திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை போற்றி - பெருமை பொருந்திய திருவடிகளை அடியேனது புன்றலையின் மேல் வைத்தருளிய வீரனே நினக்கு வணக்கம். 156 முதலாக மூவேழ் சுற்றம் -இருபத்தொரு தலைமுறையான சுற்றம்; என்றது அடிமை கொள்ளப்பட்ட ஒரு அடியவரது இருபத்தொரு தலைமுறையி என் றவாறு. அன்றி மூன்று பகுப்பாகிய ஏமுகலைமுறையெனக் கொண்டு அடிமைகொள்ளப்பட்ட ஒரு அடியவரது தந்தை முன்னுள்ள ஏழுதலைமுறையிலுள்ளவரும், தாய் முதலாக ஏழுதலைமுறையி லுள்ளவரும் தாம்முதலாகப் பின்னுள்ள ஏழுதலைமுறையிலுள்ளவரும் எனக்கோடலுமொன்று. இன்னும் தமக்கு முன்னே பத்துத்தலைமுறை யினரும் பின்னே பத்துத்தலைமுறையினதும் தாமுமாக இருபத்தொரு தலை முறை எனக் கூறுதலுமொன்று. முரனுடை நரகு - இன் பவுசின் மாறுபட்ட நரகு; அன்றித்துன் பத்தின் வன்மை மென்மையில் மாறுபட்ட நரகுமாகும். நாகிடை ஆழாமே அருள் அரசு - நரகங்களில் ஆழ்ந்துபோகாமல் அருள்புரியும் அரசு. ''கொடுமா நரகத் தழுந்தாமே காத்தாட் கொள்ளும் குருமணியே'' (ஆனந்த 4) என அடிகள் பிறிதோரிடத்து அருளியமையுங் காண்க. இறைவனைத் தந்தையாகவும் தோழனாகவும் ஆண்டானாகவும் ஆசிரிய னாகவும் பாவித்து வழிபடும் முறையில், தோழன் தன்னோடொத்த இயல் பினனாதலின் தோழன் என்பதற்குத் தன்னோடொத்த வியல்பினை அருள் பவன் என்பது பொருளாகக் கொள்க. துணை - துணைபுரிபவன்.துப்புனே சுடர்முடியானே துணையாளனே' (சத 98) என அடிகள் அருளியமையுங் காண்க. வாழ்வு அளிப்பவனை 'வாழ்வே' என்றார். 'வாழ்முதலே '' '" என்தன் வாழ்முதலே '" (நீத் 23. 39) "போற்றியென் வாழ்முதலாகிய பொருளே " (பள்ளி 1) என வரு வன காண்க. வைப்பு - புதைபொருள். எய்ப்படைந்தவருக்கு அப்பொருள் பயன் படுதல்போல இறைவனும் பிறவித்துன்பத்தால் வருந்தினர்க்குப் பயன் படுதலின் "எய்ப்பினில் வைப்பே' என்றார். காதவர்க் கெய்ப்பினில் வைப்பு வாழ்க' (அண்ட 105) "தொழும்பாளர் எய்ப்பினில் வைப் பனே (சத 08) என அடிகள் பிறாண்டு அருளியமையும் காண்க. முத்தன், முக்த; என்னும் வட சொற்றிரிபு. விடுபட்டவன் என்பதி பொருள். இறைவன் இயல்பாகவே பாசங்களினீங்கின வனாதலின் அவனை 'முத்தன் ' என்றார். ''அத்தன் முத்தன் '' (திருக்கோவை 358) என் புழி முத்தன் என்பதற்கு 'இயல்பாகவே பாசங்களி னீங்கியவன் எனப் பேராசிரியர் உரைத்தமையுங் காண்க. முதல்வா போற்றி என்றது - எல்லாவற்றிற்கும் முதலாயுள்ளவனே நினக்கு வணக்கம் என்றவாறு. முதல்வா போற்றி முருகவே டன்னைப் ** போற்றித் திருவகவல் 157 பயந்தாய் போற்றி" "முன்னியா கின்ற முதல்வா போற்றி' எனத் தேவா ரத்து (நாவு 219:10. 271:5) வருவனவுங் காண்க. இறைவன் எவ்வுயிர்க்கும் தந்தையாதலின் 'அத்தன்' என்றார். 