திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருப்பொற்சுண்ணம் மாகிய, எம்தரம் ஆள் உமையாள் கொழுநற்கு - எங்கள் குறைந்த தகுதியிலும் ஆட்கொண்டருளும் உமையம்மையின் நாயகருக்கு, ஏய்ந்த பொன் சுண்ணம் நாம் இடித்தும் -தீர்த்தமாடுதற்கு இயைந்த திருப்பொற்சுண்ணத்தை நாம் இடிப்போமாக. 629 அழகிய திருவெண்ணீற்றை அணிந்து, திருப்பொற்சுண்ணமிடிக் கும் மண்டபத்தினை மெழுகித், தூயபொன் சிந்தி, அதன்மீது நிதி பரப்பி, இந்திரன் கற்பகம் நாட்டி, எங்கும் தீபங்களை ஏற்றிக் கொடி களை எடுத்துப் பிடியுங்கள். அந்தரர் கோனும், அயன் தன் பெருமா னும், ஆழியான் நாதனும், வேலன் தாதையுமாகிய எந்தரம் ஆள் உமையாள் கொழுநற்குத் தீர்த்தமாடுதற்கு இயைந்த திருப்பொற் சுண்ணத்தினை நாம் இடிப்போமாக என்பதாம். சுந்தரநீறு என்றார், அணியும் அணிகளுள் அழகுமிக்கது திருவெண் ணீறாதல் பற்றி.''சுந்தரமாவது நீறு" (தே. ஞான. 202-1) என ஆளு டைய பிள்ளையார் அருளியவாறுங் காண்க. நீறணிந்து என்றமையால் ஸ்நானசந்தியாவந்தனங்களை முடித்துக்கொண்டமையும் பெறப்படும். நீறணிந்து மெழுகி எனச் செய்யுளின்பம் நோக்கி மகரவொற்று விரிந் தது. தூயபொன் சிந்தி என்றது பொன்போலும் மஞ்சட் பொடியைத் தூவி என்றவாறு. நிதி - நவநிதி. அவை கச்சபநிதி, கற்பநிதி, சங்க நிதி, நந்தநிதி,நீலநிதி, பதுமநிதி, மகாநிதி, மகாபதுமநிதி, முகுந்த நிதி என்பன. இவை இந்திரன் குபேரனிடத்துள்ளனவாகும். பொன் சிந்துதலும் நிதிபரப்புதலும் மங்கலத்தின் பொருட்டு இந்திரன் கற்ப கம் - இந்திரனது சுவர்க்கத்திலுள்ள கற்பகப் பூங்கொத்துக்கள். கற்ப கம் நாட்டுதல் அலங்காரத்தின் பொருட்டாகும். எழிற்சுடர்-அழ கிய விளக்கு. கொடி என்றது இடபக்கொடியை, "ஊர்தி வால்வெள் ளேறே சிறந்த, சீர்கெழு கொடியுமவ்வேறென்ப'' (புற.1) என வரு தல் காண்க. இறைவனது தசாங்கத்தில் கொடியுமொன்றாதலின் "கொடியெடுமின்" என்றார் அந்தரர் - வானிலுள்ளார். இறைவன் மகாதேவனாதலின் அந்தரர்கோன் என்றார். தேவர்களுக் கன்றித் தேவத் தலைவர்களுக்கும் இறைவன் தலைவனாதல் பற்றி 'அயன் றன் பெருமான்" என்றார். ஆழியான் நாதன் - சுதரிசனம் என்னும் சக்க ரத்தை இறைவன்பாற் பெற்ற திருமால் தலைவன். "நால்வகைப் பட்ட நண்ணிய சத்தியுள் மாலுமாதலின்"... "என்று மாயன் இசைத் தலும் எம்பிரான், அன்று நீயும் நமக்கொரு சத்திகாண்" (கந்த - மகா சாத்தாப் -28-35) என வருவனவற்றால் ஆழியான் நாதன் என்பதற்கு திருமாலுக்கு நாயகன் என உரைக்கப்பட்டது. திருமாலைச் சத்தியா கக்கொண்டு இறைவன் ஐயனாரைத் தோற்றுவித்தமை இங்குக்கருதத் தக்கது.
