திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவெம்பாவை 549 திருமாலீடத்தும் நான்முகனிடத்தும் இந்திரன் முதலிய தேவர் களிடத்தும் மற்று எவ்விடங்களிலுள்ளாரிடத்தும் இல்லாததாகிய இன்பம் நம்மிடத்து உளதாகும்படி உமையம்மையார் நம்தம்மைக் கோதாட்டி அருள் செய்தலும், இந்நிலவுலகில் 'நம்வீடுகள் தோறும் எழுந்தருளி வந்து செந்தாமரைமலர் போன்ற அழகிய திருவடிகளைத் தந்தருள் செய்ய வலிய எழுந்தருளி வருகின்ற வீரனும் அருட்கண்களை யுடைய அரசனும் அடியோங்கட்கு அரிய அமிர்தம் போல்வானும், எங்கள் தலைவனுமாகிய இறைவனைப் புகழ்ந்து பாடிக்கொண்டு நலந் திகழுமாறு தாமரைப் பூக்களையுடைய நீரில் பாய்ந்து முழுகுவோ மாக. எம்பாவாய் நீயும் நீராடியருள்வாயாக (என இறைவியின் அருளும் திறமும் இறைவனின் ஆளும் திறமும் கூறினர்) என்பதாம். கண் என்பது செங்கண் என அடையடுத்து நின்றமையால் செங் கணவன் என ஒற்று இரட்டியாது நின்றது. திருமால் செந்தாம ரைப் பூப்போலும் கண்ணவனாதலின் செங்கணவன் என்றார். செங்க ணெடுமாலும்" (அம்மானை - 1) செங்கண் அரி (பூவல்லி -15) நிரையிதழ்த் தாமரை யன்ன நாட்டத் தளப்பரியவை " (பரி. 4- 60 - 1) "பங்கயக்க ணெடுமால் (கோவை-120) என வருவன வுங் காண்க. திசைமுகன்- பிரமன், தேவர்கள் - இந்திரன் முதலிய தேவர்கள். E. pined எங்கும் என்றது வித்தியாதத்துவத்திலுள்ள பிரளயாகல உருத் திரர்களுக்கும் சிவதத்துவத்திலுள்ள அணு சதாசிவ விஞ்ஞானாகலர் களுக்கும் எனப்பொருள் கொள்ளுமாறு அமைந்துள்ளது. இங்ஙன மன்றி திருமால் பிரமன் முதலிய தேவர்களுக்குக் கீழேயுள்ளாரிடத் தும் எனப்பொருள் கோடல் தாம் பெறும் இன்பத்திற்கு ஓரளவும் ஒப்புமையாகாதென்க. திருமால், பிரமன் முதலிய தேவத் தலைவர்களிடத்தும் இந்திரன் முதலிய தேவர்களிடத்தும் மற்று எவ்விடங்களிலுள்ளாரிடத்தும் பொருந்தாத ஒப்பற்ற இன்பமென்பார், 'செங்கணவன்பால் திசை முகன்பால் தேவர்கள்பால் எங்குமிலாததோர் இன்பம்" என்றனர். திருமாலும் பிரமனும் அதிகாரச் செருக்குடைமையால் இன்பம் பெறா ராயினர். இன்பம் என்றது சீவன் முத்த நிலைக்கணுளதாகும் பேரின்பத் தினை. திருமால் முதலிய தேவத் தலைவர்களாலும் பெறுதற்கரிய அவ்வின்பம் கன்னியர்களாகிய நம்மிடத்தும் உள்தாகும்படி என் பார், "நம்பாலதாக என்றனர். எங்கிலாததோர் இன்பம் வந்தெய்துமே" (நாவு. - 191 - 1) எனத் தேவாரத்து வருதலுங் காண்க. பாலதாக என்னும் வினையெச்சம் ஈறுகெட்டது.
திருவெம்பாவை 549 திருமாலீடத்தும் நான்முகனிடத்தும் இந்திரன் முதலிய தேவர் களிடத்தும் மற்று எவ்விடங்களிலுள்ளாரிடத்தும் இல்லாததாகிய இன்பம் நம்மிடத்து உளதாகும்படி உமையம்மையார் நம்தம்மைக் கோதாட்டி அருள் செய்தலும் இந்நிலவுலகில் ' நம்வீடுகள் தோறும் எழுந்தருளி வந்து செந்தாமரைமலர் போன்ற அழகிய திருவடிகளைத் தந்தருள் செய்ய வலிய எழுந்தருளி வருகின்ற வீரனும் அருட்கண்களை யுடைய அரசனும் அடியோங்கட்கு அரிய அமிர்தம் போல்வானும் எங்கள் தலைவனுமாகிய இறைவனைப் புகழ்ந்து பாடிக்கொண்டு நலந் திகழுமாறு தாமரைப் பூக்களையுடைய நீரில் பாய்ந்து முழுகுவோ மாக . எம்பாவாய் நீயும் நீராடியருள்வாயாக ( என இறைவியின் அருளும் திறமும் இறைவனின் ஆளும் திறமும் கூறினர் ) என்பதாம் . கண் என்பது செங்கண் என அடையடுத்து நின்றமையால் செங் கணவன் என ஒற்று இரட்டியாது நின்றது . திருமால் செந்தாம ரைப் பூப்போலும் கண்ணவனாதலின் செங்கணவன் என்றார் . செங்க ணெடுமாலும் ( அம்மானை - 1 ) செங்கண் அரி ( பூவல்லி -15 ) நிரையிதழ்த் தாமரை யன்ன நாட்டத் தளப்பரியவை ( பரி . 4 60 - 1 ) பங்கயக்க ணெடுமால் ( கோவை -120 ) என வருவன வுங் காண்க . திசைமுகன்- பிரமன் தேவர்கள் - இந்திரன் முதலிய தேவர்கள் . E. pined எங்கும் என்றது வித்தியாதத்துவத்திலுள்ள பிரளயாகல உருத் திரர்களுக்கும் சிவதத்துவத்திலுள்ள அணு சதாசிவ விஞ்ஞானாகலர் களுக்கும் எனப்பொருள் கொள்ளுமாறு அமைந்துள்ளது . இங்ஙன மன்றி திருமால் பிரமன் முதலிய தேவர்களுக்குக் கீழேயுள்ளாரிடத் தும் எனப்பொருள் கோடல் தாம் பெறும் இன்பத்திற்கு ஓரளவும் ஒப்புமையாகாதென்க . திருமால் பிரமன் முதலிய தேவத் தலைவர்களிடத்தும் இந்திரன் முதலிய தேவர்களிடத்தும் மற்று எவ்விடங்களிலுள்ளாரிடத்தும் பொருந்தாத ஒப்பற்ற இன்பமென்பார் ' செங்கணவன்பால் திசை முகன்பால் தேவர்கள்பால் எங்குமிலாததோர் இன்பம் என்றனர் . திருமாலும் பிரமனும் அதிகாரச் செருக்குடைமையால் இன்பம் பெறா ராயினர் . இன்பம் என்றது சீவன் முத்த நிலைக்கணுளதாகும் பேரின்பத் தினை . திருமால் முதலிய தேவத் தலைவர்களாலும் பெறுதற்கரிய அவ்வின்பம் கன்னியர்களாகிய நம்மிடத்தும் உள்தாகும்படி என் பார் நம்பாலதாக என்றனர் . எங்கிலாததோர் இன்பம் வந்தெய்துமே ( நாவு . - 191 - 1 ) எனத் தேவாரத்து வருதலுங் காண்க . பாலதாக என்னும் வினையெச்சம் ஈறுகெட்டது .