திருவாசக ஆராய்ச்சியுரை - முதலாம் பாகம்
170
திருவாசக ஆராய்ச்சியுரை
"செற்றால் முயீரனைத்தும் உண்டிடவே நிமிர்ந்தெழலுஞ் சிந்தை மேற்
கொள், பற்றாலங் கதுநுகர்ந்து நான்முகனே முதலோர்தம் பாவை
மார்கள், பொற்றாலி தனையளித்தோன்''
(குற்றாலப் 1}
என்னும் கந்தபுராணமும் இதனை வலியுறுத்தும்.
அமுதாக என்பது அமுதா எனக் குறைந்து நின்றது. நயத்தல் -
விரும்புதல். "புலம்பிரிந் துறையுஞ் செலவுநீ நயந்தனை
யாயின்'
(முருகு 63-4) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க அத்தா -தந்
தையே. ஐயன்- வழிபாட்டிற்குரியவன்.
நித்தன் - என்றுமுள்ளவன். "என்னும் ஒருபடித்தாயிருப்போன்'
ஞானாமிர் 55: 16 பழையவுரை. "நித்தனே அடையார் புரமெரித்த சிலை
யனே" (செத் 3) என அடிகள் பிறாண்டு அருளியமையுங் காண்க.
நிமலா போற்றி - மலமற்றவனே வணக்கம். நிமலா போற்றி
யென்று நின்றேத்த, இரக்கம் புரிந்தார் என ஆளுடையபிள்ளையார்
அருளியமையுங் காண்க. (தே- ஞான 70:8)
பத்தா என்பது பர்த்தா என்னும் வடசொற்றிரிபு. தலைவன்; கண
வன் என்பது பொருள். ''பத்தா துணைவன் நலைவன் மணவாளன் றன்
பெயர்'' என்பது பிங்கலந்தை (5: 191). இறைவனைப் பத்தா என்றல்
"பத்தா பத்தர்க்களுக்கருள் செய்யும் பரம்பரனே 'பத்தா பத்தர்
பலர்போற்றும் பரமா" என்னும் சுந்தரர் தேவாரத்தும் (25-3; 52:1)
காண்க.
பவன் எல்லா உலகங்களும் உயிர்களும் தோன்றுகற்கு இடமானவன்.
பவம் - தோற்றம்; பிறப்பு. பவத்திற மறுகெனப் பாலை நோற்றன
ளென்' (மணி 30:264) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க.
தோற்றுதற் இடமானவன் எனினும் தோற்றுதற்கு நிமித்தகாரணன்
என்பது பொருள். "பவனெம் பிரான் பனிமாமதிக் கண்ணி" (சத 9)
என அடிகள் பிறாண்டு கூறுதலுங் காண்க. "நமோ பவாயருத்ராயச
நம; என எசுர்வேதத்திடையிலுள்ள சதருத்ரியத்தில் வருதலும் ஈண்
டைக்கேற்ப அறியற்பாலது.
"தலைவன் மன்னவன் பிரானே
பிரான் - எப்பொருட்குமிறைவன்.
கொழுநன் ... உரைசெ யெப்பொருட்கும் இறைவன் மேற்றே" என்பது
திவாகரம்.
லின்.
அரியாய் என்றார் இறைவன் அன்பரல்லார்க்குக் காண்டற்கரியனாத
"யாவராயினு மன்பரஸ்றி யறியொணா மலர்ச்சோதியாவ்*
(சென்னிப் 1) ''யாவரு மறிவரியா யெமக்கெளியாய்" (பள்ளி 3 "தன்னை
யாவரும் அறிவதற் கரியவன் எளியவன் அடியார்க்கு" (அதிசய 9) என
வருவண காண்க.
