திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை வாருமுளர். மாலயனும் காண்பரியனாயது அவர்கள் முறையே பன்றி யும் அன்னமுமாகிய வடிவங்கொண்டு தேடிய விடத்தாகும். அதனால் புறப்பட்டுத் தேடச்சென்றமை தானே போதருதல் காண்க. வித்த கன் - சாதுரியன்; பேராற்றலுடையவன். 618 தெளிவந்த தேறல்- வடித்தெடுக்கப்பட்ட தேன். தெளி - தெளிவு சிவத்தேன் தெளிவைத் ருதலினால் “தெளி வந்த தேறலை" என்றார். "தேறலின் தெளிவே" (கோயிற். 1) என அடிகள் பிறிதோரிடத்தும் அருளியமை காண்க. இரங்கி சீரார் பெருந்துறையில் எளிவந்திருந்து என மாற்றிக் கூட்டிப்பொருள் கொள்க. எண்ண அரிய என்பது எண் ணரிய எனக் கடைக்குறைந்தது. எண்ணரிய அளவில்லாத எனினு மாம். ஒளி வந்த - இனிய அருளினாலே தன் ஒளி யாவர்க்கும் இனிது புலப்படுமாறு. அளி - அருள். 'அழிபடர் வருத்த நின்னளி வேண் டிக் கலங்கியாள்'' (கலி. 100-17) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க. ஐ உருவினைப் பிரித்து பாதியனும், வித்தகனும், தேறலும், அந்தணனும் ஆகிய இறைவனைப் பாடுதும் என உரைக்கலாம். இதன் கண் 'ஒளிவந்தெனுள்ளத்தி னுள்ளே யொளிதிகழ" என் பதனால் ஆனந்தக்களிப்பு என்னும் பதிகநுதலிய பொருள் போதரு தல் காண்க. 18 193 முன்னானை மூவர்க்கு முற்றுமாய் முற்றுக்கும் பின்னானைப் பிஞ்ஞகனைப் பேணு பெருந்துறையின் மன்னானை வானவனை மாதியலும் பாதியனைத் தென்னானைக் காவானைத் தென்பாண்டி நாட்டானை என்னானை யென்னப்பன் என்பார்கட் கின்னமுதை அன்னானை யம்மானைப் பாடுதுங்காண் அம்மானாய். ப-ரை. அம்மானாய் - அம்மனையாடும் பெண்ணே, மூவர்க்கும் முன்னானை - அயன் அரி அரன் என்னும் மும்மூர்த்திகளுக்கும் முற்பட் டுள்ளவனை, முற்றும் ஆய் - எல்லாப் பொருள்களுமாய், முற்றுக்கும் பின்னானை -அவ் வெல்லாப் பொருள்களுக்கும் பிற்பட்டுள்ளவனை, பிஞ்ஞகனை - சடைக்கோலமுடையவனை, பேணு பெருந்துறையின் மன்னானை - யாவராலும் விரும்பப்படும் திருப்பெருந்துறையிலுள்ள தலைவனை, வானவனை - பரமவெளியிலுள்ளவனை, மாது இயலும் பாதி யனை - உமையம்மை பொருந்திய இடப்பாகத்தையுடையவனை, தென் ஆனைக்காவானை - அழகிய திருவானைக்காவிலுள்ளானை, தென்பாண்டி நாட்டானை - தெற்கிலுள்ள பாண்டிநாட்டை யுடையானை, என் ஆன்
திருவாசக ஆராய்ச்சியுரை வாருமுளர் . மாலயனும் காண்பரியனாயது அவர்கள் முறையே பன்றி யும் அன்னமுமாகிய வடிவங்கொண்டு தேடிய விடத்தாகும் . அதனால் புறப்பட்டுத் தேடச்சென்றமை தானே போதருதல் காண்க . வித்த கன் - சாதுரியன் ; பேராற்றலுடையவன் . 618 தெளிவந்த தேறல்- வடித்தெடுக்கப்பட்ட தேன் . தெளி - தெளிவு சிவத்தேன் தெளிவைத் ருதலினால் தெளி வந்த தேறலை என்றார் . தேறலின் தெளிவே ( கோயிற் . 1 ) என அடிகள் பிறிதோரிடத்தும் அருளியமை காண்க . இரங்கி சீரார் பெருந்துறையில் எளிவந்திருந்து என மாற்றிக் கூட்டிப்பொருள் கொள்க . எண்ண அரிய என்பது எண் ணரிய எனக் கடைக்குறைந்தது . எண்ணரிய அளவில்லாத எனினு மாம் . ஒளி வந்த - இனிய அருளினாலே தன் ஒளி யாவர்க்கும் இனிது புலப்படுமாறு . அளி - அருள் . ' அழிபடர் வருத்த நின்னளி வேண் டிக் கலங்கியாள் ' ' ( கலி . 100-17 ) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க . உருவினைப் பிரித்து பாதியனும் வித்தகனும் தேறலும் அந்தணனும் ஆகிய இறைவனைப் பாடுதும் என உரைக்கலாம் . இதன் கண் ' ஒளிவந்தெனுள்ளத்தி னுள்ளே யொளிதிகழ என் பதனால் ஆனந்தக்களிப்பு என்னும் பதிகநுதலிய பொருள் போதரு தல் காண்க . 18 193 முன்னானை மூவர்க்கு முற்றுமாய் முற்றுக்கும் பின்னானைப் பிஞ்ஞகனைப் பேணு பெருந்துறையின் மன்னானை வானவனை மாதியலும் பாதியனைத் தென்னானைக் காவானைத் தென்பாண்டி நாட்டானை என்னானை யென்னப்பன் என்பார்கட் கின்னமுதை அன்னானை யம்மானைப் பாடுதுங்காண் அம்மானாய் . - ரை . அம்மானாய் - அம்மனையாடும் பெண்ணே மூவர்க்கும் முன்னானை - அயன் அரி அரன் என்னும் மும்மூர்த்திகளுக்கும் முற்பட் டுள்ளவனை முற்றும் ஆய் - எல்லாப் பொருள்களுமாய் முற்றுக்கும் பின்னானை -அவ் வெல்லாப் பொருள்களுக்கும் பிற்பட்டுள்ளவனை பிஞ்ஞகனை - சடைக்கோலமுடையவனை பேணு பெருந்துறையின் மன்னானை - யாவராலும் விரும்பப்படும் திருப்பெருந்துறையிலுள்ள தலைவனை வானவனை - பரமவெளியிலுள்ளவனை மாது இயலும் பாதி யனை - உமையம்மை பொருந்திய இடப்பாகத்தையுடையவனை தென் ஆனைக்காவானை - அழகிய திருவானைக்காவிலுள்ளானை தென்பாண்டி நாட்டானை - தெற்கிலுள்ள பாண்டிநாட்டை யுடையானை என் ஆன்