திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை கொங்குண் கருங்குழலி என்றது உமையம்மையாரை. கொங்கு- வாசனை. 'கொங்கு விம்முபூங்கோதை மாதரார் " (சீவக.2680) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க. கொங்குண் குழல் - மணம் தங்கிய கூந்தல். மகளிர் கூந்தலுக்கு இயற்கை வாசனை உண்டு என் பது "சூழ் பொழில்வாய் முகைதணித்தற் கரிதாம் புரிதாழ்தரு மொய்குழலே" (திருக்கோவை - 314) என்பதனாலும் அதனுரையா லுமறிக. கருங்குழலி கோதாட்டி எனக்கூட்டிக் கோதாட்ட எனத் திரிக்க. கோதாட்ட எழுந்தருளி என இயையும். 550 இறைவியின் அருள் முதற்கண் பதிதலும் இறைவன் அவ்விறை வியுடன் ஆட்கொள்ள எழுந்தருளுவர் என்க. "பந்தனை விரலியும் நீயும் நின்னடியார், பழங்குடி றொறு மெழுந்தருளிய பரனே " (திருப் பள்ளி - 8) என அடிகள் அருளியமையுங் காண்க. இங்கு - இந்நிலவுலகத்தில், இந்திரனும்,மாலயனும், ஏனோரும், வானோரும், அந்தரமே நிற்கச் சிவனவனி வந்தருளி" (அம்மானை - 3) என்பதனால் இறைவன் இவ்வுலகில் எழுந்தருளியமை பெறப்படும். இல்லங்கள் என்றது இருதய கமலமாகிய வீடுகளை. செங்கமலப் பொற்பாதம் - செந்தாமரை மலர்போன்ற அழகிய திருப்பாதம்.'"மலர்க் கமல பாதனே" (சத. - 93) " அம்பலவன் தேனார் கமலமே " (கோத்.-2) ''செழுக்க மலத்திர ளனநின், சேவடி" (அடைக். - 1) "கமலமார் பாதர்" (ஞான.381-4 ) ' தளிர் கொள் தாமரைப்பாதங்கள் " (ஞான. - 245.8) எனத் தேவாரத்து வருவனவுங் காண்க. பாதந்தந்தருளல்-வீடுபேற்றினைத் தந்தருளுதல். 'அடியார்க்குன் அணியார் பாதங்கொடுத்தி" (சதகம்.- 89). இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிப் பொற்பாதந் தந்தருளும் கொடை வீரனாதல் பற்றி இறைவனைச் 'சேவகனை'" என்றார். இன்பம் நம்பாலதாகக் கருங்குழலி கோதாட்ட எழுந்தருளி பொற்பாதம் தந்தருளும் சேவ கன் என்க. அங்கண் * அருட்கண். அரசனாகிய இறைவன் அருணோக்கமுடைய னாதலின் அங்கணரசை என்றார். " என் பிழைக்கிரங்கும் அங்கணனே” தென்னன் பெருந்துறையான் அங்கணன் " செழுமலர்க் குருந்தமே வியசீர் அங்கணா " என அடிகள் அருளியமையுங் காண்க. (6 (அடைக். - 7) (அம்மானை -1) (அருட்-3) அங்கணரசை அடைந்து'' (கோயில் நான்மணி - 11)
திருவாசக ஆராய்ச்சியுரை கொங்குண் கருங்குழலி என்றது உமையம்மையாரை . கொங்கு வாசனை . ' கொங்கு விம்முபூங்கோதை மாதரார் ( சீவக .2680 ) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க . கொங்குண் குழல் - மணம் தங்கிய கூந்தல் . மகளிர் கூந்தலுக்கு இயற்கை வாசனை உண்டு என் பது சூழ் பொழில்வாய் முகைதணித்தற் கரிதாம் புரிதாழ்தரு மொய்குழலே ( திருக்கோவை - 314 ) என்பதனாலும் அதனுரையா லுமறிக . கருங்குழலி கோதாட்டி எனக்கூட்டிக் கோதாட்ட எனத் திரிக்க . கோதாட்ட எழுந்தருளி என இயையும் . 550 இறைவியின் அருள் முதற்கண் பதிதலும் இறைவன் அவ்விறை வியுடன் ஆட்கொள்ள எழுந்தருளுவர் என்க . பந்தனை விரலியும் நீயும் நின்னடியார் பழங்குடி றொறு மெழுந்தருளிய பரனே ( திருப் பள்ளி - 8 ) என அடிகள் அருளியமையுங் காண்க . இங்கு - இந்நிலவுலகத்தில் இந்திரனும் மாலயனும் ஏனோரும் வானோரும் அந்தரமே நிற்கச் சிவனவனி வந்தருளி ( அம்மானை - 3 ) என்பதனால் இறைவன் இவ்வுலகில் எழுந்தருளியமை பெறப்படும் . இல்லங்கள் என்றது இருதய கமலமாகிய வீடுகளை . செங்கமலப் பொற்பாதம் - செந்தாமரை மலர்போன்ற அழகிய திருப்பாதம் . ' மலர்க் கமல பாதனே ( சத . - 93 ) அம்பலவன் தேனார் கமலமே ( கோத் . - 2 ) ' ' செழுக்க மலத்திர ளனநின் சேவடி ( அடைக் . - 1 ) கமலமார் பாதர் ( ஞான.381-4 ) ' தளிர் கொள் தாமரைப்பாதங்கள் ( ஞான . - 245.8 ) எனத் தேவாரத்து வருவனவுங் காண்க . பாதந்தந்தருளல் - வீடுபேற்றினைத் தந்தருளுதல் . ' அடியார்க்குன் அணியார் பாதங்கொடுத்தி ( சதகம்.- 89 ) . இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிப் பொற்பாதந் தந்தருளும் கொடை வீரனாதல் பற்றி இறைவனைச் ' சேவகனை ' என்றார் . இன்பம் நம்பாலதாகக் கருங்குழலி கோதாட்ட எழுந்தருளி பொற்பாதம் தந்தருளும் சேவ கன் என்க . அங்கண் * அருட்கண் . அரசனாகிய இறைவன் அருணோக்கமுடைய னாதலின் அங்கணரசை என்றார் . என் பிழைக்கிரங்கும் அங்கணனே தென்னன் பெருந்துறையான் அங்கணன் செழுமலர்க் குருந்தமே வியசீர் அங்கணா என அடிகள் அருளியமையுங் காண்க . ( 6 ( அடைக் . - 7 ) ( அம்மானை -1 ) ( அருட் -3 ) அங்கணரசை அடைந்து ' ' ( கோயில் நான்மணி - 11 )