திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

146 திருவாசக ஆராய்ச்சியுரை கண் வைத்த தண்டில்லைச் சங்கரன்' (298) எனத் திருக்கோவையாரி னும் வருதல் காண்க. ஓர் தெய்வம். ஒரு தெய்வம் என்பதன் விகாரம். கனவிலும் என்பதில் உம்மை எச்சவும்மை. திருமால் பிரமன் முதலிய தேவர்களாலும் அறிதற்கருமையும் உயர்வு முடைய ஒப்பற்ற முதல்வனாதலின் இறைவனை " அருபரத்தொருவன் என்றார். ''அரியயன் இந்திரன் வானோர்க் கரிய சிவன் '' (தெள் 7) என வருதலுங் காண்க பரம் - உயர்வு.குருபரனாகி அவளியில் வந்து அருளிய பெருமை என மாற்றிக் கூட்டுக சிவபெருமான் குரூபரனாகி அவனியில் எழுந்தருளி அருளியமை "இந்திரனும் மாலயனும் ஏனோரும் வானோரும், அந்தரமே நிற்கச் சிவனவனி வந்தருளி ஏந்தரமும் ஆட் கொண்டு" (அம்மானை 3) " அரையாடு நாக மசைத்தபிரான் அவனியின் மேல்.. வந்தாண்ட திறம் (தெள்)ே ''அவனியிற் புகுந்தெமை யாட்கொள்ள வல்லாய்'' (திருப்பள்ளி 10) எனப் பிருண்டும் வருவனவற்றாலுமறிக. "4 கருணை திருவுருவாய்க் காசினிக்கே தோன்றிக் குருபர னென்றோர் திருப்பெயர் கொண்டு '' கந்தர் கவி 24. என வருதலுங் காண்க. அவநி - நிலம்; வடசொல். குரு ஆசாரியன். பிறிவினை - பிறிதாகும் செயல். உருவினை விட்டு நிழல் நீங்குதல் எக் காலத்துமின்மையின் "பிறிவிளை யறியா நிழல்' என்றார் " நிழல் தன்னை வீயா தடியுறைந் தற்று" (குறள் 208) என்றார் திருவள்ளுவரும். முனி யாது - வெறாது. அத்திசை என்றது குருபரனாகி எழுந்தருளி யிருந்த திசையை அத் திசை நோக்கி வணங்கி எனச் சில சொற்கள் வருவித்து முடிக்க. இடை விடாது நிகழும் தன்மையும் மிகுதியும் பற்றி 'அன்பெனும் ஆறு' என் றார். புவன் என்றது பொறிவழிச் செல்லும் ஐந்தறிவுகளை. அவை ஒன்று படுதலின் ஒன்றி என்றார். 'ஐந்துபே ரறிவுங் கண்களே அளப்பருங் கரணங்கள் நான்குஞ் சிந்தையே யாக" எனப் பெரியபுரா ணத்து (தடுத்தாட் 106 வருதலுங் காண்க. அரற்றுதல் - வாய்விட்டுப் புலம்புதல், மொட்டித்தல் - குவித்தல். தாமரை மலர் கூம்புதல்போல இருகரங்களையும் சேரக் குவித்தலின் 'கரமலர் மொட்டித்து' என்றார். கொள்ள கண்களி கூர நுண்டுளி யரும்ப என்றது குருபரனை மனத்தின்கண் நினைத்தவாற் கண்கள் களிப்பு மிகவும் நுண்ணிய ஆனந்தத் துளிகள் தோன்றவும் என்றவாறு. தழைப்பவர் - பிறவினை விகுதிதொக்க வீனை யாலணையும் பெயர். அதன் ஈற்றிலுள்ள ஐயுருபு தொக்கது. எனைப்பல சூழவும் (5B) என்னும் வினைக்குச் செயப்படுபொருளாகத் தழைப்பவர் (80) என்பதைக் குறிப்பதாகிய தம்மை என்னும் சொல் முன்னர் விரித்துக் கூறப்பட்டது. எனவே, பெருமாயை தம்மைச் சூழ போற்றித் திருவகவல் 147 வும் (58) சலியா (59) மெழுகதுபோல (00) உளம் உருகி