திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

173 திருவெம்பாவை உங்கையிற் பிள்ளை யுனக்கே அடைக்கலமென் றங்கப் பழஞ்சொற் புதுக்குமெம் அச்சத்தால் எங்கள் பெருமான் உனக்கொன் றுரைப்போங் கேள் எங்கொங்கை நின்னன்ப ரல்லார்தோள் சேரற்க எங்கை யுனக்கல்லா தெப்பணியுஞ் செய்யற்க கங்குல் பகலெங்கண் மற்றொன்றுங் காணற்க இங்கிப் பரிசே யெமக்கெங்கோன் நல்குதியேல் எங்கெழிலென் ஞாயி றெமக்கேலோ ரெம்பாவாய். 555 ப - ரை: உங்கையில் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று அங்கு அ பழம் சொல் புதுக்கும் எம் அச்சத்தால் - அடைக்கலம் புகுந்து வேண்டுவோர், யான் உமது கையிற்பிள்ளை உம்மிடத்தி லேயே அடைக்கலமாக உள்ளேன் என்று அங்கே கூறும் அந்தப் பழமொழியை புதுப்பித்துத் தேவரீரிடத்து இங்கு நாங்கள் கூறுவது தவறாகும் என்னும் அச்சத்துடனே கூறிக்கொண்டு, எங்கள் பெரு மான் - எங்கள் தலைவனே, உனக்கு ஒன்று உரைப்போம் கேள்- உனக்கு ஒரு விண்ணப்பம் செய்கின்றோம் அதனைக் கேட்டருள்க எம் கொங்கை நின் அன்பர் அல்லார் தோள் சேரற்க - எங்களுடைய தனங்கள் நின் அன்பரல்லாதவர்களின் தோள்களைச் சேரா தொழிக. எம் கை உனக்கு அல்லாது எப்பணியும் செய்யற்க- எமது கைகள் தேவரீருக்கன்றி மற்று எத்தேவர்களுக்கும் எவ்வித தொண்டும் செய்யாதொழிக, எம் கண் கங்குல் பகல் மற்று ஒன் றும் காணற்க- எமது கண்கள் இரவினும் பகலினும் தேவரீரது திருக்கோலத்தையன்றி வேறொன்றையும் காணாதொழிக. எம் கோன் - எங்கள் இறைவனே, இங்கு இப்பரிசே எமக்கு நல்குதியேல்- இவ்விடத்து இத்தன்மையான பேறுகளை எங்களுக்குத் தந்தருளு வீராகில், ஞாயிறு எங்கு எழில் என் - சூரியன் கிழக்கிலன்றி வேறு எத்திசையில் உதித்தாலும் வரக்கடவ தீமையாது? ஒன்றுமில்லை யாம். எம்பாவாய்-எங்கள் வழிபாட்டிற்குரிய பாவையாகிய பார்வதி தேவீ! நாங்கள் வேண்டிக்கொண்டவாறு இறைவன் அருளுமாறு உனதருளையும் வேண்டுகின்றோம் (எனத் தம்மை இறைவனிடத்து அடைக்கலமாக ஒப்புவித்தனர்) என்பதாம். வது உங்கையிற் பிள்ளை, உனக்கே அடைக்கலம் என்று அங்கே கூறும் அப்பழமொழியைப் புதுப்பித்துத் தேவரீரிடத்து இங்கு நாங்கள் கூறு தவறாகும் என்னும் அச்சத்துடனே கூறிக்கொண்டு, எங்கள் பெருமானே உனக்கு ஒரு விண்ணப்பம் செய்கின்றோம் அதனைக் கேட்டருள்க. எங்கொங்கைகள் நின் அன்பரல்லாதவர்கள் தோளைச் சேராதொழிக. எங்கை உனக்கு அல்லாது மற்றெத் தேவர்க்கும் எவ்வித தொண்டும் செய்யாதொழிக. இரவினும் பகலினும் தேவ ரீரது திருக்கோலத்தையன்றி வேறொன்றையும் காணாதொழிக. எங்
