேரத் தும்பி 12 என அடிகள் பிறாண்டும் கூறுதல் காண்க . நாணது ஒழிந்து என்றது சகம் பேய் என்று தம்மைச் சிரித்தவினால் நாணமடையாது என்றவாறு . நாடவர் பழித்துரை ( 69 ) கோணுதல் இன்றிப் பூணதுவாக ( 70 ) என மாற்றிக் கூட்டி நாட்டவர்களாற் பழித் துக் கூறப்படும் சொற்கள் தாம் வெறுப்பின்றி ஏற்றுக் கொள்ளப்படுத் லால் அணிகலம் போல அமைய என்றவாறு . பழித்துரையை ஏற்றுக் கொள்பவரின் தன்மை அப்பழித்துரையின் மேலேற்றிக் கோணுதலின்றிப் பூணதுவாக ' என்றார் . சதுர் இழத்தல் -யாம் எவற்றையும் அறிய வல்லும் என்னும் தன் முனைப்பினை இழத்தல் . சதுர் இழந்தன்றி உண்மையை அறியும் ஆசை நிகழாமையின் ' சதுரிழந்து அறிமால் கொண்டு ' என்றார் . அறிவு என் றது ஈறுகெட்டு நின்றது . அறிவு என்றது ஈண்டு தத்துவ ஞானத்தினை . மால் - ஆசை ; வேட்கை . மாறீர்க்கு மவள்மார்பென் றெழுந்த சொன் னோவோமோ ( கலி 6 8 : 13 ) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க . ' மாயோன் மேக மயக்கம் வேட்கை மாலென் றுரைப்பர் எனப் பிங் கலத்தையில் ( 10 : 931 ) வருதலுங் காண்க . சாருங்கதி என்றது தத்துவ ஞானத்தினால் ( மெய்யறிவினால் ) அடைதற்குரிய விடுபேற்றினை . முன்னொரு போதுங் கண்டிராமையின் ' பரமாதிசயமாக ' என்றார் . 73-87.கற்றா மனம் என கதறியும் பதறியும் - கன்றை ஈன்று அண்ணிய பசுவின் மனம்போலக் கதறுதலைச் செய்தும் பதறுதலைச் செய் தும் மற்று ஓர் தெய்வம் கனவிலும் நிலையாது - வேறு ஒரு தெய்வத்தைக் கனவினிடத்தும் நினையாமல் அரு பரத்து ஒருவன் - அதற்கரிய மேன் மையையுடைய முதல்வனாகிய நீ . குருபரன் ஆகி அவனியில் வந்து அரு ளிய பெருமை - ஆசாரியமுதல்வனாய் இந்நிலவுவகத்தில் வலியவந்து எழுந் போற்றித் திருவகவல் 145 தருளியிருந்து அருளால் உபதேசஞ் செய்த பெருந்தன்மையை சிறுமை என்று இகழாது- எளிதிற் கிடைத்தமை பற்றி அதனைப் புல்லிதாக நினைத்து இகழ்ந்து விடாமே திரு அடி இணையை - அவ்வாசாரிய முதல்வனது திரு வடிகள் இரண்டினையும் பிறி வினை அறியா நிறலது போல முன்பின் ஆகி - உருவினை விட்டு நீங்கும் செயலினை அறியாத நிழலைப்போலப் பிரி யாது முன்னாகவோ பின்னாகவோ தொடர்ந்து முனியாது அத்திசை இடையூறுகளாற் பிரிய நேரினும் அதனால் வெறுப்புற்று மனத்தளர்ச்சி அடையாமல் குருபரன் எழுந்தருளிய திசையை நோக்கி வணங்கி என்பு நைந்து உருகி நெக்கு நெக்கு ஏங்கி - வன்பொருளாகிய எலும்பும் தன் வன்மை கெட்டு உருகி மனம் நெகிழ்ந்து நெகிழ்ந்து இரங்கி அன்பு எனும் ஆறு கரையது புரள - அன்பு என்று சிறப்பித்துச் சொல்லப்படும் ஆறு பெருகி இருகரையும் புரண்டு ஓட நல் புலன் ஒன்றி - நல்ல புலன்கள் ஐந்தும் ஒன்றுபட்டு நாத என்று அரற்றி - தலைவனே என்று வாய்விட்டுப் புலம்பி உரை தடுமாறி - சொற்கள் குளறி உரோமம் சிலிர்ப்ப - மயீர்சிலிர்ப்ப . கர மலர் மொட்டித்து - மலர்போன்ற கரங்களைக் குவித்து இருதயம் மலர - அகத்தாமரையாகிய நெஞ்சம் விரிய கண் களி கூர - கண்கள் களிப்பு மிக நுண் துளி அரும்ப - அதனால் கண்களில் நுண்ணிய ஆனந்த நீர்த்துளிகள் தோன்ற சாயா அன்பினை நாடொறும் தழைப்பவர் - கெடாத அன்பினை நாடோனும் தழைப்பிப்பவர்களை தாயே ஆகி வளர்த்தனை போற்றி -தாயைப் போல நின்று வளர்த்தோயோ நினக்கு வணக்கம் . கன்று + = கற்று . ' ' மெல்லொற்றுத் தொடர்மொழி மெல்லொற் றெல்லாம் வல்லொற் றிறுதி கிளையொற் ருகும் ( தொல் . எழுத்து 414 ) என்பது விதி . கற்ற மனமெனக் கதறியும் பதறியும் என்றது ஈன்றண் ணிய பசு தன் கன்றைப் பிரிந்தவிடத்துக் கதறியழைத்தலும் அதற்கு ஏதும் இடையூறு எய்தியதோவென மனம் பதறுதலும் போல மெய்யன் பர்களும் இறைவன் காட்சி நீங்கியபோது கதறியழைத்தலும் அக்காட்சி எய்துமோவென மனம் பதறுதலும் உடையராவர் என்பதாம் . ' கற்று வின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே ' ( புலம்பல் 3 ) என அடி கள் மற்றோரிடத்துக் கூறுதலும் காண்க . மெய்யன்பர்களின் மனம் முழுமுதற் கடவுளையன்றிப் பிறிதொரு தெய்வத்தையும் நினையாமையின் ' மற்றோர் தெய்வங் கனவிலும் நினையாது ' என்றார் . உள்ளேன் பிறதெய்வம் உன்னை யல்லா தெங்கள் உத்தமனே மற்றறியேன் பிறதெய்வம் ஏசறவுச் S 19 சத 2 என அடிகள் பிறாண்டு கூறுதலும் காண்க . நினையாது ( 74 ) அல்பினைத் தழைப்பவர் ( 86 ) என முடிக்க . இனி நினையாது ( 74 ) அருளிய பெருமை ( 76 ) எனக் கூட்டிப் பிறதெய்வங்களை நினையாதபடி அருள்செய்த பெருமை எனவும் உரைக்கலாம் . யான் பிற வேத்தாவகை யிரங்கித் தன் கடைக்