திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

576 ருவாசக ஆராய்ச்சியுரை "என்பெழுந் தியங்கு மியாக்கையர் நன்பகற் பலவுடன் கழிந்த வுண்டிய ரிகலொடு துனியில் காட்சி முனிவர்' (13037) எனத் திருமுருகாற்றுப்படையில் வருதலுங் காண்க. புற்றெழுதல் நிலைபெயராது நெடுங்காலமிருத்தலால் உடம்பை மூடிக்கறையான்- புற்றெழுதுதலை. காண்பரிய தான் என இயையும். தான் என்றது இறைவனை, "தம்மை யுணர்ந்து தமையுடைய தன்னுணர்வார்" தலைய எனச் சிவஞான போதத்து (அவையடக்) வருதலுங் காண்க. ளித்திட்டு - காத்து. "தானே வந்தெம்மைத் தலையளித் தாட்கொண் பேரருள் டருளும்" (திருவெம்பாவை - 6) என வருதலுங் காண்க. செய்து எனினுமாம். ஊன் - தசை. தசையையுடைய உடம்பினை உணர்த்தியது. ஊன் வந்து - உடம்பினுள்ளே புகுந்து "ஊனே புகுந்த வுனையுணர்ந்தே' (பிரார்த்தனை -10) "ஊனாருடல் புகுந்தான்" (உயிருண்ணி-2) என அடிகள் பிறாண்டு அருளியமையுங் காண்க. இறைவன் உரோ மத்துவாரங்களினுள்ளே வெளிப்படுகின்ற தேன்போலும் இனிமை செய்தலின் ''உரோமங்கள் உள்ளே உயிர்ப்பெய்து தேன் வந்து'' என்றார். "வாக்கிறந் தமுதம் மயிர்க்கால் தோறும் தேக்கிடச் செய்தனன்" (திருவண்ட - 170 - 1) என வருதல் காண்க. உயிர்ப் பெய்து- வினைத்தொகை; உயிர்ப்பெய்துகின்றஎன விரியும். உயிர்ப்பெய்தல் - தோற்றமடைதல். "உருவுருவாகி யகரமோ டுயிர்த் தலும்" என தொல்காப்பியத்தும் இப்பொருட்டாதல் காண்க. தேன்வந்த அமுதின் என்பது தேன்வந்தமுதின் எனப் பெயரெச் சத்து அகரம் கெட்டது. அமுதின் தெளிவினைப் போன்று வந்த என முடிக்க. ஒளி வந்த என்னும் விசேடணம் வானைச் சிறப்பித்தது. வான் வந்தவார்கழல் என்றது. "விண்ணின் றிழிந்து வினைக்கீடாய் மெய்கொண்டு தண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து" (திரு மந்திரம் - 113) என வருதல் காண்க. தேவர்களும் மாலயனோடு இந்திரனும் காண்பரிய தான் வந்து தலையளித்திட்டு ஊன்வந்து உயிர்ப்பெய்து அமுதத் தெளிவினைப் போன்று வான் வந்த (இறைவனது) வார்கழவே பாடுதும் என வினைமுடிபு செய்க. இதன்கண் தேன்வந்தமுதின் தெளிவின் வான்வந்த வார்கழல் பாடுதும் என்பதனால் ஆனநதக்களிப்பு என்னும் பதிக நுதலிய பொருள் புலனாதல் காண்க.
576 ருவாசக ஆராய்ச்சியுரை என்பெழுந் தியங்கு மியாக்கையர் நன்பகற் பலவுடன் கழிந்த வுண்டிய ரிகலொடு துனியில் காட்சி முனிவர் ' ( 13037 ) எனத் திருமுருகாற்றுப்படையில் வருதலுங் காண்க . புற்றெழுதல் நிலைபெயராது நெடுங்காலமிருத்தலால் உடம்பை மூடிக்கறையான் புற்றெழுதுதலை . காண்பரிய தான் என இயையும் . தான் என்றது இறைவனை தம்மை யுணர்ந்து தமையுடைய தன்னுணர்வார் தலைய எனச் சிவஞான போதத்து ( அவையடக் ) வருதலுங் காண்க . ளித்திட்டு - காத்து . தானே வந்தெம்மைத் தலையளித் தாட்கொண் பேரருள் டருளும் ( திருவெம்பாவை - 6 ) என வருதலுங் காண்க . செய்து எனினுமாம் . ஊன் - தசை . தசையையுடைய உடம்பினை உணர்த்தியது . ஊன் வந்து - உடம்பினுள்ளே புகுந்து ஊனே புகுந்த வுனையுணர்ந்தே ' ( பிரார்த்தனை -10 ) ஊனாருடல் புகுந்தான் ( உயிருண்ணி -2 ) என அடிகள் பிறாண்டு அருளியமையுங் காண்க . இறைவன் உரோ மத்துவாரங்களினுள்ளே வெளிப்படுகின்ற தேன்போலும் இனிமை செய்தலின் ' ' உரோமங்கள் உள்ளே உயிர்ப்பெய்து தேன் வந்து ' ' என்றார் . வாக்கிறந் தமுதம் மயிர்க்கால் தோறும் தேக்கிடச் செய்தனன் ( திருவண்ட - 170 - 1 ) என வருதல் காண்க . உயிர்ப் பெய்து- வினைத்தொகை ; உயிர்ப்பெய்துகின்றஎன விரியும் . உயிர்ப்பெய்தல் - தோற்றமடைதல் . உருவுருவாகி யகரமோ டுயிர்த் தலும் என தொல்காப்பியத்தும் இப்பொருட்டாதல் காண்க . தேன்வந்த அமுதின் என்பது தேன்வந்தமுதின் எனப் பெயரெச் சத்து அகரம் கெட்டது . அமுதின் தெளிவினைப் போன்று வந்த என முடிக்க . ஒளி வந்த என்னும் விசேடணம் வானைச் சிறப்பித்தது . வான் வந்தவார்கழல் என்றது . விண்ணின் றிழிந்து வினைக்கீடாய் மெய்கொண்டு தண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து ( திரு மந்திரம் - 113 ) என வருதல் காண்க . தேவர்களும் மாலயனோடு இந்திரனும் காண்பரிய தான் வந்து தலையளித்திட்டு ஊன்வந்து உயிர்ப்பெய்து அமுதத் தெளிவினைப் போன்று வான் வந்த ( இறைவனது ) வார்கழவே பாடுதும் என வினைமுடிபு செய்க . இதன்கண் தேன்வந்தமுதின் தெளிவின் வான்வந்த வார்கழல் பாடுதும் என்பதனால் ஆனநதக்களிப்பு என்னும் பதிக நுதலிய பொருள் புலனாதல் காண்க .