திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

198 திருப்பொற்சுண்ணம் காசணி மின்க ளுலக்கையெல்லாம் கரம்பணி மின்கள் கறையுரலை நேச முடைய அடியவர்கள் நின்றுநி லாவுக என்று வாழ்த்தித் தேசமெல் லாம்புகழ்ந் தாடுங்கச்சித் திருவேகம் பன்செம்பொற் கோயில்பாடிப் பாச வினையைப் பறித்து நின்று பாடிப்பொற் கண்ணம் இடித்துநாமே. 631 ப-ரை. உலக்கை எல்லாம் காசு அணிமின்கள் - உலக்கைகளுக் கெல்லாம் பொற்சீலையைக் கட்டுங்கள்: கறை உரலை காம்பு அணிமின் கள் - கறையாகிய உரல்களைப் பட்டுச் சீலையால் அலங்கரியுங்கள்; நேசம் உடைய அடியவர்கள் நின்று நிலாவுக என்று வாழ்த்தி - இறை வன்பால் அன்புடையவர்களது புகழ் நிலைபெற்று வாழ்கவென்று வாழ்த்துப்பாடலைப் பாடிக்கொண்டு, தேசம் எல்லாம் புகழ்ந்து ஆடும் கச்சி திருவேகம்பன் செம்பொன் கோயில் பாடி - உலகமெல்லாம் புகழ்ந்து கொண்டாடுகின்ற காஞ்சி மாநகரிலுள்ள அழகிய ஏகாம்பர நாதசுவாமி எழுந்தருளியிருக்கும் செம்பொன்னாலாகிய திருக்கோயி லைப் பாடிக்கொண்டு, பாசவினையை பறித்து நின்று - அதனால் மலத் தினையும் இருவினைகளையும் நீக்கிக்கொண்டு; பாடி பொன் சுண்ணம் நாம் இடித்தும் - இறைவனைப் புகழ்ந்து பாடிக்கொண்டு அவ்விறை வன் தீர்த்தமாடுதற்குத் திருப்பொற் சுண்ணத்தை நாம் இடிப்போ மாக. உலக்கைகளுக்கெல்லாம் காசு அணிமின்கள்; உரல்களைப் பட்டுச் சீலையால் அலங்கரியுங்கள்; நேசமுடைய அடியவர்கள் நின்று நிலாவுக என்று வாழ்த்திக் கச்சித் திருவேகம்பனது செம்பொற் கோயிலைப் பாடிக்கொண்டும், பாசவினையைப் பறித்து நின்று, இறைவனைப் புகழ்ந்து பாடிக்கொண்டும். அவ்விறைவன் தீர்த்தமாடுதற்கு இயைந்த திருப்பொற்சுண்ணத்தை நாம் இடிப்போமாக என்பதாம். காசு-பொன். ''காசி னன்ன போதீன் கொன்றை" (குறுந். 148-3). ஈண்டுப்பொற் சீலையை உணர்த்தியது. பொன்வடம் எனினு மாம். கறை - உரல், ''கறையடிக் குன்றுறழ் யானை'" (பெரும்பாண். 351-2) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க. கறையே உரலாக வும் கறையுரல் என ஒருபொருள் இருசொல்லாகக் கூறியது, சுண்ண மிடிப்பதற்குத் தகுதியான பரந்த உரலைக் குறிப்பதற்காகும். காம்பு ஒருவகைப்பட்டாடை. 'காட்பினொடு நேத்திரங்கள் பணித்தருள வேண்டும் கடல் நாகைக்காரோண மேவியிருந்தீரே" (சுந். 46-2) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க. உலக்கைக்குக் காசணிதலும்
198 திருப்பொற்சுண்ணம் காசணி மின்க ளுலக்கையெல்லாம் கரம்பணி மின்கள் கறையுரலை நேச முடைய அடியவர்கள் நின்றுநி லாவுக என்று வாழ்த்தித் தேசமெல் லாம்புகழ்ந் தாடுங்கச்சித் திருவேகம் பன்செம்பொற் கோயில்பாடிப் பாச வினையைப் பறித்து நின்று பாடிப்பொற் கண்ணம் இடித்துநாமே . 631 - ரை . உலக்கை எல்லாம் காசு அணிமின்கள் - உலக்கைகளுக் கெல்லாம் பொற்சீலையைக் கட்டுங்கள் : கறை உரலை காம்பு அணிமின் கள் - கறையாகிய உரல்களைப் பட்டுச் சீலையால் அலங்கரியுங்கள் ; நேசம் உடைய அடியவர்கள் நின்று நிலாவுக என்று வாழ்த்தி - இறை வன்பால் அன்புடையவர்களது புகழ் நிலைபெற்று வாழ்கவென்று வாழ்த்துப்பாடலைப் பாடிக்கொண்டு தேசம் எல்லாம் புகழ்ந்து ஆடும் கச்சி திருவேகம்பன் செம்பொன் கோயில் பாடி - உலகமெல்லாம் புகழ்ந்து கொண்டாடுகின்ற காஞ்சி மாநகரிலுள்ள அழகிய ஏகாம்பர நாதசுவாமி எழுந்தருளியிருக்கும் செம்பொன்னாலாகிய திருக்கோயி லைப் பாடிக்கொண்டு பாசவினையை பறித்து நின்று - அதனால் மலத் தினையும் இருவினைகளையும் நீக்கிக்கொண்டு ; பாடி பொன் சுண்ணம் நாம் இடித்தும் - இறைவனைப் புகழ்ந்து பாடிக்கொண்டு அவ்விறை வன் தீர்த்தமாடுதற்குத் திருப்பொற் சுண்ணத்தை நாம் இடிப்போ மாக . உலக்கைகளுக்கெல்லாம் காசு அணிமின்கள் ; உரல்களைப் பட்டுச் சீலையால் அலங்கரியுங்கள் ; நேசமுடைய அடியவர்கள் நின்று நிலாவுக என்று வாழ்த்திக் கச்சித் திருவேகம்பனது செம்பொற் கோயிலைப் பாடிக்கொண்டும் பாசவினையைப் பறித்து நின்று இறைவனைப் புகழ்ந்து பாடிக்கொண்டும் . அவ்விறைவன் தீர்த்தமாடுதற்கு இயைந்த திருப்பொற்சுண்ணத்தை நாம் இடிப்போமாக என்பதாம் . காசு - பொன் . ' ' காசி னன்ன போதீன் கொன்றை ( குறுந் . 148-3 ) . ஈண்டுப்பொற் சீலையை உணர்த்தியது . பொன்வடம் எனினு மாம் . கறை - உரல் ' ' கறையடிக் குன்றுறழ் யானை ' ( பெரும்பாண் . 351-2 ) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க . கறையே உரலாக வும் கறையுரல் என ஒருபொருள் இருசொல்லாகக் கூறியது சுண்ண மிடிப்பதற்குத் தகுதியான பரந்த உரலைக் குறிப்பதற்காகும் . காம்பு ஒருவகைப்பட்டாடை . ' காட்பினொடு நேத்திரங்கள் பணித்தருள வேண்டும் கடல் நாகைக்காரோண மேவியிருந்தீரே ( சுந் . 46-2 ) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க . உலக்கைக்குக் காசணிதலும்