திருப்பொற்சுண்ணம் மாகிய எம்தரம் ஆள் உமையாள் கொழுநற்கு - எங்கள் குறைந்த தகுதியிலும் ஆட்கொண்டருளும் உமையம்மையின் நாயகருக்கு ஏய்ந்த பொன் சுண்ணம் நாம் இடித்தும் -தீர்த்தமாடுதற்கு இயைந்த திருப்பொற்சுண்ணத்தை நாம் இடிப்போமாக . 629 அழகிய திருவெண்ணீற்றை அணிந்து திருப்பொற்சுண்ணமிடிக் கும் மண்டபத்தினை மெழுகித் தூயபொன் சிந்தி அதன்மீது நிதி பரப்பி இந்திரன் கற்பகம் நாட்டி எங்கும் தீபங்களை ஏற்றிக் கொடி களை எடுத்துப் பிடியுங்கள் . அந்தரர் கோனும் அயன் தன் பெருமா னும் ஆழியான் நாதனும் வேலன் தாதையுமாகிய எந்தரம் ஆள் உமையாள் கொழுநற்குத் தீர்த்தமாடுதற்கு இயைந்த திருப்பொற் சுண்ணத்தினை நாம் இடிப்போமாக என்பதாம் . சுந்தரநீறு என்றார் அணியும் அணிகளுள் அழகுமிக்கது திருவெண் ணீறாதல் பற்றி . ' ' சுந்தரமாவது நீறு ( தே . ஞான . 202-1 ) என ஆளு டைய பிள்ளையார் அருளியவாறுங் காண்க . நீறணிந்து என்றமையால் ஸ்நானசந்தியாவந்தனங்களை முடித்துக்கொண்டமையும் பெறப்படும் . நீறணிந்து மெழுகி எனச் செய்யுளின்பம் நோக்கி மகரவொற்று விரிந் தது . தூயபொன் சிந்தி என்றது பொன்போலும் மஞ்சட் பொடியைத் தூவி என்றவாறு . நிதி - நவநிதி . அவை கச்சபநிதி கற்பநிதி சங்க நிதி நந்தநிதி நீலநிதி பதுமநிதி மகாநிதி மகாபதுமநிதி முகுந்த நிதி என்பன . இவை இந்திரன் குபேரனிடத்துள்ளனவாகும் . பொன் சிந்துதலும் நிதிபரப்புதலும் மங்கலத்தின் பொருட்டு இந்திரன் கற்ப கம் - இந்திரனது சுவர்க்கத்திலுள்ள கற்பகப் பூங்கொத்துக்கள் . கற்ப கம் நாட்டுதல் அலங்காரத்தின் பொருட்டாகும் . எழிற்சுடர் - அழ கிய விளக்கு . கொடி என்றது இடபக்கொடியை ஊர்தி வால்வெள் ளேறே சிறந்த சீர்கெழு கொடியுமவ்வேறென்ப ' ' ( புற .1 ) என வரு தல் காண்க . இறைவனது தசாங்கத்தில் கொடியுமொன்றாதலின் கொடியெடுமின் என்றார் அந்தரர் - வானிலுள்ளார் . இறைவன் மகாதேவனாதலின் அந்தரர்கோன் என்றார் . தேவர்களுக் கன்றித் தேவத் தலைவர்களுக்கும் இறைவன் தலைவனாதல் பற்றி ' அயன் றன் பெருமான் என்றார் . ஆழியான் நாதன் - சுதரிசனம் என்னும் சக்க ரத்தை இறைவன்பாற் பெற்ற திருமால் தலைவன் . நால்வகைப் பட்ட நண்ணிய சத்தியுள் மாலுமாதலின் ... என்று மாயன் இசைத் தலும் எம்பிரான் அன்று நீயும் நமக்கொரு சத்திகாண் ( கந்த - மகா சாத்தாப் -28-35 ) என வருவனவற்றால் ஆழியான் நாதன் என்பதற்கு திருமாலுக்கு நாயகன் என உரைக்கப்பட்டது . திருமாலைச் சத்தியா கக்கொண்டு இறைவன் ஐயனாரைத் தோற்றுவித்தமை இங்குக்கருதத் தக்கது .