திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

152 திருவாசக ஆராய்ச்சியுரை களின் உருவினைத் தன்னிடத்துக் காட்டும் தன்மையும் உடைமையின் அத்தன்மைகளையுடைய இறைவனுக்கு உவமையாயிற்று. ''முத்திற் றிர களும் பளிங்கினிற் சோதியு மொய்பவளத், தொத்தினை ரேய்க்கும் படியாய்"" என அப்பரடிகள் (தே 100:2) அருளியமையுங் காண்க. மதிமா சூர வொளிகால் பளிங்கின் பூட்சித் தென்ன - (50:14-5) என ஞானமிர்த்து வருதலுங் காண்க. அரைசு, அரசு என்பதன் போலி. " அவிர்சடை வானத் தடலரைசே!" * அரைசே... விரைசேர் முடியாய்" (நீத் 38, 37) "அரைசே பொன் னம்பலத்தாடு மமுதே" (கோயின் மூத்த 5) எனப் பிறாண்டும் வருவன காண்க. இறைவன் அமிழ்தம் போன்றவனாதலின் 'அமுதே' என்றார். சரணம் என்றது ஈண்டு சரணம் புகுதற்குரிய திருவடியை உணர்த் தியது. இது வடசொல். பக்குவான்மாக்களுக்கு விடுபேறாகிய அரும்பயனை அளிக்கும் நயம்பற்றி 'விரைசேர் சரண்' எனச் சிறப்பிக்கப்பட்டது. ''உன் விரையார் கழற்கு" (சத1) என அடிகள் பிறாண்டு கூறுதலுங் காண்க, 106 -- 111. வேதி போற்றி -ஆணவமலத்தால் மறைப்புண்டு கிடக் கும் உயிர்களை அதன் மறைப்பினின்றும் நீக்கி உண்மை நிலையினை அடை யச் செய்பவனே நினக்கு வணக்கம்; விமலா போற்றி - இயல்பாகவே மலங்களினீங்கினவனே நினக்கு வணக்கம்: ஆதி போற்றி - ஆதி சத்தி யோடு கூடினவனே நினக்கு வணக்கம்; அறிவே போற்றி - அறிவுருவான வனே நினக்கு வணக்கம்; கதியே போற்றி - வீடு பேற்றினை அருள்ப வனே நினக்கு வணக்கம்: கனியே போற்றிகனியின் சுவை போன்ற வனே நினக்கு வணக்கம்; நதி சேர் செஞ்சடை நம்பா போற்றி - கங்கை யாறு பொருந்திய சிவந்த சடையினையுடையவனே நினக்கு வணக்கம்; உடையாய் போற்றி - எப்பொருள்களையும் உடையவனே நினக்கு வணக் கம்: உணர்வே போற்றி - எவற்றையும் அறிபவனே நினக்கு வணக்கம்: கடையேன் அடிமை கண்டாய் போற்றி - கீழ்ப்பட்டவனாகிய எனது அடி மைத் தொண்டினையும் ஒருபொருளாக ஏற்றுக் கடைக்கணித்தவனே நினக்கு வணக்கம். வேதி - வேதிப்பவன்; மாறுபடுத்துபவன். உயிர்களை அவற்றின் தன்மையினின்றும் நீக்கித் தன் தன்மையடையச் செய்தலின் இறைவனை 'வேதி' என்றார். "சித்தமல மறுவித்துச் சிவமாக்கி யெனையாண்ட அத் தன்" (அச்சோப் 1) என வருதலுங் காண்க. விமலன் - மலங்களினீங்கினவன்: மாசற்றவன். இறைவன் ஆதிசத்தி யோடு இயைந்தவனாதலின் ஆதி' என்றார். ஆதிபகவன் முதற்றே யுலகு' என்றார் திருவள்ளுவரும், இனி ஆதி என்பதற்கு எப்பொருட் கும் முதலேயெனினுமாம். போற்றித் திருவகவல் 153 என்றார். இறைவன் போறிஞனும் அறிவுருவானவறுமாதலின் அறிவே' "ஞானந்தா னுருவாகிய நாயகன்' எனக் கந்தபுராணந்து (சூரனமைச்சியல் 128) வருதலும் காண்க. கதி - வீடுபேறு. கதியைக் கொடுப்பவணைக் 'கதியே' என்றார். மண்பொருந்தி வாழ்பவர்க்கும் மாதீர்த்த வேதியர்க்கும், விண்பொருந்து தேவர்க்கும் வீடுபேறாய் நின்றானை என அப்பரடிகள் (தே 12:5) அருளியமையுங் காண்க, இறைவன் கனிபோ லினியனாதலின் 'கனியே. என்றார். ''கனியினும்... இனியன் தன்னடைந் தார்க்கிடைமருதனே" நாவு 128:10. ஈசனெனுங்கனி, இனிது சாலவும் ஏசற்றவர்கட்கே '' நாவு 205:7. 