திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்

168 திருவாசக ஆராய்ச்சியுரை காட்டில்,ஏவுண்ட பன்றிக் கிரங்கி யீசன் எந்தை பெருந்துறை யாதி அன்று, கேவலங் கேழலாய்ப் பால்கொடுத்த கிடப்பறி வாரெம் பிரானாவாரே'' திருவார்த் பி. ஆனத்த 5. "தாாய் முலையைத் தருவானே என வருவனவற்றாலும் அறியப்படும். மானம் - பெருமை. 'புகழும் மானமு மெடுத்து வற்புறுத்தலும்" (தொல் அகத் 41: 14) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க. இறை வன் கையிலைமலையை உறைவிடமாகக் கொண்டமையில் 'கயிலை மலையாய்' என்றார். "ஒலிதரு கயிலை யுயர்கிழ வோனே (கீர்த் 146) + கயிலைப் பரம்பரனே '' (ரீத் 34) கயிலை மாமலை மேவிய கடலே" (செத் 10) என வருவன காண்க. அருளிட வேண்டும் .அருள் செய்ய வேண்டும் ''எங்கள் வாழ்வே வாவென் றருளாயே" (கோயில்மூத்7) என அடிகள் பிராண்டும் அரு ளியமை காண்க. இருள்கெட அருளும் இறைவா என்றது அநாதிபந்தமாகிய ஆணவ மலவிருள் கெடும்படி அருள்புரியும் தலைவனே என்றவாறு. '' பந்த மாகிய மல்விரு ளகற்றும் பரிதி யாயுள பல்லுயிர்க் குயிராய்' எனத் திருவாத வூரடிகள் புராணத்து (திருப்பெருங் 68 வருதல் அடியேன் தமியேன் தளர்ந்தேன் எனக் கூட்டிப் பொருளுரைக்க. 171-86, களம் கொள கருத அருளாய் போற்றி -அடியேன் ஒரு நிலையான இடத்தைப் பெறவும் நின்னையே கருதவும் அருள்செய்வாயாக நினக்கு வணக்கம்; இங்கு அஞ்சேல் என்று அருளாய் போற்றி - இவ் வுலகத்தில் அஞ்சற்க என். அருள் செய்வாயாக நினக்கு வணக்கம்; நஞ்சே அமுதமாய் நாந்தாய் போற்றி - பாடற்கடலிற் றோன்றிய நஞ் சினை அமுதமாக விரும்பி உண்டவனே வினக்கு வணக்கம்; அத்தா போற்றி- தந்தையே வினக்கு வணக்கம்; ஐயா போற்றி - வழிபாட்டிற்கு உரியவனே நினைக்கு வணக்கம்; நித்தா போற்றி - என்றுமுள்ளவனே நினக்கு வணக்கம்: நிமலா போற்றி - மலமில்லாதவனே நினக்கு வணக்கம்; பத்தா போற்றி- என் உயிர் நாயகனே நினக்கு வணக்கர்: பவனே போற்றி - எவ்வுயீர் களுக்கும் பிறப்பிடமானவனே நினக்கு வணக்கம்: பெரியாய் போற்றி- பெரியவற்றிற்கெல்லாம் பெரியவனே நினக்கு வணக்கம்; பிரானே போற்றி- எப்பொருட்கும் தலைவனே நினக்கு வணக்கம்; அறியாய் போற்றி. யாவராயினும் அன்பரன்றி அறிதற்கரியவனே நினக்கு வணக்கம்; அமலா போற்றி இயல்பாகவே பாசங்களினீங்கிவைனே நினக்கு வணக்கம்; மறையோர் கோல நெறியே போற்றி -அந்தணர் வடிவுகொண்டு எழுந் தருளிவந்து பொய்தீர் ஒழுக்க