திருவாசக ஆராய்ச்சியுரை - இரண்டாம் பாகம்

திருப்பொற்சுண்ணம் சோத்து என்று பன்முறை கூறி, திருவடிகளைக் காட்டியருளி நாயிற் கடைப்பட்ட நம்மை இப்பிறப்பில் ஆட்கொண்டருளிய வண்ணங்களை இடைவிடாது பாடி, அவ்விறைவன் தீர்த்தமாடும் பொருட்டுத் திருப் பொற்சுண்ணத்தினை நாம் இடிப்போமாக என்பதாம். Apa m மாகல் 641 வாட்டடங்கண் - ஒளிபொருந்திய அகன்ற கண். "வாட்டடங் கண் மாதே " (திருவெம். 1) என்றார். வாள்போலும் கண்எனினுமாம். மடநல்லீர்; மங்கை நல்லீர் எனத் தனித்தனி இயையும். "மாணிழை மடநல்லார்" 'முற்றிழையோர் மடநல்லாய்" (கலி. 79-13; 111-8) என்றார் பிறரும். வரி வளை - அழகிய வளை எனினுமமையும். வரிவளை- அழகிய வளை என பு. வெ. மா. உரைகாரரும் உரைத்தமை காண்க (305 உரை). பொங்க - துள்ள எனினுமாம். தோள் திரு முண்டந் துதைந்திலங்க என்றது தோளின்கண் முக்குறியாகிய திருவெண்ணீறு செறிந்து விளங்க என்றவாறு. முக்குறியாக அணியப்பட்ட திருவெண் ணீறு "வெள்ளைக் கலிங்கத்தர் வெண்டிரு முண்டத்தர்" (அன்னைப்.7) எனத் திருவாசகத்தும், ''இலகு திருமுண்டம் அங்கிக்கண் கரந்த நன்னு தன்மேல" என திருவாதவூர்ப் புராணத்தும், 'நீளொளி வளர் திரு முண்ட நெற்றியும்" (பெரிய. திருநீல. 11) "முண்ட வேதியர் காட்சி" (அமர்நீதி 46) எனவும் வருதல் காண்க. ஈண்டுத் தோளை விதந்து கூறி யது, சுண்ணம் இடிக்குங்கால் மேல்நோக்கித் தூக்கப்படும் தோளிற் பொருந்திய திருவெண்ணீறு புலப்படுதல் பற்றியாகும். அங்ஙனமாயி னும் உபலக்கணத்தால் சுண்ணம் இடிக்கும் மகளிர் நெற்றி முதலிய ஏனைய இடங்களிலும் விபூதியணிந்தமை கொள்ளப்படும். சோத்தம் தாழ்ந்தோர் உயர்ந்தோர்களுக்குச் செய்யும் வணக்கம். ''சோத்திட்டு விண்ணோர் பலருந்தொழ" (சுந். 2-1) என வருதல் காண்க. சோத் தம் - சோத்து என நின்றது. 'நற்றொழும்பரிற் கூட்டிடு சோத்தெம் பிரான்" (நீத்.44) என்புழிப்போல. சொல்லி இடித்தும் என இயை யும். நாட்கொண்ட மலர், நாண்மலர் எனத் தனித்தனி இயைத்துப் பொருள் கொள்க. நாட் கொண்ட மலர் - அன்று அவர்தலைக் கொண்ட மலர், மலர் என்றது ஈண்டு செந்தாமரை மலரை. நாண் மலர்ப் பாதம் - அச் செந்தாமரை மலரும் ஒவ்வாமையால் நாணுதற் கேதுவாகிய பாதம். நாண்மலர் என்பதற்கு அன்றலர்ந்த மலர் எனக் கொள்ளாமோ வெனின், நாட்கொண்ட மலர் என்பதனால் அப் பொருள் போதருதலிற் கொள்ளாம் என்க. பாதங்காட்டி ஆட் கொண்ட எனக் கூட்டுக. "பாரிடைப் பாதங்கள் காட்டிப் பாசம் அறுத்தெனையாண்ட ஆருடையம் பொனின்மேனி அமுதினை ''(குயிற் 9) என வருதல் காண்க. இம்மை - இப்பிறப்பு. வண்ணங்கள் ஆட் 71
