திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவம்மானை 'ஆராவமுதே யளவிலாப் பெம்மானே" ஆராவமுதின் அருட்டா ளினைபாடி €; என வருவனவுங் காண்க. அலை கடல்வாய் மீன்விசிறும் என்றது பரதவர் குலத்து மகளா கத் தோன்றிய உமாதேவியை மணந்து கொள்ளும் பொருட்டு அலை கடலில் மீன்பிடிக்க வலையை வீசிய என்றவாறு. 571 (சிவபுராணம் - 67) (பொன்னூசல்.-1) பெருந்துறையெர் பேரருளாளன் பெண்பா லுகந்து மணிவலை கொண்டு வான்மீன் விசிறும் வகையறிவார்'" என அடிகள் பிறாண்டும் அருளியமை காண்க. " (வார்த்தை.-3) *நெடுஞ்சடைக் கிடந்த குறுச் பிறைக் கொழுத்துங் சருமுகில் வெளுத்த திருமிடற் றிருளு நுதன்மதி கிழித்த தழலவிர் நோக்கமு மறைத்தொரு சிறுகுடிப் பரதவ னாகிப் பொன்றலைப்புனர்வலை கொடுங்கர மாக்கி நெடுங்கடல் கலக்கு மொருமீன் படுத்த நிறையரு ணாயகன்" எனக் கல்லாடத்து வருதலும் ஈண்டு அறியற்பாலது. (15 23-29) விசிறும் வாரியன் என இயையும். 'மீன் வலை வீசிய கானவன் (திருப்படை.-1) என அடிகள் பிறாண்டு அருளியமையுங் காண்க. பேராசை வாரியன் - அன்பர்களுக்குப் பெருவிருப்பினைச் செய்கின்ற அருட்கடலாயுள்ளவன். "ஐயனே அரனே அருட்பெருங் கடலே" (செத்.-1) என அடிகள் அருளியவாறுங் காண்க. வாரி - ஈண்டு அருட்கடல். "# அரியான் பேராளன் தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றி வழியருளி, வந்துளம் புகுந்த அமுதாய் மீன்விசிறும் வாரியனைப் பாடுதும் என வினைமுடிபு செய்க. இதன்கண் பேராசை வாரியனைப் பாடுதும்" என்பதனால் ஆனந்தக்களிப்பு என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க. 2
திருவம்மானை ' ஆராவமுதே யளவிலாப் பெம்மானே ஆராவமுதின் அருட்டா ளினைபாடி ; என வருவனவுங் காண்க . அலை கடல்வாய் மீன்விசிறும் என்றது பரதவர் குலத்து மகளா கத் தோன்றிய உமாதேவியை மணந்து கொள்ளும் பொருட்டு அலை கடலில் மீன்பிடிக்க வலையை வீசிய என்றவாறு . 571 ( சிவபுராணம் - 67 ) ( பொன்னூசல் . - 1 ) பெருந்துறையெர் பேரருளாளன் பெண்பா லுகந்து மணிவலை கொண்டு வான்மீன் விசிறும் வகையறிவார் ' என அடிகள் பிறாண்டும் அருளியமை காண்க . ( வார்த்தை . - 3 ) * நெடுஞ்சடைக் கிடந்த குறுச் பிறைக் கொழுத்துங் சருமுகில் வெளுத்த திருமிடற் றிருளு நுதன்மதி கிழித்த தழலவிர் நோக்கமு மறைத்தொரு சிறுகுடிப் பரதவ னாகிப் பொன்றலைப்புனர்வலை கொடுங்கர மாக்கி நெடுங்கடல் கலக்கு மொருமீன் படுத்த நிறையரு ணாயகன் எனக் கல்லாடத்து வருதலும் ஈண்டு அறியற்பாலது . ( 15 23-29 ) விசிறும் வாரியன் என இயையும் . ' மீன் வலை வீசிய கானவன் ( திருப்படை . - 1 ) என அடிகள் பிறாண்டு அருளியமையுங் காண்க . பேராசை வாரியன் - அன்பர்களுக்குப் பெருவிருப்பினைச் செய்கின்ற அருட்கடலாயுள்ளவன் . ஐயனே அரனே அருட்பெருங் கடலே ( செத் . - 1 ) என அடிகள் அருளியவாறுங் காண்க . வாரி - ஈண்டு அருட்கடல் . # அரியான் பேராளன் தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றி வழியருளி வந்துளம் புகுந்த அமுதாய் மீன்விசிறும் வாரியனைப் பாடுதும் என வினைமுடிபு செய்க . இதன்கண் பேராசை வாரியனைப் பாடுதும் என்பதனால் ஆனந்தக்களிப்பு என்னும் பதிக நுதலிய பொருள் போதருதல் காண்க . 2