#
போற்றித் திருவகவல்
171
அமலன் - மலமற்றன். 'நிருமவனாயிருப்போன்' ஞானாயிர் 55:8 பழைய
வுரை, அ.எதிர்மறைப்பொருளுணர்த்தியது. 'அலைசேர் புனலன் அன
வன் அமுலன் ' (ஞான 158:6) 'அண்டமுதல்வன் அமலன்
94 2) எனத் தேவாரத்து வருவனவுங் காண்க.
|£ [
மறையோர் கோலநெறியென்றது இறைவன் அந்தணப் பரமாசாரிய
னாய் எழுந்தருனிவந்து உபதேசித்த பொய்தி ரொமுக்க நெறியீனை.
மறையோ! கோலங் காட்டி ய தனலும்" எனத் திருவண்டப்பகுதியில்
(140) வந்தமையுங் காண்க கோலம் - வடிவு மாலுங்காட்டி வழிகாட்டி
வாராவுலக நெறியேறக் கோலங்காட்டி யாண்டானை" (ஆனந்த 3) என்
புழியும் இப்பொருட்டாதல் காண்க.
*4
முறையோ தரியேன் முதல்வா என்பதனை முதல்வா முறையோ தரி
என.மாற்றிக்கூட்டி முதல்வனே நீ என்னைப் பிரிந்தமை முறைமை
யாகுமே!? அப்பிரிவினை யான் ஆற்றமாட்டேன். ஆற்றுமாறு அருளுதி
எனப் பொருள்கொள்க. ஆற்றுமாறு அருளுதி என்பது அவாய்நிலையான்
வருவிக்கப்பட்டது.
அரத்த மேனியாய் அருள்செய் அன்பரும்
நீயும் அங்கெழுந் தருளி இங்கெனை
இருத்தினாப் முறையோ'
சத 93.
"முத்தனை யானே மணியனை யானே
முதல்வனே முறையோவென்
றெத்தனை யானும் யான்றொடர்ங் துன்னை
இனிப்பிரிந் தாற்றேனே'' எண்ணப்4.
என பருவன காண்க.
உறவே - சுற்றமே. 'உருவே யென்னுறவே'' (நாவு 281:1) எனத்
தேவாரத்து வருதலுங் காண்க. உயிரே - உயிர்க்குயிரே. "உலகுக்குயி
ரானாய்' (பள்ளி 9) ''எல்லா உயிர்கட்கும் உயிரே" (கோயிற்4)
என அடிகளும்,உரைசேரு மெண்பத்து நான்கு நாறாயிரமாம் யோனி
பேத. நிரைசேரப் படைத்தவற்றி னுயிர்க்குயிரா யங்கங்கே நின்றான்"
(132:4) என ஆளுடையபிள்ளையாரும் அருளியமை காண்க.
சிறவு - சிறப்பு. "சிறவே செய்து வழிவந்து சிவனே நின்தாள் சேர்ந்
தாரே' எனத் திருச்சதகத்து (86) வருதலுங் காண்க. இறைவனின்
மிக்க சிறப்புடைய பொருள் பிறிதின்மையின் 'சிறவே' என்றார். சிறப்
பென்னும் செம்பொருள்'" எனத் திருவள்ளுவரும் அருளியமை காண்க.
சிவம் - செம்பொருள். செம்பொருட் டுணிவே சீருடைக் கழலே
செல்வமே சிவபெருமானே'' (பிடித்த 1) என அடிகள் அருளியமையுங்
காண்க.
மஞ்சன் என்பது மைந்தன் என்பதன் மரூஉ. மைந்தன்.வவியோன்.
மைந்து - வலி. மைந்து பொருளாக வந்த வேந்தனை" (தொல்.புறத்)
170
திருவாசக
ஆராய்ச்சியுரை
செற்றால்
முயீரனைத்தும்
உண்டிடவே
நிமிர்ந்தெழலுஞ்
சிந்தை
மேற்
கொள்
பற்றாலங்
கதுநுகர்ந்து
நான்முகனே
முதலோர்தம்
பாவை
மார்கள்
பொற்றாலி
தனையளித்தோன்
'
'
(
குற்றாலப்
1
}
என்னும்
கந்தபுராணமும்
இதனை
வலியுறுத்தும்
.