173 திருவெம்பாவை உங்கையிற் பிள்ளை யுனக்கே அடைக்கலமென் றங்கப் பழஞ்சொற் புதுக்குமெம் அச்சத்தால் எங்கள் பெருமான் உனக்கொன் றுரைப்போங் கேள் எங்கொங்கை நின்னன்ப ரல்லார்தோள் சேரற்க எங்கை யுனக்கல்லா தெப்பணியுஞ் செய்யற்க கங்குல் பகலெங்கண் மற்றொன்றுங் காணற்க இங்கிப் பரிசே யெமக்கெங்கோன் நல்குதியேல் எங்கெழிலென் ஞாயி றெமக்கேலோ ரெம்பாவாய் . 555 - ரை : உங்கையில் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று அங்கு பழம் சொல் புதுக்கும் எம் அச்சத்தால் - அடைக்கலம் புகுந்து வேண்டுவோர் யான் உமது கையிற்பிள்ளை உம்மிடத்தி லேயே அடைக்கலமாக உள்ளேன் என்று அங்கே கூறும் அந்தப் பழமொழியை புதுப்பித்துத் தேவரீரிடத்து இங்கு நாங்கள் கூறுவது தவறாகும் என்னும் அச்சத்துடனே கூறிக்கொண்டு எங்கள் பெரு மான் - எங்கள் தலைவனே உனக்கு ஒன்று உரைப்போம் கேள் உனக்கு ஒரு விண்ணப்பம் செய்கின்றோம் அதனைக் கேட்டருள்க எம் கொங்கை நின் அன்பர் அல்லார் தோள் சேரற்க - எங்களுடைய தனங்கள் நின் அன்பரல்லாதவர்களின் தோள்களைச் சேரா தொழிக . எம் கை உனக்கு அல்லாது எப்பணியும் செய்யற்க எமது கைகள் தேவரீருக்கன்றி மற்று எத்தேவர்களுக்கும் எவ்வித தொண்டும் செய்யாதொழிக எம் கண் கங்குல் பகல் மற்று ஒன் றும் காணற்க- எமது கண்கள் இரவினும் பகலினும் தேவரீரது திருக்கோலத்தையன்றி வேறொன்றையும் காணாதொழிக . எம் கோன் - எங்கள் இறைவனே இங்கு இப்பரிசே எமக்கு நல்குதியேல் இவ்விடத்து இத்தன்மையான பேறுகளை எங்களுக்குத் தந்தருளு வீராகில் ஞாயிறு எங்கு எழில் என் - சூரியன் கிழக்கிலன்றி வேறு எத்திசையில் உதித்தாலும் வரக்கடவ தீமையாது ? ஒன்றுமில்லை யாம் . எம்பாவாய் - எங்கள் வழிபாட்டிற்குரிய பாவையாகிய பார்வதி தேவீ ! நாங்கள் வேண்டிக்கொண்டவாறு இறைவன் அருளுமாறு உனதருளையும் வேண்டுகின்றோம் ( எனத் தம்மை இறைவனிடத்து அடைக்கலமாக ஒப்புவித்தனர் ) என்பதாம் . வது உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று அங்கே கூறும் அப்பழமொழியைப் புதுப்பித்துத் தேவரீரிடத்து இங்கு நாங்கள் கூறு தவறாகும் என்னும் அச்சத்துடனே கூறிக்கொண்டு எங்கள் பெருமானே உனக்கு ஒரு விண்ணப்பம் செய்கின்றோம் அதனைக் கேட்டருள்க . எங்கொங்கைகள் நின் அன்பரல்லாதவர்கள் தோளைச் சேராதொழிக . எங்கை உனக்கு அல்லாது மற்றெத் தேவர்க்கும் எவ்வித தொண்டும் செய்யாதொழிக . இரவினும் பகலினும் தேவ ரீரது திருக்கோலத்தையன்றி வேறொன்றையும் காணாதொழிக . எங்