திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருப்பொற்சுண்ணம் உலகமெலா முரல் போதாதென்று பெரியர் உலக்கைபல ஒச்சுவார் என மாறிக் கூட்டிப்பொருள் கொள்க. உலக்கை பல ஓச்சுவார் பெரி யர் என்றது திருப்பொற்சுண்ணம் இடிக்கவேண்டிய உலக்கைகள் பல வற்றைப் பெரியோர் பலர் கொணர்ந்து இடுவர். ஓச்சுதல் - ஈண்டு இடுதல். அங்ஙனம் இடப்பட்டுள்ள உலக்கைகளின் மிகுதியை நோக் கின் உலகமெல்லாம் உரலாக இருப்பினும் அதுவும் போதாதென்னும் படி மிகப்பலவாகும். ஓச்சுவார் என்பதற்கு இடித்தற்கு உயர்த்து வார் எனப் பொருளுரைப்பின் இது சுண்ணவிழாவில் ஆடவரும் இடிப் பவராய் அமைந்தனர் எனப்பொருள்படும். அது மகளிர் சுண்ணமிடிப் பதாகக் கூறப்பட்ட இப்பதிகப் பொருளுக்கு முரணுடைத்தாகும். ''முறுவற்செவ் வாயினீர் முக்கணப்பற் காடப் பொற்சுண்ணமிடித்து நாமே" (5) "பையர வல்குல் மடந்தைநல்லீர், பொற்சுண்ணமிடித்து நாமே' (12) "பொன்னுடைப் பூண்முலை மங்கை நல்லீர், பொற்றிருச் சுண்ணம் இடித்து நாமே" (13) 'பானற் றடங்கண் மடந்தை நல் லீர் பாடிப்பொற் சுண்ணம் இடித்து நாமே" (15) என வருவன வற்றால் சுண்ணமிடிப்பவர் மகளிராதல் புலனாம். 637 காண என்பதற்கு காண்பதற்கு வந்து கூடுவார் நிற்றற்கு எனச் சிலசொற்கள் வருவித்துரைக்க. கலக்க - இத் திருப்பொற் சுண்ண விழாவில் கலந்துகொள்வதற்காக. உலகங்கள் போதாது என்பது ஒருமை பன்மை மயக்கம். என்று - என்று சொல்லும்படி என்று என் னும் வினையெச்சம் கலக்கஎன்னும் செயவெனெச்சத்தோடு முடிந்தது. நலக்க - நன்மையடைய, நாண்மலர் - அன்றலர்ந்த செந்தாமரைப்பூ. சூடல் - சிரசில் கொள்ளல். பாதங்கள் சூடத்தந்த என்றது திருவடி தீட்சை செய்த என்றவாறு. எந்தஸ்னஸ் "இணையார் திருவடி யென்றலைமேல் வைத்தலுமே'' (பூவல். 1) "பேராசை யாமிந்தப் பிண்டமறப் பெருந்துறையான் சீரார் திருவடி யென்றலைமேல் வைத்த பிரான்" 'கானகத்தே நடக்குந் திருவடி யென்றலைமேல் நட்டமையால்" (பூவல். 10) (குவாப்.8) "தன் பூங்ழலின், துணர்ப்போ தெனக்கணி யாக்குந் தொல்லோன்'' (கோவை.17) என வருவன காண்க. மலை - இமயம். ஆகுபெயராய் மலையரசனை உணர்த்தியது. மலை யரசனுக்கு மகளாக உதித்த பார்வதிதேவியை இறைவன் திருமணஞ் செய்தமை பற்றி "மலைக்கு மருகனை" என்றார்.
திருப்பொற்சுண்ணம் உலகமெலா முரல் போதாதென்று பெரியர் உலக்கைபல ஒச்சுவார் என மாறிக் கூட்டிப்பொருள் கொள்க . உலக்கை பல ஓச்சுவார் பெரி யர் என்றது திருப்பொற்சுண்ணம் இடிக்கவேண்டிய உலக்கைகள் பல வற்றைப் பெரியோர் பலர் கொணர்ந்து இடுவர் . ஓச்சுதல் - ஈண்டு இடுதல் . அங்ஙனம் இடப்பட்டுள்ள உலக்கைகளின் மிகுதியை நோக் கின் உலகமெல்லாம் உரலாக இருப்பினும் அதுவும் போதாதென்னும் படி மிகப்பலவாகும் . ஓச்சுவார் என்பதற்கு இடித்தற்கு உயர்த்து வார் எனப் பொருளுரைப்பின் இது சுண்ணவிழாவில் ஆடவரும் இடிப் பவராய் அமைந்தனர் எனப்பொருள்படும் . அது மகளிர் சுண்ணமிடிப் பதாகக் கூறப்பட்ட இப்பதிகப் பொருளுக்கு முரணுடைத்தாகும் . ' ' முறுவற்செவ் வாயினீர் முக்கணப்பற் காடப் பொற்சுண்ணமிடித்து நாமே ( 5 ) பையர வல்குல் மடந்தைநல்லீர் பொற்சுண்ணமிடித்து நாமே ' ( 12 ) பொன்னுடைப் பூண்முலை மங்கை நல்லீர் பொற்றிருச் சுண்ணம் இடித்து நாமே ( 13 ) ' பானற் றடங்கண் மடந்தை நல் லீர் பாடிப்பொற் சுண்ணம் இடித்து நாமே ( 15 ) என வருவன வற்றால் சுண்ணமிடிப்பவர் மகளிராதல் புலனாம் . 637 காண என்பதற்கு காண்பதற்கு வந்து கூடுவார் நிற்றற்கு எனச் சிலசொற்கள் வருவித்துரைக்க . கலக்க - இத் திருப்பொற் சுண்ண விழாவில் கலந்துகொள்வதற்காக . உலகங்கள் போதாது என்பது ஒருமை பன்மை மயக்கம் . என்று - என்று சொல்லும்படி என்று என் னும் வினையெச்சம் கலக்கஎன்னும் செயவெனெச்சத்தோடு முடிந்தது . நலக்க - நன்மையடைய நாண்மலர் - அன்றலர்ந்த செந்தாமரைப்பூ . சூடல் - சிரசில் கொள்ளல் . பாதங்கள் சூடத்தந்த என்றது திருவடி தீட்சை செய்த என்றவாறு . எந்தஸ்னஸ் இணையார் திருவடி யென்றலைமேல் வைத்தலுமே ' ' ( பூவல் . 1 ) பேராசை யாமிந்தப் பிண்டமறப் பெருந்துறையான் சீரார் திருவடி யென்றலைமேல் வைத்த பிரான் ' கானகத்தே நடக்குந் திருவடி யென்றலைமேல் நட்டமையால் ( பூவல் . 10 ) ( குவாப் .8 ) தன் பூங்ழலின் துணர்ப்போ தெனக்கணி யாக்குந் தொல்லோன் ' ' ( கோவை .17 ) என வருவன காண்க . மலை - இமயம் . ஆகுபெயராய் மலையரசனை உணர்த்தியது . மலை யரசனுக்கு மகளாக உதித்த பார்வதிதேவியை இறைவன் திருமணஞ் செய்தமை பற்றி மலைக்கு மருகனை என்றார் .