திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

154 திருவாசக ஆராய்ச்சியுரை நம்பன் - சிவபெருமான். "நம்பன் பகவன்... எம்பிரான் பெயரே' எனப் பிங்கலந்தையில் வருதலும் காண்க இனி, எல்லாவுயிரும் விரும்பு தற்குரியோன் எனினுமாம். நம்பு மேவும் நசையாகும்மே என்பது தொல்காப்பியம் (உரி ). உணர்வே என்பதற்கு மெய்யுணர்வே எனினு கடையேனடிமை கண்டாய் என்பதற்கு கடைப்பட்டவனாகிய என்னை நினக்கு அடிமையாகச் செய்தவனே எனினுமாம். மாம். 112-117.ஐயா போற்றி -வழிபாட்டிற்குரியவனே நினக்கு வணக் கம்; அணுவே போற்றி - துகள்போல நுண்ணியனே நீனக்கு வணக்கம்; சைவா போற்றி - சைவாசாரியனே வீனக்கு வணக்கம்: தலைவா போற்றி - எவ்வகை மேம்பாட்டினர்க்கும் தலைவனே நினக்கு வணக்கம்: குறியே போற்றி - லிங்க வடிவினனே நினக்கு வணக்கம்; குணமே போற்றி. எண்குணமுடையவனே நிலக்கு வணக்கம்; நெறியே போற்றி - வீட்டு நெறியை அருள்பலனே நினக்கு வணக்கம்; நினைவே போற்றி தற்குரியவனே நினக்கு வணக்கம்; வானோர்க்கு அரிய மருந்தே போற்றி- தேவர்களுக்கும் கிடைத்தற்கரிய மருந்துபோல்பவனே நினக்கு வணக்கம்; ஏனோர்க்கு எனிய. இறைவா போற்றி - வானவரல்லராயினும் அன்பரான ஏனோர்க்கு எளிவந்தருளும் இறைவனே நினக்கு வணக்கம். ஐயன் - வழிபாட்டிற்குரியவன். பருப்பொருள்களுக்கெல்லாம் பருப் பொருளாயுள்ள இறைவனே நுண்பொருள்களுக்கெல்லாம் நுண்பொருளாயு மிருத்தலின் அணுவே' என்றார். அணு அணுவி லிறந்தாய்" (சத 25) என அடிகள் பிறண்டு அருளியமையுங் காண்க. " அணுவை "பரமாணு " அணுவாகி யாதியாய் நின்றான் கண்டாய்" எனத் தேவாரத்து (நாவு 214:1:240:6; 253:7) வருவனவுங் காண்க. அடிகள் " ஐயா நதனிற் சைவ னாகியும்" (கீர்த்தி 85 எனப் பிறிதோ ரிடத்து அருளுமாற்றல் சைவா என்பதற்கு ஈண்டுச் சைவாசாரியனே எனப் பொருளுரைக்கப்பட்டது. இனி, இறைவன் அநாதி சைவனாதலின் 'சைவா போற்றி' என்றர் எனினுமாம். "தழவிலங்கு திருவுருவச் சைவனே " (ஞான 307:7) "மான்மறி மருகொன்றேந்தும் சைவனே'' (நாவு 62: 4) எனத் தேவாரத்து வருவனவுங் காண்க. குணங்குறி கடந்த முழுமுதலிறைவன் அன்பர் வழிபாட்டின் பொருட் டுக் கன்மசாதரக்கியமாகிய சிவலிங்கவருவாக அமைந்தமையின் குறியே என்றார். குறி - விங்கம்; அடையாளம். தன்வயத்தனாதல், தூயவுடம்பினனாதல், இயற்கையுணர்வினனாதல். முற்றுமுணர்தல், இயல்பாகவே பாசங்களினீங்குதல், பேரருளுடைமை, முடிவிலாற்றலுடைமை, வரம்பிலின் பமுடைமை என்னும் எண்வகை இறை மைக் குணங்களை இயல்பாகவுடைமையின் 'குணமே' என்றார். எட்டுக் கொலாமவரீறில் பெருங்குணம்! "எட்டுவான் குணத்தீசன் தேவாரத்து (நாவு 18:8; 203:8) வருவனவுங் காண்க. எனத் F 155 போற்றித் திருவகவல் நெறி - வீட்டு நெறியைக் கூறும் நூல், "பொறிவாயி