திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

632 வாசக ஆராய்ச்சியுரை திருவா உரலுக்குக் காம்பு அணிதலும் கூறப்படினும் அவற்றோடு மாவிலையும் தருப்பைப்புல் முடியும் சேர்த்துக் கட்டி, பூமாலை சூட்டி, உலக்கையில் மகாமேருவின் அதிதேவதையையும் உரலில் பூமியின் அதிதேவதை யையும் பூசித்து, இறைவற்குச் சுண்ணமிடிப்பது விதியெனக்கொள்க. diųepunt that நிலாவுக-விளங்குக; வாழ்க. இறைவனது அடியவர்களது புகழ் நிலைபெற்று வாழின் உலகத்து மற்றைய உயிர்கள் யாவும் நிலைபெற்று வாழ்தற்கு ஏதுவாமாதலின் தலைமைபற்றி அடியவர்கள் நின்று நிலாவுக" என்று கூறினார். 60 'என்று மின்பம் பெருகு மியல்பினால் ஒன்று காதலித் துள்ளமு மோங்கிட மன்று ளாரடி யாரவர் வான்புகழ் நின்ற தெங்கும் நிலவி யுலகெலாம் (பெரிய.4281) 160 எனச் சேக்கிழார் கூறுதலுங் காண்க. ஆகவே உபலக்கணத்தால் மற் றைய உயிர்கள் யாவும் வாழுகவென வாழ்த்தியமையும் அமையும். தேசமெலாம் என்றது உலகத்து மக்களெல்லாம் என்றவாறு. புகழ்ந்து கொண்டாடும் தகுதியுடையார் அவராதலின் "தேசம தெலாமருவி நின்று பரவித் திகழ நின்ற புகழோன்" (ஞான. 329-10) என்பதனாலுமறிக. காஞ்சிமாநகரம் "நகரேஷு காஞ்சி" என வட மொழியாராலும் கொண்டாடப்படும் சிறந்த நகரமாகும். ஏகாம் ரன் என்பது ஏகாம்பரன் ஆகிப் பின்னர் ஏகம்பன் என மருவியது. ஏகாம்ரன் - ஒரு மாமர அடியிலுள்ள இறைவன். பாசம் - ஆணவம். வினை - நல்வினை தீவினைகள். பயன் கருதிய நல்வினையும் பிறவிக்கு வித் தாகலின் பொன் விலங்குபோல வீடு பேற்றிற்குத் தடையாயுள்ளதா கும். நல்வினையும் பிறவிக்கேதுவாகலான் "இருவினையுஞ் சேரா" வென்றும் கூறினார் எனப் பரிமேலழகர் உரைத்தமையுங் காண்க. (குறள் 5 உரை) பறித்து நின்று என்றது வாழ்த்துதலினாலும் செம்பொற்கோயி லைப் பாடுதலாலும் நீக்கிக்கொண்டு நின்று என்றவாறு. அணிமின்கள் அணிமின்கள் வாழ்த்தி பாடிப்பறித்து நின்றுபாடி நாம் கண்ணம் இடித்தும் என முடிக்க. இதன்கண், 'நேசமுடைய அடியவர்கள் நின்று நிலாவுகவென்று வாழ்த்திப் பாசவினையைப் பறித்து நின்று" என்பதனால் ஆனந்தமனோ லயம் என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க.
632 வாசக ஆராய்ச்சியுரை திருவா உரலுக்குக் காம்பு அணிதலும் கூறப்படினும் அவற்றோடு மாவிலையும் தருப்பைப்புல் முடியும் சேர்த்துக் கட்டி பூமாலை சூட்டி உலக்கையில் மகாமேருவின் அதிதேவதையையும் உரலில் பூமியின் அதிதேவதை யையும் பூசித்து இறைவற்குச் சுண்ணமிடிப்பது விதியெனக்கொள்க . diųepunt that நிலாவுக - விளங்குக ; வாழ்க . இறைவனது அடியவர்களது புகழ் நிலைபெற்று வாழின் உலகத்து மற்றைய உயிர்கள் யாவும் நிலைபெற்று வாழ்தற்கு ஏதுவாமாதலின் தலைமைபற்றி அடியவர்கள் நின்று நிலாவுக என்று கூறினார் . 60 ' என்று மின்பம் பெருகு மியல்பினால் ஒன்று காதலித் துள்ளமு மோங்கிட மன்று ளாரடி யாரவர் வான்புகழ் நின்ற தெங்கும் நிலவி யுலகெலாம் ( பெரிய .4281 ) 160 எனச் சேக்கிழார் கூறுதலுங் காண்க . ஆகவே உபலக்கணத்தால் மற் றைய உயிர்கள் யாவும் வாழுகவென வாழ்த்தியமையும் அமையும் . தேசமெலாம் என்றது உலகத்து மக்களெல்லாம் என்றவாறு . புகழ்ந்து கொண்டாடும் தகுதியுடையார் அவராதலின் தேசம தெலாமருவி நின்று பரவித் திகழ நின்ற புகழோன் ( ஞான . 329-10 ) என்பதனாலுமறிக . காஞ்சிமாநகரம் நகரேஷு காஞ்சி என வட மொழியாராலும் கொண்டாடப்படும் சிறந்த நகரமாகும் . ஏகாம் ரன் என்பது ஏகாம்பரன் ஆகிப் பின்னர் ஏகம்பன் என மருவியது . ஏகாம்ரன் - ஒரு மாமர அடியிலுள்ள இறைவன் . பாசம் - ஆணவம் . வினை - நல்வினை தீவினைகள் . பயன் கருதிய நல்வினையும் பிறவிக்கு வித் தாகலின் பொன் விலங்குபோல வீடு பேற்றிற்குத் தடையாயுள்ளதா கும் . நல்வினையும் பிறவிக்கேதுவாகலான் இருவினையுஞ் சேரா வென்றும் கூறினார் எனப் பரிமேலழகர் உரைத்தமையுங் காண்க . ( குறள் 5 உரை ) பறித்து நின்று என்றது வாழ்த்துதலினாலும் செம்பொற்கோயி லைப் பாடுதலாலும் நீக்கிக்கொண்டு நின்று என்றவாறு . அணிமின்கள் அணிமின்கள் வாழ்த்தி பாடிப்பறித்து நின்றுபாடி நாம் கண்ணம் இடித்தும் என முடிக்க . இதன்கண் ' நேசமுடைய அடியவர்கள் நின்று நிலாவுகவென்று வாழ்த்திப் பாசவினையைப் பறித்து நின்று என்பதனால் ஆனந்தமனோ லயம் என்னும் பதிகநுதலிய பொருள் போதருதல் காண்க .