திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவெம்பானவ "முழுதுலகில் வானவர்கள் முற்றுங்கூடி முடியா லுற வணங்கி முற்றம்பற்றி அழுது திருவடியே பூசைசெய்ய" (நாவு 238-2) எனத் தேவாரத்தும், "வந்திறை யடியிற் றாழும் வானவர் மகுடகோடி பந்தியின் மணிகள் சிந்த" எனத் திருவிளையாடற் புராணத்தும் வருவன காண்க. என்றது திருமால் பிரமன் முதலிய தேவர்களை. நெடியானொடு நான்முகனும் வானவரு நெருங்கி முடியான் முடிகண் மோதியுக்க முழுமணியின் றிரளை யடியா ரலகினாற் றிரட்டு மணிதில்லை யம்பலத்துக் கடியார் கொன்றை மாலையானைக் காண்பது மென்று கொலோ. எனத் திருவிசைப்பாவில் வருதலுங் காண்க. 553 விண்ணோர் முடியின் மணித்தொகை யென்றது விண்ணோரின் முடிக்கணுள்ள மாணிக்கம், மரகதம், வயிரம் முதலிய மணிகளின் தொகை என்ற வாறு. 'மாணிக்கம் ஒத்து மரகதம் போன்று வயிரம் மன்னி, ஆணி கனகமும் ஒக்கும்" (தே.நாவு.92-16) என வருதலுங் காண்க. வீறு-பொலிவு, "சாறயர் களத்து வீறு பெறத் தோன்றி" என்னும் திருமுருகாற்றுப்படையினும் (288) இப்பொருட்டாதல் காண்க. மணித்தொகை இறைவன் திருவடிப் பேரொளியால் வீறற்றன. திரு வடி மிக்க ஒளியுடைத்தாதல் சோதியுஞ் செஞ்சுடர் ஞாயிறும் ஒப்பன ஐயாறனடித்தலமே ” (தே.நாவு.92 17) என்பதனா லும் அறியப்படும். வீறற்றாற்போல் ஒளிமழுங்கி தாரகைகள் அகல என இயைக்க. { " கண்ணார் இரவி - பெருமை பொருந்திய சூரியன் எனினுமாம் இரவி கதிர் வந்து கார் கரப்ப ஒளி மழுங்கித் தாரகைகள் அகல எனக்கூட்டி. இரவியின் கதிர்வரல் கார் கரத்தற்கும், கார் கரத்தல் தாரகைகள் ஒளிமழுங்கிக் கரத்தற்கும், ஏதுவாகக் கொள்க. "மாயிரு விசும்பிற் பன்மீ னொளிகெட, ஞாயிறு தோன்றி யாங்கு" (பதிற். 61 - 12 - 3) என வருதலுங் காண்க. வந்து என்னும் எச்சம் கார ணப்பொருட்டு; வர எனத்திரிக்க; கார் - கருமை. ஈண்டு வைக றையிற் பொருந்திய கரிய இருளை உணர்த்தியது; ஆகுபெயர். ஒளி மழுங்குதலால் விண்மீன்கள் புலப்படாமையின் தாரகைகள் அகல" என்றார். தாம் - அசை. இரவி கதிர் வருதலும் கார் கரத்தலும் தாரகைகள் அகல்தலும் ஆகிய நிகழ்ச்சிகளால் புலரிக்காலம் வந் தமை கூறப்பட்டது. அகலப் (புலரிக்காலம் வந்தமையின்) பாடி ஆடு என முடிக்க.
திருவெம்பானவ முழுதுலகில் வானவர்கள் முற்றுங்கூடி முடியா லுற வணங்கி முற்றம்பற்றி அழுது திருவடியே பூசைசெய்ய ( நாவு 238-2 ) எனத் தேவாரத்தும் வந்திறை யடியிற் றாழும் வானவர் மகுடகோடி பந்தியின் மணிகள் சிந்த எனத் திருவிளையாடற் புராணத்தும் வருவன காண்க . என்றது திருமால் பிரமன் முதலிய தேவர்களை . நெடியானொடு நான்முகனும் வானவரு நெருங்கி முடியான் முடிகண் மோதியுக்க முழுமணியின் றிரளை யடியா ரலகினாற் றிரட்டு மணிதில்லை யம்பலத்துக் கடியார் கொன்றை மாலையானைக் காண்பது மென்று கொலோ . எனத் திருவிசைப்பாவில் வருதலுங் காண்க . 553 விண்ணோர் முடியின் மணித்தொகை யென்றது விண்ணோரின் முடிக்கணுள்ள மாணிக்கம் மரகதம் வயிரம் முதலிய மணிகளின் தொகை என்ற வாறு . ' மாணிக்கம் ஒத்து மரகதம் போன்று வயிரம் மன்னி ஆணி கனகமும் ஒக்கும் ( தே.நாவு.92-16 ) என வருதலுங் காண்க . வீறு - பொலிவு சாறயர் களத்து வீறு பெறத் தோன்றி என்னும் திருமுருகாற்றுப்படையினும் ( 288 ) இப்பொருட்டாதல் காண்க . மணித்தொகை இறைவன் திருவடிப் பேரொளியால் வீறற்றன . திரு வடி மிக்க ஒளியுடைத்தாதல் சோதியுஞ் செஞ்சுடர் ஞாயிறும் ஒப்பன ஐயாறனடித்தலமே ( தே.நாவு .92 17 ) என்பதனா லும் அறியப்படும் . வீறற்றாற்போல் ஒளிமழுங்கி தாரகைகள் அகல என இயைக்க . { கண்ணார் இரவி - பெருமை பொருந்திய சூரியன் எனினுமாம் இரவி கதிர் வந்து கார் கரப்ப ஒளி மழுங்கித் தாரகைகள் அகல எனக்கூட்டி . இரவியின் கதிர்வரல் கார் கரத்தற்கும் கார் கரத்தல் தாரகைகள் ஒளிமழுங்கிக் கரத்தற்கும் ஏதுவாகக் கொள்க . மாயிரு விசும்பிற் பன்மீ னொளிகெட ஞாயிறு தோன்றி யாங்கு ( பதிற் . 61 - 12 - 3 ) என வருதலுங் காண்க . வந்து என்னும் எச்சம் கார ணப்பொருட்டு ; வர எனத்திரிக்க ; கார் - கருமை . ஈண்டு வைக றையிற் பொருந்திய கரிய இருளை உணர்த்தியது ; ஆகுபெயர் . ஒளி மழுங்குதலால் விண்மீன்கள் புலப்படாமையின் தாரகைகள் அகல என்றார் . தாம் - அசை . இரவி கதிர் வருதலும் கார் கரத்தலும் தாரகைகள் அகல்தலும் ஆகிய நிகழ்ச்சிகளால் புலரிக்காலம் வந் தமை கூறப்பட்டது . அகலப் ( புலரிக்காலம் வந்தமையின் ) பாடி ஆடு என முடிக்க .