திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

562 175 திருவாசக ஆராய்ச்சியுரை தரவு கொச்சகக் கலிப்பா திருச்சிற்றம்பலம் செங்க ணெடுமாலுஞ் சென்றிடந்துங் காண்பரிய பொங்கு மலர்ப்பாதம் பூதலத்தே போந்தருளி எங்கள் பிறப்பறுத்திட் டெந்தரமு மாட்கொண்டு தெங்கு திரள்சோலைத் தென்னன் பெருந்துறையான் அங்கணன் அந்தணனா யறைகூவி வீடருளும் அங்கருணை வார்கழலே பாடுதுங்காண் அம்மானாய். ப - ரை. அம்மானாய் - அம்மனை ஆடும் பெண்ணே, தெங்கு திரள் சோலை தென்னன் பெருந்துறையான் - தென்னை மரங்கள் செறிந்த சோலையையுடைய தென்னாட்டரசனும் திருப்பெருந்துறையில் எழுந்த ருளியிருப்பவனும், அம்கணன் - அழகிய அருட்கண்ணை எயுடையவனுமா கிய இறைவன், அந்தணனாய் -பேரருளாளனாய், செங்கண் நெடுமா லும் - இயல்பாகவே சிவந்த கண்ணையுடைய நெடிய திருவுருவினையு டைய திருமாலும், இடந்து சென்று காண்பு அரிய-பூமியை அகழ்ந்து கீழே சென்றும் காணமுடியாத, பொங்கு மலர்பாதம் - அருளாகிய தேன்மிகுகின்ற தாமரைமலர்போலும் திருவடிகள், பூதலத்தே போந் தருளி - பூவுலகத்திற் பொருந்துமாறு வலிய எழுந்தருளி, அறைகூவி- வலிந்து அழைத்து, எம் தரமும் ஆட்கொண்டு -எங்களது பக்குவக் குறைவான நிலைமையிலும் ஆட்கொண்டருளி, எங்கள் பிறப்பு அறுத் திட்டு - எங்கள் பிறவித் துன்பத்தை நீக்கியருளி, வீடு அருளும்- வீடு பேறாகத் தந்தருளும், அம்கருணை வார்கழலே பாடுதும் - அழ கிய கருணையையுடைய அவனது நீண்ட வீரக்கழலையுடைய திருவடி களையே பாடிக்கொண்டு விளையாடுவோமாக. அம்மானாய், தென்னன் பெருந்துறையான் அங்கணன் ஆகிய இறைவன் அந்தணனாய், திருமாலும் இடந்து சென்றும் காணமுடி யாத திருவடிகள் பூவுலகிற் பொருந்துமாறு வலிய வந்து, அறை கூவி, எங்களது பக்குவக் குறைவான நிலைமையிலும் ஆட்கொண் டருளிப் பிறப்பறுத்திட்டு வீடுபேறாக நல்கும் அழகிய கருணையை யுடைய திருவடிகளையே பாடிக்கொண்டு விளையாடுவோமாக என்ப தாம். செங்கண் நெடுமால் - இயல்பாகவே சிவந்த கண்ணையுடைய திரு மால். "செயிர்தீர் செங்கட் செல்வ" (பரி. - 4 - 10) என்புழிச் செயிர்தீர் செங்கண் என்பதற்கு "கோபத்தாலன்றி இயல்பாகவே சிவந்த கண்'' எனப் A3 vழகர் உரைத்தமையுங் காண்க.
562 175 திருவாசக ஆராய்ச்சியுரை தரவு கொச்சகக் கலிப்பா திருச்சிற்றம்பலம் செங்க ணெடுமாலுஞ் சென்றிடந்துங் காண்பரிய பொங்கு மலர்ப்பாதம் பூதலத்தே போந்தருளி எங்கள் பிறப்பறுத்திட் டெந்தரமு மாட்கொண்டு தெங்கு திரள்சோலைத் தென்னன் பெருந்துறையான் அங்கணன் அந்தணனா யறைகூவி வீடருளும் அங்கருணை வார்கழலே பாடுதுங்காண் அம்மானாய் . - ரை . அம்மானாய் - அம்மனை ஆடும் பெண்ணே தெங்கு திரள் சோலை தென்னன் பெருந்துறையான் - தென்னை மரங்கள் செறிந்த சோலையையுடைய தென்னாட்டரசனும் திருப்பெருந்துறையில் எழுந்த ருளியிருப்பவனும் அம்கணன் - அழகிய அருட்கண்ணை எயுடையவனுமா கிய இறைவன் அந்தணனாய் -பேரருளாளனாய் செங்கண் நெடுமா லும் - இயல்பாகவே சிவந்த கண்ணையுடைய நெடிய திருவுருவினையு டைய திருமாலும் இடந்து சென்று காண்பு அரிய - பூமியை அகழ்ந்து கீழே சென்றும் காணமுடியாத பொங்கு மலர்பாதம் - அருளாகிய தேன்மிகுகின்ற தாமரைமலர்போலும் திருவடிகள் பூதலத்தே போந் தருளி - பூவுலகத்திற் பொருந்துமாறு வலிய எழுந்தருளி அறைகூவி வலிந்து அழைத்து எம் தரமும் ஆட்கொண்டு -எங்களது பக்குவக் குறைவான நிலைமையிலும் ஆட்கொண்டருளி எங்கள் பிறப்பு அறுத் திட்டு - எங்கள் பிறவித் துன்பத்தை நீக்கியருளி வீடு அருளும் வீடு பேறாகத் தந்தருளும் அம்கருணை வார்கழலே பாடுதும் - அழ கிய கருணையையுடைய அவனது நீண்ட வீரக்கழலையுடைய திருவடி களையே பாடிக்கொண்டு விளையாடுவோமாக . அம்மானாய் தென்னன் பெருந்துறையான் அங்கணன் ஆகிய இறைவன் அந்தணனாய் திருமாலும் இடந்து சென்றும் காணமுடி யாத திருவடிகள் பூவுலகிற் பொருந்துமாறு வலிய வந்து அறை கூவி எங்களது பக்குவக் குறைவான நிலைமையிலும் ஆட்கொண் டருளிப் பிறப்பறுத்திட்டு வீடுபேறாக நல்கும் அழகிய கருணையை யுடைய திருவடிகளையே பாடிக்கொண்டு விளையாடுவோமாக என்ப தாம் . செங்கண் நெடுமால் - இயல்பாகவே சிவந்த கண்ணையுடைய திரு மால் . செயிர்தீர் செங்கட் செல்வ ( பரி . - 4 - 10 ) என்புழிச் செயிர்தீர் செங்கண் என்பதற்கு கோபத்தாலன்றி இயல்பாகவே சிவந்த கண் ' ' எனப் A3 v ழகர் உரைத்தமையுங் காண்க .