'கற்றவர்களுண்ணுங் கனியே போற்றி காவு 240 : 1. "கற்றுள வான்களியாய கண்ணுதலை', சுந்51:0. கண்ணுதலைக் கனியை' சுங் 8 46. எனத் தேவாரத்து வருவனவுங் காண்க. முதலாயினவற்றை. கனி என்றது தேமாங்கனி " 157 3. ஆமாத்தூ ரரனே யென்றழைத்தலும் தேமாத் தீங்கனிபோலத் தித்திக்குமே என அப்பாடிகள் அருளியமையுங் காண்க. கதியே போற்றி கனியே போற்றி என்பது 'கற்றவர்களுண்ணுங் கனியே போற்றி கழலடைந்தார் செல்லுங் கதியே போற்றி" எனத் தேவாரத்தும் (நாவு 2461) வரு தல் காண்க. நதிசேர் செஞ்சடை நம்பன் என்றது பகீரதன் பொருட்டுப் பெருக்கு கெடுத்துவந்த ஆகாயகங்கையைச் சடையின்கண் ஏற்று அதன் செருக்கை அடக்கிய எம்பெருமான் என்றவாறு. பகீரதன் தன் முன்னோர்கள் நற்கதியடையும் பொருட்டு ஆகாய கங் கையைப் பூமியிற் கொணரவேண்டி இறைவனை நோக்கித் தவஞ்செய்ய இறைவனருளாற் பலமுகமாகப் பெருக்கெடுத்துவந்த கங்கை தரையில் விழுந்து அதனைச் சிதையாமைப் பொருட்டு இறைவன் அதனைச் செஞ் சடையிற்றாங்கித் தரையில் இறியவிட்டனன் என்பது வரலாறு. மையறு மனத்த னுாய பகீரதன் வரங்கள் வேண்ட ஐயமி லமர ரேத்த வாயிர முகம தாகி வையக நெளியப் பாய்வான் வந்திழி கங்கை யென்னுன் தையலைச் சடையி லேற்றர் சாய்க்காடு மேவி னாரே" (85:7) எனத் திருதாவுக்கரசு சுவாமிகள் தேவாரத்து வருதலுங் காண்க. செஞ் சடை - சிலந்த சடை. ''கங்கைநீர் தங்கு செஞ்சடையாய்'' (அருட் 9) என வருதலுங் காண்க
152 திருவாசக ஆராய்ச்சியுரை களின் உருவினைத் தன்னிடத்துக் காட்டும் தன்மையும் உடைமையின் அத்தன்மைகளையுடைய இறைவனுக்கு உவமையாயிற்று . ' ' முத்திற் றிர களும் பளிங்கினிற் சோதியு மொய்பவளத் தொத்தினை ரேய்க்கும் படியாய் என அப்பரடிகள் ( தே 100 : 2 ) அருளியமையுங் காண்க . மதிமா சூர வொளிகால் பளிங்கின் பூட்சித் தென்ன - ( 50 : 14-5 ) என ஞானமிர்த்து வருதலுங் காண்க . அரைசு அரசு என்பதன் போலி . அவிர்சடை வானத் தடலரைசே ! * அரைசே ... விரைசேர் முடியாய் ( நீத் 38 37 ) அரைசே பொன் னம்பலத்தாடு மமுதே ( கோயின் மூத்த 5 ) எனப் பிறாண்டும் வருவன காண்க . இறைவன் அமிழ்தம் போன்றவனாதலின் ' அமுதே ' என்றார் . சரணம் என்றது ஈண்டு சரணம் புகுதற்குரிய திருவடியை உணர்த் தியது . இது வடசொல் . பக்குவான்மாக்களுக்கு விடுபேறாகிய அரும்பயனை அளிக்கும் நயம்பற்றி ' விரைசேர் சரண் ' எனச் சிறப்பிக்கப்பட்டது . ' ' உன் விரையார் கழற்கு ( சத 1 ) என அடிகள் பிறாண்டு கூறுதலுங் காண்க 106 -- 111. வேதி போற்றி -ஆணவமலத்தால் மறைப்புண்டு கிடக் கும் உயிர்களை அதன் மறைப்பினின்றும் நீக்கி உண்மை நிலையினை அடை யச் செய்பவனே நினக்கு வணக்கம் ; விமலா போற்றி - இயல்பாகவே மலங்களினீங்கினவனே நினக்கு வணக்கம் : ஆதி போற்றி - ஆதி சத்தி யோடு கூடினவனே நினக்கு வணக்கம் ; அறிவே போற்றி - அறிவுருவான வனே நினக்கு வணக்கம் ; கதியே போற்றி - வீடு பேற்றினை அருள்ப வனே நினக்கு வணக்கம் : கனியே போற்றிகனியின் சுவை போன்ற வனே நினக்கு வணக்கம் ; நதி