நெறியி ைஅருளினவனே கினக்கு வணக் கம்; முதல்வா முறையோ தரியேன் போற்றி - முதல்வனே நின்னைப் = போற்றித் திருவகவல் 169 பிரிந்தமை முறையாகுமோ? அப்பிரிவை யான் ஆற்றமாட்டேன்; ஆற்று மாறு அருளுதி, நினக்கு வணக்கம்; உறவே போற்றி - எனக்கு உயிர்ச் சுற்றமானவனே நினக்கு வணக்கம்; உயிரே போற்றி - என் உயிர்க்கு உயிரே நினக்கு வணக்கம்; சிறவே போற்றி - சிறப்புடைப் பொருளே நினக்கு வணக்கம்; சிவமே போற்றி -மங்களப் பொருளே கினக்கு வணக் கம்: மஞ்சா போற்றி - எல்லாம் வல்லவனே வினக்கு வணக்கம்; மணாளா போற்றி நாயகனே நினக்கு வணக்கம்: பஞ்சு ஏர் அடியாள் பங்கா போற்றி - செம்பஞ்சு ஊட்டிய அழகிய திருவடிகளையுடைய உமையம் மையை இடப்பாகத்திலுடையவனே நினக்கு வணக்கம்; நாயேன் அடி யேன் அலந்தேன் போற்றி - கீழ்மையையுடைய அடியேன் நின்னைப் பிரிந்து துன்பமுற்றேன்; அத்துன்பத்தை நீக்கி அருள்புரிய வேண்டும்; நினக்கு வணக்கம்; இலங்கு சுடர் எம் ஈசா போற்றி - விளங்காநின்ற ஒளியினையுடைய எம்மை உடையவனே, நினக்கு வணக்கம். களம்கொள் என்றது சீவன்முத்தநிலையை அடைய என்றவாறு. வீடு பேற்றினை அடைய எனினுமாம். சீவன் முத்த நிலையை அடைந்தவரே இடைவிடாத தியானப்பயனாகிய சிவானுபவத்தைப் பெறுவர். இந்நிலை யினைப் பெறவும் தியானித்து அனுபவிக்கவும் அருள் செய்யவேண்டும் என்பார் 'களங்கொளக் கருத அருளாய்' என்றார். இங்கு என்றது இவ்வுலக வாதனைகளை.மலம் நீங்கப்பெற்றவர்களும் இவ்வுலகில் உறுங்கால் வாசனாமலத்தால் தாக்குண்டு வருந்துவர். ஆத லின் அஞ்சே வென்றருளாய்' என்றார். - . "மலமகல் பவரும் புவிமீதே மானிட வடிவந் தனையெய்திச் சிலபக வெனினும் பயில்காலைச் சேர்தரு மலவா தனையென்றே " எனவும். திருவாத.திருவம் 20 அஞ்சே லென்றருளவேண்டு மாவடு துறையுளானே" தாவு 5: 17 எனவும் வருவன காண்க. நஞ்சு என்றது பாற்கடலின்கண் எழுந்த நஞ்சை. இறைவன் அதனை விரும்பி உண்டமையின் 'நஞ்சே அமுதாய் நயந்தாய்' என்றார். ''நஞ்ச முதா வருந்தினனே" (நீத் 18) "வானவர் தொழத் துற்பெரிய நஞ்சமுத மாகமு ளயின்றவர்'" (தே ஞான 330 : 2) (நஞ்சம் ஆரமுதாக நயந்து கொண்டு'' (தே. நாவு 186 : 4) என வருவன காண்க. நஞ்சை அமுத மாக நயந்தமை இறைவனது பேரருட் டன்மையைக் காட்டுவதாகும். உண்பரிய நஞ்சதனை யுண்டுலகமுய்ய வருளுத்தமன் (ஞான 335:7) "விடமுண்டு அருள்செய் சடையன்" (சுந்93:7) எனத் தேவாரத்தும் வருவன கான்சு 23