அமுதாக
என்பது
அமுதா
எனக்
குறைந்து
நின்றது
.
நயத்தல்
-
விரும்புதல்
.
புலம்பிரிந்
துறையுஞ்
செலவுநீ
நயந்தனை
யாயின்
'
(
முருகு
63-4
)
என்புழியும்
இப்பொருட்டாதல்
காண்க
அத்தா
-தந்
தையே
.
ஐயன்-
வழிபாட்டிற்குரியவன்
.
நித்தன்
-
என்றுமுள்ளவன்
.
என்னும்
ஒருபடித்தாயிருப்போன்
'
ஞானாமிர்
55
:
16
பழையவுரை
.
நித்தனே
அடையார்
புரமெரித்த
சிலை
யனே
(
செத்
3
)
என
அடிகள்
பிறாண்டு
அருளியமையுங்
காண்க
.
நிமலா
போற்றி
-
மலமற்றவனே
வணக்கம்
.
நிமலா
போற்றி
யென்று
நின்றேத்த
இரக்கம்
புரிந்தார்
என
ஆளுடையபிள்ளையார்
அருளியமையுங்
காண்க
.
(
தே-
ஞான
70
:
8
)
பத்தா
என்பது
பர்த்தா
என்னும்
வடசொற்றிரிபு
.
தலைவன்
;
கண
வன்
என்பது
பொருள்
.
'
'
பத்தா
துணைவன்
நலைவன்
மணவாளன்
றன்
பெயர்
'
'
என்பது
பிங்கலந்தை
(
5
:
191
)
.
இறைவனைப்
பத்தா
என்றல்
பத்தா
பத்தர்க்களுக்கருள்
செய்யும்
பரம்பரனே
'
பத்தா
பத்தர்
பலர்போற்றும்
பரமா
என்னும்
சுந்தரர்
தேவாரத்தும்
(
25-3
;
52
:
1
)
காண்க
.
பவன்
எல்லா
உலகங்களும்
உயிர்களும்
தோன்றுகற்கு
இடமானவன்
.
பவம்
-
தோற்றம்
;
பிறப்பு
.
பவத்திற
மறுகெனப்
பாலை
நோற்றன
ளென்
'
(
மணி
30
:
264
)
என்புழியும்
இப்பொருட்டாதல்
காண்க
.
தோற்றுதற்
இடமானவன்
எனினும்
தோற்றுதற்கு
நிமித்தகாரணன்
என்பது
பொருள்
.
பவனெம்
பிரான்
பனிமாமதிக்
கண்ணி
(
சத
9
)
என
அடிகள்
பிறாண்டு
கூறுதலுங்
காண்க
.
நமோ
பவாயருத்ராயச
நம
;
என
எசுர்வேதத்திடையிலுள்ள
சதருத்ரியத்தில்
வருதலும்
ஈண்
டைக்கேற்ப
அறியற்பாலது
.
தலைவன்
மன்னவன்
பிரானே
பிரான்
-
எப்பொருட்குமிறைவன்
.
கொழுநன்
...
உரைசெ
யெப்பொருட்கும்
இறைவன்
மேற்றே
என்பது
திவாகரம்
.
லின்
.
அரியாய்
என்றார்
இறைவன்
அன்பரல்லார்க்குக்
காண்டற்கரியனாத
யாவராயினு
மன்பரஸ்றி
யறியொணா
மலர்ச்சோதியாவ்
*
(
சென்னிப்
1
)
'
'
யாவரு
மறிவரியா
யெமக்கெளியாய்
(
பள்ளி
3
தன்னை
யாவரும்
அறிவதற்
கரியவன்
எளியவன்
அடியார்க்கு
(
அதிசய
9
)
என
வருவண
காண்க
.
#
போற்றித்
திருவகவல்
171
அமலன்
-
மலமற்றன்
.
'
நிருமவனாயிருப்போன்
'
ஞானாயிர்
55
:
8
பழைய
வுரை
அ.எதிர்மறைப்பொருளுணர்த்தியது
.