'அத் தன் + உலகத்துள்ளாரெல்லாருக்கும் தந்தை' எனப் பேராசிரியர் உரைத் தமையுங் காண்க. (திருக்கோவை 358 உரை) ஹரன் என்பது அரன் என நின்றது. பாசங்களை அறிபவன் என்பது பொருள். "பாசவேர றுக்கும் பழம்பொருள்" (பிடித்த 7) என வருதலுங் காண்க. யோனே " இறைவன் வாக்குக்கும் மனத்துக்கும் எட்டாதவனாதலின் உரை யுணர்விறந்த ஒருவன்' என்றார். மாற்ற மனங் கழிய நின்ற மறை (சிவபுரா 45) ''உரையுணர் விறந்துநின் றுணர்வதோர் உணர்வே' (கோயிற் 3) என வருவன காண்க. ஒருவன் - ஒப்பற்றவன். ஒப்புனக்கில்லா வொருவனே'' (பிடித் 5) என வருதலும் காண்க. விளைவு - பயன், "விளைவின்கண் வீயா விழுமந்தரும் (குறள் 284) என்புறியும் இப்பொருட்டாதல் காண்க. விரிசுடலுலகின் விளைவு எனப் பொதுப்படக் கூறினும் மனிதவாழ்வின் பயனைக் கொடுப்பவன் இறைவ னாதலின் 'விரிகடலுலகின் விளைவே' என்றார். ". அன்பரல்லாதார்க்கு அருமையாய் இருந்தே அன்பராயினார்க்கு எளிய னாய் விளங்கும் அழகனாதலின் அருமையில் எளிய அழகே' என்றார். ''பாரார் விசும்புள்ளார் பாதாளத் தார்புறத்தார் ஆராலுங் காண்டற் கரியான் எமக்கெளிய பேராளன்'' அம்மானை 2 " யாவரு மறிவரி யாயெமக் கெளியாய்* பள்ளி 3 தன்னை யாவரும் அறிவதற் கரியவன் எனியவன் அடியார்க்கு" அதிசய 3. என இத்திருவரசகத்தும், "வஞ்சகர்க் கரியர் போலு மருவினோர்க் கெளியர் போலும்" நாவு 68 : 7. "எளியவ ரடியர்க் கென்றுமின் னம்பர் ஈசனாரே " நாவு 72:6. எனத் தேவாரத்து வருவனவும் காண்க. கருமுகில் - மழைமுகில். அது மழைபொழிவது போல அருள் பொழி யுங் கண்ணையுடைமையின் கருமுகிலாகிய கண்ண' என்றார். "கண் ணென்னாங் கண்ணோட்ட மில்லாத கண்'' (குறள்) என்றார் திருவள்ளு வரும். அருளை மழையாகவும், கண்ணைக் கருமுகிலாகவும், இறைவனை மலை யாகவும் உருவகஞ் செய்த முறைமைபற்றி 'மன்னிய திருவருண் மலையே போற்றி என்றார். என்னையும் என்புழி உம்மை இழிவுசிறப்பு. ஒருவ
திருவாசக ஆராய்ச்சியுரை போற்றி - பெருமை பொருந்திய திருவடிகளை அடியேனது புன்றலையின் மேல் வைத்தருளிய வீரனே நினக்கு வணக்கம் . 156 முதலாக மூவேழ் சுற்றம் -இருபத்தொரு தலைமுறையான சுற்றம் ; என்றது அடிமை கொள்ளப்பட்ட ஒரு அடியவரது இருபத்தொரு தலைமுறையி என் றவாறு . அன்றி மூன்று பகுப்பாகிய ஏமுகலைமுறையெனக் கொண்டு அடிமைகொள்ளப்பட்ட ஒரு அடியவரது தந்தை முன்னுள்ள ஏழுதலைமுறையிலுள்ளவரும் தாய் முதலாக ஏழுதலைமுறையி லுள்ளவரும் தாம்முதலாகப் பின்னுள்ள ஏழுதலைமுறையிலுள்ளவரும் எனக்கோடலுமொன்று . இன்னும் தமக்கு முன்னே பத்துத்தலைமுறை யினரும் பின்னே பத்துத்தலைமுறையினதும் தாமுமாக இருபத்தொரு தலை முறை எனக் கூறுதலுமொன்று . முரனுடை நரகு - இன் பவுசின் மாறுபட்ட நரகு ; அன்றித்துன் பத்தின் வன்மை மென்மையில் மாறுபட்ட நரகுமாகும் . நாகிடை ஆழாமே அருள் அரசு - நரகங்களில் ஆழ்ந்துபோகாமல் அருள்புரியும் அரசு . ' ' கொடுமா நரகத் தழுந்தாமே காத்தாட் கொள்ளும் குருமணியே ' ' ( ஆனந்த 4 ) என அடிகள் பிறிதோரிடத்து அருளியமையுங் காண்க . இறைவனைத் தந்தையாகவும் தோழனாகவும் ஆண்டானாகவும் ஆசிரிய னாகவும் பாவித்து வழிபடும் முறையில் தோழன் தன்னோடொத்த இயல் பினனாதலின் தோழன் என்பதற்குத் தன்னோடொத்த வியல்பினை அருள் பவன் என்பது பொருளாகக் கொள்க . துணை - துணைபுரிபவன்.துப்புனே சுடர்முடியானே துணையாளனே ' ( சத 98 ) என அடிகள் அருளியமையுங் காண்க . வாழ்வு அளிப்பவனை ' வாழ்வே ' என்றார் . ' வாழ்முதலே ' ' ' என்தன் வாழ்முதலே ' ( நீத் 23 . 