168 திருவாசக ஆராய்ச்சியுரை காட்டில் ஏவுண்ட பன்றிக் கிரங்கி யீசன் எந்தை பெருந்துறை யாதி அன்று கேவலங் கேழலாய்ப் பால்கொடுத்த கிடப்பறி வாரெம் பிரானாவாரே ' ' திருவார்த் பி . ஆனத்த 5 . தாாய் முலையைத் தருவானே என வருவனவற்றாலும் அறியப்படும் . மானம் - பெருமை . ' புகழும் மானமு மெடுத்து வற்புறுத்தலும் ( தொல் அகத் 41 : 14 ) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க . இறை வன் கையிலைமலையை உறைவிடமாகக் கொண்டமையில் ' கயிலை மலையாய் ' என்றார் . ஒலிதரு கயிலை யுயர்கிழ வோனே ( கீர்த் 146 ) + கயிலைப் பரம்பரனே ' ' ( ரீத் 34 ) கயிலை மாமலை மேவிய கடலே ( செத் 10 ) என வருவன காண்க . அருளிட வேண்டும் .அருள் செய்ய வேண்டும் ' ' எங்கள் வாழ்வே வாவென் றருளாயே ( கோயில்மூத் 7 ) என அடிகள் பிராண்டும் அரு ளியமை காண்க . இருள்கெட அருளும் இறைவா என்றது அநாதிபந்தமாகிய ஆணவ மலவிருள் கெடும்படி அருள்புரியும் தலைவனே என்றவாறு . ' ' பந்த மாகிய மல்விரு ளகற்றும் பரிதி யாயுள பல்லுயிர்க் குயிராய் ' எனத் திருவாத வூரடிகள் புராணத்து ( திருப்பெருங் 68 வருதல் அடியேன் தமியேன் தளர்ந்தேன் எனக் கூட்டிப் பொருளுரைக்க . 171-86 களம் கொள கருத அருளாய் போற்றி -அடியேன் ஒரு நிலையான இடத்தைப் பெறவும் நின்னையே கருதவும் அருள்செய்வாயாக நினக்கு வணக்கம் ; இங்கு அஞ்சேல் என்று அருளாய் போற்றி - இவ் வுலகத்தில் அஞ்சற்க என் . அருள் செய்வாயாக நினக்கு வணக்கம் ; நஞ்சே அமுதமாய் நாந்தாய் போற்றி - பாடற்கடலிற் றோன்றிய நஞ் சினை அமுதமாக விரும்பி உண்டவனே வினக்கு வணக்கம் ; அத்தா போற்றி தந்தையே வினக்கு வணக்கம் ; ஐயா போற்றி - வழிபாட்டிற்கு உரியவனே நினைக்கு வணக்கம் ; நித்தா போற்றி - என்றுமுள்ளவனே நினக்கு வணக்கம் : நிமலா போற்றி - மலமில்லாதவனே நினக்கு வணக்கம் ; பத்தா போற்றி என் உயிர் நாயகனே நினக்கு வணக்கர் : பவனே போற்றி - எவ்வுயீர் களுக்கும் பிறப்பிடமானவனே நினக்கு வணக்கம் : பெரியாய் போற்றி பெரியவற்றிற்கெல்லாம் பெரியவனே நினக்கு வணக்கம் ; பிரானே போற்றி எப்பொருட்கும் தலைவனே நினக்கு வணக்கம் ; அறியாய் போற்றி . யாவராயினும் அன்பரன்றி அறிதற்கரியவனே நினக்கு வணக்கம் ; அமலா போற்றி இயல்பாகவே பாசங்களினீங்கிவைனே நினக்கு வணக்கம் ; மறையோர் கோல நெறியே போற்றி -அந்தணர் வடிவுகொண்டு எழுந் தருளிவந்து பொய்தீர் ஒழுக்க நெறியி ைஅருளினவனே கினக்கு