திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை கலப்பினால் அவன் அவள் அது என்னும் முக்கூற்றுப் பிரபஞ்ச மாகியும் விண் முதலிய ஐம்பெரும் பூதங்களாகியும் நிற்கும் இறை வன் பொருட்டன்மையால் அவற்றின் வேறாயும் நிற்றலின் "பெண் கணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளி சேர் விண்ணாகி இத்தனையும் வேறாகி" என்றார். 554 "பித்தனே எல்லா வயிருமாய்த் தழைத்துப் பிழைத்து அவை அல்லையாய் நிற்கும் எத்தனே" (பிடித்த:8) (கோயிற்.-6) என அடிகள் பிறாண்டு அருளியமையுங் காண்க. இறைவன் கலப் பினால் வேறாகி விண் முதலியனவாய் நிற்றல், "நிரந்த ஆகாயம் நீர் நிலம் தீ காலாய் அவையல்லையாய் ஆங்கே கரந்ததோர் உருவே'' 'இருநிலனாய்த் தீயாகி நீருமாகி இயமானனாய் எறியுங் காற்றுமாகி அருநிலைய திங்களாய் ஞாயிறாகி ஆகாசமாய் அட்ட மூர்த்தியாகிப் பெருநலமுங் குற்றமும் பெண்ணும் ஆணும் பிறருருவுந் தம்முருவுந் தாமேயாகி நெருநலையாய் இன்றாகி நாளையாகி நிமிர்புன் சடையடிகள் நின்றவாறே" எனவும், தன்மையால் அவையல்லையாய் நிற்றல் 'விரிகதிர் ஞாயிறல்லர் மதியல்லர் வேத விதியல்லர் விண்ணும் நிலனும் திரிதரு வாயு வல்லர் செறிதீயு மல்லர் தெளிநீரு மல்லர் தெரியில் அரிதரு கண்ணி யாளை யொருபாக அருள்கா ரணத்தில் வருவார் எரியர வார மார்பர் இமையாரு மல்லர் இமைப்பாரு மல்ல ரிவரே" க (தே.நாவு 307-1) (தே.8-2) எனவும் திருநாவுக்கரசு சுவாமிகள் அருளியவாற்றானுமறியப்படும். கண்ணாரமுதம் - அகக் கண்ணினாலும் புறக்கண்ணினாலும் நுகரப் படும் அமுதம் 'கண்ணாரமுதக் கடலேபோற்றி" (போற்றி-150) என வருதலுங் காண்க. இதனால் இறைவனாகிய அமுதின் விசேடங் கூறப்பட்டது. கழல்பாடி ஆடு என முடிக்க. 557 இதன்கண் "நின்றான் கழல்பாடி என்றமையால் சத்தியை வியந்தது எனப் பதிகப்பொருள் புலனாகுமாறு காண்க. 18
திருவாசக ஆராய்ச்சியுரை கலப்பினால் அவன் அவள் அது என்னும் முக்கூற்றுப் பிரபஞ்ச மாகியும் விண் முதலிய ஐம்பெரும் பூதங்களாகியும் நிற்கும் இறை வன் பொருட்டன்மையால் அவற்றின் வேறாயும் நிற்றலின் பெண் கணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளி சேர் விண்ணாகி இத்தனையும் வேறாகி என்றார் . 554 பித்தனே எல்லா வயிருமாய்த் தழைத்துப் பிழைத்து அவை அல்லையாய் நிற்கும் எத்தனே ( பிடித்த : 8 ) ( கோயிற் . - 6 ) என அடிகள் பிறாண்டு அருளியமையுங் காண்க . இறைவன் கலப் பினால் வேறாகி விண் முதலியனவாய் நிற்றல் நிரந்த ஆகாயம் நீர் நிலம் தீ காலாய் அவையல்லையாய் ஆங்கே கரந்ததோர் உருவே ' ' ' இருநிலனாய்த் தீயாகி நீருமாகி இயமானனாய் எறியுங் காற்றுமாகி அருநிலைய திங்களாய் ஞாயிறாகி ஆகாசமாய் அட்ட மூர்த்தியாகிப் பெருநலமுங் குற்றமும் பெண்ணும் ஆணும் பிறருருவுந் தம்முருவுந் தாமேயாகி நெருநலையாய் இன்றாகி நாளையாகி நிமிர்புன் சடையடிகள் நின்றவாறே எனவும் தன்மையால் அவையல்லையாய் நிற்றல் ' விரிகதிர் ஞாயிறல்லர் மதியல்லர் வேத விதியல்லர் விண்ணும் நிலனும் திரிதரு வாயு வல்லர் செறிதீயு மல்லர் தெளிநீரு மல்லர் தெரியில் அரிதரு கண்ணி யாளை யொருபாக அருள்கா ரணத்தில் வருவார் எரியர வார மார்பர் இமையாரு மல்லர் இமைப்பாரு மல்ல ரிவரே ( தே.நாவு 307-1 ) ( தே.8-2 ) எனவும் திருநாவுக்கரசு சுவாமிகள் அருளியவாற்றானுமறியப்படும் . கண்ணாரமுதம் - அகக் கண்ணினாலும் புறக்கண்ணினாலும் நுகரப் படும் அமுதம் ' கண்ணாரமுதக் கடலேபோற்றி ( போற்றி -150 ) என வருதலுங் காண்க . இதனால் இறைவனாகிய அமுதின் விசேடங் கூறப்பட்டது . கழல்பாடி ஆடு என முடிக்க . 557 இதன்கண் நின்றான் கழல்பாடி என்றமையால் சத்தியை வியந்தது எனப் பதிகப்பொருள் புலனாகுமாறு காண்க . 18