அழுது கம் பித்த (61) ஆடியும் அறிையும் பாடியும் பரவியும் (62) கொண்டது விடாதெனும் (64) படியே யாகி (நே) பசுமரத்தாணி அறைந்தாற் போலக் 165. கசிவது பெருகி மறுகி (68, அகங்குழைந்து அணுகுலமாய் மெய் விதிர்த்துச் (08) சகம் தம்மைச் சிரிப்ப 68) காணது ஒழிந்து நாடவர் பழித்துரை (E9) கோணுதலின்றிப் பூணதுவாகக் கொண்டு (70, சதுர் இழந்து அறிமால் கொண்டு சாருங் (71) கதி அதிசயமாகக் (72) கதறியும் பதறியும் (73) கனவிலும் நினையாது (74) ஒருவன் அவனியில் வந்து அருளிய பெருமையைச் (70) சிறுமை என்று இகழாது (77) முனியாது (79) உருகி நெக்கு ஏங்கி (80) ஒன்றி அரற்றி 82) உரைதடுமாறி (83) மொட்டித்து மலரக் (84) கூர அரும்பத் (85) தழைப்பவர் (86) என வினை முடிபு செய்க. தழைப்பவர் தாயேயாகி என இயல்பாகப் புணர்ந்தமை, 'உயிரீயா கிய வுயர்திணைப் பெயரும், புள்ளி யீறுதி யுயர்திணைப் பெயரும், எல்லா வழியும் இயல்பென மொழிப (தொல் எழுத்து 153) என்னும் விதி பற்றியாகும். 8893. மெய் தரு வேதியன் ஆசி - மெய்ப்பொருள் உணர்ச்சியி னைத் தரும் மறையோனாகி வந்து, வினை கெட - சஞ்சிதம் ஆகாமியம் என் னும் வினைகள் நெடும்படி. கைதர வல்ல கடவுள் போற்றி - உதவிசெய்ய வல்லவனாகிய கடவுளே வினக்கு வணக்கம்; ஆடகம் மதுரை அரசே போற்றி - பொன் வண்ணமாய் விளங்கும் மதுரைமாநகருக்கு அரசனே நினக்கு வணக்கம்; கூடல் இலங்கு குருமணி போற்றி - நான்மாடக் கூடலாகிய மதுரைத் திருக்கோயிலில் விளங்காகின்ற நிறம்பொருந்திய மாணிக்கமே நினக்கு வணக்கம்: தென் தில்லை மன்றினுள் ஆடி போற்றி - அழகிய தில்லைச் சிற்றம்பலத்தின் கண் ஆனந்தக் கூத்தாடுபவனே நினக்கு வணக்கம்: இன்று எனக்கு ஆர் அமுது ஆனாய் போற்றி - இந்நாளில் அடியேனுக்கு அரிய அமுதமான வனே நினக்கு வணக்கம். மெய்யென்றது மெய்ப்பொருளுணர்ச்சியினை. இறைவன் மறையோன் வடிவில் வந்து மெய்ப்பொருளுணர்ச்சியினைத் தந்தருளியமையின் "மெய் தரு வேதியனாகி என்றார். "அறைகூவி யாட்கொண்டருளி. மறையோர் கோலங் காட்டி யருளலும்" (திருவண்ட 148 - 9) *'உருநா மறியவோர் அந்தணனா யாண்டு கொண்டான் '' (தென் 1) "அந்தண னாவதுங் காட்டி வந் தாண்டாய்'' (திருப்பள்ளி 8) எனப் பிருண்டு வருவனவும் காண்க. வினை, பிராராத்தம் சஞ்சிதம் ஆகாமியம் என மூன்றாகவும், வினை கெட என்பதற்குச் சஞ்சிதம் ஆகாமியம் என்னும் வினைகள் கெடும்படி எனக் கூறியது உடர்பு உள்ளவரையும் அனுபவித்தற்குரிய பிராரர்த்த வினையைத் தவரத்தமையாலாகும். அங்ஙமைன் றி இம்மூவகை வினைகளை யும் உடனே அழித்து வீடுபேறு அளித்தலுமுண்டு. அது பெற்றான் சாம்பானுக்கு உமாபதிவொசாரியர் செய்த சத்தியோ நிருவாண தீக்கை