'
அலைசேர்
புனலன்
அன
வன்
அமுலன்
'
(
ஞான
158
:
6
)
'
அண்டமுதல்வன்
அமலன்
94
2
)
எனத்
தேவாரத்து
வருவனவுங்
காண்க
.
|
£
[
மறையோர்
கோலநெறியென்றது
இறைவன்
அந்தணப்
பரமாசாரிய
னாய்
எழுந்தருனிவந்து
உபதேசித்த
பொய்தி
ரொமுக்க
நெறியீனை
.
மறையோ
!
கோலங்
காட்டி
ய
தனலும்
எனத்
திருவண்டப்பகுதியில்
(
140
)
வந்தமையுங்
காண்க
கோலம்
-
வடிவு
மாலுங்காட்டி
வழிகாட்டி
வாராவுலக
நெறியேறக்
கோலங்காட்டி
யாண்டானை
(
ஆனந்த
3
)
என்
புழியும்
இப்பொருட்டாதல்
காண்க
.
*
4
முறையோ
தரியேன்
முதல்வா
என்பதனை
முதல்வா
முறையோ
தரி
என.மாற்றிக்கூட்டி
முதல்வனே
நீ
என்னைப்
பிரிந்தமை
முறைமை
யாகுமே
!?
அப்பிரிவினை
யான்
ஆற்றமாட்டேன்
.
ஆற்றுமாறு
அருளுதி
எனப்
பொருள்கொள்க
.
ஆற்றுமாறு
அருளுதி
என்பது
அவாய்நிலையான்
வருவிக்கப்பட்டது
.
அரத்த
மேனியாய்
அருள்செய்
அன்பரும்
நீயும்
அங்கெழுந்
தருளி
இங்கெனை
இருத்தினாப்
முறையோ
'
சத
93
.
முத்தனை
யானே
மணியனை
யானே
முதல்வனே
முறையோவென்
றெத்தனை
யானும்
யான்றொடர்ங்
துன்னை
இனிப்பிரிந்
தாற்றேனே
'
'
எண்ணப்
4
.
என
பருவன
காண்க
.
உறவே
-
சுற்றமே
.
'
உருவே
யென்னுறவே
'
'
(
நாவு
281
:
1
)
எனத்
தேவாரத்து
வருதலுங்
காண்க
.
உயிரே
-
உயிர்க்குயிரே
.
உலகுக்குயி
ரானாய்
'
(
பள்ளி
9
)
'
'
எல்லா
உயிர்கட்கும்
உயிரே
(
கோயிற்
4
)
என
அடிகளும்
உரைசேரு
மெண்பத்து
நான்கு
நாறாயிரமாம்
யோனி
பேத
.
நிரைசேரப்
படைத்தவற்றி
னுயிர்க்குயிரா
யங்கங்கே
நின்றான்
(
132
:
4
)
என
ஆளுடையபிள்ளையாரும்
அருளியமை
காண்க
.
சிறவு
-
சிறப்பு
.
சிறவே
செய்து
வழிவந்து
சிவனே
நின்தாள்
சேர்ந்
தாரே
'
எனத்
திருச்சதகத்து
(
86
)
வருதலுங்
காண்க
.
இறைவனின்
மிக்க
சிறப்புடைய
பொருள்
பிறிதின்மையின்
'
சிறவே
'
என்றார்
.
சிறப்
பென்னும்
செம்பொருள்
'
எனத்
திருவள்ளுவரும்
அருளியமை
காண்க
.
சிவம்
-
செம்பொருள்
.
செம்பொருட்
டுணிவே
சீருடைக்
கழலே
செல்வமே
சிவபெருமானே
'
'
(
பிடித்த
1
)
என
அடிகள்
அருளியமையுங்
காண்க
.
மஞ்சன்
என்பது
மைந்தன்
என்பதன்
மரூஉ
.
மைந்தன்.வவியோன்
.
மைந்து
-
வலி
.
மைந்து
பொருளாக
வந்த
வேந்தனை
(
தொல்.புறத்
)