திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை 'அத்தன் பெருந்துறையான் ஆட்கொண்டு'' என அடிகள் அருளியவாறுங் காண்க. 582 (திருவெண்பா - 6) தீட்டார் மதில் - சித்திரங்கள் எழுதப்பட்ட மதில்; "சிற்பந் திகழ் தரு திண்மதிற்றில்லை" (305) எனத் திருக்கோவையாரில் வருதலுங் காண்க. மதிலிற் சித்திரங்கள் எழுதல் பண்டை வழக்கமாதல், 'வெவ்வரி நிலை இய வெயில்" (பதிற் 68 - 5) என்பதனாலுமறிக. தீட் டல் - எழுதுதல், எரி மணிச் சுண்ண...... செறியத் தீட்டி (சீவக 625) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க. மதில் புடை சூழ் பெருந் துறை என இயையும். எல்லாம் காட்டி முழுவதையும் புலப்படுத்தி (கோவை 284 உரை). பிறர் எவராலும் இத்துணையும் காட்டப்படாதனவற்றை யெல்லாம் இறைவன் புலப்படுத்தியருளினான் என்பார், 'காட்டா தன வெல்லாங் காட்டி" என்றார். காட்டி என்றது "ஆட்பாலவர்க் கருளும் வண்ணமும் ஆதி மாண்பும், கேட்பான் புகில் அளவில்லை கிளக்க வேண்டா" (ஞான 312 -4) என ஆளுடைய பிள்ளையார் அரு ளியவாறு பக்குவான்மாக்களுக்கு இறைவன் அருளிச் செய்யும் முறைமை முழுவதையும் புலப்படுத்தியதாகும். அது பசு ஞானத்தா லும் பாசஞானத்தாலும் அறியமுடியாத இறையியல்புகள் எல்லாவற் றையும் இறைவன் தனது பதி ஞானத்தால் காட்டியதாகும். "பாச ஞானத்தாலும் பசு ஞானத்தாலும் பார்ப்பரிய பரம்பரனைப் பதி ஞானத்தாலே நேசமொடும் உள்ளத்தே நாடி"(சூத் 9) எனச் சிவஞான அடிகளுக்கு இறைவன் காட்டாதன சித்தியாரில் வருதலும் காண்க. வெல்லாம் காட்டியமை, “நாட்டார்கள் விழித்திருப்ப ஞாலத்துள்ளே நாயினுக்குத் தவிசிட்டு நாயினேற்கே காட்டாதனவெல்லாங் காட்டிப் பின்னுங் கேளாதன வெல்லாங் கேட்பித்தென்னை மீட்டேயும் பிறவாமற் காத்தாட்கொண்டான்.'' என அடிகள் பிறிதோரிடத்து அருளியவாற்றானுமறிக. சத: 28) சிவங்காட்டி என்றது சிவமாகிய தாமாந்தன்மையை அனுபவ ஞானத்தால் புலப்படுத்தி என்றவாறு. சிவமாகிய தன்னைக் காட்டி எனவும் சிவபரம்பொருளைக் காட்டி எனவும் உரைப்பாருமுளர். தாட்டாமரை காட்டியென்றது திருவடித் தாமரை மலரை அடைதற் கேதுவாகிய மெய்ஞ்ஞானத்தை உண்டாக்கி என்றவாறு. திருவடியே வீடாதல். '"சேவடி படருஞ் செம்மலுள்ளமொடு (62)
திருவாசக ஆராய்ச்சியுரை ' அத்தன் பெருந்துறையான் ஆட்கொண்டு ' ' என அடிகள் அருளியவாறுங் காண்க . 582 ( திருவெண்பா - 6 ) தீட்டார் மதில் - சித்திரங்கள் எழுதப்பட்ட மதில் ; சிற்பந் திகழ் தரு திண்மதிற்றில்லை ( 305 ) எனத் திருக்கோவையாரில் வருதலுங் காண்க . மதிலிற் சித்திரங்கள் எழுதல் பண்டை வழக்கமாதல் ' வெவ்வரி நிலை இய வெயில் ( பதிற் 68 - 5 ) என்பதனாலுமறிக . தீட் டல் - எழுதுதல் எரி மணிச் சுண்ண ...... செறியத் தீட்டி ( சீவக 625 ) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க . மதில் புடை சூழ் பெருந் துறை என இயையும் . எல்லாம் காட்டி முழுவதையும் புலப்படுத்தி ( கோவை 284 உரை ) . பிறர் எவராலும் இத்துணையும் காட்டப்படாதனவற்றை யெல்லாம் இறைவன் புலப்படுத்தியருளினான் என்பார் ' காட்டா தன வெல்லாங் காட்டி என்றார் . காட்டி என்றது ஆட்பாலவர்க் கருளும் வண்ணமும் ஆதி மாண்பும் கேட்பான் புகில் அளவில்லை கிளக்க வேண்டா ( ஞான 312 -4 ) என ஆளுடைய பிள்ளையார் அரு ளியவாறு பக்குவான்மாக்களுக்கு இறைவன் அருளிச் செய்யும் முறைமை முழுவதையும் புலப்படுத்தியதாகும் . அது பசு ஞானத்தா லும் பாசஞானத்தாலும் அறியமுடியாத இறையியல்புகள் எல்லாவற் றையும் இறைவன் தனது பதி ஞானத்தால் காட்டியதாகும் . பாச ஞானத்தாலும் பசு ஞானத்தாலும் பார்ப்பரிய பரம்பரனைப் பதி ஞானத்தாலே நேசமொடும் உள்ளத்தே நாடி ( சூத் 9 ) எனச் சிவஞான அடிகளுக்கு இறைவன் காட்டாதன சித்தியாரில் வருதலும் காண்க . வெல்லாம் காட்டியமை நாட்டார்கள் விழித்திருப்ப ஞாலத்துள்ளே நாயினுக்குத் தவிசிட்டு நாயினேற்கே காட்டாதனவெல்லாங் காட்டிப் பின்னுங் கேளாதன வெல்லாங் கேட்பித்தென்னை மீட்டேயும் பிறவாமற் காத்தாட்கொண்டான் . ' ' என அடிகள் பிறிதோரிடத்து அருளியவாற்றானுமறிக . சத : 28 ) சிவங்காட்டி என்றது சிவமாகிய தாமாந்தன்மையை அனுபவ ஞானத்தால் புலப்படுத்தி என்றவாறு . சிவமாகிய தன்னைக் காட்டி எனவும் சிவபரம்பொருளைக் காட்டி எனவும் உரைப்பாருமுளர் . தாட்டாமரை காட்டியென்றது திருவடித் தாமரை மலரை அடைதற் கேதுவாகிய மெய்ஞ்ஞானத்தை உண்டாக்கி என்றவாறு . திருவடியே வீடாதல் . ' சேவடி படருஞ் செம்மலுள்ளமொடு ( 62 )