திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருப்பொற்சுண்ணம் தரும் தூபகலசங்களையும், நறுநெய் பெய்து ஏற்றிய தீபங்களையும் வைத்து அலங்காரஞ் செய்யுங்கள். சத்தியும் சோமியும் பார்மக ளும் நாமகளோடு பல்லாண்டு இசைமின் - வலிமைக்குரிய சத்தியா கிய துர்க்கையும் பொருளுக்குரிய சத்தியாகிய திருமகளும் அவளோ டியைந்த நிலமகளும் அறிவுக்குரிய கலைமகளோடு சேர்ந்து வாழ்த்துப் பாடல்களைப் பாடுவீர்களாக. சித்தியும் கெளரியும் பார்ப்பதியும் கங்கையும் வந்து கவரி கொண்மின் - கணபதி சத்தியும் காளியும் உமையும் கங்காதேவியும் இங்கே வந்து வெண்சாமரையினைக் கைக் கொண்டு அசைப்பீர்களாக; அத்தன் ஐயாறன் அம்மானை பாடி- பரமாப்தனும் ஐயாறமர்ந்தானுமாகிய உயர்ந்த இறைவனைப் புகழ்ந்து பாடி, ஆட பொன் சுண்ணம் நாம் இடித்தும் - அப்பெரு மான் தீர்த்தமாடும் பொருட்டு திருப்பொற் சுண்ணத்தினை நாம். இடிப்போமாக. 625 திருப்பொற்சுண்ணமிடிக்கும் மண்டபத்தில் முத்துமாலைகளை யும் பூமாலைகளையும் தொங்கநாற்றி முளைக்குடம் தூபம் நல் தீபங் களை வையுங்கள். சத்தியும் சோமியும் பார்மகளும் நாமகளோடு கூடிப் பல்லாண்டு பாடுங்கள். சித்தியும் கௌரியும் பார்ப்பதியும் கங்கையும் வந்து கவரி வீசுங்கள். அத்தன் ஐயாறன் அம்மானைப்பாடி அப்பெருமான் தீர்த்தமாடும் பொருட்டுத் திருப்பொற் சுண்ணத்திணை நாம் இடிப்போமாக. திருப்பொற் சுண்ணமிடிக்கும் மண்டபத்தில் முத்துமாலைகளை யும், பூமாலைகளையும் தூக்கிக் கோலமிட்டு முளைக்குடம் நறும்புகைத் தூபக்கால்கள் நல்ல தீபக்கால்கள் வைத்து அலங்கரிக்கும் முறை "முத்துநற் றாமம்பூ மாலை தூக்கி முளைக்குடம் தூபநற் றீபம் வைம் மின்' என்பதனாற் கூறப்பட்டது. இவ்வலங்காரத்தினைச் செய்பவர் கள் இன்னாரென விதந்தோதாமையின் இறைவனது நவசக்திகளையோ சப்த மாதர்களையோ கொள்ளலாம். தாமம் - மாலை, முளைக்குடம் எனப் பொதுப்படக் கூறியிருப்பினும் முளையிடப்பட்ட டீடக்கு பா லிகை என்பனவே பொருளாகக் கொள்க. ! 201 சத்தியெனப் பொதுப்படக் கூறினும் சோமியும் நாமகளும் கூறப்பட்டமையின் துர்க்கையெனக் கொள்ளலே இயைபுடைத்து. சோமி - திருமாலின் சத்தியாதலின் அவளோடியைந்த பார்மகளும் கூறப்பட்டனள். பல்லாண்டு - பல்லாண்டுகள் வாழவேண்டுமென்று வாழ்த்திப்பாடும் பாடல்கள். "பன்னிருவர் ஆதித்தர் பல்லாண் டெடுத்திசைப்ப" (திருக்கைலாய ஞான-24) எனவுங் காண்க. சித்தி- கணேசமூர்த்தியின் சத்திகளுள் ஒருவர். (இன்னும் புத்தி வல்லமை என்னும் இருசத்திகள் உளர். சித்தியைக் கூறினமையால் அவர்களைக் 70
திருப்பொற்சுண்ணம் தரும் தூபகலசங்களையும் நறுநெய் பெய்து ஏற்றிய தீபங்களையும் வைத்து அலங்காரஞ் செய்யுங்கள் . சத்தியும் சோமியும் பார்மக ளும் நாமகளோடு பல்லாண்டு இசைமின் - வலிமைக்குரிய சத்தியா கிய துர்க்கையும் பொருளுக்குரிய சத்தியாகிய திருமகளும் அவளோ டியைந்த நிலமகளும் அறிவுக்குரிய கலைமகளோடு சேர்ந்து வாழ்த்துப் பாடல்களைப் பாடுவீர்களாக . சித்தியும் கெளரியும் பார்ப்பதியும் கங்கையும் வந்து கவரி கொண்மின் - கணபதி சத்தியும் காளியும் உமையும் கங்காதேவியும் இங்கே வந்து வெண்சாமரையினைக் கைக் கொண்டு அசைப்பீர்களாக ; அத்தன் ஐயாறன் அம்மானை பாடி பரமாப்தனும் ஐயாறமர்ந்தானுமாகிய உயர்ந்த இறைவனைப் புகழ்ந்து பாடி ஆட பொன் சுண்ணம் நாம் இடித்தும் - அப்பெரு மான் தீர்த்தமாடும் பொருட்டு திருப்பொற் சுண்ணத்தினை நாம் . இடிப்போமாக . 625 திருப்பொற்சுண்ணமிடிக்கும் மண்டபத்தில் முத்துமாலைகளை யும் பூமாலைகளையும் தொங்கநாற்றி முளைக்குடம் தூபம் நல் தீபங் களை வையுங்கள் . சத்தியும் சோமியும் பார்மகளும் நாமகளோடு கூடிப் பல்லாண்டு பாடுங்கள் . சித்தியும் கௌரியும் பார்ப்பதியும் கங்கையும் வந்து கவரி வீசுங்கள் . அத்தன் ஐயாறன் அம்மானைப்பாடி அப்பெருமான் தீர்த்தமாடும் பொருட்டுத் திருப்பொற் சுண்ணத்திணை நாம் இடிப்போமாக . திருப்பொற் சுண்ணமிடிக்கும் மண்டபத்தில் முத்துமாலைகளை யும் பூமாலைகளையும் தூக்கிக் கோலமிட்டு முளைக்குடம் நறும்புகைத் தூபக்கால்கள் நல்ல தீபக்கால்கள் வைத்து அலங்கரிக்கும் முறை முத்துநற் றாமம்பூ மாலை தூக்கி முளைக்குடம் தூபநற் றீபம் வைம் மின் ' என்பதனாற் கூறப்பட்டது . இவ்வலங்காரத்தினைச் செய்பவர் கள் இன்னாரென விதந்தோதாமையின் இறைவனது நவசக்திகளையோ சப்த மாதர்களையோ கொள்ளலாம் . தாமம் - மாலை முளைக்குடம் எனப் பொதுப்படக் கூறியிருப்பினும் முளையிடப்பட்ட டீடக்கு பா லிகை என்பனவே பொருளாகக் கொள்க . ! 201 சத்தியெனப் பொதுப்படக் கூறினும் சோமியும் நாமகளும் கூறப்பட்டமையின் துர்க்கையெனக் கொள்ளலே இயைபுடைத்து . சோமி - திருமாலின் சத்தியாதலின் அவளோடியைந்த பார்மகளும் கூறப்பட்டனள் . பல்லாண்டு - பல்லாண்டுகள் வாழவேண்டுமென்று வாழ்த்திப்பாடும் பாடல்கள் . பன்னிருவர் ஆதித்தர் பல்லாண் டெடுத்திசைப்ப ( திருக்கைலாய ஞான -24 ) எனவுங் காண்க . சித்தி கணேசமூர்த்தியின் சத்திகளுள் ஒருவர் . ( இன்னும் புத்தி வல்லமை என்னும் இருசத்திகள் உளர் . சித்தியைக் கூறினமையால் அவர்களைக் 70