திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவம்மானை 609 சிந்தி ஓட்டு உகந்த - மற்றைய தேவர்களைத் திசைகள் தோறும் சித றும்படி ஓட்டுதலை விரும்பிச் செய்த, செந்தார் தென்னன் - செவ்விய மலர்மாலையையுடைய தென்னாடுடையவனும், பொழில் புடை சூழ் பெருந்துறையான் - சோலைகள் பக்கத்தே சூழ்ந்த திருப்பெருந் துறையையுடையவனுமாகிய இறைவனது, மந்தார மாலையே பாடு தும் - மந்தாரமாலையையே யாம் புகழ்ந்து பாடிக்கொண்டு ஆடுவோ மாக. அம்மானாய், தக்கனது வேள்வியினில் சந்திரனைத் தேய்த்தருளி யும் இந்திரனைத் தோளை நெரித்தும். எச்சனது தலையை அரிந்தும், சூரியனது பல்லைத் தகர்த்தும், மற்றைய தேவர்களைத் திசைகள் தோறும் சிதறும்படி ஓட்டுதலை விரும்பிச் செய்த தென்னன் பெருந் துறையானாகிய இறைவனது மந்தார மலர்மாலையைப் புகழ்ந்து பாடிக் கொண்டு ஆடுவோமாக என்பதாம். தக்கன்றன் வேள்வி - திருமாலைத் தலைவனாகக்கொண்டு இறைவன் தலைமையை நீக்குதலே பயனாகக் கருதித் தக்கனாற் செய்யப்பட்ட யாகம்; சந்திரனைத் தேய்த்தருளி என்றது தக்கனது யாகத்தில் தப்பி யோட முயன்ற சந்திரனைத் தள்ளிவீழ்த்தித் திருவடியினால் பூமியில் தேய்த்தருளி என்றவாறு, "சோதிச்" சந்திரன் மேனி மறுச்செய்தானை' எனத் தேவாரத்தும், (3t ''கூடற் கிறையோன் குரைகழற் படையால் ஈரெண் கலையும் பூழிபட்டுதிர நிலனொடு தேய்ப்புண் டலமந் தலறியுஞ் சிதைந்துறைந் தெழுபழித் தீமதி” 000 எனக் கல்லாடத்தும், 'இன்னதோர் காலையில் இரிந்து போவதோர் மெய்ந்நிறை மதியினை வீரன் காணுறாத் (81 தன்னொரு பதங்கொடே தள்ளி மெல்லெனச் சின்னம துறவுடல் தேய்த்திட் டானரோ" எனக் கந்தபுராணத்தும் வருவன காண்க. (தே.நா.239-1) (60-21-4) (யாகசங்-24) இந்திரனைத் தோள் நெரித்திட்டு என்றது மாறுபட்ட இந்திரனைத் தண்டத்தினால் தாக்கி அவன் தோளை நெரித்தருளியென்றவாறு. 69
திருவம்மானை 609 சிந்தி ஓட்டு உகந்த - மற்றைய தேவர்களைத் திசைகள் தோறும் சித றும்படி ஓட்டுதலை விரும்பிச் செய்த செந்தார் தென்னன் - செவ்விய மலர்மாலையையுடைய தென்னாடுடையவனும் பொழில் புடை சூழ் பெருந்துறையான் - சோலைகள் பக்கத்தே சூழ்ந்த திருப்பெருந் துறையையுடையவனுமாகிய இறைவனது மந்தார மாலையே பாடு தும் - மந்தாரமாலையையே யாம் புகழ்ந்து பாடிக்கொண்டு ஆடுவோ மாக . அம்மானாய் தக்கனது வேள்வியினில் சந்திரனைத் தேய்த்தருளி யும் இந்திரனைத் தோளை நெரித்தும் . எச்சனது தலையை அரிந்தும் சூரியனது பல்லைத் தகர்த்தும் மற்றைய தேவர்களைத் திசைகள் தோறும் சிதறும்படி ஓட்டுதலை விரும்பிச் செய்த தென்னன் பெருந் துறையானாகிய இறைவனது மந்தார மலர்மாலையைப் புகழ்ந்து பாடிக் கொண்டு ஆடுவோமாக என்பதாம் . தக்கன்றன் வேள்வி - திருமாலைத் தலைவனாகக்கொண்டு இறைவன் தலைமையை நீக்குதலே பயனாகக் கருதித் தக்கனாற் செய்யப்பட்ட யாகம் ; சந்திரனைத் தேய்த்தருளி என்றது தக்கனது யாகத்தில் தப்பி யோட முயன்ற சந்திரனைத் தள்ளிவீழ்த்தித் திருவடியினால் பூமியில் தேய்த்தருளி என்றவாறு சோதிச் சந்திரன் மேனி மறுச்செய்தானை ' எனத் தேவாரத்தும் ( 3t ' ' கூடற் கிறையோன் குரைகழற் படையால் ஈரெண் கலையும் பூழிபட்டுதிர நிலனொடு தேய்ப்புண் டலமந் தலறியுஞ் சிதைந்துறைந் தெழுபழித் தீமதி 000 எனக் கல்லாடத்தும் ' இன்னதோர் காலையில் இரிந்து போவதோர் மெய்ந்நிறை மதியினை வீரன் காணுறாத் ( 81 தன்னொரு பதங்கொடே தள்ளி மெல்லெனச் சின்னம துறவுடல் தேய்த்திட் டானரோ எனக் கந்தபுராணத்தும் வருவன காண்க . ( தே.நா.239-1 ) ( 60-21-4 ) ( யாகசங் -24 ) இந்திரனைத் தோள் நெரித்திட்டு என்றது மாறுபட்ட இந்திரனைத் தண்டத்தினால் தாக்கி அவன் தோளை நெரித்தருளியென்றவாறு . 69