வணக் கம் ; முதல்வா முறையோ தரியேன் போற்றி - முதல்வனே நின்னைப் = போற்றித் திருவகவல் 169 பிரிந்தமை முறையாகுமோ ? அப்பிரிவை யான் ஆற்றமாட்டேன் ; ஆற்று மாறு அருளுதி நினக்கு வணக்கம் ; உறவே போற்றி - எனக்கு உயிர்ச் சுற்றமானவனே நினக்கு வணக்கம் ; உயிரே போற்றி - என் உயிர்க்கு உயிரே நினக்கு வணக்கம் ; சிறவே போற்றி - சிறப்புடைப் பொருளே நினக்கு வணக்கம் ; சிவமே போற்றி -மங்களப் பொருளே கினக்கு வணக் கம் : மஞ்சா போற்றி - எல்லாம் வல்லவனே வினக்கு வணக்கம் ; மணாளா போற்றி நாயகனே நினக்கு வணக்கம் : பஞ்சு ஏர் அடியாள் பங்கா போற்றி - செம்பஞ்சு ஊட்டிய அழகிய திருவடிகளையுடைய உமையம் மையை இடப்பாகத்திலுடையவனே நினக்கு வணக்கம் ; நாயேன் அடி யேன் அலந்தேன் போற்றி - கீழ்மையையுடைய அடியேன் நின்னைப் பிரிந்து துன்பமுற்றேன் ; அத்துன்பத்தை நீக்கி அருள்புரிய வேண்டும் ; நினக்கு வணக்கம் ; இலங்கு சுடர் எம் ஈசா போற்றி - விளங்காநின்ற ஒளியினையுடைய எம்மை உடையவனே நினக்கு வணக்கம் . களம்கொள் என்றது சீவன்முத்தநிலையை அடைய என்றவாறு . வீடு பேற்றினை அடைய எனினுமாம் . சீவன் முத்த நிலையை அடைந்தவரே இடைவிடாத தியானப்பயனாகிய சிவானுபவத்தைப் பெறுவர் . இந்நிலை யினைப் பெறவும் தியானித்து அனுபவிக்கவும் அருள் செய்யவேண்டும் என்பார் ' களங்கொளக் கருத அருளாய் ' என்றார் . இங்கு என்றது இவ்வுலக வாதனைகளை.மலம் நீங்கப்பெற்றவர்களும் இவ்வுலகில் உறுங்கால் வாசனாமலத்தால் தாக்குண்டு வருந்துவர் . ஆத லின் அஞ்சே வென்றருளாய் ' என்றார் . - . மலமகல் பவரும் புவிமீதே மானிட வடிவந் தனையெய்திச் சிலபக வெனினும் பயில்காலைச் சேர்தரு மலவா தனையென்றே எனவும் . திருவாத.திருவம் 20 அஞ்சே லென்றருளவேண்டு மாவடு துறையுளானே தாவு 5 : 17 எனவும் வருவன காண்க . நஞ்சு என்றது பாற்கடலின்கண் எழுந்த நஞ்சை . இறைவன் அதனை விரும்பி உண்டமையின் ' நஞ்சே அமுதாய் நயந்தாய் ' என்றார் . ' ' நஞ்ச முதா வருந்தினனே ( நீத் 18 ) வானவர் தொழத் துற்பெரிய நஞ்சமுத மாகமு ளயின்றவர் ' ( தே ஞான 330 : 2 ) ( நஞ்சம் ஆரமுதாக நயந்து கொண்டு ' ' ( தே . நாவு 186 : 4 ) என வருவன காண்க . நஞ்சை அமுத மாக நயந்தமை இறைவனது பேரருட் டன்மையைக் காட்டுவதாகும் . உண்பரிய நஞ்சதனை யுண்டுலகமுய்ய வருளுத்தமன் ( ஞான 335 : 7 ) விடமுண்டு அருள்செய் சடையன் ( சுந் 93 : 7 ) எனத் தேவாரத்தும் வருவன கான்சு 23