146 திருவாசக ஆராய்ச்சியுரை கண் வைத்த தண்டில்லைச் சங்கரன் ' ( 298 ) எனத் திருக்கோவையாரி னும் வருதல் காண்க . ஓர் தெய்வம் . ஒரு தெய்வம் என்பதன் விகாரம் . கனவிலும் என்பதில் உம்மை எச்சவும்மை . திருமால் பிரமன் முதலிய தேவர்களாலும் அறிதற்கருமையும் உயர்வு முடைய ஒப்பற்ற முதல்வனாதலின் இறைவனை அருபரத்தொருவன் என்றார் . ' ' அரியயன் இந்திரன் வானோர்க் கரிய சிவன் ' ' ( தெள் 7 ) என வருதலுங் காண்க பரம் - உயர்வு.குருபரனாகி அவளியில் வந்து அருளிய பெருமை என மாற்றிக் கூட்டுக சிவபெருமான் குரூபரனாகி அவனியில் எழுந்தருளி அருளியமை இந்திரனும் மாலயனும் ஏனோரும் வானோரும் அந்தரமே நிற்கச் சிவனவனி வந்தருளி ஏந்தரமும் ஆட் கொண்டு ( அம்மானை 3 ) அரையாடு நாக மசைத்தபிரான் அவனியின் மேல் .. வந்தாண்ட திறம் ( தெள் )ே ' ' அவனியிற் புகுந்தெமை யாட்கொள்ள வல்லாய் ' ' ( திருப்பள்ளி 10 ) எனப் பிருண்டும் வருவனவற்றாலுமறிக . 4 கருணை திருவுருவாய்க் காசினிக்கே தோன்றிக் குருபர னென்றோர் திருப்பெயர் கொண்டு ' ' கந்தர் கவி 24 . என வருதலுங் காண்க . அவநி - நிலம் ; வடசொல் . குரு ஆசாரியன் . பிறிவினை - பிறிதாகும் செயல் . உருவினை விட்டு நிழல் நீங்குதல் எக் காலத்துமின்மையின் பிறிவிளை யறியா நிழல் ' என்றார் நிழல் தன்னை வீயா தடியுறைந் தற்று ( குறள் 208 ) என்றார் திருவள்ளுவரும் . முனி யாது - வெறாது . அத்திசை என்றது குருபரனாகி எழுந்தருளி யிருந்த திசையை அத் திசை நோக்கி வணங்கி எனச் சில சொற்கள் வருவித்து முடிக்க . இடை விடாது நிகழும் தன்மையும் மிகுதியும் பற்றி ' அன்பெனும் ஆறு ' என் றார் . புவன் என்றது பொறிவழிச் செல்லும் ஐந்தறிவுகளை . அவை ஒன்று படுதலின் ஒன்றி என்றார் . ' ஐந்துபே ரறிவுங் கண்களே அளப்பருங் கரணங்கள் நான்குஞ் சிந்தையே யாக எனப் பெரியபுரா ணத்து ( தடுத்தாட் 106 வருதலுங் காண்க . அரற்றுதல் - வாய்விட்டுப் புலம்புதல் மொட்டித்தல் - குவித்தல் . தாமரை மலர் கூம்புதல்போல இருகரங்களையும் சேரக் குவித்தலின் ' கரமலர் மொட்டித்து ' என்றார் . கொள்ள கண்களி கூர நுண்டுளி யரும்ப என்றது குருபரனை மனத்தின்கண் நினைத்தவாற் கண்கள் களிப்பு மிகவும் நுண்ணிய ஆனந்தத் துளிகள் தோன்றவும் என்றவாறு . தழைப்பவர் - பிறவினை விகுதிதொக்க வீனை யாலணையும் பெயர் . அதன் ஈற்றிலுள்ள ஐயுருபு தொக்கது . எனைப்பல சூழவும் ( 5B ) என்னும் வினைக்குச் செயப்படுபொருளாகத் தழைப்பவர் ( 80 ) என்பதைக் குறிப்பதாகிய தம்மை என்னும் சொல் முன்னர் விரித்துக் கூறப்பட்டது . எனவே பெருமாயை தம்மைச் சூழ போற்றித் திருவகவல் 147 வும் ( 58 ) சலியா ( 59 ) மெழுகதுபோல ( 00 ) உளம் உருகி அழுது கம் பித்த ( 61 ) ஆடியும் அறிையும் பாடியும் பரவியும் ( 62 ) கொண்டது விடாதெனும் ( 64 ) படியே யாகி ( நே ) பசுமரத்தாணி அறைந்தாற் போலக் 165. கசிவது பெருகி மறுகி ( 68 அகங்குழைந்து அணுகுலமாய் மெய் விதிர்த்துச் ( 08 ) சகம் தம்மைச் சிரிப்ப 68 ) காணது ஒழிந்து நாடவர் பழித்துரை ( E9 ) கோணுதலின்றிப் பூணதுவாகக் கொண்டு ( 70 சதுர் இழந்து அறிமால் கொண்டு சாருங் ( 71 ) கதி அதிசயமாகக் ( 72 ) கதறியும் பதறியும் ( 73 ) கனவிலும் நினையாது ( 74 ) ஒருவன் அவனியில் வந்து அருளிய பெருமையைச் ( 70 ) சிறுமை என்று இகழாது ( 77 ) முனியாது ( 79 ) உருகி நெக்கு ஏங்கி ( 80 ) ஒன்றி அரற்றி 82 ) உரைதடுமாறி ( 83 ) மொட்டித்து மலரக் ( 84 ) கூர அரும்பத் ( 85 ) தழைப்பவர் ( 86 ) என வினை முடிபு செய்க . தழைப்பவர் தாயேயாகி என இயல்பாகப் புணர்ந்தமை ' உயிரீயா கிய வுயர்திணைப் பெயரும் புள்ளி யீறுதி யுயர்திணைப் பெயரும் எல்லா வழியும் இயல்பென மொழிப ( தொல் எழுத்து 153 ) என்னும் விதி பற்றியாகும் . 8893. மெய் தரு வேதியன் ஆசி - மெய்ப்பொருள் உணர்ச்சியி னைத் தரும் மறையோனாகி வந்து வினை கெட - சஞ்சிதம் ஆகாமியம் என் னும் வினைகள் நெடும்படி . கைதர வல்ல கடவுள் போற்றி - உதவிசெய்ய வல்லவனாகிய கடவுளே வினக்கு வணக்கம் ; ஆடகம் மதுரை அரசே போற்றி - பொன் வண்ணமாய் விளங்கும் மதுரைமாநகருக்கு அரசனே நினக்கு வணக்கம் ; கூடல் இலங்கு குருமணி போற்றி - நான்மாடக் கூடலாகிய மதுரைத் திருக்கோயிலில் விளங்காகின்ற நிறம்பொருந்திய மாணிக்கமே நினக்கு வணக்கம் : தென் தில்லை மன்றினுள் ஆடி போற்றி - அழகிய தில்லைச் சிற்றம்பலத்தின் கண் ஆனந்தக் கூத்தாடுபவனே நினக்கு வணக்கம் : இன்று எனக்கு ஆர் அமுது ஆனாய் போற்றி - இந்நாளில் அடியேனுக்கு அரிய அமுதமான வனே நினக்கு வணக்கம் . மெய்யென்றது மெய்ப்பொருளுணர்ச்சியினை . இறைவன் மறையோன் வடிவில் வந்து மெய்ப்பொருளுணர்ச்சியினைத் தந்தருளியமையின் மெய் தரு வேதியனாகி என்றார் . அறைகூவி யாட்கொண்டருளி . மறையோர் கோலங் காட்டி யருளலும் ( திருவண்ட 148 - 9 ) * ' உருநா மறியவோர் அந்தணனா யாண்டு கொண்டான் ' ' ( தென் 1 ) அந்தண னாவதுங் காட்டி வந் தாண்டாய் ' ' ( திருப்பள்ளி 8 ) எனப் பிருண்டு வருவனவும் காண்க . வினை பிராராத்தம் சஞ்சிதம் ஆகாமியம் என மூன்றாகவும் வினை கெட என்பதற்குச் சஞ்சிதம் ஆகாமியம் என்னும் வினைகள் கெடும்படி எனக் கூறியது உடர்பு உள்ளவரையும் அனுபவித்தற்குரிய பிராரர்த்த வினையைத் தவரத்தமையாலாகும் . அங்ஙமைன் றி இம்மூவகை வினைகளை யும் உடனே அழித்து வீடுபேறு அளித்தலுமுண்டு . அது பெற்றான் சாம்பானுக்கு உமாபதிவொசாரியர் செய்த சத்தியோ நிருவாண தீக்கை