லைந்தவித்தான் பொய்தீ ரொழுக்க நெறி' (குறள் ) என்றார் திருவள்ளுவரும். வீட்டு நெறியைக் கூறும் நூலை அருள்பவனாதலின் 'நெறியே' என்றார். எக் காலத்தும் நினைத்தற்குரியவன் இறைவனாதலின் நினைவே என்றார். "நின்னும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினை, என்றும் சிவன்றாள் இனை" எனப் பிறரும் அருளியமை காண்க. இறைவன், அமுதுண்ட தேவர்களுக்கும் கிடைத்தற்கரிய வீடு பேற் அருளும் அருமருந்தாயிருத்தல்பற்றி 'வானோர்க்கரிய மருந்தே ஏனோர் எனப் பொதுவகையாற் கூறினும் அது மெய்யன்ப ''முக்கண துடையெந்தை, தன்னை யாவரும் அறிவ தற் கரியவன் எளியவன் அடியார்க்கு'' (அதிரய 3) "யாவராயினு மன்பரன்றி யறியொணா மலர்ச் சோதியான் (சென்னி 1) என அடிகள் பிறாண்டு அருளியமையுங் காண்க. என்றார். ரையே குறிக்கும். துணைவா 118-130. மூஏம் சுற்றமும் முரண் உறு நாகிடை - கின்னால் ஆட் கொள்ளப்பட்டவர்களது இருபத்தொரு தலைமுறையினரான சுற்றத்தவர் களும் ஒன்றற்கொன்று மாறுபட்ட துன்பத்தைத் தருகின்ற நரகங்களில், ஆழாமே அருள் அரசே போற்றி -ஆழ்ந்துபோகாமல் அருள்புரியும் அர சனே நினக்கு வணக்கம்; தோழா போற்றி - அன்புமிக்க அடியாரை நின்னோ டொத்தவராகக் கொண்டு அருள் செய்யும் தோழனே நினக்கு வணக்கம்: போற்றி - தன்னைத் தோழனாகப்பெற்ற அடியவர்க்கு எவ் விடத்தும் எக்காலத்தும் நீங்காத் துணையாயுள்ளவனே நினக்கு வணக்கம்; வாழ்வே போற்றி - அன்பர்க்கு இன்பவாழ்க்கையை அருள்பவனே நினக்கு வணக்கம்: என் வைப்பே போற்றி - எனக்குக் கிடைத்த புதை பொருள் போன்றவனே நினக்கு வணக்கம்: முத்தா போற்றி - இயல்பாகவே பாசங் களினீங்கினவனே நினக்கு வணக்கம்: முதல்வா போற்றி - எல்லாவற் றிற்கும் முதவாயுள்ளவனே நினக்கு வணக்கம்; அத்தா போற்றி-எவ் வுயிர்க்கும் தந்தையே நினக்கு வணக்கம்; அரனே போற்றி - மும்மலங் களையும் அழிப்பவனே நினக்கு வணக்கம்; உரை உணர்வு இறந்த ஒருவ போற்றி - வாயாற் சொல்லவும் மனத்தால் நினைக்கவும் அடங்காத ஒம் பற்றவனே நினக்கு வணக்கம்; விரி கடல் உலயின் விளைவே போற்றி - நினக்கு விரிகடல் சூழ்ந்த நிலவுலகின் வாழ்வின் பயனாக உள்ளவனே வணக்கம்; அருமையில் எளிய அழகே போற்றி - அன்பால்லாதார்க்கு அரியனாயிருந்தும் அன்பராயினார்க்கு எளியனாய் விளங்கும் அழகனே நினக்கு வணக்கம்; கரு மு ஆகிய கண்ண போற்றி - கரிய மழைமுயில் போவ் அருளைப்பொறியும் கண்களையுடையவனே நினக்கு வணக்கம்; மன்னிய திரு அருள் மலையே போற்றி-கன்கள் பொழிதலால் நிலைம்பற்ற இரு வருள் அருவி பாயும் மலைபோன்றவனே நினக்கு வணக்கம்; என்னையும் ஒருவன் ஆக்கி-ஒன்றும்போதா நாயேளையும் எவ்வகையினுஞ் சிறந்த அடியாருள் ஒருவனாகச் செய்து, இரு கழல் சென்னியில் வைத்த சேவக
