திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவம்மானை ஐ - என் உயிர்க்குத் தலைவனாயுள்ளவன், என் அப்பன் என்பார்கட்கு இன் அமுதை அன்னானை - எனக்கு அப்பனாயுள்ளவன் என்று அன்பி னால் தனித்தனி அழைப்பவர்கட்கு இனிய அமுதம் போன்றவனை, அம் மானை - பெருமையுடையவனை, பாடுதும் - பாடிக்கொண்டு ஆடுவோ மாக என்பதாம். tatea அம்மானாய், மூவர்க்கும் முன்னானை, முற்றும் ஆகி, முற்றுக்கும் பின்னானை, பிஞ்ஞகனை, பெருந்துறையின் மன்னானை, வானவனை, உமை யம்மை பொருந்திய இடப்பாகத்தை யுடையவனை, திருவானைக்காவி லுள்ளவனை, தென்பாண்டி நாட்டானை, என் உயிர்த் தலைவன் என் அப்பன் என்று தனித்தனி அழைப்பவர்களுக்கு இனிய அமுதம் போன் றவனைப் பாடிக்கொண்டு ஆடுவோமாக. மூவர்க்கும் முன்னானை என்றது மும்மூர்த்திகளுக்கும் முற்பட் டுள்ளவனை. 'விண்முதல் பூதலம் ஒன்றிய இருசுடர் உம்பர்கள் பிற வும் படைத்து அளித்து அழிப்ப மும்மூர்த்திகளாயினை" என ஆளு டைய பிள்ளையார் அருளியவாறு, ஒருவனாய் நின்ற இறைவன் படைத்து அளித்து அழித்தற்பொருட்டு மும்மூர்த்திகளாயினன் என் பதாம். இப்பொருளை 'செழும்பொழில்கள் பயந்து காத் தழிக்கு மற்றை மூவர் கோனாய் நின்ற முதல்வன்" (சத. 30) எனவும், "பூ வேறு கோனும்..... நாரணனும் மாவேறு சோதியும் வானவருந் தாமறிய சேவேறு சேவடி" (கோத். 1) எனவும் அடிகள் அருளுமாறுங் காண்க. முற்றும் என்றது உலகப் பொருள்கள் முழுதும் என்றவாறு. முற்றுமாய் நிற்றல் அவற்றிற் கலந்து உடனாய் நிற்றல். முற்றுக்கும் பின்னாதல் அவை ஒடுங்கிய இடத்து, தான் எஞ்சிவேறாய் நிற்றல் இறைவன் முற்பட்டுள்ளவனும் பிற்பட்டுள்ளவனுமாதலை, "முன்னு மொருவரிரும் பொழில் மூன்றற்கு முற்றுமிற்றாற் பின்னுமொருவர் சிற்றம்பலத்தார்'' என அடிகளும், 619 முன்னவன் உலகுக்கு" "முன்னவன் காண் பின்னவன் காண் மூவாமேனி முதல்வன்” "முன்னானைப் பின்னானை யந்நாளானை'' என அப்பரடிகளுமருளியவாற்றானுமறிக. (கோவை.160) (172-8) (261-8) (292-7) பிஞ்ஞகம் - சடைமுடி. தலைக்கோலம் எனினுமாம். இறைவனது தலைக்கோலம் சடையின் கண் பிறையும், அரவும், கங்கையும், கொன் றையும் முதலியன தரித்திருத்தல்.
திருவம்மானை - என் உயிர்க்குத் தலைவனாயுள்ளவன் என் அப்பன் என்பார்கட்கு இன் அமுதை அன்னானை - எனக்கு அப்பனாயுள்ளவன் என்று அன்பி னால் தனித்தனி அழைப்பவர்கட்கு இனிய அமுதம் போன்றவனை அம் மானை - பெருமையுடையவனை பாடுதும் - பாடிக்கொண்டு ஆடுவோ மாக என்பதாம் . tatea அம்மானாய் மூவர்க்கும் முன்னானை முற்றும் ஆகி முற்றுக்கும் பின்னானை பிஞ்ஞகனை பெருந்துறையின் மன்னானை வானவனை உமை யம்மை பொருந்திய இடப்பாகத்தை யுடையவனை திருவானைக்காவி லுள்ளவனை தென்பாண்டி நாட்டானை என் உயிர்த் தலைவன் என் அப்பன் என்று தனித்தனி அழைப்பவர்களுக்கு இனிய அமுதம் போன் றவனைப் பாடிக்கொண்டு ஆடுவோமாக . மூவர்க்கும் முன்னானை என்றது மும்மூர்த்திகளுக்கும் முற்பட் டுள்ளவனை . ' விண்முதல் பூதலம் ஒன்றிய இருசுடர் உம்பர்கள் பிற வும் படைத்து அளித்து அழிப்ப மும்மூர்த்திகளாயினை என ஆளு டைய பிள்ளையார் அருளியவாறு ஒருவனாய் நின்ற இறைவன் படைத்து அளித்து அழித்தற்பொருட்டு மும்மூர்த்திகளாயினன் என் பதாம் . இப்பொருளை ' செழும்பொழில்கள் பயந்து காத் தழிக்கு மற்றை மூவர் கோனாய் நின்ற முதல்வன் ( சத . 30 ) எனவும் பூ வேறு கோனும் ..... நாரணனும் மாவேறு சோதியும் வானவருந் தாமறிய சேவேறு சேவடி ( கோத் . 1 ) எனவும் அடிகள் அருளுமாறுங் காண்க . முற்றும் என்றது உலகப் பொருள்கள் முழுதும் என்றவாறு . முற்றுமாய் நிற்றல் அவற்றிற் கலந்து உடனாய் நிற்றல் . முற்றுக்கும் பின்னாதல் அவை ஒடுங்கிய இடத்து தான் எஞ்சிவேறாய் நிற்றல் இறைவன் முற்பட்டுள்ளவனும் பிற்பட்டுள்ளவனுமாதலை முன்னு மொருவரிரும் பொழில் மூன்றற்கு முற்றுமிற்றாற் பின்னுமொருவர் சிற்றம்பலத்தார் ' ' என அடிகளும் 619 முன்னவன் உலகுக்கு முன்னவன் காண் பின்னவன் காண் மூவாமேனி முதல்வன் முன்னானைப் பின்னானை யந்நாளானை ' ' என அப்பரடிகளுமருளியவாற்றானுமறிக . ( கோவை .160 ) ( 172-8 ) ( 261-8 ) ( 292-7 ) பிஞ்ஞகம் - சடைமுடி . தலைக்கோலம் எனினுமாம் . இறைவனது தலைக்கோலம் சடையின் கண் பிறையும் அரவும் கங்கையும் கொன் றையும் முதலியன தரித்திருத்தல் .