சேர் செஞ்சடை நம்பா போற்றி - கங்கை யாறு பொருந்திய சிவந்த சடையினையுடையவனே நினக்கு வணக்கம் ; உடையாய் போற்றி - எப்பொருள்களையும் உடையவனே நினக்கு வணக் கம் : உணர்வே போற்றி - எவற்றையும் அறிபவனே நினக்கு வணக்கம் : கடையேன் அடிமை கண்டாய் போற்றி - கீழ்ப்பட்டவனாகிய எனது அடி மைத் தொண்டினையும் ஒருபொருளாக ஏற்றுக் கடைக்கணித்தவனே நினக்கு வணக்கம் . வேதி - வேதிப்பவன் ; மாறுபடுத்துபவன் . உயிர்களை அவற்றின் தன்மையினின்றும் நீக்கித் தன் தன்மையடையச் செய்தலின் இறைவனை ' வேதி ' என்றார் . சித்தமல மறுவித்துச் சிவமாக்கி யெனையாண்ட அத் தன் ( அச்சோப் 1 ) என வருதலுங் காண்க . விமலன் - மலங்களினீங்கினவன் : மாசற்றவன் . இறைவன் ஆதிசத்தி யோடு இயைந்தவனாதலின் ஆதி ' என்றார் . ஆதிபகவன் முதற்றே யுலகு ' என்றார் திருவள்ளுவரும் இனி ஆதி என்பதற்கு எப்பொருட் கும் முதலேயெனினுமாம் . போற்றித் திருவகவல் 153 என்றார் . இறைவன் போறிஞனும் அறிவுருவானவறுமாதலின் அறிவே ' ஞானந்தா னுருவாகிய நாயகன் ' எனக் கந்தபுராணந்து ( சூரனமைச்சியல் 128 ) வருதலும் காண்க . கதி - வீடுபேறு . கதியைக் கொடுப்பவணைக் ' கதியே ' என்றார் . மண்பொருந்தி வாழ்பவர்க்கும் மாதீர்த்த வேதியர்க்கும் விண்பொருந்து தேவர்க்கும் வீடுபேறாய் நின்றானை என அப்பரடிகள் ( தே 12 : 5 ) அருளியமையுங் காண்க இறைவன் கனிபோ லினியனாதலின் ' கனியே . என்றார் . ' ' கனியினும் ... இனியன் தன்னடைந் தார்க்கிடைமருதனே நாவு 128 : 10 . ஈசனெனுங்கனி இனிது சாலவும் ஏசற்றவர்கட்கே ' ' நாவு 205 : 7 . ' கற்றவர்களுண்ணுங் கனியே போற்றி காவு 240 : 1 . கற்றுள வான்களியாய கண்ணுதலை ' சுந் 51 : 0 . கண்ணுதலைக் கனியை ' சுங் 8 46 . எனத் தேவாரத்து வருவனவுங் காண்க . முதலாயினவற்றை . கனி என்றது தேமாங்கனி 157 3 . ஆமாத்தூ ரரனே யென்றழைத்தலும் தேமாத் தீங்கனிபோலத் தித்திக்குமே என அப்பாடிகள் அருளியமையுங் காண்க . கதியே போற்றி கனியே போற்றி என்பது ' கற்றவர்களுண்ணுங் கனியே போற்றி கழலடைந்தார் செல்லுங் கதியே போற்றி எனத் தேவாரத்தும் ( நாவு 2461 ) வரு தல் காண்க . நதிசேர் செஞ்சடை நம்பன் என்றது பகீரதன் பொருட்டுப் பெருக்கு கெடுத்துவந்த ஆகாயகங்கையைச் சடையின்கண் ஏற்று அதன் செருக்கை அடக்கிய எம்பெருமான் என்றவாறு . பகீரதன் தன் முன்னோர்கள் நற்கதியடையும் பொருட்டு ஆகாய கங் கையைப் பூமியிற் கொணரவேண்டி இறைவனை நோக்கித் தவஞ்செய்ய இறைவனருளாற் பலமுகமாகப் பெருக்கெடுத்துவந்த கங்கை தரையில் விழுந்து அதனைச் சிதையாமைப் பொருட்டு இறைவன் அதனைச் செஞ் சடையிற்றாங்கித் தரையில் இறியவிட்டனன் என்பது வரலாறு . மையறு மனத்த னுாய பகீரதன் வரங்கள் வேண்ட ஐயமி லமர ரேத்த வாயிர முகம தாகி வையக நெளியப் பாய்வான் வந்திழி கங்கை யென்னுன் தையலைச் சடையி லேற்றர் சாய்க்காடு மேவி னாரே ( 85 : 7 ) எனத் திருதாவுக்கரசு சுவாமிகள் தேவாரத்து வருதலுங் காண்க . செஞ் சடை - சிலந்த சடை . ' ' கங்கைநீர் தங்கு செஞ்சடையாய் ' ' ( அருட் 9 ) என வருதலுங் காண்க