39 ) போற்றியென் வாழ்முதலாகிய பொருளே ( பள்ளி 1 ) என வரு வன காண்க . வைப்பு - புதைபொருள் . எய்ப்படைந்தவருக்கு அப்பொருள் பயன் படுதல்போல இறைவனும் பிறவித்துன்பத்தால் வருந்தினர்க்குப் பயன் படுதலின் எய்ப்பினில் வைப்பே ' என்றார் . காதவர்க் கெய்ப்பினில் வைப்பு வாழ்க ' ( அண்ட 105 ) தொழும்பாளர் எய்ப்பினில் வைப் பனே ( சத 08 ) என அடிகள் பிறாண்டு அருளியமையும் காண்க . முத்தன் முக்த ; என்னும் வட சொற்றிரிபு . விடுபட்டவன் என்பதி பொருள் . இறைவன் இயல்பாகவே பாசங்களினீங்கின வனாதலின் அவனை ' முத்தன் ' என்றார் . ' ' அத்தன் முத்தன் ' ' ( திருக்கோவை 358 ) என் புழி முத்தன் என்பதற்கு ' இயல்பாகவே பாசங்களி னீங்கியவன் எனப் பேராசிரியர் உரைத்தமையுங் காண்க . முதல்வா போற்றி என்றது - எல்லாவற்றிற்கும் முதலாயுள்ளவனே நினக்கு வணக்கம் என்றவாறு . முதல்வா போற்றி முருகவே டன்னைப் ** போற்றித் திருவகவல் 157 பயந்தாய் போற்றி முன்னியா கின்ற முதல்வா போற்றி ' எனத் தேவா ரத்து ( நாவு 219 : 10 . 271 : 5 ) வருவனவுங் காண்க . இறைவன் எவ்வுயிர்க்கும் தந்தையாதலின் ' அத்தன் ' என்றார் . ' அத் தன் + உலகத்துள்ளாரெல்லாருக்கும் தந்தை ' எனப் பேராசிரியர் உரைத் தமையுங் காண்க . ( திருக்கோவை 358 உரை ) ஹரன் என்பது அரன் என நின்றது . பாசங்களை அறிபவன் என்பது பொருள் . பாசவேர றுக்கும் பழம்பொருள் ( பிடித்த 7 ) என வருதலுங் காண்க . யோனே இறைவன் வாக்குக்கும் மனத்துக்கும் எட்டாதவனாதலின் உரை யுணர்விறந்த ஒருவன் ' என்றார் . மாற்ற மனங் கழிய நின்ற மறை ( சிவபுரா 45 ) ' ' உரையுணர் விறந்துநின் றுணர்வதோர் உணர்வே ' ( கோயிற் 3 ) என வருவன காண்க . ஒருவன் - ஒப்பற்றவன் . ஒப்புனக்கில்லா வொருவனே ' ' ( பிடித் 5 ) என வருதலும் காண்க . விளைவு - பயன் விளைவின்கண் வீயா விழுமந்தரும் ( குறள் 284 ) என்புறியும் இப்பொருட்டாதல் காண்க . விரிசுடலுலகின் விளைவு எனப் பொதுப்படக் கூறினும் மனிதவாழ்வின் பயனைக் கொடுப்பவன் இறைவ னாதலின் ' விரிகடலுலகின் விளைவே ' என்றார் . . அன்பரல்லாதார்க்கு அருமையாய் இருந்தே அன்பராயினார்க்கு எளிய னாய் விளங்கும் அழகனாதலின் அருமையில் எளிய அழகே ' என்றார் . ' ' பாரார் விசும்புள்ளார் பாதாளத் தார்புறத்தார் ஆராலுங் காண்டற் கரியான் எமக்கெளிய பேராளன் ' ' அம்மானை 2 யாவரு மறிவரி யாயெமக் கெளியாய் * பள்ளி 3 தன்னை யாவரும் அறிவதற் கரியவன் எனியவன் அடியார்க்கு அதிசய 3 . என இத்திருவரசகத்தும் வஞ்சகர்க் கரியர் போலு மருவினோர்க் கெளியர் போலும் நாவு 68 : 7 . எளியவ ரடியர்க் கென்றுமின் னம்பர் ஈசனாரே நாவு 72 : 6 . எனத் தேவாரத்து வருவனவும் காண்க . கருமுகில் - மழைமுகில் . அது மழைபொழிவது போல அருள் பொழி யுங் கண்ணையுடைமையின் கருமுகிலாகிய கண்ண ' என்றார் . கண் ணென்னாங் கண்ணோட்ட மில்லாத கண் ' ' ( குறள் ) என்றார் திருவள்ளு வரும் . அருளை மழையாகவும் கண்ணைக் கருமுகிலாகவும் இறைவனை மலை யாகவும் உருவகஞ் செய்த முறைமைபற்றி ' மன்னிய திருவருண் மலையே போற்றி என்றார் . என்னையும் என்புழி உம்மை இழிவுசிறப்பு . ஒருவ