திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருவாசக ஆராய்ச்சியுரை பத்திற்குப் புறத்தே நின்ற அடியவர்களை உள்ளே அழையுங்கள் என்ற வாறு. நில்லாமே என்பது நிலாமே என இடைக்குறைந்து நின்றது. குனிமின் - மகிழ்ச்சி மிகுதியால் கூத்தாடுமின். தொழுதல் - வணங்கு தல். எங்கோன் எங்கூத்தன் என மகளிர் தமது உடைமை தோன்றக் கூறியது இறைவனுக்குச் சுண்ணமிடிக்கும் உரிமை மிகுதிபற்றியாகும். 628 தேவியுந் தானும் வந்தெம்மையாள என்றது திருவருட் சத்தி பதிந்த இடத்துத் தாம் வந்து ஆட்கொண்டருள என்றவாறு. செம்பொன் மயமான மஞ்சள் முதலியவற்றின் பொடியினை இடிக்கவேண்டுமெனக் கூறியது முன்பொடி செய்யப்பட்ட அவற்றை விதிப்படி மந்திர மூலமாக இடித்தல் வேண்டும் என்னும் கருத்துப் பற்றியாகும். இடிக்கவேண்டும்; வம்மின்கள்; வந்துபாடுமின்கள்; கூவுமின்; குனிமின்; தொழுமின் ஆள நாம் சுண்ணம் இடித்தும் என வினை முடிபு செய்க. இதன்கண்,பாடுமின் ஆடுமின் தொழுமின் என்பவற்றால் ஆனந்த மனோலயம் என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காணக. 2 197 சுந்தர நீறணிந் தும்மெழுகித் தூயபொன் சிந்தி நிதிபரப்பி இந்திரன் கற்பக நாட்டி யெங்கும் எழிற்சுடர் வைத்துக் கொடியெடுமின் அந்தரர் கோனயன் றன்பெருமான் ஆழியா னாதன்நல் வேலன் தாதை எந்தர மாளுமை யாள்கொழுநற்கு ஏய்ந்தபொற் சுண்ணம் இடித்துநாமே. ப-ரை. சுந்தர நீறு அணிந்து அழகிய திருவெண்ணீற்றை அணிந்து கொண்டு, மெழுகி - திருப்பொற்சுண்ணமிடிக்கும் மண்டபத் தினைத் திருமெழுக்கு இட்டு, தூயபொன் சிந்தி - பரிசுத்தமாகிய பொற்பொடியினைத்தூவி, நிதிபரப்பி - அதன்மீது நவ நிதிகளையும் பரவிவைத்து, இந்திரன் கற்பகம் நாட்டி - இந்திரனுக்குரிய கற்பக விருட்சப் பூங்கொத்துக்களை இடங்கள்தோறும் நட்டு, எங்கும் எழில் சுடர் வைத்து எவ்விடங்களிலும் அழகிய தீபங்களை ஏற்றி, கொடி எடுமின் - கொடிகளை எடுத்துப் பிடியுங்கள்; அந்தரர்கோன் - தேவர் களுக்குத் தலைவனும், அயன் தன்பெருமான் - பிரமதேவனுக்கு முதல் வனும்; ஆழியான் நாதன் - சக்கராயுதத்தையுடைய திருமாலுக்கு நாயகனும், நல்வேலன் தாதை - நல்வேல் முருகனுக்குத் தந்தையு
திருவாசக ஆராய்ச்சியுரை பத்திற்குப் புறத்தே நின்ற அடியவர்களை உள்ளே அழையுங்கள் என்ற வாறு . நில்லாமே என்பது நிலாமே என இடைக்குறைந்து நின்றது . குனிமின் - மகிழ்ச்சி மிகுதியால் கூத்தாடுமின் . தொழுதல் - வணங்கு தல் . எங்கோன் எங்கூத்தன் என மகளிர் தமது உடைமை தோன்றக் கூறியது இறைவனுக்குச் சுண்ணமிடிக்கும் உரிமை மிகுதிபற்றியாகும் . 628 தேவியுந் தானும் வந்தெம்மையாள என்றது திருவருட் சத்தி பதிந்த இடத்துத் தாம் வந்து ஆட்கொண்டருள என்றவாறு . செம்பொன் மயமான மஞ்சள் முதலியவற்றின் பொடியினை இடிக்கவேண்டுமெனக் கூறியது முன்பொடி செய்யப்பட்ட அவற்றை விதிப்படி மந்திர மூலமாக இடித்தல் வேண்டும் என்னும் கருத்துப் பற்றியாகும் . இடிக்கவேண்டும் ; வம்மின்கள் ; வந்துபாடுமின்கள் ; கூவுமின் ; குனிமின் ; தொழுமின் ஆள நாம் சுண்ணம் இடித்தும் என வினை முடிபு செய்க . இதன்கண் பாடுமின் ஆடுமின் தொழுமின் என்பவற்றால் ஆனந்த மனோலயம் என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காணக . 2 197 சுந்தர நீறணிந் தும்மெழுகித் தூயபொன் சிந்தி நிதிபரப்பி இந்திரன் கற்பக நாட்டி யெங்கும் எழிற்சுடர் வைத்துக் கொடியெடுமின் அந்தரர் கோனயன் றன்பெருமான் ஆழியா னாதன்நல் வேலன் தாதை எந்தர மாளுமை யாள்கொழுநற்கு ஏய்ந்தபொற் சுண்ணம் இடித்துநாமே . - ரை . சுந்தர நீறு அணிந்து அழகிய திருவெண்ணீற்றை அணிந்து கொண்டு மெழுகி - திருப்பொற்சுண்ணமிடிக்கும் மண்டபத் தினைத் திருமெழுக்கு இட்டு தூயபொன் சிந்தி - பரிசுத்தமாகிய பொற்பொடியினைத்தூவி நிதிபரப்பி - அதன்மீது நவ நிதிகளையும் பரவிவைத்து இந்திரன் கற்பகம் நாட்டி - இந்திரனுக்குரிய கற்பக விருட்சப் பூங்கொத்துக்களை இடங்கள்தோறும் நட்டு எங்கும் எழில் சுடர் வைத்து எவ்விடங்களிலும் அழகிய தீபங்களை ஏற்றி கொடி எடுமின் - கொடிகளை எடுத்துப் பிடியுங்கள் ; அந்தரர்கோன் - தேவர் களுக்குத் தலைவனும் அயன் தன்பெருமான் - பிரமதேவனுக்கு முதல் வனும் ; ஆழியான் நாதன் - சக்கராயுதத்தையுடைய திருமாலுக்கு நாயகனும் நல்வேலன் தாதை - நல்வேல் முருகனுக்குத் தந்தையு