திருப்பொற்சுண்ணம் சோத்து என்று பன்முறை கூறி திருவடிகளைக் காட்டியருளி நாயிற் கடைப்பட்ட நம்மை இப்பிறப்பில் ஆட்கொண்டருளிய வண்ணங்களை இடைவிடாது பாடி அவ்விறைவன் தீர்த்தமாடும் பொருட்டுத் திருப் பொற்சுண்ணத்தினை நாம் இடிப்போமாக என்பதாம் . Apa m மாகல் 641 வாட்டடங்கண் - ஒளிபொருந்திய அகன்ற கண் . வாட்டடங் கண் மாதே ( திருவெம் . 1 ) என்றார் . வாள்போலும் கண்எனினுமாம் . மடநல்லீர் ; மங்கை நல்லீர் எனத் தனித்தனி இயையும் . மாணிழை மடநல்லார் ' முற்றிழையோர் மடநல்லாய் ( கலி . 79-13 ; 111-8 ) என்றார் பிறரும் . வரி வளை - அழகிய வளை எனினுமமையும் . வரிவளை அழகிய வளை என பு . வெ . மா . உரைகாரரும் உரைத்தமை காண்க ( 305 உரை ) . பொங்க - துள்ள எனினுமாம் . தோள் திரு முண்டந் துதைந்திலங்க என்றது தோளின்கண் முக்குறியாகிய திருவெண்ணீறு செறிந்து விளங்க என்றவாறு . முக்குறியாக அணியப்பட்ட திருவெண் ணீறு வெள்ளைக் கலிங்கத்தர் வெண்டிரு முண்டத்தர் ( அன்னைப் .7 ) எனத் திருவாசகத்தும் ' ' இலகு திருமுண்டம் அங்கிக்கண் கரந்த நன்னு தன்மேல என திருவாதவூர்ப் புராணத்தும் ' நீளொளி வளர் திரு முண்ட நெற்றியும் ( பெரிய . திருநீல . 11 ) முண்ட வேதியர் காட்சி ( அமர்நீதி 46 ) எனவும் வருதல் காண்க . ஈண்டுத் தோளை விதந்து கூறி யது சுண்ணம் இடிக்குங்கால் மேல்நோக்கித் தூக்கப்படும் தோளிற் பொருந்திய திருவெண்ணீறு புலப்படுதல் பற்றியாகும் . அங்ஙனமாயி னும் உபலக்கணத்தால் சுண்ணம் இடிக்கும் மகளிர் நெற்றி முதலிய ஏனைய இடங்களிலும் விபூதியணிந்தமை கொள்ளப்படும் . சோத்தம் தாழ்ந்தோர் உயர்ந்தோர்களுக்குச் செய்யும் வணக்கம் . ' ' சோத்திட்டு விண்ணோர் பலருந்தொழ ( சுந் . 2-1 ) என வருதல் காண்க . சோத் தம் - சோத்து என நின்றது . ' நற்றொழும்பரிற் கூட்டிடு சோத்தெம் பிரான் ( நீத் .44 ) என்புழிப்போல . சொல்லி இடித்தும் என இயை யும் . நாட்கொண்ட மலர் நாண்மலர் எனத் தனித்தனி இயைத்துப் பொருள் கொள்க . நாட் கொண்ட மலர் - அன்று அவர்தலைக் கொண்ட மலர் மலர் என்றது ஈண்டு செந்தாமரை மலரை . நாண் மலர்ப் பாதம் - அச் செந்தாமரை மலரும் ஒவ்வாமையால் நாணுதற் கேதுவாகிய பாதம் . நாண்மலர் என்பதற்கு அன்றலர்ந்த மலர் எனக் கொள்ளாமோ வெனின் நாட்கொண்ட மலர் என்பதனால் அப் பொருள் போதருதலிற் கொள்ளாம் என்க . பாதங்காட்டி ஆட் கொண்ட எனக் கூட்டுக . பாரிடைப் பாதங்கள் காட்டிப் பாசம் அறுத்தெனையாண்ட ஆருடையம் பொனின்மேனி அமுதினை ' ' ( குயிற் 9 ) என வருதல் காண்க . இம்மை - இப்பிறப்பு . வண்ணங்கள் ஆட் 71