திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

620 திருவாசக ஆராய்ச்சியுரை பேணு என்பது பெருந்துறைக்கு விசேடணம். 'பேணு பெருந் துறையிற் கண்ணார் கழல் காட்டி." (அம்மானை. 10) என்புழிப்போல. பேணு பெருந்துறை என்பதற்கு சோழநாட்டிலுள்ள பேணுபெருந் துறையென்னும் சிவதலமாகவும் கொள்ளலாம். " அரிவையோர் பாகமமர்ந்த, பெம்மானல்கிய தொல்புகழார் பேணு பெருந்துறை யாரே'' (ஞான. 42-1) எனத் தேவாரத்தும் வருதல் காண்க. Theo வானவன் - பரவெளியிலுள்ளவன். ''வழிவழியாளாகும் வண்ணம் அருளெங்கள் வானவனே" (நாவு. 103-4) என வருதலும் காண்க. தென் ஆனைக்கா - அழகிய திருவானைக்கா. 'தென்னானைக்காவுஞ் சிராப்பள்ளியும்'' "தென்னானைக்காவன் காண்" "தென்னானைக் காவுள் மேய அம்மான்" தென்னானைக் காவான் தன்னை" (நாவு.220-1) (நாவு.243-10} (நாவு.275-5) (நாவு.292-8) எனத் தேவாரத்தும் வருவன காண்க. இத்தலத்தினைக் காவிரி சூழ்ந்து செல்லல், 'எறிநீர்த்திரையுகளுங் காவிரிசூழ், தென்னானைக்காவானை (அப்பர்-276-1) என்பதனாலுமறிக. தென்பாண்டி நாட்டானை - தெற்கின் கணுள்ள பாண்டிநாட்டை யுடையவனை. என வருவனவற்றாலுமறிக. (8-211) ''தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே" (சிவபுரா.90) ''பாண்டிநாடே பழம்பதி யாகவும்'' (கீர்த்தி.118) "சீரியவாயாற் குயிலே தென்பாண்டி நாட்டானைக் கூவாய் (குயிற். 2) "தென்பாண்டி நாடே தெளி” (தசாங்கம்.2) என்னானை-என் ஆன் ஐ- என் உயிர்த் தலைவள். "என்னானை என் னரையன் இன்னமுதென்றெல்லோமும் சொன்னோங் கேள் வெவ்வே றாய்" (திருவெம்பா. 7) என அடிகள் அருளியமையுங் காண்க. உயி ரைக் குறிக்கும் ஆ என்னும் சொல் ஆன் என நின்றது. என்னானை என் னப்பன் என ஒருமையாற் கூறி "என்பார்கட்கு' எனப் பன்மையிற் கூறினமையால் அங்ஙனம் தனித்தனி "அழைப்பவர்கட்கு" எனப் பொருள் கூறப்பட்டது. அமுதுண்டவர்க்கு இனிமை தருதல்போல நித்திய நிரதிசய இன்பத்தினைத் தருதலின் "இன்னமுதை அன்னானை' என்றார்.
620 திருவாசக ஆராய்ச்சியுரை பேணு என்பது பெருந்துறைக்கு விசேடணம் . ' பேணு பெருந் துறையிற் கண்ணார் கழல் காட்டி . ( அம்மானை . 10 ) என்புழிப்போல . பேணு பெருந்துறை என்பதற்கு சோழநாட்டிலுள்ள பேணுபெருந் துறையென்னும் சிவதலமாகவும் கொள்ளலாம் . அரிவையோர் பாகமமர்ந்த பெம்மானல்கிய தொல்புகழார் பேணு பெருந்துறை யாரே ' ' ( ஞான . 42-1 ) எனத் தேவாரத்தும் வருதல் காண்க . Theo வானவன் - பரவெளியிலுள்ளவன் . ' ' வழிவழியாளாகும் வண்ணம் அருளெங்கள் வானவனே ( நாவு . 103-4 ) என வருதலும் காண்க . தென் ஆனைக்கா - அழகிய திருவானைக்கா . ' தென்னானைக்காவுஞ் சிராப்பள்ளியும் ' ' தென்னானைக்காவன் காண் தென்னானைக் காவுள் மேய அம்மான் தென்னானைக் காவான் தன்னை ( நாவு.220-1 ) ( நாவு.243-10 } ( நாவு.275-5 ) ( நாவு.292-8 ) எனத் தேவாரத்தும் வருவன காண்க . இத்தலத்தினைக் காவிரி சூழ்ந்து செல்லல் ' எறிநீர்த்திரையுகளுங் காவிரிசூழ் தென்னானைக்காவானை ( அப்பர் - 276-1 ) என்பதனாலுமறிக . தென்பாண்டி நாட்டானை - தெற்கின் கணுள்ள பாண்டிநாட்டை யுடையவனை . என வருவனவற்றாலுமறிக . ( 8-211 ) ' ' தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே ( சிவபுரா .90 ) ' ' பாண்டிநாடே பழம்பதி யாகவும் ' ' ( கீர்த்தி .118 ) சீரியவாயாற் குயிலே தென்பாண்டி நாட்டானைக் கூவாய் ( குயிற் . 2 ) தென்பாண்டி நாடே தெளி ( தசாங்கம் .2 ) என்னானை - என் ஆன் ஐ- என் உயிர்த் தலைவள் . என்னானை என் னரையன் இன்னமுதென்றெல்லோமும் சொன்னோங் கேள் வெவ்வே றாய் ( திருவெம்பா . 7 ) என அடிகள் அருளியமையுங் காண்க . உயி ரைக் குறிக்கும் என்னும் சொல் ஆன் என நின்றது . என்னானை என் னப்பன் என ஒருமையாற் கூறி என்பார்கட்கு ' எனப் பன்மையிற் கூறினமையால் அங்ஙனம் தனித்தனி அழைப்பவர்கட்கு எனப் பொருள் கூறப்பட்டது . அமுதுண்டவர்க்கு இனிமை தருதல்போல நித்திய நிரதிசய இன்பத்தினைத் தருதலின் இன்னமுதை அன்னானை ' என்றார் .