154 திருவாசக ஆராய்ச்சியுரை நம்பன் - சிவபெருமான் . நம்பன் பகவன் ... எம்பிரான் பெயரே ' எனப் பிங்கலந்தையில் வருதலும் காண்க இனி எல்லாவுயிரும் விரும்பு தற்குரியோன் எனினுமாம் . நம்பு மேவும் நசையாகும்மே என்பது தொல்காப்பியம் ( உரி ) . உணர்வே என்பதற்கு மெய்யுணர்வே எனினு கடையேனடிமை கண்டாய் என்பதற்கு கடைப்பட்டவனாகிய என்னை நினக்கு அடிமையாகச் செய்தவனே எனினுமாம் . மாம் . 112-117.ஐயா போற்றி -வழிபாட்டிற்குரியவனே நினக்கு வணக் கம் ; அணுவே போற்றி - துகள்போல நுண்ணியனே நீனக்கு வணக்கம் ; சைவா போற்றி - சைவாசாரியனே வீனக்கு வணக்கம் : தலைவா போற்றி - எவ்வகை மேம்பாட்டினர்க்கும் தலைவனே நினக்கு வணக்கம் : குறியே போற்றி - லிங்க வடிவினனே நினக்கு வணக்கம் ; குணமே போற்றி . எண்குணமுடையவனே நிலக்கு வணக்கம் ; நெறியே போற்றி - வீட்டு நெறியை அருள்பலனே நினக்கு வணக்கம் ; நினைவே போற்றி தற்குரியவனே நினக்கு வணக்கம் ; வானோர்க்கு அரிய மருந்தே போற்றி தேவர்களுக்கும் கிடைத்தற்கரிய மருந்துபோல்பவனே நினக்கு வணக்கம் ; ஏனோர்க்கு எனிய . இறைவா போற்றி - வானவரல்லராயினும் அன்பரான ஏனோர்க்கு எளிவந்தருளும் இறைவனே நினக்கு வணக்கம் . ஐயன் - வழிபாட்டிற்குரியவன் . பருப்பொருள்களுக்கெல்லாம் பருப் பொருளாயுள்ள இறைவனே நுண்பொருள்களுக்கெல்லாம் நுண்பொருளாயு மிருத்தலின் அணுவே ' என்றார் . அணு அணுவி லிறந்தாய் ( சத 25 ) என அடிகள் பிறண்டு அருளியமையுங் காண்க . அணுவை பரமாணு அணுவாகி யாதியாய் நின்றான் கண்டாய் எனத் தேவாரத்து ( நாவு 214 : 1 : 240 : 6 ; 253 : 7 ) வருவனவுங் காண்க . அடிகள் ஐயா நதனிற் சைவ னாகியும் ( கீர்த்தி 85 எனப் பிறிதோ ரிடத்து அருளுமாற்றல் சைவா என்பதற்கு ஈண்டுச் சைவாசாரியனே எனப் பொருளுரைக்கப்பட்டது . இனி இறைவன் அநாதி சைவனாதலின் ' சைவா போற்றி ' என்றர் எனினுமாம் . தழவிலங்கு திருவுருவச் சைவனே ( ஞான 307 : 7 ) மான்மறி மருகொன்றேந்தும் சைவனே ' ' ( நாவு 62 : 4 ) எனத் தேவாரத்து வருவனவுங் காண்க . குணங்குறி கடந்த முழுமுதலிறைவன் அன்பர் வழிபாட்டின் பொருட் டுக் கன்மசாதரக்கியமாகிய சிவலிங்கவருவாக அமைந்தமையின் குறியே என்றார் . குறி - விங்கம் ; அடையாளம் . தன்வயத்தனாதல் தூயவுடம்பினனாதல் இயற்கையுணர்வினனாதல் . முற்றுமுணர்தல் இயல்பாகவே பாசங்களினீங்குதல் பேரருளுடைமை முடிவிலாற்றலுடைமை வரம்பிலின் பமுடைமை என்னும் எண்வகை இறை மைக் குணங்களை இயல்பாகவுடைமையின் ' குணமே ' என்றார் . எட்டுக் கொலாமவரீறில் பெருங்குணம் ! எட்டுவான் குணத்தீசன் தேவாரத்து ( நாவு 18 : 8 ; 203 : 8 ) வருவனவுங் காண்க . எனத் F 155 போற்றித் திருவகவல் நெறி - வீட்டு நெறியைக் கூறும் நூல் பொறிவாயி லைந்தவித்தான் பொய்தீ ரொழுக்க நெறி ' ( குறள் ) என்றார் திருவள்ளுவரும் . வீட்டு நெறியைக் கூறும் நூலை அருள்பவனாதலின் ' நெறியே ' என்றார் . எக் காலத்தும் நினைத்தற்குரியவன் இறைவனாதலின் நினைவே என்றார் . நின்னும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினை என்றும் சிவன்றாள் இனை எனப் பிறரும் அருளியமை காண்க . இறைவன் அமுதுண்ட தேவர்களுக்கும் கிடைத்தற்கரிய வீடு பேற் அருளும் அருமருந்தாயிருத்தல்பற்றி ' வானோர்க்கரிய மருந்தே ஏனோர் எனப் பொதுவகையாற் கூறினும் அது மெய்யன்ப ' ' முக்கண துடையெந்தை தன்னை யாவரும் அறிவ தற் கரியவன் எளியவன் அடியார்க்கு ' ' ( அதிரய 3 ) யாவராயினு மன்பரன்றி யறியொணா மலர்ச் சோதியான் ( சென்னி 1 ) என அடிகள் பிறாண்டு அருளியமையுங் காண்க . என்றார் . ரையே குறிக்கும் . துணைவா 118-130 . மூஏம் சுற்றமும் முரண் உறு நாகிடை - கின்னால் ஆட் கொள்ளப்பட்டவர்களது இருபத்தொரு தலைமுறையினரான சுற்றத்தவர் களும் ஒன்றற்கொன்று மாறுபட்ட துன்பத்தைத் தருகின்ற நரகங்களில் ஆழாமே அருள் அரசே போற்றி -ஆழ்ந்துபோகாமல் அருள்புரியும் அர சனே நினக்கு வணக்கம் ; தோழா போற்றி - அன்புமிக்க அடியாரை நின்னோ டொத்தவராகக் கொண்டு அருள் செய்யும் தோழனே நினக்கு வணக்கம் : போற்றி - தன்னைத் தோழனாகப்பெற்ற அடியவர்க்கு எவ் விடத்தும் எக்காலத்தும் நீங்காத் துணையாயுள்ளவனே நினக்கு வணக்கம் ; வாழ்வே போற்றி - அன்பர்க்கு இன்பவாழ்க்கையை அருள்பவனே நினக்கு வணக்கம் : என் வைப்பே போற்றி - எனக்குக் கிடைத்த புதை பொருள் போன்றவனே நினக்கு வணக்கம் : முத்தா போற்றி - இயல்பாகவே பாசங் களினீங்கினவனே நினக்கு வணக்கம் : முதல்வா போற்றி - எல்லாவற் றிற்கும் முதவாயுள்ளவனே நினக்கு வணக்கம் ; அத்தா போற்றி - எவ் வுயிர்க்கும் தந்தையே நினக்கு வணக்கம் ; அரனே போற்றி - மும்மலங் களையும் அழிப்பவனே நினக்கு வணக்கம் ; உரை உணர்வு இறந்த ஒருவ போற்றி - வாயாற் சொல்லவும் மனத்தால் நினைக்கவும் அடங்காத ஒம் பற்றவனே நினக்கு வணக்கம் ; விரி கடல் உலயின் விளைவே போற்றி - நினக்கு விரிகடல் சூழ்ந்த நிலவுலகின் வாழ்வின் பயனாக உள்ளவனே வணக்கம் ; அருமையில் எளிய அழகே போற்றி - அன்பால்லாதார்க்கு அரியனாயிருந்தும் அன்பராயினார்க்கு எளியனாய் விளங்கும் அழகனே நினக்கு வணக்கம் ; கரு மு ஆகிய கண்ண போற்றி - கரிய மழைமுயில் போவ் அருளைப்பொறியும் கண்களையுடையவனே நினக்கு வணக்கம் ; மன்னிய திரு அருள் மலையே போற்றி - கன்கள் பொழிதலால் நிலைம்பற்ற இரு வருள் அருவி பாயும் மலைபோன்றவனே நினக்கு வணக்கம் ; என்னையும் ஒருவன் ஆக்கி - ஒன்றும்போதா நாயேளையும் எவ்வகையினுஞ் சிறந்த அடியாருள் ஒருவனாகச் செய்து இரு கழல் சென்னியில் வைத்த சேவக