திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

178 திருவம்மானை வான்வந்த தேவர்களும் மாலயனோ டிந்திரனும் கானின்று வற்றியும் புற்றெழுந்துங் காண்பரிய தான்வந்து நாயேனைத் தாய்போற் றலையளித்திட் டூன்வந்து ரோமங்கள் உள்ளே உயிர்ப்பெய்து தேன்வந் தமுதின் தெளிவி னொளிவந்த வான்வந்த வார்கழலே பாடுதுங்காண் அர்மானாய். 575 ப - ரை. அம்மானாய் - அம்மனையாடும் பெண்களே, வான்வந்த தேவர்களும் - விண்ணுலகத்திலுள்ள தேவர்களும், மால் அயனோடு இந்திரனும் - திருமாலும் பிரமனும் இந்திரனும், கான் நின்று வற் றியும் - காட்டிலே நின்று ஊண் உறக்கமின்றித் தவஞ்செய்து உடம்பு வரண்டும், புற்று எழுந்தும் - நிலைபெயராதிருந்து தவஞ் செய்த லால் கறையான் புற்றெழுந்து மூடப்பெற்றும், காண்பு அரிய தான் வந்து - காண்டற்கரிய உயர்வினையுடைய இறைவன் தானாக வலிய வந்து, நாயேனை தாய்போல் தலையளித்திட்டு - நாய்போல் இழி வுடைய என்னைத் தாய்போலக் காத்து, ஊன் வந்து -என்னுடைய ஊனுடம்பினுள்ளே புகுந்து, உரோமங்கள் உள்ளே உயிர்ப்பெய்து தேன் வந்த - உரோமத்துவாரங்களினுள்ளே வெளிப்படுகின்ற தேன் போலும் இனிமை பொருந்திய, அமுதின் தெளிவின் - அமுதத்தினது தெளிவைப்போன்ற, ஒளிவந்த வான் வந்த வார்கழலே பாடுதும் - ஒளி பொருந்திய இருதய கமலத்திலுள்ள பரமாகாயத் தில் நடனம் செய்கின்ற அவ்விறைவனது திருவடிகளைப் பாடிக் கொண்டு ஆடுவோமாக. அம்மானாய், தேவர்களும் திருமாலும் இந்திரனும் காட்டிலே நின்று தவஞ் செய்தலால் உடம்பு வற்றியும் புற்று எழுந் தும் காண்டற்கரிய உயர்வினையுடைய இறைவன் தானாக வலிய வந்து நாயேனைத் தாய்போலத் தலையளித்திட்டு, எனது உடம்பி னுள்ளே தானே வந்து உரோமத்துவாரங்களினுள்ளே வெளிப்படு கின்ற தேன்போலும் இனிமை பொருந்திய அமுதின் தெளிவினைப் போன்ற, ஒளிவந்த வான் வந்த நீண்ட திருவடிகளைப்பாடிக்கொண்டு ஆடுவோமாக என்பதாம். வான் இரண்டனுள் முன்னது பூதாகாயம்; பின்னது பரமாகாயம். அயனோடு என்னும் எண் ஓடுவை மால் என்பதனோடுங் கூட்டுக. மாலயனோடிந்திரன் - திருமாலும், பிரமனும், இந்திரனும், "மாலய னோடிந்திரனும்”(அம்மானை - 12 எனவும், 'மறைமுதல் வானவரும் மாலயனிந்திரனும்" (சுந். -85 - 8) எனவும் வருவன காண்க, கானின்று வற்றியும் என்றது பூமியின்கண் காட்டிலே நின்று ஊணு றக்கமின்றித் தவஞ்செய்தலால் உடல் மெலிந்து என்றவாறு.
178 திருவம்மானை வான்வந்த தேவர்களும் மாலயனோ டிந்திரனும் கானின்று வற்றியும் புற்றெழுந்துங் காண்பரிய தான்வந்து நாயேனைத் தாய்போற் றலையளித்திட் டூன்வந்து ரோமங்கள் உள்ளே உயிர்ப்பெய்து தேன்வந் தமுதின் தெளிவி னொளிவந்த வான்வந்த வார்கழலே பாடுதுங்காண் அர்மானாய் . 575 - ரை . அம்மானாய் - அம்மனையாடும் பெண்களே வான்வந்த தேவர்களும் - விண்ணுலகத்திலுள்ள தேவர்களும் மால் அயனோடு இந்திரனும் - திருமாலும் பிரமனும் இந்திரனும் கான் நின்று வற் றியும் - காட்டிலே நின்று ஊண் உறக்கமின்றித் தவஞ்செய்து உடம்பு வரண்டும் புற்று எழுந்தும் - நிலைபெயராதிருந்து தவஞ் செய்த லால் கறையான் புற்றெழுந்து மூடப்பெற்றும் காண்பு அரிய தான் வந்து - காண்டற்கரிய உயர்வினையுடைய இறைவன் தானாக வலிய வந்து நாயேனை தாய்போல் தலையளித்திட்டு - நாய்போல் இழி வுடைய என்னைத் தாய்போலக் காத்து ஊன் வந்து -என்னுடைய ஊனுடம்பினுள்ளே புகுந்து உரோமங்கள் உள்ளே உயிர்ப்பெய்து தேன் வந்த - உரோமத்துவாரங்களினுள்ளே வெளிப்படுகின்ற தேன் போலும் இனிமை பொருந்திய அமுதின் தெளிவின் - அமுதத்தினது தெளிவைப்போன்ற ஒளிவந்த வான் வந்த வார்கழலே பாடுதும் - ஒளி பொருந்திய இருதய கமலத்திலுள்ள பரமாகாயத் தில் நடனம் செய்கின்ற அவ்விறைவனது திருவடிகளைப் பாடிக் கொண்டு ஆடுவோமாக . அம்மானாய் தேவர்களும் திருமாலும் இந்திரனும் காட்டிலே நின்று தவஞ் செய்தலால் உடம்பு வற்றியும் புற்று எழுந் தும் காண்டற்கரிய உயர்வினையுடைய இறைவன் தானாக வலிய வந்து நாயேனைத் தாய்போலத் தலையளித்திட்டு எனது உடம்பி னுள்ளே தானே வந்து உரோமத்துவாரங்களினுள்ளே வெளிப்படு கின்ற தேன்போலும் இனிமை பொருந்திய அமுதின் தெளிவினைப் போன்ற ஒளிவந்த வான் வந்த நீண்ட திருவடிகளைப்பாடிக்கொண்டு ஆடுவோமாக என்பதாம் . வான் இரண்டனுள் முன்னது பூதாகாயம் ; பின்னது பரமாகாயம் . அயனோடு என்னும் எண் ஓடுவை மால் என்பதனோடுங் கூட்டுக . மாலயனோடிந்திரன் - திருமாலும் பிரமனும் இந்திரனும் மாலய னோடிந்திரனும் ( அம்மானை - 12 எனவும் ' மறைமுதல் வானவரும் மாலயனிந்திரனும் ( சுந் . -85 - 8 ) எனவும் வருவன காண்க கானின்று வற்றியும் என்றது பூமியின்கண் காட்டிலே நின்று ஊணு றக்கமின்றித் தவஞ்செய்தலால் உடல் மெலிந்து என்றவாறு .